Tuesday, September 6, 2011

கள்ளக்காதல் தந்திரங்கள்.

                             போலியான உறவுகளுக்கு கள்ளக்காதல் ஒரு நல்ல உதாரணம்.ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் உறவுமுறை அது.எனக்கு அறிமுகமில்லாத புதிய இடம்.யாரையும் நேர்முகமாகத் தெரியாது.ஒருவர் அன்போடு என்னிடம் பழகினார்.எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்.முகத்தை நேராக பார்த்து சிரிக்காத்தால் அவரிடம் ஒட்டவில்லை.

                              என்னிடம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் அன்புடனும்,கனிவுடனும் நடந்து கொள்வதை கவனித்தேன்.யாரோ நன்கொடை கேட்டு வந்தார்கள்.மற்றவர்களைவிட அதிகம் எழுதினார்.யாருக்காவது உடல்நிலை சரியில்லாவிட்டால் வீட்டில் இருப்பவர்களைவிட அதிகம் கவனிப்பார்.யார் வேண்டுமானாலும் அவரிடம் கடன் வாங்கலாம்.பலருடைய கஷ்டம் அவரால் தீர்ந்திருக்கிறது.

                              மதிய உணவு இடைவேளையின் போது ஒருவர் சொன்னார்சார்,ரொம்ப மோசம் சார்! ரெண்டு கொழந்தைங்க சார்! நல்ல சாவு வராது சார்,வீட்டில் யாரையும் மதிப்பதே இல்லை!அவரது கள்ளக்காதலை எனக்கு புட்டுபுட்டு வைத்தார்.எனக்கு ஆச்சர்யமாகப் படவில்லை.இந்த மாதிரி ஆட்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

                               ஒரு பெண் குற்றம் சுமத்திவிட்டார் என்பதற்காக விசாரிக்க அழைக்கப்பட்டார்.சட்டப்பூர்வமாக அல்ல.உள்ளேயே பேசித்தீர்க்கும் விஷயம்.பத்து வருடங்களுக்கு முன்பு விளையாட்டு போட்டி ஒன்றில் வென்ற சான்றிதழ்களை எடுத்து வந்திருந்தார்.பிரபலமான யாரையோ எனக்கு உறவு என்றார்.

                                 தவறு செய்பவர்களும்,செய்து விட்டவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.தந்திரமாக அனைவருடனும் நல்ல உறவுகளைப்பேணி விட்டால் தவறுகள் மறக்கப்பட்டுவிடும் என்பது எண்ணம்.உண்மையில் இது மனம் எடுக்கும் ஒரு முயற்சிதான்.நான்கு பேர் காறித்துப்புவது போல செயல்களைச்செய்பவர்களுக்கு குற்ற உணர்வு இயல்பாக இருக்கும்.அதே சமயம் நல்ல உறவுகளைப் பேணுபவர்கள் எல்லாம் இப்படித்தான் என்று பொருள் அல்ல!

                                 குற்ற உணர்வை சரி செய்ய உள்ளமே தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுதான் அது.கள்ளக்காதல் என்றில்லாமல் தெரிந்தோ,தெரியாமலோ தவறு செய்யும் எல்லோருக்கும் இது பொருந்தும்.இவர்களிலும் சிலர் வீராப்பாக பெரிய ஆள்போலக் காட்டிக் கொள்வார்கள்.இதுவும் தந்திரமே! யாருக்கும் தெரியாது என்று நினைப்பவர்கள் போக்கு இது.

                                 இவர்களின் அன்பையும்,கருணையையும் உண்மை என்று நம்பி ஏமாந்து போகிறவர்கள் உண்டு.நம்பிக்கையில் தனது ரகசியத்தையும்,குடும்ப விவகாரங்களையும் கொட்டி விடுவார்கள்.அப்புறம் அவர்களுக்கு அடிமைதான்.

         நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.

-

23 comments:

RAVICHANDRAN said...

யாரையும் நம்பி குடும்ப விவகாரங்களை பேசக்கூடாது.உறவினர்களுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

RAVICHANDRAN said...

தவறு செய்பவர்கள் வெளியே நல்லவர்கள் மாதிரி காட்டிக்கொள்வதை பார்க்க முடிகிறது.

Anonymous said...

நம்பிக்கைக்கு செய்யும் மோசடி தான் உந்த கள்ள உறவு (

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
வாழ்க்கையில் நாம் யார் யாரிடம் நம்பிக்கை வைத்துப் பழக வேண்டும் எனும் மனோதத்துவத் தெளிவினை உங்களின் இப் பதிவு தருகின்றது.

மாய உலகம் said...

நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.//

சூப்பர் நண்பரே.... மன இயல் ரீதியான பதிவு....மீண்டும் மீண்டும் படித்து எச்சரிக்கை உணர்வினை தூண்டிய பதிவு... நல்லவர்கள் வேசம் போடும் கயவர்கள இப்படியும் நடந்து கொள்வார்கள் என்பதற்கான அருமையான பதிவை தந்து அசத்திவிட்டீர்கள்.... யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...அம்மம்மா பூமியிலே யாவும் ப்ஞ்சம்..... வாழ்த்துக்கள் நண்பரே

ஸ்ரீராம். said...

நல்ல பதிவு. நிரூபன் பதிவில் உங்கள் அறிமுகம் கண்டு இங்கு வந்தேன்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

யாரையும் நம்பி குடும்ப விவகாரங்களை பேசக்கூடாது.உறவினர்களுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

உண்மைதான் சார்,தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@கந்தசாமி. said...

நம்பிக்கைக்கு செய்யும் மோசடி தான் உந்த கள்ள உறவு (

ஆமாம் சார் நன்றி

Unknown said...

பதிவு அருமை நன்றிங்கோ!

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
வாழ்க்கையில் நாம் யார் யாரிடம் நம்பிக்கை வைத்துப் பழக வேண்டும் எனும் மனோதத்துவத் தெளிவினை உங்களின் இப் பதிவு தருகின்றது.

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிரூபன்.

shanmugavel said...

@மாய உலகம் said...

நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.//

சூப்பர் நண்பரே.... மன இயல் ரீதியான பதிவு....மீண்டும் மீண்டும் படித்து எச்சரிக்கை உணர்வினை தூண்டிய பதிவு... நல்லவர்கள் வேசம் போடும் கயவர்கள இப்படியும் நடந்து கொள்வார்கள் என்பதற்கான அருமையான பதிவை தந்து அசத்திவிட்டீர்கள்.... யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...அம்மம்மா பூமியிலே யாவும் ப்ஞ்சம்..... வாழ்த்துக்கள் நண்பரே

நன்றி நண்பா!

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

நல்ல பதிவு. நிரூபன் பதிவில் உங்கள் அறிமுகம் கண்டு இங்கு வந்தேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@விக்கியுலகம் said...

பதிவு அருமை நன்றிங்கோ!

நன்றி நண்பா!

கோவி.கண்ணன் said...

நல்லாத் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

SURYAJEEVA said...

ஏமாற்றுபவர்களை இணங்க கண்டு கொல்வது கடினம் நண்பா, ஆனால் நீங்கள் சொல்வது போல் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கையும் கடினம் தான்.. நீங்கள் கூறுவது போல் ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்த பின்பே அவர்களிடம் ரகசியங்களை கூறலாம் என்பதும் தவறு... பசு தோல் போர்த்தியவன் அவ்வளவு சீக்கிரம் தன் சாயம் வெளுப்பதை விரும்புவதில்லை..

சத்ரியன் said...

அவசியமான பதிவுங்க சண்முகம் அண்ணே!

பின்னூட்டத்தில், நண்பர் சூர்யஜீவா முன் வைக்கும் கருத்தும் ஏற்புக்குடையதே.

இராஜராஜேஸ்வரி said...

நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.

தெளிவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Sankar Gurusamy said...

ரொம்ப நல்லவங்ககிட்ட கொஞ்சம் உஷாரா இருக்க சொல்றீங்கன்னு புரியுது...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

தமிழ்மணம் ஏழு..

ராஜா MVS said...

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாதிருப்பது அதைக் காட்டிலும் மிகவும் அபாயகரமானது.
-ஆப்ரஹாம் லிங்கன்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..

கூடல் பாலா said...

\\\நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.\\\ வள்ளுவர் வாக்கு முற்றிலும் உண்மை !

KANA VARO said...

இது தான் உண்மையான பயனுள்ள பதிவு

ஓசூர் ராஜன் said...

தவறு செய்பவர்களும்,செய்து விட்டவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.தந்திரமாக அனைவருடனும் நல்ல உறவுகளைப்பேணி விட்டால் தவறுகள் மறக்கப்பட்டுவிடும் என்பது எண்ணம்/

yes sir