Saturday, March 26, 2011

என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி

 
                           அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.

 தாங்கள் எழுத்தாளரான பின்னணி என்ன?

                               அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.எழுத சொன்னால் நான் ‘எஎன்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை.


வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
                                மூக்குப்பொடி வாங்கிய பேப்பரை படித்த போது கூகுள் இலவசமாக பிளாக் தருவது தெரியவந்த்து.இலவசமாக தரும் எதையும் நான் விட்ட்தில்லை.என் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த்து.அப்புறம் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன்.இதோ இப்போது பிரபல பதிவர்.

பிரபல பதிவர் என்பதற்கு என்னதான் இலக்கணம்?
                                இங்கே பொறாமை பிடித்தவர்கள்தான் அதிகம்.அதனால் பிரபல பதிவர் என்று நானே சொல்லிக் கொண்டேன்.மற்றவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் விடிந்து விடும்.தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.


உங்களுக்கும் ஓட்டுபோட குழு இருப்பதாக சொல்லப்படுகிறதே?

                               ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.எனக்கு நான்கு இருக்கிறது.நண்பர்களும் இருக்கிறார்கள்.எங்கே குழு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மகளிர் குழுக்கள் இருக்கிறது.பாராளுமன்றத்தில் குழுக்கள் இருக்கின்றன.ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்கூட இருக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் படிக்கிறார்கள்.? நீங்கள் STAT வெளியில் காட்டவில்லையே?
                               ஏற்கனவே வயிறு எரிந்து சாகிறார்கள்.அதை பார்த்தால் அவ்வளவுதான்.பதிவர்கள் எல்லாம் வெந்து போய்விடுவார்கள்.எத்தனை பதிவர்கள்,எத்தனை குடும்பங்கள் யோசித்துப் பாருங்கள்.அந்த பாவம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் மட்டும்தான் பதிவிட வேண்டும் திரட்டிகள் என் ஒருவனுடைய பதிவை மட்டும் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

பதிவுலகம் வந்த பிறகு உங்கள் மனைவி பிரிந்து விட்ட்தாக கூறப்படுகிறதே?

                                   கணவன் மனைவி ஊடல் சங்க காலத்தில் இருந்து வரும் ஒன்று.கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஒரு வருடம்கூட ஆகவில்லை.நேற்றுகூட நான் பேசினேன்.அது கிராம்ம் என்பதால் டவர் வீக்காக இருக்கும்.காது கேட்ட்தோ,இல்லையோ அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை.நேரில் போகலாம் என்றால் பதிவுலகை விட்டு செல்ல முடியவில்லை.லட்சக்கணக்கான வாசகர்களை ஏமாற்றியதுபோல ஆகிவிடும்.அவர் நல்லவர்.கல்யாணமாகி ஆறு மாதங்கள் டி.வி.பார்த்துக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தார்.நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தொல்லை தரமாட்டார்.என்னுடைய வளர்ச்சி பொறுக்க முடியாமல் ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள்.


உங்கள் எழுத்து புகழ் பெற்றதற்கு என்ன காரணம்?

                             நான் NHM WRITER-ல் எழுதுகிறேன்.சுலபமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் ka என்று டைப் செய்தால் ‘கஎன்று வருகிறது.

-

25 comments:

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா செம உள் குத்துப்பதிவு போல.. மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்... மங்களகரமா அந்த வேலையை நானே செய்யறேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.

ஹா ஹா செம

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா செம உள் குத்துப்பதிவு போல.. மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்... மங்களகரமா அந்த வேலையை நானே செய்யறேன்.. ஹி ஹி

அய்யய்யோ சும்மா ஜோக் சார்.நன்றி

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

>தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.

ஹா ஹா செம

நன்றி நண்பரே!

தங்கராசு நாகேந்திரன் said...

NHM ரைட்டர் பத்தி சொன்னது சரிதான் அத வச்சுத்தான் நாங்கல்லாம் பதிவு எழுதிகிட்ட்டு இருக்கோம்

Unknown said...

நண்பா யார் அது ஹிஹி!

ப.கந்தசாமி said...

ஆழமான கருத்துகள் கொண்ட பதிவு. இப்படிப்பட்ட பதிவுகள் தொடரட்டும்.

பதிவில பாராட்டறதுக்கு காசா, பணமா? பாராட்டீட்டு போய்ட்டே இருக்கலாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா..... ஹா.... ஹா.... செம கடி அண்ணே! இந்த குத்து யாருக்கு?

சிங்கக்குட்டி said...

என்னாங்க உள்குத்து ஏதாவது இருக்கா?

shanmugavel said...

@தங்கராசு நாகேந்திரன் said...

NHM ரைட்டர் பத்தி சொன்னது சரிதான் அத வச்சுத்தான் நாங்கல்லாம் பதிவு எழுதிகிட்ட்டு இருக்கோம்

நான்கூட சார் நன்றி

Jey said...

சரி...ரைட்டு...சூனா பானா யாரும் பாக்கலை இப்படியே போய்ட்டிரு யாரும் அசைச்சிக்க முடியாது....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது அவருதானே....?

shanmugavel said...

@விக்கி உலகம் said...

நண்பா யார் அது ஹிஹி!

அவரேதான் நண்பா!தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@DrPKandaswamyPhD said...

ஆழமான கருத்துகள் கொண்ட பதிவு. இப்படிப்பட்ட பதிவுகள் தொடரட்டும்.

பதிவில பாராட்டறதுக்கு காசா, பணமா? பாராட்டீட்டு போய்ட்டே இருக்கலாம்!

நன்றி அய்யா

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா..... ஹா.... ஹா.... செம கடி அண்ணே! இந்த குத்து யாருக்கு?

அவருக்குதான் தம்பி,நன்றி

shanmugavel said...

@சிங்கக்குட்டி said...

என்னாங்க உள்குத்து ஏதாவது இருக்கா?

ஒண்ணுமில்லீங்க சும்மா ஜாலி.நன்றி

shanmugavel said...

@Jey said...

சரி...ரைட்டு...சூனா பானா யாரும் பாக்கலை இப்படியே போய்ட்டிரு யாரும் அசைச்சிக்க முடியாது....:)

ரொம்ப நன்றிங்க

shanmugavel said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது அவருதானே....?

கண்டுபிடிச்சிட்டீங்க!அவரேதான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கலான நையாண்டி பதிவு.அதற்கான பரிசா என் தமிழ்மணம் வோட்டை ஏழாவதாக பதிவு செய்து உங்கள் பதிவை பாஸ் பண்ண வைத்துவிட்டேன்

shanmugavel said...

@ரஹீம் கஸாலி said...

கலக்கலான நையாண்டி பதிவு.அதற்கான பரிசா என் தமிழ்மணம் வோட்டை ஏழாவதாக பதிவு செய்து உங்கள் பதிவை பாஸ் பண்ண வைத்துவிட்டேன்

மிக்க நன்றி,ரஹீம்.

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்திட்டேன்..

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நானும் வந்திட்டேன்..

வாங்க,வாங்க நன்றி

Anonymous said...

செருப்படி ! யாருக்கா? அந்த அவரை வெறுத்தவர்களுக்கு.. ஹிஹி .. எப்பூடி நாங்களும் யோசிப்போம்ல !!!

shanmugavel said...

ஆஹா! நன்றி இக்பால் செல்வன்

அருண் காந்தி said...

Interesting Interview!