நமது உயரத்திற்கேற்ப சரியான உடல் எடையை கொண்டிருக்க வேண்டும்.கிட்ட்த்தட்ட ஆரோக்கியம் என்பது இதுதான்.அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்.வந்து விட்ட நோயை கட்டுப்படுத்தவும்,வராமல் தடுக்கவும் சரியான உடல் எடையை பராமரிப்பது அவசியம்.
அதிக எடை இருப்பதும் பருமனாக இருப்பதுமே பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றன.இதயம் தொடர்பான நலக்கேடுகள்,ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,சுவாச கோளாறுகள்,மூட்டுவலி உள்ளிட்ட உடல் வலிகள்,சில வகை புற்று உள்பட அதிக எடை ஏற்படுத்தும் நோய்கள்.
மிக்க் குறைவான் எடை என்பது போதுமான அளவு உணவு எடுக்காத்தால் ஏற்படுவது.டயட் இருக்கிறேன் பேர்வழி என்றும்,பருமன் ஆகிவிடுவோம் என்ற பயத்தாலும் அல்லது உணவுக்குறைவாலும் இது உண்டாகிறது.இதனால் போதுமான அளவு சத்துக்கள் கிடைக்காத்தால் உடல் இயக்கத்தில் கோளாறுகளூம் ,சத்துக்குறைபாடு நோய்களும் உருவாகும்.
இரண்டுமே நல்லதல்ல! ஒவ்வொருவர் உயரத்திற்கேற்பவும் சரியான் எடையை பெற்றிருப்பதே நல்லது.இது மனதளவிலும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது.உங்களைப்ப்ற்றியே உங்களுக்கு நல்ல உணர்வையும்,ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.
உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினையே!உங்களுக்கு தெரிந்த்துபோல கொழுப்பு உடலில் அதிகம் இருப்பதுதான் எடை கூடி,பருமனாக காரணம்.சுற்றுச்சூழல்,குடும்பம்,பழக்கங்கள்,பரம்பரை,வாழ்க்கைமுறை போன்றவை சரியான அளவு எடையை பராமரித்தலில் உள்ள காரணிகள்.
கொஞ்சம் முயற்சி செய்தால் சரியான எடைக்கு உடலை கொண்டுவருவதும்,நோய்களில் இருந்து தப்புவதும் முடியக்கூடிய காரியம்தான்.ஏற்கனவே உங்களுக்கேற்ப கலோரிகளைக் கணக்கிட்டு உண்பது எப்படி? என்ற பதிவில் உள்ளவையும் உங்களுக்கு உதவும்.
இப்போது சரியான எடை இருப்பவர்கள் தங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்றவாறு கலோரிகளை உண்ண வேண்டும்.அன்றைய உழைப்புக்கு சரியாக போகும் வரையில் நீங்கள் சாப்பிட்டால் கணக்கு சரியாகப்போய்விட்ட்து.அதிக எடை உள்ளவர்கள் கலோரிகளை குறைத்து உண்ணவேண்டும்.சுமார் தினமும் 500 கலோரி வரை குறைக்கலாம்.உடற்பயிற்சி போன்றவற்றை அதிகரிக்கலாம்.
எடை குறைவாக உள்ளவர்கள் அன்றைய உடல் உழைப்பைவிடவும் அதிக அளவு கலோரிகளை உண்ண வேண்டும்.2000 கலோரி போதுமென்றால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.உணவில் கவனம் செலுத்தினாலே போதும்.சரியான உடல் எடையை பெறமுடியும். மேலும் சில தகவல்கள் அடுத்த பதிவில்..
-

6 comments:
இன்னும் கூட விவரம் வேண்டும். அந்த அவேர்னஸ் அதை எப்படி கொண்டுவருவது.
அடுத்த பதிவில் சொல்கிறேன்.நன்றி சகோதரி
உடல் எடையினை மெயிண்டென் பண்ணுவது பற்றிய அலசல் அருமை. ஆனால் டயற் மெயிண்டெயினுக்கு (Diet maintained ) எவ்வகையான உணவு வகைகள் வேண்டும் என்பதையும் பகிர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ.
@நிரூபன் said...

அடுத்த பதிவில் தருகிறேன் நிரூபன் நன்றி
உடல் நலம் மனநலத்தையும் சேர்த்து தரும். உடல் நலன் பற்றிய தங்கள் விழிப்புணர்வு பதிவு அருமை.
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
பதிவுக்கு நன்றி. நம்மில் பலருக்கு இதுபற்றி அக்கரையில்லை.ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு (30கலோரி /கிலோ) ஒரு கிலோவுக்கு 30கலோரி வீதம் உணவு எடுத்துக்கொண்டால் சீரான எடையோடு வாழலாம்.
உதாரணத்திற்கு 70கிலோ எடையுள்ள ஒருவருக்கு 2100கலோரி தேவைப்படும் (70kg X 30= 2100)
Post a Comment