முந்தைய தினமே வீடுகளை சுத்தம் செய்வார்கள்.வாசலில் கோலம் இடுவார்கள்.வழக்கமான புத்தாண்டுகளில் காலையில் கோயிலில் கூட்டம் நிரம்பும்.தமிழ் ஆண்டு பிறப்பிற்கு மாலையில் தான் கூட்டம் கோயிலில் இருக்கும்.பெரும்பாலான இடங்களில் வெல்லமிட்ட பொங்கலை அம்மனுக்கு படைப்பார்கள்.
அம்மனுக்கு படைத்த பிரசாதத்திற்காகவே குழந்தைகள் காத்துக் கிடப்பார்கள்.அது ஒரு சந்தோஷம் .கிராமங்களில் தமிழ் புத்தாண்டு ஒரு நல்ல நாள்.மங்கல நாள்.ஆண்டு முழுக்க நல்லவை நடக்க வேண்டிக்கொள்வார்கள்
.
முக்கியமான கோயில்களில் அருள்வாக்கு நடக்கும்.கிராமத்து பெரியவர்கள் கிளம்பி செல்வார்கள்.அந்த ஆண்டு முழுக்க விவசாயம்,மழை,கால்நடைகள் பற்றிய கவலைகள் ,அதைப்பற்றிய கேள்விகளே அருள்வாக்குகளில் இடம் பெறும்.நல்ல மழை உண்டு என்றால் சந்தோஷமாக திரும்புவார்கள்.
தமிழ் புத்தாண்டு நாளில் இன்னும் பல குடும்பங்களில் ஜோதிடரிடம் செல்வது வழக்கம்.அவர்கள் முக்கியமாக பார்ப்பது ,ஜோதிடரிடம் கேட்பது கந்தாயம்.குடும்பத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு முழு கந்தாயம் இருந்தால் ,ராசியான பலன்கள் இருந்தால் அவரையே விதை எடுத்து தர சொல்வார்கள் .இப்படி ஒரு நம்பிக்கை.
ஆங்கிலப் புத்தாண்டு அளவுக்கு நம்மிடையே தமிழ் புத்தாண்டு ஏன் முக்கியத்துவம் பெறவில்லை? ஒரு எஸ்.எம்.எஸ் பரிமாற்றம் கூட இருப்பதில்லை.காரணம் புலப்படவில்லை.ஒருவேளை தமிழுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா?
அறுபது தமிழ் வருடங்களுக்கு ஒவ்வொரு பாடல் வைத்திருக்கிறார்கள்.மரபாக வந்து கொண்டிருப்பது.துவங்கும் வருடம் ‘கர’ வருடம்.அந்த பாடல்,
‘கர’வருடம் மாரி பெய்யும்! காசினியு முய்யும்!
உரமிகுந்து வெள்ளமெங்கு மோடும்!-திரை மிகுந்த
நாலுகால் ஜீவனலியு நோயால் மடியும்!
பாலும் நெய்யுமே சுருங்கும்பார்!
நல்ல மழை பெய்யும்.விளைச்சல் அதிகரிக்கும்.வெள்ளம் வரும்.நான்கு கால் உள்ள பசு,ஆடு,குதிரை போன்ற மிருகங்களுக்கு நோய் ஏற்பட்டு மடியும்.அதனால் பால்,நெய் உற்பத்தியும் குறையும்.
விவசாயிகளுக்காகவே பாடி இருப்பது போல தோன்றுவதை கவனியுங்கள்.உழவர்கள் ஏன் ஜோதிடரிடம் போகிறார்கள் என்பதற்கு காரணம் புரிந்திருக்கும்.நல்ல மழை உண்டு என்று சொன்னாலே மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
தலைப்பில் ஜோதிடம் என்று போட்டுவிட்ட்தால் கொசுறு செய்தி: தமிழ் புத்தாண்டு அடுத்து மூன்று வாரத்தில் முக்கிய கிரகமான குரு மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறது.மீனம்,தனுசு,துலாம்,சிம்ம்ம்,மிதுனம் ராசியாக உடையோருக்கு குருபலன் வருகிறது.
வாசகர்களுக்கும்,சக பதிவர்களுக்கும் என் இதயங்கனிந்த
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
11 comments:
வணக்கம் சகோ, புத்தாண்டின் சுப கருமங்களையும், ஆலயங்கள், எம் சமூகங்களில் இடம் பெறும் நிகழ்வுகளையும் கூறிய நீங்கள், கைவிசேசம் கொடுப்பதைப் பற்றிச் சொல்லவில்லையே?
புத்தாண்டு பற்றிய பாடலை, உங்கள் வலைப் பூ மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். நன்றிகள் சகோ.
தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
@நிரூபன் said...
வணக்கம் சகோ, புத்தாண்டின் சுப கருமங்களையும், ஆலயங்கள், எம் சமூகங்களில் இடம் பெறும் நிகழ்வுகளையும் கூறிய நீங்கள், கைவிசேசம் கொடுப்பதைப் பற்றிச் சொல்லவில்லையே?
புத்தாண்டு பற்றிய பாடலை, உங்கள் வலைப் பூ மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். நன்றிகள் சகோ.
சரியாக நினைவு படுத்திவிட்டீர் சகோதரம்,நன்றி
@Rathnavel said...
தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் அய்யா ,நன்றி
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Thanks karun ,same to you
@Sankar Gurusamy said...
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thanks sankar.same to you
@மனக்குதிரை said...
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
வாருங்கள் நண்பரே ,நன்றி .
இதயங்கனிந்த
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment