பணியாளர்களுக்கான ஆரம்ப பயிற்சி வகுப்பு.பதினொன்று பெண்களும்,பதினான்கு ஆண்களும் அப்பயிற்சி வகுப்பில் இருந்தோம்.ஒரு வார முகாமில் எங்களது மூத்தவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.நடுநடுவே விளையாட்டும்,நகைச்சுவையும் உண்டு.ரிலாக்ஸ் ப்ளீஸ் வகை.
இருபத்தைந்து பேரும் முதுநிலை பட்ட்தாரிகள்.சிலர் அதற்கு மேலும் படித்திருந்தார்கள்.அவ்வப்போது ஜோக்குகள் சொல்லவேண்டும்.அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்தான் தெரியும் என்றார் ஒருவர்.பரவாயில்லை என்றார்கள் நண்பர்கள்.அவரது நகைச்சுவை அவ்வளவு ஆபாசமாக இல்லை.
அடுத்தடுத்து இது தொடர்ந்து கொண்டிருந்த்து.எல்லையை தாண்டி போய்க்கொண்டிருந்த்து என்று சொல்ல வேண்டும்.நான் பெண்களை கவனித்தேன்.அவர்களில் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.அல்லது தலையை குனிந்து கொண்டார்கள்.சிலர் முறைத்தார்கள்.அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
பெண்களில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.உணவு இடைவேளையில் ஜோக் சொன்னவன் முகத்தை பார்த்து பலர் பேச மறுத்தார்கள்.யாரும் முறையிடவில்லை.சகஜமானது போல காட்டிக் கொண்டார்கள்.அவர்கள் பட்ட்தாரிகள் இந்த மாதிரி எவ்வளவோ சந்தித்திருப்பார்கள்.
உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல ஜோக்க ஆரம்பித்தபோது,நான் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தேன்.(நீ ரொம்ப நாளாவே இப்படித்தானா?)சில ஆண்கள் என்னை அற்பமாக பார்த்தார்கள்.ஆனால்,அந்த வகை காமெடிகள் நின்று போய் விட்ட்து.அடுத்த நாள் ஏதோ நிகழ்வின்போது “நமக்கெல்லாம் வயதாகிவிட்ட்தா?” என்று பயிற்சியாளர் கேட்டார்.நான் பதில் சொல்லவில்லை.
பணியிடங்களில் பெண்கள் விருப்பத்துக்கெதிரான பாலியல் சொற்களோ,சைகையோ,காட்சிப்படமோ தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.புகார் செய்ய முடியும்.பல இடங்களில் அப்படிப்பட்ட குழுக்கள் இல்லை என்பது துரதிர்ஷ்டம்.பணி புரியும் பட்ட்தாரி பெண்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள்?
ஏனென்றால், அவர்கள் இரண்டாந்தர பாலினம் என்று சொல்லியே வளர்க்கப்பட்டார்கள்.ஆணுக்கெதிராக பேசக்கூடாது என்று சொல்லித்தந்தார்கள்.தங்களுக்கு குரல் இல்லை,அது எடுபடாது என்று அப்பெண்கள் நினைத்தார்கள்.ஒரு பெண் நியாயத்தை பேச முடியும் என்று அவர்களுக்கு சொல்லித்தரவில்லை.
ஏனென்றால்,தங்களது தாயும்,பாட்டியும் அப்பாவையோ,தாத்தாவையோ எதிர்த்து பேசி அவர்கள் பார்த்த்தில்லை.பொது இடங்களில் சத்தமிட்டு பேசுவதோ,சிரிப்பதோ ஏளனமாக பார்க்கப்பட்ட்து.தங்களது பிரச்சினைகளை,ஆதங்கங்களை தாயிடமோ,இன்னொரு பெண்ணிடமோ மட்டும் ரகசியக்குரலில் தெரிவிப்பதுதான் வழக்கம்.
ஏனென்றால்,’ஆம்பளைங்களே அப்படித்தான்” அவர்களிடம் எதற்கு வீண்பேச்சு என்று கருதினார்கள்.எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறு கிளப்பக்கூடும் என்று அஞ்சினார்கள்.அவர்களுக்கு கல்லூரியில் அவர்களது உரிமைகளை கற்றுத்தரவில்லை.
எனக்கு முழுமையாக தெரியவில்லை.உங்களுக்குத் தெரியுமா?
8 comments:
பெண்கள் ரசிக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது, இருப்பினும் முகம் சுழித்தல் என்பது அவர்களை தவறாக புரிந்து அணுகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுக்காக இருக்கலாம். சரிதானே...?
பெண்கள் இரசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் .. இரண்டையும் வெளிக்காட்ட கூட சுதந்திரம் இல்லாத சமூகம் இது .. இரசித்தாலும், வெளிப்படையாக வெறுத்தாலும் .. பெண்கள் மீதான உடல் சார் வன்மம் அடுத்து தலைத்தூக்கும், இதனால் என்னவோ அமைதியாக இருந்துவிடுகிறார்கள் ...
மதுரை சரவணன் said...
பெண்கள் ரசிக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது, இருப்பினும் முகம் சுழித்தல் என்பது அவர்களை தவறாக புரிந்து அணுகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுக்காக இருக்கலாம். சரிதானே...?
தவறாக புரிந்து அணுகும் வாய்ப்பு அதிகம் உண்மை.நன்றி சரவணன்.
@இக்பால் செல்வன் said...
பெண்கள் இரசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் .. இரண்டையும் வெளிக்காட்ட கூட சுதந்திரம் இல்லாத சமூகம் இது .. இரசித்தாலும், வெளிப்படையாக வெறுத்தாலும் .. பெண்கள் மீதான உடல் சார் வன்மம் அடுத்து தலைத்தூக்கும், இதனால் என்னவோ அமைதியாக இருந்துவிடுகிறார்கள்
ஆம்.இக்பால் செல்வன் ஒருவித படபடப்புக்கு ஆளாகக்கூடும்
மதுரை சரவணனின் பின்னூட்டம் சரி என்று நினைக்கிறேன் .
@சேக்காளி said...
மதுரை சரவணனின் பின்னூட்டம் சரி என்று நினைக்கிறேன் .
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
இது போல பொது இடங்களில் எதிர்த்து பேசும் பெண்கள் குறைவு. அவ்வாறு பேசினால் நாக்கூசாமல் அவர்களை விமர்சிப்பார்கள். பெண்கள் எதிர்த்து பேசுவது நட்பு வட்டாரத்தில் மட்டுமே. மற்றபடி துஷ்டனைக் கண்டால் தூர விலகு கொள்கைதான் கடைபிடிப்பார்கள். இன்னும் பெண்களை புரிந்து கொள்வது சிரமமாகவே உள்ளதா,சகோதரரே ?
பெண்களை புரிந்துகொண்டவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? நன்றி,சகோதரி
Post a Comment