Friday, July 1, 2011

கணவன்,மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா?

                               நம் அனைவருக்கும் பொதுவான எண்ணம் ஒன்று உண்டு.நான் புத்திசாலி என்பதும் எனக்கு தெரியாத்து என்ன இருக்கிறது என்பதும்தான் அது.நம்மைவிட வெற்றிகரமான மனிதர்களை பார்க்கும்போதும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்போமே தவிர திறமை பற்றி பேசுவதில்லை.ஏதேதோ காரணங்களை மனம் தேடும்.

                               இந்த எண்ணங்களால் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது.தாழ்வு மனப்பான்மையில் விழாமல் இருக்க உதவும்.ஆனால் இது ஓரளவுக்கு இருந்தால் சரி.நான் சொல்வது மட்டுமே சரி என்பதுதான் பல நேரங்களில் பிரச்சினை.என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற பிடிவாதம் உறவுகளில் சிக்கல்களை தோற்றுவித்து விடுகிறது.

                               நான் இவ்வளவு படித்திருக்கிறேன்,என் நண்பனோ,மனைவியோ மற்ற உறவுகளோ உலகம் தெரியாதவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.அது சரியாக கூட இருக்கலாம்.ஆனாலும் யாரும் எப்போதும் அறிவாளியாக இருப்பது சாத்தியமில்லை.அதே சமயம் மற்றவர்கள் உங்களைப்போலவே எல்லாம் தெரிந்த ஆட்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

                               ஒரு பிரபல மனநல மருத்துவமனைக்கு உடன் வருமாறு தெரிந்தவர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.அவரது தம்பி அங்கே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.நாங்கள் சென்று பார்த்த போது சாதாரண மனிதர்களை போலவே அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்.சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்.பைத்தியம் என்று சொல்ல முடியாது.

                                 வெளியில் வந்து என்னதான் பிரச்சினை? என்றேன். வீட்டில் பணம் தராவிட்டால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான், அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது.எங்காவது வேலைக்கு சேர்த்தாலும் சில நாட்கள்கூட நிற்பதில்லை.நம்மைப்போல இல்லை.இங்கே வந்து சில வாரங்கள் ஆகிவிட்ட்து.மருத்துவரை பார்த்து பேசவேண்டும்’’ என்றார்.

                                  நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவரை சந்தித்தோம்.கிட்ட்த்தட்ட கையை விரித்து விட்டார்கள் என்று சொல்லவேண்டும்.பல நாட்கள் ஆலோசனைகளுக்கு பிறகு அவர்களது முடிவு,அவருடைய திறன் அவ்வளவுதான்,வேறு எதுவும் செய்யமுடியாது.இனி சிகிச்சை இல்லை.அவரை இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அவர் மன நோயாளி அல்ல! அவருடைய சிந்திக்கும் திறன்,உணரும்,பகுத்தறியும் திறன் அவ்வளவுதான்.  

                              வெளியில் வந்து அவரது பெற்றோரிடம் கூறியபோது தந்தை சோர்ந்து போனார்.பையனின் தாயார் கூறியது,இருந்து விட்டு போகட்டும்,நான் பார்த்துக்கொள்கிறேன்,அவனும் என் பிள்ளைதான்”. திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

                              உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்பது உண்மைதான்.இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் அனைவரும் ஒன்று போலவே படைக்கப்பட்டவர்கள் அல்ல!ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறன்,புரிந்துகொள்ளும் திறனில் வேறுபாடு இருக்கிறது.நான் சொல்வதே சரி என்பது எப்போதும் இருக்காது.சில காலங்களில் அது மாறிப்போகலாம்.வளைந்து கொடுப்பது சரியானதுதான்.ஆனால் அது தனிமனிதனுக்கோ,சமூகத்துக்கோ கெடுதலை ஏற்படுத்தக்கூடாது.
-

14 comments:

A.K.RASAN said...

வளைந்து கொடுத்து போவதே சரியானது.நல்ல பதிவு.

A.K.RASAN said...

அது தனிமனிதனுக்கோ,சமூகத்துக்கோ கெடுதலை ஏற்படுத்தக்கூடாது. சரி

Anonymous said...

நல்ல பதிவு ...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Unknown said...

சரிதான் யோசிக்க வைத்து விட்டீர்கள்

நிலாமகள் said...

திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.//

நெருங்கிய‌ இரு உற‌வுக‌ளில் (க‌ண‌வ‌ன்‍ ம‌னைவி, அம்மா பிள்ளை, அதிகாரி அலுவ‌ல‌ர், அண்ண‌ன் த‌ம்பி, ...) யாராவ‌து ஒருவ‌ர் விட்டுக் கொடுத்து அனுச‌ரித்து போனால்தான் வாழ்க்கை வ‌ண்டி சீராக‌ ஓடும். நீங்க‌ள் சொல்வ‌து போல் அவ‌ர்க‌ளின் புரித‌ல் திற‌ன் அவ்வ‌ள‌வுதான் என‌த் தேற்றிக் கொண்டு வாதிடாம‌ல் வாழ‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம்.

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் சொல்ல்வது உண்மையே.. வளைந்து கொடுக்க வேண்டும்.

அம்பாளடியாள் said...

உண்மைதான் விட்டுக்கொடுத்து எதையும் சமாளித்துப்
போவதால் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்துவிட
முடியும்.அதே சமேயம் இவ்விரு செயலின் பின்னணியை
ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லாவே புரிந்துகொள்ளுதல் அவசியம்.
தவறாகப் புரிந்துகொண்டால் இதனால் ஒருவர்மட்டுமே
சந்தோசம் அடையமுடியும்.
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

சாகம்பரி said...

வளைந்து கொடுப்பது , அவரவர் பெர்செப்ஷனை பொறுத்தது. ஆனால் சார், இதற்கு ஹோமியோபதியில் நல்ல வழி கிட்டும். நீங்கள் வேண்டுமானால் இந்த விசயத்தை ஆராய்ந்து பார்த்து தெளிவு பெறுங்களேன்.

இராஜராஜேஸ்வரி said...

திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அனுபவபூர்வமான கருத்து.பாராட்டுக்கள் வாழ்வியல் பகிர்வுக்கு.

Sankar Gurusamy said...

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்... ஹோமியோபதியில் இதற்கு மருத்துவம் இருக்கும். விசாரிக்க சொல்லுங்கள்.

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

நிரூபன் said...

விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு ஒரு மனிதனுக்கு எப்போது அவசியமாகின்றது என்பதனை உதாரணத்துடன் கூடிய பதிவினூடாக அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

நன்றி சகோ.