மீனவர்
பிரச்சினை,சமீபத்தில் மூன்று உயிர்களுக்கான
போராட்டம் போன்றவை பெரு வெற்றி பெற்றது.அண்ணா ஹசாரே போராட்டத்தையும்
சேர்த்துக்கொள்ளலாம்.உலகெங்கும் ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் குரல்கள் உரத்து
ஒலிக்கின்றன.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டங்களில் வீச்சு
அதிகரித்திருக்கிறது.இதற்கு காரணம் பேஸ்புக் ,டுவிட்டர்,கூகுள் பிளஸ் போன்ற சமூக
வலைத்தளங்கள் என்பது பலருடைய கருத்து.
மீனவர் பிரச்சினையிலும் ,மரண தண்டனைக்கு எதிராகவும் டுவிட்டரில் பதிவர்கள் பங்கு கொண்ட அறப்போராட்டம் குறைத்து மதிப்பிட முடியாதது.(தமிழ்மணத்திற்கு நன்றி).லண்டனில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுக்க உடனே பரவியது.சமூக வலைத்தளங்களே இதற்கு காரணமாக சொல்லப்பட்டன.முக்கியமான நேரங்களில் பேஸ்புக் கையும் ,டுவிட்டரையும் ,கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வலைத்தளங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் மிகவும் எளிதாகி விட்டது.உடனடியாக உலகம் முழுக்க எல்லா செய்திகளும் பரவி விடுகின்றன.கருத்தொற்றுமை ஏற்படுத்துவதிலும்,செயல்பாட்டை தூண்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன.மக்களின் குரல்கள் ,அவர்களது எண்ணங்களை சமூகமும்,அரசாங்கங்கங்களும் உடனே தெரிந்து கொள்கின்றன.
பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதி தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.ஆசிரியர் நினைத்தால் அது வெளியாகும்.இல்லாவிட்டால் எழுதிய கடிதம் வேஸ்ட்.இப்போது சமூக வலைத்தளங்களில் கணக்கு இருந்தால் போதும்.உலகம் முழுக்க ஒருவரது எண்ணங்கள் போய் சேர்ந்து விடுகிறது.பிரௌசிங் சென்டரில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் கிலோ ,டுவிட்டரிலோ இருப்பதை பார்க்கிறேன்.
ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியை கணினிக்கு முன்பு,கணினிக்கு பின்பு என்று வைத்துக்கொள்ளலாம் போலத்தெரிகிறது.கணினியின் தாக்கம் உலகைப் புரட்டிப் போட்டு விட்டது.இவற்றில் நல்லது இருப்பதை போலவே கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது.ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட பகிர்வுகள் ஆபாசமானவை என்கிறது ஓர் ஆய்வு.சிலர் தங்களது வக்கிரங்களை தணித்துக்கொள்ள அரை நிர்வாணத்தையும் ,ஆபாசத்தையும் கொட்டி வைக்கிறார்கள்.
ஆபாசம்,வக்கிரங்கள் போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் பயன் அதிகம் என்பதுதான் நிஜம்.அது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்.அரப்போராட்டங்களின் வெற்றியை மிகவும் எளிதாக்கும் தன்மையை இந்த வலைத்தளங்கள் பெற்றிருக்கின்றன.வலிமை பெற்ற ஊடகமாக சமூக வலைத்தளங்கள் நிலை பெற்று விட்டன.
இனி எஸ்.எம்.எஸ் சமாச்சாரம் ஒன்று.
இன்பமான நேரங்களில் மௌனம் -சம்மதம்.
உண்மையானவர்கள் பிரியும்போது மௌனம்-துன்பம்.
நட்பில் மௌனம் -நம்பிக்கை.
காதலில் மௌனம் -சித்திரவதை
தோல்வியில் மௌனம் -பொறுமை.
வெற்றியில் மௌனம் -அடக்கம்
இறுதியில் மௌனம் -மரணம்
-

31 comments:
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க சார்! இப்பவெல்லாம் மக்கள் மத்தியில் புதிய கருத்துக்களை சமூக தளங்களே வழங்குகின்றன!
சமூக வலைத் தளங்கள் மூலமாக துரித கதியில் பரிமாறப்படும் கருத்துக்களின் வீரியத்தினையும், அரசாங்களுக்கெதிரான போராட்டங்கள் எவ்வாறு சோசியல் மீடொயாக்கள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி அண்ணே.
எஸ் எம் எஸ் சமாச்சாரம் நல்லதோர் தத்துவமாக அமைந்துள்ளது பாஸ்.
ம்ம் இன்று சமூக வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்துவிட்டது..
சாதி,மதக் கலவரங்கள்,வேறு போராட்டங்கள் ஏற்படும்போது உடனே எல்லா இடத்துக்கும் பரவும் வாய்ப்பு அதிகம்.நல்ல பதிவு
இப்பவெல்லாம் மக்கள் மத்தியில் புதிய
கருத்துக்களை சமூக
தளங்களே வழங்குகின்றன!இப்பவெல்லாம் மக்கள் மத்தியில் புதிய
கருத்துக்களை சமூக
தளங்களே வழங்குகின்றன!
வதந்திகள் பரவும் வாய்ப்பும் அதிகம்.
நீங்க சொல்வது உண்மைதான்....எளிதில் சென்று சேர்வதால் பல உண்மைகள் கருத்து மோதல்களுடன் வெளிச்சத்துக்கு வருகின்றன...பகிர்வுக்கு நன்றி!
பொதுவாக படித்து விபரமறிந்தவர்கள் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவதால் இனி அரசுகள் ஏமாற்றுவது கடினம் !
nalla pathivu.kanini valarchikku piraku nalla matram irukkirathu.
உண்மைதான், கணிணியால் நன்மைதான் ஏற்படுகிறது...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அருமையான அலசல், ஆனால் வலை தளங்களில் ஏற்றப் படுவதை வெளியில் பல பேரிடம் தெரிவிப்பது அச்சு ஊடகமும் தொலைக்காட்சியும் என்பதை நினைவு படுத்துகிறேன்
ஆம், உண்மைதான்.எல்லோராலும் தெருவில் இறங்கி போராட முடியாது. சமூக தளங்களின் மூலம் இவற்றை வலியுறுத்த முடிகிறது.
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
ஆம் உண்மையான அலசல்..
நல்ல பகிர்வு நண்பரே..
முகபுத்தகத்திலும், ட்விட்டரிலும் உண்மைப்போலவே பொய்யான சில தகவல்களையும் பரப்புகிறார்கள் சிலர்.. அவைகளை தவிர்த்தால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்..
பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துகள்..
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க சார்! இப்பவெல்லாம் மக்கள் மத்தியில் புதிய கருத்துக்களை சமூக தளங்களே வழங்குகின்றன!
நன்றி சார்
@நிரூபன் said...
சமூக வலைத் தளங்கள் மூலமாக துரித கதியில் பரிமாறப்படும் கருத்துக்களின் வீரியத்தினையும், அரசாங்களுக்கெதிரான போராட்டங்கள் எவ்வாறு சோசியல் மீடொயாக்கள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும் விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி அண்ணே.
நன்றி நிரூபன்.
@கந்தசாமி. said...
ம்ம் இன்று சமூக வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்துவிட்டது..
ஆமாம்,கந்தசாமி பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்ற நிலை வரும்
@RAVICHANDRAN said...
சாதி,மதக் கலவரங்கள்,வேறு போராட்டங்கள் ஏற்படும்போது உடனே எல்லா இடத்துக்கும் பரவும் வாய்ப்பு அதிகம்.நல்ல பதிவு
உண்மைதான்,நன்றி
@அசோக்.S said...
இப்பவெல்லாம் மக்கள் மத்தியில் புதிய
கருத்துக்களை சமூக
தளங்களே வழங்குகின்றன!
உண்மைதான் சார்,நன்றி
@விக்கியுலகம் said...
நீங்க சொல்வது உண்மைதான்....எளிதில் சென்று சேர்வதால் பல உண்மைகள் கருத்து மோதல்களுடன் வெளிச்சத்துக்கு வருகின்றன...பகிர்வுக்கு நன்றி!
நன்றி நண்பா!
@koodal bala said...
பொதுவாக படித்து விபரமறிந்தவர்கள் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவதால் இனி அரசுகள் ஏமாற்றுவது கடினம் !
ஆமாம் சார் நன்றி
@ராஜன் said...
nalla pathivu.kanini valarchikku piraku nalla matram irukkirathu.
ஆனால் தனிமனித வளர்ச்சியில் மாற்றம் இருக்கிறதா?
@Sankar Gurusamy said...
உண்மைதான், கணிணியால் நன்மைதான் ஏற்படுகிறது...
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்
@suryajeeva said...
அருமையான அலசல், ஆனால் வலை தளங்களில் ஏற்றப் படுவதை வெளியில் பல பேரிடம் தெரிவிப்பது அச்சு ஊடகமும் தொலைக்காட்சியும் என்பதை நினைவு படுத்துகிறேன்
ஆமாம்,ஆனால் சொந்தக்கருத்துக்களுக்கு இவைதான் உதவுகின்றன.நன்றி
@சாகம்பரி said...
ஆம், உண்மைதான்.எல்லோராலும் தெருவில் இறங்கி போராட முடியாது. சமூக தளங்களின் மூலம் இவற்றை வலியுறுத்த முடிகிறது.
நன்றி சகோதரி
2Online Works For All said...
Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆம் உண்மையான அலசல்..
நன்றி வாத்யாரே!
@ராஜா MVS said...
நல்ல பகிர்வு நண்பரே..
முகபுத்தகத்திலும், ட்விட்டரிலும் உண்மைப்போலவே பொய்யான சில தகவல்களையும் பரப்புகிறார்கள் சிலர்.. அவைகளை தவிர்த்தால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்..
பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துகள்..
நன்றி நண்பரே!
யாரோ ஒருவர் சொன்னது, முதல் சிப்பாய் கலகம் வெற்றி பெறாமல் போனதன் காரணம் சரியான தகவல் தொடர்பு இல்லாததே...
Post a Comment