Thursday, March 24, 2011

பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!


சென்னை,மார்ச் 33
                                தமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,

                              தமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலைகாக்காஎன்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய பாம்பின் அப்பா அம்மாநாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

                               மதிப்புரையை முழுக்க படிக்கவேண்டுமென்பதற்காக  காலை டிஃபன் வேண்டாம் என்று சொல்லிவிட்ட்தாக அவரது மனைவி தெரிவித்தார்.சந்தோஷத்துடன் படித்துக் கொண்டிருந்தவர் இறுதியில் நூலாசிரியர் பெயரும்,பதிப்பகத்தின் பெயரும் மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


                                அதிர்ச்சியில் மலைநாட்டான் போட்ட கூப்பாடு தமிழ் எழுத்தாளர்களின் காதுகளில் ஒலித்த்து.சப்தம் கேட்ட அரை மணி நேரத்தில் அனைத்து எழுத்தாளர்களும் மலைநாட்டான் வீட்டில் கூடிவிட்டார்கள். தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று திரண்ட்து ஒரு வரலாற்றுநிகழ்வுஎன்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.செய்தி கேட்ட நிருபர்களும்,பானிபூரி,வறுகடலை உள்ளிட்ட தள்ளூவண்டி கடைகளும் விரைந்தன.

                                 மலைநாட்டான் நாவலை தன் பெயரில் வெளியிட்ட்து தமிழ்வலைப்பதிவர் என்பது அவருக்கு ஆகாத பதிவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது “இது கொடூர திருட்டு.மலைநாட்டான் இந்த நாவலுக்காக பாம்புகளுடன் படுத்துறங்கியிருக்கிறார்.தேள்களுடன் வாக்கிங் போனார்.முப்பதாண்டு காலம் உழைத்து எழுதிய 1800 பக்க நாவலை சுலபமாக திருடியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதுஎன்றார்.


                                  சட்ட ஆலோசனைக்காக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஏழாவது ரவுண்டு டிஃபன்,காஃபி உள்ளே போயும் ஆலோசனை எதுவும் தரவில்லை.தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே பதிவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் சிங்கப்பூரில் திரைப்பட ஆலோசனையில் இருப்பது தெரிய வந்துள்ளது.(அவர்-திருடி- பதிப்பித்த நாவலை படித்த இயக்குனர் ஒருவர் வசனம் எழுத ஒப்ப்ந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.) அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சற்று முன் வந்த செய்தி:

                              சிங்கப்பூரில் டி.வி.யை பார்த்து செய்தி தெரிந்து கொண்ட அந்த பதிவர் எழுத்தாளர் மலைநாட்டானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.புத்தகத்தை பார்க்காமல் விமர்சனம் மட்டும் படித்து விட்டு தன்னைப் பற்றி தவறாக நினைத்த்தற்காக வருத்தப்பட்டுள்ளார்.


                               தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை என்றும்,புத்த்கத்தை சரியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.நாவலின் இறுதியில் நன்றி-மலைநாட்டான் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்காமல் ஆத்திரப்பட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

                               இதைக் கேள்வியுற்ற அனைத்து எழுத்தாளர்களும் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்பது சரியாகப் போய்விட்ட்து என்று நினைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.அநியாயமாக ஒரு தமிழ் பதிவர் பற்றி தவறான செய்தி பரவியது வருத்தம் தரும் ஒன்று.
-

8 comments:

மதுரை சரவணன் said...

புனைவா உண்மையா...? பதிவர் மீது உள்ள பாசமா..?

ப.கந்தசாமி said...

யாராவது இந்தப் பதிவுக்கு விளக்கவுரை போட்டால் புண்ணியமாப் போகும்!

shanmugavel said...

@மதுரை சரவணன் said...

புனைவா உண்மையா...? பதிவர் மீது உள்ள பாசமா..?

என்ன சரவணன்,ஒரு பதிவருக்கு பதிவர் மீது பாசம் இருப்பது இயற்கைதானே?

shanmugavel said...

@DrPKandaswamyPhD said...

யாராவது இந்தப் பதிவுக்கு விளக்கவுரை போட்டால் புண்ணியமாப் போகும்!

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா

சி.பி.செந்தில்குமார் said...

>> தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை

ஹா ஹா நீங்களும் உள்குத்துப்பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா? செம

நிலவு said...

நல்ல கட்டுரை இதனையும் படித்து கருத்தளியுங்கள்

http://powrnamy.blogspot.com/2011/03/63.html அறுபத்து மூன்று தொகுதிகளில் சீமான் பிரச்சாரம் - காமடி தர்பார்

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

>> தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை

ஹா ஹா நீங்களும் உள்குத்துப்பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா? செம

சும்மா ஒரு சேஞ்சுக்கு ஹிஹி

shanmugavel said...

@நிலவு said...

நல்ல கட்டுரை இதனையும் படித்து கருத்தளியுங்கள்

நன்றி,அரசியல் நமக்கு தூரமாச்சுங்களே!