பத்திரிகையாளர்கள் என்றால் பெரிய பெரிய ஆட்களெல்லாம் மரியாதை கொடுப்பார்கள்.சும்மா வெளிவேஷம்தான்.ஆனால் பத்திரிக்கை முதலாளிகள் மிகவும் மதிக்கும் நபர் ஏஜன்ட்.சில்லறையை இறைத்து பெருக்குவது என்பார்கள்.பத்திரிகைக்கு அது பொருந்தும்.பல ஏஜெண்டுகளிடம் பணம் வாங்குவது சாதாரண விஷயமல்ல.அப்படியெல்லாம் இல்லாமல் நல்ல(சொல்லி வைக்கிறேன்) ஏஜன்ட் ஒருவரின் கடைக்கு போனேன்.பல வருடங்களாக பழக்கம்."இவர் .....பத்திரிக்கை நிருபர் என்று அறிமுகப்படுத்தினார்.என்னை இவர் தமிழ் பிளாக்கர் என்று சொன்னார்.அற்பமான புழுவைப் பார்ப்பது போல் தோன்றியது.எந்த ரியாக்சனும் இல்லை.ஏஜண்டுக்கு ஏன் மீது கொஞ்சம் மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.
நான்: "ஆயிரக்கணக்கில் கவிதை,கதை,அரசியல்,நகைச்சுவை என்று தமிழ் விளையாடிக்கொண்டிருக்கும் இடம் அது.நீங்கள் சொல்லும் காபி பேஸ்ட் குறைவுதான். நேரமில்லாத போது ஏதாவது பதிவு போடலாம் என்று காபி பேஸ்ட் செய்வார்கள்.
அவருக்கு நம்பிக்கை வரவில்லை .
நிருபர்:" நான் சில நேரங்களில் பார்க்கிறேன் .பத்திரிகையில் இருந்து எடுத்ததுதான் இருக்கிறது என்றார்.
நிருபர்:யார் படிக்கிறார்கள்.?சினிமாவும் காபி பேஸ்ட் டும் தான் இருக்கிறது.மற்றதையெல்லாம் நீங்கள் எழுதி நீங்களே படித்துக்கொள்வீர்களா?
நான்:(அடப்பாவி பக்கம் இருந்து பார்த்திருப்பாரோ?) நானும் பத்திரிக்கை படிக்கத்தொடங்கிய காலத்தில் சினிமா பற்றியே அதிகம் படித்தேன்.வாரப்பத்திரிகைகளில் மூன்று தொடர்கதை யாவது கட்டாயம் இருக்கும்.இப்போது அப்படியில்லை.மாற்றம் ஒன்றே மாறாதது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.
அவர் மேற்கொண்டு பேசியவை இங்கே வேண்டாம்.என்னுடைய பிளாக் முகவரியும் போன் நம்பரும் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.ஒரு நாள் அவரும் வலைப்பதிவுக்கு வருவார் என்று நினைத்துக்கொண்டேன்.
31 comments:
எவ அவா??
வரவு நல்வரவாகட்டும் ஹிஹி
தமிழ் மணம் 2
பிளாக்கரில் எழுதுவதால் எவ்வளவோ நன்மைகள் உள்ளது.. முக்கியமாக வாசிப்பு பழக்கம், நாம் அறியாத பல்வேறு விடயங்களை பிற பதிவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்...இது போன்று,
ஆனால் காப்பி பேஸ்டை மட்டும் தூக்கி பிடிப்பது சரியில்லை(
முதலில் இணைய தளத்தால் நிறைய பத்திரிக்கைகள் பின்னடைவு ஏற்பட்டது எவ்வளவு உண்மையோ...அது போல் இன்று பிலாக்கரில் எழுதுவதால் கண்டிப்பாக பத்திரிக்கைகள் பின்னடைவுகள் அடைந்து கொண்டு வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை..நீங்கள் சொன்னது போல் மாற்றம் ஒன்றே மாறாத்து...அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லையென்றால் காண்டு வர தான் செய்யும்... அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் கடமையை தொடருங்க பாஸ்...வாழ்த்துக்கள்
பாவம் அவருக்கு உண்மை பார்த்தால் பயம் போலிருக்கு ஹிஹி....விடுங்க இதெல்லாம் தாங்கத்தானே நாம இருக்கோம்!
அவருக்கு என்ன கஷ்டமோ பாவம்.
//.உலகத்தமிழர்களை வேறு எந்த ஊடகமும் ஒருங்கிணைத்த தில்லை.//
உண்மைதான்.
@மைந்தன் சிவா said...
எவ அவா??
வரவு நல்வரவாகட்டும் ஹிஹி
வந்து பார்த்தால்தான் தெரியும் என்கிறீர்களா? நன்றி சிவா
பிளாகில் எழுதுவதால் வாசிக்கும் பழக்கம், அதிகரிக்கிறது..
வலைப்பதிவு ஒரு அற்புதமான மாற்று ஊடகம்.. விரைவில் இதன் வீச்சு அனைவருக்கும் புரியும்...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
உண்மையில் மிக சரியான அழகான பதிவை தாங்கி வரும் வலை பூக்கள் கண்ணுக்கு தெரியாமல் யார் ஆதரவும் இல்லாமல் வாடி விடுகின்றன, பல பதிவர்கள் கிடைக்கும் சில மணி துளிகளில் மட்டும் எழுதி விட்டு செல்வதால் அதை பெரிதாக விளம்பர படுத்த முயல்வதில்லை... அதை தீர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாய் ஓடி கொண்டிருக்கிறது.. விரைவில் வெளி வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..
//உலகத்தமிழர்களை வேறு எந்த ஊடகமும் ஒருங்கிணைத்த தில்லை.//
இதைச் சொல்லியுமா அவர் நம்பவில்லை:)
//மாற்றம் ஒன்றே மாறாதது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.//
உலகத் தமிழர்களை ஒன்றினைக்கும் வலை சரியாக இருக்கு! நண்பர் சயீவன் சொல்வதும் கவனிக்க வேண்டியது!
தங்கள் கருத்தைமட்டுமே வைத்துகொண்டு வாதாடுபவர்களுக்கு என்னதான் நாம் சொல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் அவர்களது காதுக்குள் ஏறாது.., அவர்களாக உணர்ந்தால் மட்டுமே உண்டு..
பகிர்வுக்கு வாழ்த்துகள்...
@நிகழ்வுகள் said...
பிளாக்கரில் எழுதுவதால் எவ்வளவோ நன்மைகள் உள்ளது.. முக்கியமாக வாசிப்பு பழக்கம், நாம் அறியாத பல்வேறு விடயங்களை பிற பதிவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்...இது போன்று,
ஆனால் காப்பி பேஸ்டை மட்டும் தூக்கி பிடிப்பது சரியில்லை(
காபி பேஸ்ட் தவறுதான்.ஆனால் தமிழ்பதிவுகள் அவை மட்டும்தான் என்ற பார்வை இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,நன்றி சார்
@மாய உலகம் said...
முதலில் இணைய தளத்தால் நிறைய பத்திரிக்கைகள் பின்னடைவு ஏற்பட்டது எவ்வளவு உண்மையோ...அது போல் இன்று பிலாக்கரில் எழுதுவதால் கண்டிப்பாக பத்திரிக்கைகள் பின்னடைவுகள் அடைந்து கொண்டு வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை..நீங்கள் சொன்னது போல் மாற்றம் ஒன்றே மாறாத்து...அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லையென்றால் காண்டு வர தான் செய்யும்... அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் கடமையை தொடருங்க பாஸ்...வாழ்த்துக்கள்
நன்றி நண்பா!
@விக்கியுலகம் said...
பாவம் அவருக்கு உண்மை பார்த்தால் பயம் போலிருக்கு ஹிஹி....விடுங்க இதெல்லாம் தாங்கத்தானே நாம இருக்கோம்!
ஆமாம் சார் தாங்குவோம்,நன்றி
@Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா.
@RAVICHANDRAN said...
அவருக்கு என்ன கஷ்டமோ பாவம்.
உண்மைதான் அவர்கள் கஷ்டமும் அதிகம்.நன்றி
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பிளாகில் எழுதுவதால் வாசிக்கும் பழக்கம், அதிகரிக்கிறது..
உங்களுக்கு அதிகம்தான் ஹாஹா நன்றி
@Sankar Gurusamy said...
வலைப்பதிவு ஒரு அற்புதமான மாற்று ஊடகம்.. விரைவில் இதன் வீச்சு அனைவருக்கும் புரியும்...
ஆமாம் சங்கர் சார் நன்றி
suryajeeva said...
உண்மையில் மிக சரியான அழகான பதிவை தாங்கி வரும் வலை பூக்கள் கண்ணுக்கு தெரியாமல் யார் ஆதரவும் இல்லாமல் வாடி விடுகின்றன, பல பதிவர்கள் கிடைக்கும் சில மணி துளிகளில் மட்டும் எழுதி விட்டு செல்வதால் அதை பெரிதாக விளம்பர படுத்த முயல்வதில்லை... அதை தீர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாய் ஓடி கொண்டிருக்கிறது.. விரைவில் வெளி வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
@ராஜ நடராஜன் said...
//உலகத்தமிழர்களை வேறு எந்த ஊடகமும் ஒருங்கிணைத்த தில்லை.//
இதைச் சொல்லியுமா அவர் நம்பவில்லை:)
அவருக்கு வேறு மனக்கஷ்டம் இருக்கிறது.இன்னொரு பதிவு வரும்,நன்றி
@ராஜன் said...
//மாற்றம் ஒன்றே மாறாதது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.//
ஆமாம் சார் நன்றி
@Nesan said...
உலகத் தமிழர்களை ஒன்றினைக்கும் வலை சரியாக இருக்கு! நண்பர் சயீவன் சொல்வதும் கவனிக்க வேண்டியது!
ஆம் சார் நன்றீ
2ராஜா MVS said...
தங்கள் கருத்தைமட்டுமே வைத்துகொண்டு வாதாடுபவர்களுக்கு என்னதான் நாம் சொல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் அவர்களது காதுக்குள் ஏறாது.., அவர்களாக உணர்ந்தால் மட்டுமே உண்டு..
பகிர்வுக்கு வாழ்த்துகள்...
நன்றி சார்
well said
@jeya said...
well said
THANK YOU
வணக்கம் பாஸ்,
கிணற்றுத் தவளைகள் பல உலகில் இருக்கின்றன, அவர்கள் வரிசையில் தான் பதிவுலகம் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்த பத்திரிகை நிருபரும் அடங்குவார் என்று நினைக்கிறேன்.
தினமணிப் பத்திரிகையின் வலைப் பூக்கள் பகுதியில் உங்களின் இப் படைப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் பாஸ்.
Post a Comment