நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ‘பாகவதமும் பைபிளும்’ என்ற பதிவை எழுதினேன்.பிரவுசிங் செண்டரிலிருந்து எழுதியது.படங்களெல்லாம் இணைக்கவில்லை.இரண்டு நூல்களையும் படித்துவிட்டு தோன்றிய கதையை என் அண்ணன் மகனுக்கு கூறியது.கிட்ட்த்தட்ட சிறுவர் இலக்கியம்.
மேற்கண்ட எனது பதிவை படித்த ஒருவர் என்னை திட்டி கருத்துரை வழங்கியிருக்கிறார்.அதை வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.நான் பைபிள் படித்த்து தவறு என்பது அவரது கருத்து.அவரது கருத்துரை வெளியிட்ட பின்னால் ஆளாளுக்கு மோதி கமெண்ட் போட்டுக் கொண்டு இருந்தால் சங்கடம் என்பதால் தவிர்த்து விட்டேன்.
நான் புனித குரானும் படித்தேன்.பெரியாரையும்,மார்க்ஸ்,பிளேட்டொவையும் படித்தேன்.மதம் எப்போதும் சக மனிதனை நேசிக்க எனக்கு ஒரு தடையாக இருந்த்தில்லை.தவிர வாசிப்பு பழக்கம் என்பது வடைசுற்றித்தரும் பேப்பரைக்கூட படிக்கத் தூண்டுவதுண்டு.நல்லவை எங்கிருந்தாலும் அதை பின்பற்றுவது என்னுடைய பண்பு.மனிதர்களுக்கும்,புத்தகங்களுக்கும்,மதங்களுக்கும் இது பொருந்தும்.
அவரவர் குடும்பம் சார்ந்து வாழ்க்கை முறைகள் இருக்கின்றன்.மதிப்பீடுகள் இருக்கின்றன.விருப்பமான கடவுளை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.உலகில் உள்ள அனைவரும் என்னைப்போலவே இருக்கவேண்டும் என்பது அறியாமை.
நான் ஒரு இந்து என்பது மற்ற பண்பாட்டை பின்பற்றும் என் நணபர்களை எப்போதும் உறுத்தியதில்லை.அவர்களுடைய விழாக்களில் நானும்,என்னுடைய விழாக்களில் அவர்களும் பங்கு பெறுவது தொடர்ந்து கடைபிடித்து வரும் வழக்கம்.
இன்னொன்று தனிமனித தாக்குதலகள்.நான் பதிவு எழுதினால் அதில் கருத்துக்களுக்கு பதில் சொல்வதோ,விவாதிப்பதோ கருத்துரையில் இருந்தால் நல்லது.எனக்கு கமெண்ட் போடுபவரை விமர்சித்து மறுமொழி வருகிறது.அதை வெளியிட்டால் சண்டைகள் ஜோராக நடக்கலாம்.பதிவு கூட இன்னும் பிரபலமாகும்.ஆனால் நான் விரும்பவில்லை.
சில நாட்களில் இருபத்துநான்கு மணிநேரம் கழித்துதான் என்னுடைய வலைப்பக்கத்தை நானே பார்க்கிறேன்.என்ன எழுதிப்போவார்கள் என்று தெரியவில்லை.கமெண்ட் மாடரேஷன் வைத்திருப்பது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்ட்து.தேவையில்லாத சண்டைகளும்,தனிமனித தாக்குதல்களும் என் வலைப்பக்கத்தில் நடப்பதை நான் விரும்பவில்லை.
7 comments:
விவிலியம் படிப்பது தவறில்லை.. அது யாருடைய தனிப்பட்ட சொத்து இல்லை .. இதனால் தான் வேற்று மதத்தாருக்கும் விவிலியம் இலவசமாக சில அமைப்புகள் கொடுக்கின்றன. விவிலியம், குரான், பாகவதம், தம்ம பதம் அனைத்தையும் அனைவரும் படித்து இருந்தால் மட்டுமே .. வீண் சண்டைகளும் சச்சரவும் வராமல் இருக்க முடியும் ஒரு புரிந்துணர்வுக்கு வர முடியும். சில கருத்து வேறுபாடுகள் நபருக்கு நபர் மாறலாம். அது இயற்கை .. ஆனால் வீண்வசைகள் பாடுவோர் அனேகர் இருககத் தான் செய்கிறார்கள் என்ன செய்ய? மனம் தளர வேண்டாம் அண்ணா ! அப்படியானவர்களை ஒதுக்கி விடுவது நலம் ...
நான் கிறுஸ்தவள் . கீதையும் படித்ததுண்டு.. எங்க குழுமத்தில் இஸ்லாமிய வசனங்களும் படித்ததுண்டு..
தப்பேயில்லை..
தனிமனித தாக்குதல் சிலருக்கு மன நோய் போல.. கண்டுகொள்ளவேண்டாம். ஆனா அறிவிக்கணும் அவர்களை . மத்தவங்க கவனமா இருக்கவாவது.
இன்றைய என் பதிவும் அதே தான்..
http://punnagaithesam.blogspot.com/2011/03/karthik-llk.html
ம்..ம்.. நடத்துங்க.. நடத்துங்க...
@இக்பால் செல்வன் said...
தங்கள் கருத்து சரி இக்பால் செல்வன்.நன்றி
@எண்ணங்கள் 13189034291840215795 said...
அவர்களை அறிவித்து என்ன ஆகப்போகிறது? தங்கள் கருத்துரைக்கு நன்றி
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ம்..ம்.. நடத்துங்க.. நடத்துங்க...
இதெல்லாமா நண்பா ! தங்கள் கருத்துரைக்கு நன்றி
விவிலியம், குரான், கீதை எல்லாம் மனித நேயத்தைதானே அதாவது அன்பை போதிக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம்..ஒவ்வொரு வீட்டிலும் (குடும்பத்திலும்) நல்லதைதானே சொல்லிக் கொடுக்கிறார்கல் மனம் விரிந்து முதிர்ந்தவர்கள் ஏற்கிறார்கள். மற்றவர் புரியாமல் தவிக்கிறார்கள் அவ்வளாவே
மதம் என்பது தனித்தனி குடும்பம் போல அன்பை விதைக்கும் சத்தியம் சமூகம் போல
புரிந்துனர்விருந்தால் பலனுண்டு
Post a Comment