Thursday, March 10, 2011

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! திருந்தவேமாட்டாங்களா?



                                  தமிழ்நாட்டில் மாணவிகள் தற்கொலைகள் தொடர்கதை ஆகிக் கொண்டிருக்கிறது . ஈரோடு கவுந்தப்பாடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவி சாந்தினி தூக்கு போட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.ஆசிரியர் ஒருவர் தன்னை அடித்த்தாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

                                 நிறைய பேசியாகிவிட்ட்து.பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.நானும் இது குறித்து இரண்டு இடுகைகள் எழுதியிருக்கிறேன்.ஆசிரியருக்கு திட்டுவது அடிப்பது தவிர வேறு வழியில்லையா? என்றொரு பதிவும்,பத்திரிகையும் டிவியும் தற்கொலையைத் தூண்டுகிறதா? என்ற தலைப்பில் ஒரு பதிவும்.

                                 இதற்கு முன்பு நடைபெற்ற தற்கொலைகளின் காரணங்களுக்கும் மாணவி சாந்தினியின் தற்கொலைக்கும் உள்ள வித்தியாசம்,இவர் ஆசிரியர் தன்னை அடித்த்தால் தற்கொலை செய்து கொண்ட்தாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது குறித்த அரசு உத்தரவுகள் பல ஆசிரியர்களுக்கு தெரியாது போல தோன்றுகிறது.

                                  தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மாணவ மாணவிகளை தங்கள் விருப்பம் போல அடிமையாக நட்த்த அனுமதி த்ந்துவிட்ட்து போல நினைத்துக்கொள்கின்றன.மாணவர்கள் நலனுக்காக செயல்படுவதாக ஜம்பம் வேறு.உண்மையில் எங்கெங்கோ இருக்கும் கோபத்துக்கு அப்பாவி மாணவிகள் அடியும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

                                    மனித உரிமைகளை மீறுவோர் காக்கும் கடவுளாக பீற்றிக் கொள்வது இந்தியாவில் தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.மனித்த் தன்மையற்ற செயலை செய்துவிட்டு அவர்கள் நல்லதுக்கு அடித்தேன் என்று சொல்கிறார்கள்.சொந்த கோபதாபங்களை வாசலில் கழற்றிவிட்டு விட்டு எப்போது ஆசிரியர்கள் வகுப்பறைக்கு நுழைவார்கள் என்று தெரியவில்லை.

                                    பத்தொன்பது வயதுடைய பெண்ணை மற்ற மாணவிகள் முன்பு கையை நீட்டி அடித்தால், அவரது உள்ளம் அடையும் அவமானமும்,வெறுப்பும் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளை உணராத ஒருவருக்கு ஆசிரியர் பட்டம்கொடுப்பது நமது கல்விமுறையின் தோல்வி.சாரமற்ற கல்விமுறை நமது சொத்தும்கூட.

                                     இனியும் இது போன்ற அவலங்கள் தொடராதவாறு தகுந்த உத்தரவுகளும் சட்டங்களும் நமக்கு தேவை.யாவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
-

9 comments:

சக்தி கல்வி மையம் said...

No Comments...

சக்தி கல்வி மையம் said...

அனைத்து ஆசிரியர்களையும் குறை கூறுவது தவறு என்று நான் நினைக்கிறேன்.

shanmugavel said...

நல்ல ஆசிரியர்கள் நம்மிடம் நிறையவே உண்டு கருன்.அவர்களை பின்பற்ற வேண்டும் .

shanmugavel said...

thanks karun.

சாகம்பரி said...

பாலிடெக்னிக் மாணவி என்றால் பதின் வயது பெண்ணாக இருப்பாள். பொதுவாக இந்த வயதினரை கண்டிக்கும் போது நேரம் இடம் பார்த்து கண்டிக்க வேண்டும். மாலை வீடு திரும்புமுன், சமாதானப் படுத்திவிடவேண்டும்.பின் விளைவுகள் என்ன ஆகும் என்பதை புரியவைத்து விட வேண்டும். அவர்களின் எதிர்கால நன்மைக்காக என்பதை புரிந்து கொண்டால் இவை தவிர்க்கப்படும். பின் வரும் நாட்களில் கூட தோழமையான கவனம் வேண்டும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பத்தொன்பது வயதுடைய பெண்ணை மற்ற மாணவிகள் முன்பு கையை நீட்டி அடித்தால், அவரது உள்ளம் அடையும் அவமானமும்,வெறுப்பும் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளை உணராத ஒருவருக்கு ஆசிரியர் பட்டம்கொடுப்பது நமது கல்விமுறையின் தோல்வி.சாரமற்ற கல்விமுறை நமது சொத்தும்கூட.

நல்ல கருத்து அண்ணே! கருண் சொன்னது போல எல்லா ஆசிரியர்களும் அல்ல! தமது கற்பித்தல் முறையில் தோல்வியடைகின்ற ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களைத் தண்டிக்கின்றனர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மாணவியின் ஆத்மா சாந்தியடைவதாக!!

shanmugavel said...

ஆம்,சகோதரி சாகம்பரி.உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் கடைப்பிடித்தால் நல்லது.

shanmugavel said...

ரஜீவா,உண்மைதான்.உனக்கு நன்றி