Monday, April 18, 2011

தூக்கமின்மை பிரச்சினைகள்–சில குறிப்புகள்.

                            மற்ற காலங்களை விட கோடை காலத்தில் தூக்கம் குறைந்தால் அதிக பாதிப்புகள் தெரியும்.கடும் வெயிலின் அதிக நீர் இழப்பால் கண் எரிச்சல்,நா வறட்சி,உடல் சோர்வு போன்றவை அதிகமாக இருக்கும்.கோடையில் மன நலம் பாதிக்கப்படுவதும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

                                                                .சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் போரிலோ,சதியாலோ தாக்கப்பட்டபின் மறைவிடத்தில் தாக்கப்பட்டவரை பார்க்கச்செல்வார்கள்.அவர் தூங்கிக்கொண்டிருப்பார்."நன்றாக தூங்குகிறார் அவருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை".ஆம்.நல்ல தூக்கம் ஒருவருக்கு உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதை குறிக்கிறது.

                             உடலும்,உள்ளமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் அவசியம்.பொதுவாக எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.தொடர்ந்து சிலநாட்கள் சரியாக (எட்டு மணி நேரம் )தூக்கம் இல்லைஎன்றால் எரிச்சல்,சிடுசிடுப்பு,கவனக்குறைவு போன்று ஏற்பட்டு அன்றாட வாழ்வில் உறவுகளிலும்,பணியிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை மன நோய்களின் முக்கிய அறிகுறியாககொள்ளலாம்.

தூக்கமின்மை ஏன்?
அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்கள் கூட நல்ல உறக்கத்தை தடுக்கலாம்.புதியதொரு சூழ்நிலைக்கு தயாராகும்போது,உறவுகளில் ஏற்படும் தற்காலிக சிக்கல்கள் ,பயம்,கலக்கம்,கோபம் போன்ற எதிர் உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது அன்றைய தூக்கம் பாதிக்கப்படலாம்.இவை தற்காலிகமானவை.சிலநாள்களில் தானாகவே சரியாகிவிடும்.ஆனால்,தொடர்ந்த தூக்கமின்மை மனம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்லது மூளையில்ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் காரணமாக இருக்கலாம்.இவர்களுக்கு மனநல மருத்துவத்தின் உதவி தேவை. தயங்காமல் நல்ல மருத்துவரை சந்திப்பது தீர்வுக்கு வழிவகுக்கும்.

இவை தூக்கத்திற்கு மட்டுமல்ல.....
  • அனைத்து சத்துக்களும் சரிவிகிதமாக கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.காய்கறிகளும்,பழங்களும்,கீரைகளும் அதிகமாக இருக்கட்டும்.
  • முட்டைகோஸ்,காலிபிளவர்,வெங்காயம்போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளையும்,அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.இரவு உணவை எட்டு மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது.
  • போதுமான எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
  • யோகா,மூச்சுப்பயிற்சி போன்றவை நல்லது.
  • வீட்டில் உள்ளவர்களிடையே மனம் விட்டு பேசுங்கள்.
  • வீட்டில் பிரச்சினை என்றால் நண்பர்களிடம் மனம் திறந்து உறவாடுங்கள். 
  • படுக்கையறை சுத்தமாக இருக்கட்டும்.
  • மாலைநேரத்திற்கு பிறகு தேநீர்,காபி,கார்பன்டை ஆக்சைடு கலந்த குளிர்பானங்களை தவிர்க்கவும்.
  • நகைச்சுவை புத்தகம்,டி.வி.சேனல்கள் மனத்தை எளிதாக்கும்.
  • வெதுவெதுப்பான குளியல் நல்லது.
  • இரவில் ஒரு தம்ளர் பால் தூக்கத்திற்கு உதவும்.
  • நேர்மறை சிந்தனைகளை கொண்டிருங்கள்.ஏற்கெனவே நீங்கள் சந்தித்த பலபிரச்சினைகளிலும் நீங்கள் நினைத்த மாதிரியே நடக்கவில்லை.
தொடர்ந்து பிரச்சினை இருந்தால் மனநல ஆலோசகரையோ,மருத்துவரையோ தயக்கமின்றி அணுகவும்.
-

14 comments:

Sankar Gurusamy said...

உண்மை.. நிறையப் பேருக்கு தூக்கமின்மை ஒரு வியாதி என்பதுகூட தெரியவில்லை. தான் கொஞ்சமாக தூங்குவதை ஒரு சாதனை போல நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான பயனுள்ள பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் டிப்ஸ் மக்கா.....அசத்துங்க....

Jana said...

பட்டாந்தரையில் ஓர் தண்டைவிரித்தேன்..
கண்ணில் தூக்கம் சொட்டுமே அது அந்த காலமே..
மெத்தை விரித்தே சுத்தப் பன்னீர் தெழித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..
என் தெய்வமே தூக்கம் கொடு..
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு...

எவ்வளவு யதார்த்தமான உண்மை இது!

ராஜ நடராஜன் said...

தூக்கம் வருதே அதுக்கு ஐடியா கொடுங்க.இதோ உங்களுக்குப் பின்னூட்டம் போடும்போதே கண்ணை சுழட்டுது:)

shanmugavel said...

@விக்கி உலகம் said...

நன்றி நண்பா

கருத்துரைக்கு நன்றி நண்பனே !

shanmugavel said...

@Sankar Gurusamy said...

உண்மை.. நிறையப் பேருக்கு தூக்கமின்மை ஒரு வியாதி என்பதுகூட தெரியவில்லை. தான் கொஞ்சமாக தூங்குவதை ஒரு சாதனை போல நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

உண்மைதான் சங்கர் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தலான பயனுள்ள பதிவு
கருத்துரைக்கு நன்றி கருன்

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் டிப்ஸ் மக்கா.....அசத்துங்க

நன்றி மனோ

shanmugavel said...

@Jana said...

பட்டாந்தரையில் ஓர் தண்டைவிரித்தேன்..
கண்ணில் தூக்கம் சொட்டுமே அது அந்த காலமே..
மெத்தை விரித்தே சுத்தப் பன்னீர் தெழித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..
என் தெய்வமே தூக்கம் கொடு..
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு...

எவ்வளவு யதார்த்தமான உண்மை இது!

ஆம் ஜனா நன்றி

shanmugavel said...

@ராஜ நடராஜன் said...

தூக்கம் வருதே அதுக்கு ஐடியா கொடுங்க.இதோ உங்களுக்குப் பின்னூட்டம் போடும்போதே கண்ணை சுழட்டுது:)

நிம்மதியான ஆள் சார் நீங்க !லக்கி ! நன்றி சார்

CS. Mohan Kumar said...

ரொம்ப அருமையான அவசியமான கட்டுரை. தூக்கம் வரா விடில் அது வரலையே என வருந்துவம் பயப்படவும் கூடாது. இது மிக முக்கியம். இதற்கு கவலை பட்டால் அதுவும் தூக்கமின்மைக்கு இட்டு செல்லும்

Unknown said...

பலர் பயனடைகிறார்கள் உங்கள் பதிவால் என்பது ஓட்டுகள் மூலம் தெளிவாகிறது பாஸ்...நான் சொல்ல வேண்டியதில்லை

Unknown said...

பயனுள்ள பதிவு