அரசு அலுவலகம் ஒன்றில் நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன்.ஒருவர் வந்து நண்பரிடம் சார் என்று ஆரம்பித்தார்.’’அவங்க உங்களப்பத்தி என்ன சொன்னாங்கன்னா.....’’அந்த கோபத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.கோள் சொல்ல வந்தவர் ஒரு நிமிடம் திகைத்துப்போனார்.”இத எதுக்காக சொல்லுற? இந்த மாதிரி என்னிடம் வந்து இனி சொல்லக்கூடாது!”
அவர் புதியதாக வேலைக்கு சேர்ந்தவராம்.அலுவலகங்களில் எத்தனையோ அரசியல்கள்.கோள் சொல்லி நல்ல பிள்ளை ஆகிவிடலாமென்று பலர் திரிவதுண்டு.நானும் இந்த மாதிரி ஆட்களை ஆதரிப்பதில்லை.நாம் சொல்வதை அவர்களிடம் போய் சொல்வார்கள்,இரண்டு பக்கமும் நல்லவனாக வேஷம் போடவும் கூடும்.
நண்பர் செய்த்து சரிதான்.ஆனால் பலருக்கும் இதில் பெரிய ஆவல் ஏற்பட்டு விடும்.இந்த மாதிரி ஆட்களின் நண்பர்களாக ஆகி விடுபவர்கள் உண்டு.அதனால் இழப்புத்தானே தவிர நன்மை எதுவும் இல்லை.இவையெல்லாம் நல்ல உணர்ச்சியை உருவாக்காது.சொறி சிரங்கு போல சொரிந்து கொண்டிருந்தால்தான் சுகமாக இருக்கும்.
இன்னொன்றை சொன்னார்” என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.” கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கும் இது சுலபமாக கை வரக்கூடிய கலைதான்.ஒவ்வொரு வார்த்தையையும்,செயலையும் கவனிக்க வேண்டும்.யாருக்கும் தீங்கு செய்யாதவர் உங்களுக்கும் செய்யமாட்டார்,இன்னொருவருக்கு பாதகம் நினைத்து உங்களுக்கு நல்லது செய்பவர் ஒரு நாள் உங்களுக்கு எதிராகவும் மாறக்கூடும்.
தலைப்பு விஷயத்துக்கு வருகிறேன்.ஒரு பதிவரைப்பற்றி கோள் சொல்லி எனக்கு இமெயில் வந்த்து.(சில மாதங்களுக்கு முன்பு.)அது சுருக்கமாக,
அந்த பதிவர் உங்கள் மீது ஆத்திரமாக இருக்கிறார்.உங்களை ஆதரிக்க்க் கூடாது என்று பலரிடமும் பேசி வருகிறார்.பதிவுலகில் பல சண்டைகளை மூட்டி விடுவது அவர்தான்.அவருடைய குழுவில் உள்ள எல்லாரையும் கெடுத்துவிட்டு தான் மட்டும் நல்லவன் மாதிரி உங்களிடம் நடிப்பார்.பலரிடமும் அப்படித்தான்.உங்களைத் தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்லிவருகிறார்.உஷாராக இருங்கள்.உண்மையைச் சொல்லப்போனால் அவரது நண்பர்கள் அதிக ஓட்டும் கமெண்டும் வாங்குவது அவருக்கு பிடிக்கவில்லை.
இம்மாதிரி மெயில்களை இனி எனக்கு அனுப்ப வேண்டாம் என்று பதில் அளித்தேன்.மெயில் அனுப்பியவரின் நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை.என் மீது மதிப்பு இருந்தால் எனக்கு ஓட்டும் கமெண்டும் போட்டு ஆதரிக்கலாமே? எத்தனை பேருக்கு இப்படி அனுப்பினார் என்று தெரியவில்லை.
பல பதிவுகள் தமிழ்மணத்தில் ஆறு ஓட்டுக்களுடன் நின்று போனது.என் மீது அக்கறை இருப்பவர் அப்போதெல்லாம் இவர் ஓட்டு போட்டிருக்கலாம்.பொறாமை போன்ற உணர்ச்சிகள் மனிதனுக்கு இயல்பானவை.அரசியல் நிலவும் பதிவுலகில் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.வாழ்க்கையிலும் சரி பதிவுலகிலும் சரி கோள் சொல்பவரை புறக்கணியுங்கள்.
36 comments:
முதல் மழை எனை அழைத்ததே...
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க நண்பரே!
இப்படியும் நடக்குதா...
புது விஷயம் கற்றுக் கொண்டேன்..
-suryajeeva
"இங்கேயும் ஓட்டு போட காசு வாங்குறாங்களா? - டவுட் கோவாலு.."
,இன்னொருவருக்கு பாதகம் நினைத்து உங்களுக்கு நல்லது செய்பவர் ஒரு நாள் உங்களுக்கு எதிராகவும் மாறக்கூடும்.//
உண்மை தான்... இன்றும் ஒவ்வொரு வீதிக்கு வீதி கும்பல் கூடி பேசும் கேடுகெட்ட கோல்சொல்லர்கள், நயவஞ்சகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்... இதை தானே பாரதி //தேடிச்சோறு நிதந் தின்று பல சின்ன சிறுகதைகள் பேசி பிறர்வாட பலசெயல்கள் செய்து ...// என சொல்லியிருக்கிறார்... பதிவுக்கேற்ற படங்களும் அருமை...வாழ்த்துக்கள் நண்பரே
இப்படி ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களாக திருந்தாவிடில் ஒன்றும் செய்ய முடியாது!
இப்போது அவரிடமிருந்து வந்த இ மெயில்:
உங்கள் மீது உள்ள மரியாதை காரணமாக தெரிவித்தேன்.நான் மெயில் அனுப்புவதற்கு இரண்டு நாள் முன்னால் உங்களை மிகவும் பாராட்டி கமெண்ட் போட்டார்.அவர் மீண்டும் உங்கள் பிளாக்குக்கு வரவில்லை ஏன் என்று தெரியுமா? நான் உங்களிடம் பணம் கேட்கவில்லை.
என் பதில்: பணம் கேட்கவில்லை.உண்மைதான்,ஆனால் என்ன மாதிரி உணர்வுகளை உருவாக்க அந்த மெயில் அனுப்பினீர்கள்? பதிவை இன்னொருமுறை படிக்கவும்.எப்போதும் இது நல்லதல்ல!என் மீது மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நான் வளரவும் இல்லை.நன்றி
என்ன கொடுமை சார் இது??!!!
@மாய உலகம் said...
முதல் மழை எனை அழைத்ததே..
நன்றி நண்பா!
உங்களுக்கு வந்த மெயில் ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கே!இப்படிலாம் நடக்குதா?
நான்தாம்ப்பா இன்னைக்கு 7வது போட்ருக்கேன்.
பதிவரசியலா அவ்வ்வ்வ் ...
இப்படியான நபர்களை விட்டு விலகி இருப்பதே சிறந்தது ...
விடுகதைக்கு வடை சொல்லவில்லையே:)
@விக்கியுலகம் said...
நச்சுன்னு சொல்லி இருக்கீங்க நண்பரே!
நன்றி நண்பா!
@suryajeeva said...
இப்படியும் நடக்குதா...
புது விஷயம் கற்றுக் கொண்டேன்..
-suryajeeva
"இங்கேயும் ஓட்டு போட காசு வாங்குறாங்களா? - டவுட் கோவாலு.."
தங்கள் கருத்துரைக்கு நன்றி
@thalir said...
இப்படி ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களாக திருந்தாவிடில் ஒன்றும் செய்ய முடியாது!
ஆமாம் சார்.நன்றி
@Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி அய்யா.
@மைந்தன் சிவா said...
என்ன கொடுமை சார் இது??!!!
நன்றி சிவா
@thirumathi bs sridhar said...
உங்களுக்கு வந்த மெயில் ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கே!இப்படிலாம் நடக்குதா?
நான்தாம்ப்பா இன்னைக்கு 7வது போட்ருக்கேன்.
ஆமாம்,கருத்துரைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி
@கந்தசாமி. said...
பதிவரசியலா அவ்வ்வ்வ் ...
ஆமாம் கந்தசாமி,எப்போ தீருமோ? நன்றி
@கந்தசாமி. said...
இப்படியான நபர்களை விட்டு விலகி இருப்பதே சிறந்தது ..
உண்மையே! நன்மை போலத் தெரிந்தாலும் தீமையே அதிகம்.நன்றி
@ராஜ நடராஜன் said...
விடுகதைக்கு வடை சொல்லவில்லையே:)
வடையா? விடையா? புரியலயே சார் நன்றி
வணக்கம் அண்ணா,
ஆரம்பத்தில் குறை சொல்லுவோர் எப்படி இருப்பார்கள் எனும் உணர்வினையும், பின்னர் பதிவுலகத்திலும் இப்படியான சிறிய மனங்கள் உண்டென்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
சிலருக்குச் சாட்டையடியாக இப் பதிவு அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
வணக்கம் அண்ணா,
ஆரம்பத்தில் குறை சொல்லுவோர் எப்படி இருப்பார்கள் எனும் உணர்வினையும், பின்னர் பதிவுலகத்திலும் இப்படியான சிறிய மனங்கள் உண்டென்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
சிலருக்குச் சாட்டையடியாக இப் பதிவு அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விடுங்க பாஸ் .. அரசியல்ல இதுலாம் சகஜம்
என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?
பதிவுலகில இப்பிடி எல்லாம் இருக்கா??
இதென்ன கொடுமை ....பதிவுலகில் அரசியல் கலப்பதை பதிவர்கள் புறக்கணிக்கவேண்டும் ...
நமக்குத் தெரிந்ததை எழுதுகிறோம். படிச்சவங்க பிடிச்சிருந்தா ஓட்டோ கருத்துரையோ போடப்போறாங்க.சிலபேர் படிச்சிட்டு மட்டும் போகப்போறாங்க. இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது. இப்போ பதிவர் தென்றல் மாதஇதழுக்காக பல பதிவர்களோட பழைய புதிய பதிவுகளை நான் படிச்சிட்டு வரேன். அதில் எனக்கு பிடித்த- கருத்துரைகளே விராத பல பதிவுகளைகூட வெளியிட நான் தேர்ந்தெடுத்திருக்கேன். ஆகவே சலிக்காம எழுதுங்க என்னைக்கிருந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
பிடிச்சவரோ பிடிக்காதவரோ கோள் சொல்வதௌ என்பது மிகப்பெரிய தவறு. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
இப்படியெல்லாம் கூட நடக்குதா?
வடை...
correct sir
அடப்பாவமே...
அருமையான பதிவு அடுத்தவன் உய்வதை விரும்பாதவர்கள்.
எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/top-20-tamil-blog.html
அனைவருக்கும் நன்றி
உண்மைதான்...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Post a Comment