அதிர்ச்சி என்று
தலைப்பில் போடவேண்டுமா என்ன? தலைப்பே அப்படித்தான் இருக்கிறது.எனக்கும் கேட்டபோது
அப்படித்தான் இருந்த்து.இப்போதுதான் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வேலைக்குச்
சேர்ந்தவெளிமாவட்ட நண்பர் ஒருவர் துணைவியார் தெரிவித்த விஷயம் இது.
மிகவும்
பிரபலமான் மகளிர் மேல்நிலைப்பள்ளி அது. காலையில் வழக்கம்போல பள்ளியை சுத்தம் செய்தவர்கள்
குப்பைக்கூடையில் இரண்டு பீர்பாட்டில்கள் இருந்த்தை பார்த்திருக்கிறார்கள்.ஆயா
பள்ளி முதல்வரிடம் கொண்டு வந்து பதினொன்றாம் வகுப்பில் ஒரு பிரிவில் இருந்த்தாக
ஒப்படைத்துவிட்டார்.
தலைமை ஆசிரியர்
அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பதறியிருக்கிறார்.குறிப்பிட்ட வகுப்பறைக்கு சில
ஆசிரியைகலுடன் ஓடியிருக்கிறார்கள்.அதிரடி விசாரணை.மிரட்டல்.”நீங்களே ஒப்புக்கிட்டா,மன்னித்து விட்டுவிடுவோம்’’ ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
தனித்தனியாக
ஒவ்வொரு மாணவியையும் அழைத்து விசாரணை நட்த்தியிருக்கிறார்கள்.இதில் ஒரு மாணவி
உண்மையைப்போட்டு உடைத்து விட்டார்.யார் கொண்டு வந்த்து என்று
தெரிந்துவிட்ட்து.தலைமை ஆசிரியருக்கு அம்மாணவியை கண்டிப்பதா,வேண்டாமா என்று தர்ம
சங்கடம்.நகரின் பிரபல வணிகர் ஒருவரின் மகள்.அரசியல் செல்வாக்கு உடையவர்.
மேலும்மேலும்
அம்மாணவியை விசாரித்த்தில் வெளிவந்த விஷயம்,வீட்டு ஃப்ரிட்ஜில் நிறைய
பீர்பாட்டில்கள் உண்டு.அப்பாவும்,அண்ணனும் ஒன்றாக சேர்ந்தும் குடிப்பார்கள்.பீர்
ஒன்றும் போதயில்லை என்று வேறு சொல்லிக்கொள்வார்கள்.மாணவிக்கும் குடித்துப்பார்க்கவேண்டும்
என்று ஆசை வந்துவிட்ட்து.தனியாக குடிக்க விரும்பவில்லை.இரண்டு பாட்டிலை
வகுப்புக்கு எடுத்து வந்து விட்டார்.
வகுப்பில்
உள்ள தனது தோழிகளை குடிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார்.ஆனால் எந்த மாணவியும்
ஒப்புக்கொள்ளவில்லை.இது போதை கிடையாது,குளிர்ச்சி,எங்கள் வீட்டில் நிறைய
இருக்கிறது என்று சொல்லிப்பார்த்திருக்கிறார்.உடன் இருப்பவர்களுக்கு
விருப்பமில்லை.பயந்து விட்டார்கள்.அவரும் குடிக்கவில்லை.விளையாட்டாக
குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள்.
பத்தாம்
வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அவர்.டீனேஜ் என்பது எதையும் முயற்சி செய்து
பார்க்கும்.வீட்டில் முன்மாதிரிகள் இருக்கும்போது விபரீதம் தெரியாத விளையாட்டாகிவிடுகிறது.ஒரு
வழியாக பள்ளி தாளாளர் வழியாக அம்மாணவியின் தந்தைக்கு விஷயத்தை
சொல்லியிருக்கிறார்கள்.அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.
கிராமங்களில்
மது வாங்கிவர,பீடி சிகரெட் வாங்கிவர பிள்ளைகளை அனுப்பும் தந்தைகளை
பார்த்திருக்கிறேன்.அவர்கள் நாகரீகம் இல்லாத மனிதர்களாக தோன்றும்.வீட்டையே பார்
ஆக்குபவர்களை என்ன சொல்வது? எனக்கென்னவோ காலப்போக்கில் மது டீ,காபி போல ஆகிவிடும்
என்று தோன்றுகிறது.(இப்போ மட்டும் என்னவாம்?)
-
13 comments:
எல்லாம் பெற்றவங்க தப்பு ...
இப்ப இவளுகளே ஆரம்பிச்சிட்டாளுகளா ........வெளங்கிரும் ....
அரசாங்கமே மது விற்பனை செய்வதால், அது ஒரு ஆரோக்கிய பானம் என்று வருங்காலத்தில் கருதப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம். இப்போது மது குடிப்பது என்பது சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. மது குடிக்காதவர்களைத்தான் சற்று ஜந்துபோல பார்க்கிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
வணக்கம் பாஸ், தங்களின் இப் பதிவிற்கு ஒரு சில எதிர்க் கருத்துக்களை முன் வைக்கின்றேன், தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குடிப்பதில் தவறேதும் உள்ளதா?
ஆண்கள் அனைத்து வகையான சுதந்திரங்களையும் அனுபவித்துக் கொண்டு, இந்த விடயத்தில் மாத்திரம் பெண்களை எப்படிப் புறந்தள்ளி வைக்க முடியும?
எங்களோடு கல்லூரியில் படித்த பெண்கள் கூட குடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் கண்டு கொள்வதில்லை. ஆணுக்குப் பெண் சமன் என்று ஷோசியல் முறையில் குடிப்பது தவறென்று கருதலாமா?
அளவுக்கு மீறிக் குடிப்பது தான் தவறென்று நினைக்கிறேன். இக் கருத்துக்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
என் கருத்துக்களில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
கலிகாலம் இது... இன்னும் என்ன வேணாலும் நடக்கும்.
//எனக்கென்னவோ காலப்போக்கில் மது டீ,காபி போல ஆகிவிடும் என்று தோன்றுகிறது.(இப்போ மட்டும் என்னவாம்?)//
கருத்துரையும் நீங்களே போட்டுக்கிட்டா எப்பூடி ?
அவ்வ்வ்வ்..
தாயை போல் பிள்ளை
நூலைப் போல சேலை
என்பார்கள்..
வீட்டில் இருப்பவர்கள் வளரும் குழந்தைகளுக்கு மன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர,
இப்படி இருந்தால் குழந்தைகள் கெட்டுத் தான் போவார்கள்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
வணக்கம் நிருபன் அவர்களே,
புரட்சி என்றும்,
பகுத்தறிவு என்றும் கூறி
இளைய சமுதாயத்தை கெடுக்கக் கூடாது..
பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.. என்று சொல்லுங்கள் ..
அதை தங்கள் பூமியிலேயே கண்டு வியந்தவர்கள் நாங்கள்..
பெண்மைக்கு என்று இருக்கும் சில இலக்கணங்களை மாற்றினால்
விளைவுகள் இன்னும் விபரீதமாகும்..
சிந்தித்து பார்த்து
சிறிசா இருக்கையில் திருத்துவோம்.
அன்புடன் வணக்கம்..
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அவர்.டீனேஜ் என்பது எதையும் முயற்சி செய்து பார்க்கும்.வீட்டில் முன்மாதிரிகள் இருக்கும்போது விபரீதம் தெரியாத விளையாட்டாகிவிடுகிறது////
கலாச்சார சீர்கேடு!
இதில் தந்தை என்ன? மகன் என்ன? மற்றவர்களும் தான் என்ன?
அனைவருக்கும் பொது என்பதை பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்கள்..!
நீங்கள் இங்கேயும் வந்து போகலாம்.. ஓட்டுப் போடலாம்..!
தலைப்பு; ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை..
இணைப்பு; இணைப்பு; http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
@நிரூபன் said...
வணக்கம் பாஸ், தங்களின் இப் பதிவிற்கு ஒரு சில எதிர்க் கருத்துக்களை முன் வைக்கின்றேன், தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குடிப்பதில் தவறேதும் உள்ளதா?
சகோ !என்னது இது? நன்றி.
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
Nice Blog....
Please Read this also
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html
சரியாக சொன்னீங்க, தேன் எடுத்தவன் போரங்கையை சுவை பார்ப்பன் என்பது போல, இந்தமாதிரி விஷயங்கை பசங்க முன்னாடி செய்தால் அதையே அவர்களும் செய்வார்கள். படிப்பவர்கள் உணர்ந்தால் சரி
Post a Comment