Tuesday, April 5, 2011

நாட்டுப்பற்றை வளர்க்கும் கிரிக்கெட்

அன்று நான் விடுதியில் தங்கியிருந்தேன்.கிரிக்கெட் போட்டி துவங்க இருக்கிறது.ரிசப்ஷனில் உட்கார இடம் இல்லை.சாதிமத வேறுபாடு எல்லாம் மறைந்து போயிருந்த்து.இந்தியாவின் வெளி மாநிலத்தவர்களும் அங்கே இருந்தார்கள்.கூடியிருந்தவர்களுக்கு ஒரு பொது நோக்கம் இருந்த்து.அது-இந்தியா வெல்ல வேண்டும்.

                                நான் தமிழன்,நான் மராட்டியன்,கன்னடியன் என்ற உணர்வுகளைத்தாண்டி அனைத்து நெஞ்சுகளிலும் இருந்த உணர்வு ஒன்றுதான்.ஆம்.நான் இந்தியன்.பரபரப்பாக நடந்த ஆட்ட்த்தின் முடிவில் இந்தியா வென்றுவிட்ட்து.எந்த நாடு வெற்றி பெற்றிருந்தாலும் இவ்வளவு அதிகமான மக்களை சந்தோஷப்படுத்தியிருக்காது.

                                கோடிக்கணக்கான இதயங்களில் மகிழ்ச்சி குடிகொண்ட்து.இலங்கை வெற்றி பெற்றிருந்தால்,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து எந்த நாடு கோப்பையை பெற்றிருந்தாலும் உலக மக்கள் தொகையில் அதிக மக்களை இந்த மகிழ்ச்சி சென்றடைந்திருக்காது.எல்லைகளை கடந்து கொண்டாடித் தீர்த்தார்கள்.

                                 சேலத்திலிருந்து ஒருவர் சென்னைக்குப் போனால் நான் சேலத்தை சேர்ந்தவன் என்கிறார்.டெல்லிக்கு போனால் தமிழ்நாடு,வெளிநாடு சென்றால் இந்தியா.உலக அரங்கில் நம்முடைய அடையாளம் இந்தியா!வெளிநாடுகளில் மதம்,மண்டலம் தாண்டி இந்தியன் என்ற உணர்வுடனே கொண்டாடினார்கள்.

                                 கிரிக்கெட் ஏன் இந்த அளவுக்கு விரும்ப்ப்படுகிறது என்பதற்கு உளவியலில் காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.மனிதனுக்கு இயல்பாகவே சண்டை போடும் உணர்வு இருக்கிறது.அதை கிரிக்கெட் தீர்த்து வைக்கிறது என்கிறார்கள்.விளக்கமாக இங்கே சொல்வது சிரம்ம்.

                                 இந்திய சுதந்திரப் போராட்ட்துக்கு அடுத்து நான் இந்தியன் என்ற உணர்வு போர்கள் நடைபெறும் காலத்தில்தான் வெளிப்படுவதை பார்க்கமுடியும்.போர்க்காலங்களைத் தாண்டி கிரிக்கெட்தான் அந்த உணர்வை தோற்றுவிக்க முடியும் என்று தோன்றுகிறது.பல்வேறு கிரிக்கெட் போட்டிகளின் போது நான் இதையே உணர்ந்தேன்.

                                                                          உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியைவிட அதிக மக்களால் பரபரப்புடன் எத்ர்பார்க்கப்பட்ட்து,பார்க்கப்பட்ட்து பாகிஸ்தானுடனான போட்டிதான்.என்ன காரணமாக இருக்க முடியும்? தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் அண்டை நாட்டை நாம் வெல்லவேண்டும் என்பதே இந்தியர்களின் ஆர்வம்.அப்போது பற்றிக் கொண்டிருந்த உணர்வு நான் இந்தியன் என்பதே!

                               பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது.
-

15 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்லதொரு பாசிட்டிவான பார்வை அண்ணே! இந்திய அணியின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்!!

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

நன்றி கருன்

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்லதொரு பாசிட்டிவான பார்வை அண்ணே! இந்திய அணியின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும்!!

நன்றி தம்பி

Sankar Gurusamy said...

அருமையான பார்வை. ஆனால் நாட்டுப்பற்று கிரிக்கெட்டில் மட்டுமே இன்று வாழ்கிறது என்பதைப் பார்க்கும்போது சற்று வேதனையாகவும் இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Unknown said...

ம்ம்ம் அருமையான பதிவு

நிரூபன் said...

அங்கே இருந்தார்கள்.கூடியிருந்தவர்களுக்கு ஒரு பொது நோக்கம் இருந்த்து.அது-இந்தியா வெல்ல வேண்டும்.//

வணக்கம் சகோதரம், நலமா?
நீங்கள் கூறுவது நிச்சயமாய் உண்மை. காரணம் கிறிக்கற்றின் ஊடாக தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப் பற்று வளர்கிறது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.

நிரூபன் said...

உலக மக்கள் தொகையில் அதிக மக்களை இந்த மகிழ்ச்சி சென்றடைந்திருக்காது.எல்லைகளை கடந்து கொண்டாடித் தீர்த்தார்கள்//

இவை நிஜமான கருத்துக்கள். இலங்கை வென்றிருந்தால் பெரும்பான்மை இன மக்கள் தான் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்வார்கள். சிறுபான்மை இன மக்கள்????

நிரூபன் said...

பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது.//

ஆமாம், இது நிச்சயமாய் உண்மை சகோதரனே,

மாநிலங்களைக் கடந்து வெளி நாட்டவர்கள் பார்வையில் அனைவரும் ஒரு தாய் மக்களாகத் தானே நோக்கப்படுவார்கள். அலசல் அருமை... கிறிக்கற்றினூடாக நாட்டுப் பற்று வளர்கிறது என்பது நிச்சயமாய் உண்மை சகோதரம். அதற்கு நீங்கள் கூறியிருக்கும் சம்பவங்களும், யதார்த்த நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன,

Jana said...

பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது
உண்மை

shanmugavel said...

@இரவு வானம் said...

ம்ம்ம் அருமையான பதிவு
தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

அங்கே இருந்தார்கள்.கூடியிருந்தவர்களுக்கு ஒரு பொது நோக்கம் இருந்த்து.அது-இந்தியா வெல்ல வேண்டும்.//

வணக்கம் சகோதரம், நலமா?
நீங்கள் கூறுவது நிச்சயமாய் உண்மை. காரணம் கிறிக்கற்றின் ஊடாக தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப் பற்று வளர்கிறது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.

ஆம்,நிரூபன் நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

உலக மக்கள் தொகையில் அதிக மக்களை இந்த மகிழ்ச்சி சென்றடைந்திருக்காது.எல்லைகளை கடந்து கொண்டாடித் தீர்த்தார்கள்//

இவை நிஜமான கருத்துக்கள். இலங்கை வென்றிருந்தால் பெரும்பான்மை இன மக்கள் தான் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்வார்கள். சிறுபான்மை இன மக்கள்????

நிச்சயம் கொண்டாடமாட்டார்கள்.

shanmugavel said...

@Jana said...

பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது
உண்மை

ஆம்,ஜனா நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது.//

ஆமாம், இது நிச்சயமாய் உண்மை சகோதரனே,

மாநிலங்களைக் கடந்து வெளி நாட்டவர்கள் பார்வையில் அனைவரும் ஒரு தாய் மக்களாகத் தானே நோக்கப்படுவார்கள். அலசல் அருமை... கிறிக்கற்றினூடாக நாட்டுப் பற்று வளர்கிறது என்பது நிச்சயமாய் உண்மை சகோதரம். அதற்கு நீங்கள் கூறியிருக்கும் சம்பவங்களும், யதார்த்த நிகழ்வுகளும் சான்று பகர்கின்றன,

நன்றி,சகோதரம்.

Jayadev Das said...

\\இந்திய சுதந்திரப் போராட்ட்துக்கு அடுத்து நான் இந்தியன் என்ற உணர்வு போர்கள் நடைபெறும் காலத்தில்தான் வெளிப்படுவதை பார்க்கமுடியும்.போர்க்காலங்களைத் தாண்டி கிரிக்கெட்தான் அந்த உணர்வை தோற்றுவிக்க முடியும் என்று தோன்றுகிறது.\\இது உருப்படுவதற்கு இல்லை. ஏய்க்கும் அரசிய வாதிகள், அயோக்கிய ஆட்சியாளர்கள், லஞ்ச லாவண்யம், ரவுடிகள், ஊழல் இதையெல்லாம் எதிர்த்து ஒன்று திரள வேண்டும் அதுதான் தேச பக்தி. ஆங்கிலேயனின் அடிமை நாடுகள் மட்டுமே ஆடும் சோம்பேறிகள் விளையாடும் ஒரு ஆட்டத்தில் தேச பக்தி வந்து ஒண்ணுத்துக்கும் பிரயோஜனப் படப் போவதில்லை.. நம்மை நிஜமாக காப்பாற்றுபவன், எல்லையில் உயிரைக் கொடுத்து நம்மைக் காக்கும் ராணுவ வீரன் தான், அவனுக்கு எதையும் பெரிதாகச் செய்ததாகத் தெரியவில்லை. அங்கே தேச பக்தி இல்லை, கிரிக்கெட் ஆட்டக் காரன், உனக்கு உதவாத சாக்கடையை பாட்டிலில் அடைத்து விற்றாலும் குடி என்பான், அப்பரம் மேட்ச் சூதாட்டத்தில் பணம் பார்ப்பான், அடுத்து ஊருக்கு ஒரு கில்மாவுடன் ஊர் சுற்றுவான், இவனுங்கல பாத்து தேச பக்தி வரணுமா? வெட்கக் கேடு.