பலருக்கு இப்போதெல்லாம் சாப்பிடும் பொருளோ ,நுகர்போருட்களோ வாங்கும்போது அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது.அப்படித்தான் நண்பன் ஒருவன் காலையில் போன்செய்து கேட்டான். ''ஜின்செங் என்று போட்டிருக்கிறது.அப்படின்னா என்ன?'' எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.இவனுக்கு எதுக்கு இதெல்லாம்? "எந்த மருந்தில் என்று கேட்டேன் ."மருந்து இல்லடா ,கூல்ட்ரிங்க்ஸ்." சரி சரி குடி ! அது ஒண்ணும் பண்ணாது!" என்றேன்.
நண்பன் வினவிய ஜின்செங் என்பது உலகில் பலராலும் தாம்பத்திய குறைபாட்டுக்கு பயன்படுத்தப்படும் மருந்தாகவே அறியப்பட்டுள்ளது.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு பல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் தாவரங்களை பயன்படுத்தியே சிகிச்சை செய்து கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.இப்போதுதான் பரிசோதனை ,மாத்திரைகள் எல்லாம்.அப்படி சீனாவில் பயன்படுத்தப்பட்ட ஒன்றுதான் இந்த ஜின்செங்.குளிர்பானம்,சில திரவ மருந்துகளில் ,மாத்திரைகளில் சேர்க்கிறார்கள்.தேநீரிலும் கூட !
தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் இதை இரண்டாம் வகை நீரிழிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள். .நம்மிடமும் இப்படி ஒரு மருந்து உண்டு.அஸ்வகந்தா என்பது அதன் பெயர்.இந்தியாவின் ஜின்செங் என்று சொல்வார்கள்.(இந்தியாவிலும் சீனாவிலும் அதிக மக்கள்தொகை இருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?)ஆனால் அதை ஆண்களின் குறைபாட்டுக்கு(sexual dysfunction) என்று சொல்வதில்லை.பெரும்பாலும் இங்கே உடல் பலம் பெறும்,.தாது பலம் பெறும் என்று சொல்வார்கள்.
ஆயுர்வேதம் ,சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையின் கீழ் தயாரிக்கப்படும் மருந்துகளில் மன இறுக்கத்தை போக்கும் (anti stress) மருந்தாகவே குறித்து விற்பனை செய்து வருகிறார்கள்.அஸ்வகந்தா மிகச்சிறப்பாக மன இறுக்கத்தை போக்கி அதன் விளைவாக ஏற்படும் மனப்பதட்டத்தையும் குறைத்து விடுகிறது என்கிறார் இந்திய முறை மருத்துவர் ஒருவர்.கொஞ்சம் யோசித்தால் புரியும் பலருக்கு மனப்பதட்டம் ஒரு பிரச்சினை.நரம்புத்தளர்ச்சி என்று சொல்வது Anxiety disorder என்ற மன நலக்குறைபாடுதான்.இந்த குறைபாடு இருப்பவர்களால் சமூகத்தில் அவ்வளவாக சுமூகமாக பழகமாட்டார்கள்.
உணவு செரிக்காத நிலை ,உடல் சோர்வு,தலைவலி,தசை பலவீனம் உள்ளிட்ட பிரச்சினைகளும் இருக்கும்.எப்போதும் ஒதுங்கியே இருப்பார்கள்.பெண்கள் என்றால் சுமூகமாக பழகுவது இன்னும் கஷ்டம்.தாழ்வு மனப்பான்மையும் இருக்கலாம்.இதற்கு ஜின்செங்கோ ,அஸ்வகந்தாவோ கொடுக்கப்படும்போது இறுக்கம் தளர்ந்து சாதாரணமாக இருப்பார்கள்.ஆண்மைக்குறைவை போக்குகிறேன் என்று லாட்ஜ்களில் வைத்தியம் செய்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தியே வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இளைஞர்களிடம் ஏராளமான பணத்தையும் பிடுங்கி விடுகிறார்கள்.
ஜின்செங் ஊக்க மருந்தாக உலகில் தொடர்ந்தது பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொதுவான பக்க விளைவுகள் இல்லை .சிலருக்கு மட்டும் தலைவலி,குமட்டல் வயிற்றுப்போக்கு,ரத்த அழுத்தம் அதிகரித்தல்,அல்லது குறைதல் போன்றவை நேரலாம்.உடல்நலத்தில் பிரச்சினை உள்ளவர்கள் எப்போதும் கடையில் சாப்பிடும் பொருள் வாங்கினால் அதில் சேர்க்கப்பட்டுள்ள விவரத்தை பாருங்கள்.
-

13 comments:
லாட்ஜ் வைத்தியர்கள் பற்றி சொன்னது உண்மை.நான் ஏமாந்த இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.
@RAVICHANDRAN said...
லாட்ஜ் வைத்தியர்கள் பற்றி சொன்னது உண்மை.நான் ஏமாந்த இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.
thanks sir
லாட்ஜ்களில் வைத்தியம் செய்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தியே வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது/// idhu unmaiyaa?
அருமையான பதிவு... பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//அஸ்வகந்தா என்பது அதன் பெயர்.இந்தியாவின் ஜின்செங் என்று சொல்வார்கள்.//
சண்முகவேல் அண்ணே,
’அஸ்வகந்தா’-வை கிராமங்களில் ’அமுக்கரா’ என்றும் சொல்வார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேத மறுத்துவத்திற்கு உலகம் மீண்டும் திரும்பிக் கொண்டுள்ளது.
நல்ல பதிவு.
//பொதுவான பக்க விளைவுகள் இல்லை//
அண்ணே,
அப்படி சொல்லி விடுவதற்கில்லை. இதையும் கவனியுங்கள்,
// ஜின்ஸெங், தூக்கமின்மை, கிளர்ச்சி, இதய படபடப்புகள் மற்றும் தலைவலி போன்ற சில பக்க விளைவுகளை உண்டாக்குகின்றன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஜின்ஸெங் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.//
மேலதிக விவரங்கள் இணையத்தில் அறிந்துக்கொள்ளலாம் http://www.righthealth.com/topic/Ginseng_Side_Effects?p=l&as=goog&ac=404
ஜின்செங் வேறொரு நோய்க்கும் மருந்தாக கலக்கப்படுவதாக படித்த நினைவு வருது எந்த நோயக்கு என்று நினைவு வருகுதில்லை.
thanks.....useful info
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
லாட்ஜ்களில் வைத்தியம் செய்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தியே வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது/// idhu unmaiyaa?
உண்மையே! நரம்புத்தளர்ச்சி,ஆண்மைக்குறைவு வகையறாவுக்கு இதையே பயன்படுத்துகிறார்கள் என்பது பலர் உறுதி செய்திருக்கிறார்கள்.நன்றி
@சத்ரியன் said...
// ஜின்ஸெங், தூக்கமின்மை, கிளர்ச்சி, இதய படபடப்புகள் மற்றும் தலைவலி போன்ற சில பக்க விளைவுகளை உண்டாக்குகின்றன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஜின்ஸெங் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.//
மேலதிக விவரங்கள் இணையத்தில் அறிந்துக்கொள்ளலாம் http://www.righthealth.com/topic/Ginseng_Side_Effects?p=l&as=goog&ac=404
நன்றி சத்ரியன்,உணவுப்பொருள்களில் கலக்கப்படும்போது கர்ப்பிணிகள்,குழந்தைகள் பயன்படுத்தக்கூடாதென்ற எச்சரிக்கை எதுவும் இல்லை பாருங்கள்.
சங்கர் குருசாமி,ஜனா,தேவையற்றவனின் அடிமை அனைவருக்கும் நன்றி
ஜின்செங் மருந்து பற்றிய விழிப்புணர்வோடு கூடிய, பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.
பட்டய கிளப்பரிங்க.இது போன்ற பதிவு தான் இணைய மக்களுக்கு தேவை.தொடர வாழ்த்துகள்.
Post a Comment