யாரோ புதிய
பதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்
என்னை ‘’நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்” என்று சொல்வாரா? நிரூபன் என்னை தன் பதிவில்
அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.ஆண்டாள் பாசுரங்களையெல்லாம் விமர்சித்து
ஒரு பதிவு எழுதி விட்டார்.வழக்கமாக பதிவுகளில் இம்மாதிரி பார்க்கும்போது நான்
விமர்சிப்பதில்லை.இவர் நல்ல ஆளாச்சே! ஏதோ சகவாசதோஷம் என்று எதிர்பதிவு எழுதுவதாக
சொல்லிவிட்டேன்.
கவர்ச்சி,ஆபாசம் என்று பதிவுலகில் காரசாரமாக தனக்குத் தெரிந்த்தை
எழுதி வருகிறார்கள்.ஆபாசம் என்றால் என்ன என்பது பற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டு
விட்டேன். வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை
ஏற்படுத்தினால் அது ஆபாசம்.
சினிமாக்களில் கற்பழிப்பு
காட்சி இடம்பெறுவதுண்டு.பல திரைப்படங்களிலும் அதன் நோக்கம் ஆபாசம்தான்.சினிமாவை
சிறந்த கலையாக கையாளும் இயக்குனர்கள் படங்களில் கற்பழிப்பு காட்சி இருக்கும்.ஆனால்
அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிர
கிளர்ச்சியைத்தருவதில்லை.
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியை
தூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம்
வேறு.முன்பே
குறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன்
தகுதி தீர்மானிக்கப்படுகிறது.உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை,
இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளை
பெண்களிடம் எதிர்பார்க்கிறார்? இந்த பதிவின் நோக்கமென்ன? இன்று கலாச்சார காவலர்களை
விமர்சிப்பவர்கள் யார்? அவர்களின் நோக்கமென்ன? பெண்களுக்கு சப்போர்ட் செய்து ஹீரோ
ஆகலாம் என்று பார்க்கிறீர்களா என்பது ஏன்?
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பது
உண்மையா? அப்படி யாராவது மணிரத்னம் பட்த்துக்கோ,தங்கர் பச்சான் பட்த்துக்கோ ஹீரோ
ஆகி இருக்கிறார்களா? நான் பல பதிவுகளை அப்படி எழுதியதுண்டு.அடுத்த சில
பதிவுகளுக்கு ஹிட்ஸ் குறையுமே தவிர ஹீரோ மட்டும் ஆகவில்லை.ஆனாலும் எழுதுவதை
தவிர்க்க முடியாது.அது பாரதியிடமிருந்து பெற்ற மதிப்பீடு!
கில்மா என்பது கவர்ச்சிப்பட்த்தை குறிக்கிறதா? அரைநிர்வாண பட்த்தை
குறிக்கிறதா? எனக்கு தெரியாது.கவர்ச்சி உணர்வுகளைத் தூண்டும் என்று பிரபல பதிவர் நிரூபன்
சொல்கிறார்.அப்படியானால் ஆபாசம்தானே! ஆபாச பதிவுகள் என்ன நோக்கத்திற்காக
பதிவுலகில் எழுதப்படுகிறது.ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார காவலர்கள் என்றால்
அதை தூக்கிப்பிடிப்பவர்கள் கலாச்சாரம் இல்லாத ஆட்களா?
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில்
ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றிய
மனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள்
ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.
பெண்கள் சிக்ஸ்பேக்கை
விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? விரும்பினால்தானே அதைப்பற்றி எழுதமுடியும்?
ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.தாமரை
பட்த்தின் காட்சிக்குத் தகுந்தவாறு பாடல் எழுதலாம்.பதிவர்கள் அதை செய்யுங்கள்,இதை எழுதுங்கள் என்ற ஐடியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களா? அவரவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள்.
89 comments:
வணக்கம் ஷண்முகவேல் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?
இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!
யாரோ புதிய பதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.///
அது நான் தானுங்கோ!
நல்ல பதிவு தோழரே வாழ்த்துகள்
தமிழில் SEO தகவல்கள்
அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் என்னை ‘’நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்” என்று சொல்வாரா?///
கரெக்ட் சார், இப்பவும் சொல்றேன் சார், நீங்க நல்லா இருக்கணும்!
பை த பை என்னைய நல்லவருன்னு சொன்னது ரொம்ப நன்றி சார்!
( இதுவரைக்கும் யாருமே சொன்னதில்ல!)
நிரூபன் என்னை தன் பதிவில் அறிமுகப்படுத்திய பதிவில் அவர் சொன்னது.///
ஆமா சார்!
ஷண்முகவேல் சார், முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்! எனது கருத்துக்கள், உங்கள் கருத்துக்களுடன் முட்டி மோதலாம்! இருவரும் எதிர் எதிர் கருத்துக்களைச் சொல்லி, வாதிடலாம்!
அதிலொன்றும் பிரச்சனை இல்லை!
ஆனால், நீங்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது! என்னை வெறுக்கவும் கூடாது! நானும் உங்க மேல அன்பும் மரியாதையும் வைச்சிருக்கேன்!
அதில் பழுதேதும் வரக்கூடாது! ஓகே வா?
வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை ஏற்படுத்தினால் அது ஆபாசம்.///
சரியான வரைவிலக்கணம்! ஒத்துக்கொள்கிறேன்!
ஆனால் அக்காட்சி பரிதாபத்தையும்,பாதிக்கப்படும் பெண்ணின் மீது பரிவையும் தூண்டுமே தவிர கிளர்ச்சியைத்தருவதில்லை.///
இதுவும் உண்மை!
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியை தூண்டாது,///
இப்படி ஒரு தெளிவான பதிலை, நான் அப்பதிவின் பின்னூட்டத்தில் எதிர்பார்த்தேன்! அது இங்கு கிடைத்து விட்டது!நன்றி!
இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம் வேறு.முன்பே குறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.///
மிக மிகச் சரி!
உலகின் சில திரைப்படங்களும்,நாவல்களும் ஆபாசம் என்று தடை செய்யப்பட்டு கலை, இலக்கியத்தகுதி காரணமாக தடை நீக்கப்பட்ட்துண்டு.///
இதுவும் உண்மையே!
என்ன நடக்குதுன்னு புரியல ஆனா எதோ நடக்குதுன்னு புரியுது.. புரியரவங்களுக்கு புரிஞ்சா போதும்ன்ர பதிவு போலிருக்கு, அதில எனக்கு புரிஞ்சாத மட்டும் எடுத்துக்கிற அளவுக்கு பதிவுல எவ்வளவோ இருக்கு.. சார், கிழிஞ்ச துணியோட வர நடிகைக்கு பின்னாடி இசை சேர்ப்பதில் இருக்குது ஆபாசம்.. சோகமாகவும் காட்டலாம் மோசமாகவும் காட்டலாம்..
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளை பெண்களிடம் எதிர்பார்க்கிறார்? ///
நல்லதொரு கேள்வி கேட்டீர்கள் ஷண்முகவேல் சார்! இப்போது எனது பதிலுக்கு நான் வருகிறேன்!
எனது நோக்கம் என்ன என்பதை நான் தெளிவாக சொல்லிவிடுகிறேன்!
பெண்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது கில்மா பதிவுகளை அல்ல! அல்லது பாலுணர்வுகளைத் தூண்டும் பதிவுகளோ அல்ல!
பெண்களால் கில்மா பதிவுகள் போட முடியுமோ? என்பது நான் இந்த வலையுலகை நோக்கி விடுத்த சவால்! இப்படி ஒரு சவாலை விட்டால்தான், அது பலரது கவனத்தை ஈர்க்கும் என்று, பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்ட நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லியிருந்தார்!
இன்று எனது நோக்கம் நிறைவேறி விட்டது, எனது அந்தப் பதிவும் சரி, திரு.நிரூபன் அவர்களது பதிவுகளில் நான் போட்ட கமெண்டுகளும் சரி, என்னை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும் நல்லதொரு, வாய்ப்பாக அமைந்துவிட்டது!
இப்போது, இந்த ஐடியா மணி யார் என்று பலருக்கும் தெரிந்துவிட்டது! இனி நான் யார் என்பதையும், எனது நோக்கம் எது என்பதையும் அனைவருக்கும் அறிவிக்கிறேன்!
சார், நான் யாரென்றால், இந்த நாட்டையும், எமது மக்களையும், மிகவும் அன்பாக நேசிக்கிற ஒருவன்!
பல உலக நாடுகளுடன், எமது ஆசிய நாடுகளை நான் அடிக்கடி ஒப்பிட்டிப் பார்ப்பேன்! பொருளாதாரத்திலும், அரசியலிலும், கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல துறைகளிலும் எமது நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்று, நான் அடிக்கடி சிந்திக்கிறேன்!
மேலும், எமது வாழ்வியல் முறை, எமது சமூகத்தில் பெண்களின் நிலை என எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறேன்! நான் ஒரு அரசியல் வாதி அல்ல!
எமது நாடுகள் எத்தனையோ, விஷயங்களில் பின் தங்கியிருப்பதை அவதானிக்கிறேன்! அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், ஃபிரான்சுக்கும் நிகராக எமது நாடு சரி நிகர் சமானமாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!
சும்மா ஆசைப்பட்டால் போதுமா? அதற்கு என்ன வழி என்று ஆராய வேண்டாமா?
ஆராய்ந்தேன் சார்! அதன் முடிவுகளையும் கண்டுகொண்டேன்!
என்னிடம், இந்தியாவை மேம்படுத்துவதற்கான, லட்சம் ஐடியாக்கள் உள்ளன! அவற்றை ஒவ்வொன்றாக பொது மேடையில் வைக்கப் போகிறேன்!
அதனால்தான் எனது பேரை ஐடியா மணி என்று வைத்தேன்!
எமது நாட்டு அரசுகள் மக்களை நன்றாகவே ஏமாற்றி, முட்டாளாக்கி, சுயசிந்தனை அற்றவர்களாக்கி, கேள்வி கேட்க முடியாதவர்களாக மாற்றி வைச்சிருக்காங்க சார்!
என்னைப் பொறுத்தவரை எமது நாடுகளும், அமெரிக்கா போன்று முன்னேறும் வரை, எனது கூர்மையான கருத்துக்கள், வெளியாகிக்கொண்டே இருக்கும் சார்!
எமது தேசத்தில் வீணடிக்கப்படும் ஆயிரக்கணக்கான வளங்களில், பெண்களின் ஆளுமையும் ஒன்று சார்!
எப்படி எமது நாட்டில் பெண்களின் ஆளுமை வீணடிக்கப்படுது? அவர்கள் தங்கள் ஆளுமைகளை எப்படி ஆக்க சக்திக்குப் பயன்படுத்தலாம்? எமது தேசத்தின் வளர்ச்சிக்கு பெண்கள் எப்படி உதவலாம் என்பதில் நான் மிகப் பெரிய ஆய்வுகள் எல்லாம் செய்திருக்கேன்!
என்னால் மற்றவர்களைப் போல, “ ஆமா, பெண்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கக் கூடாது, அவர்கள் சாதிக்கணும், போராடணும், புறப்படுணும்” என்று ஒப்புக்குர் சப்பாணி கொட்ட முடியாது!
ஏன்னா, இதுமாதிரி லட்சம் பேர், இதுக்கு முன்னாடி சொல்லியிருக்காங்க! எதுவுமே நடக்கலை!
என்னால, மேடைப் பேச்சுக்கு மட்டுமே பயன்படும் வெற்றுக் கோஷங்களைச் சொல்ல முடியாது!
எனது கருத்துக்கள் அதையும் தாண்டி வித்தியாசமானவை!
சரிங்க சார், நான் எங்கேயோ போயிட்டேன்!
இப்போ மீண்டும் விஷயத்துக்கு வர்ரேன்!
அழகிய அலசல் கட்டுரை! நன்றி!
@விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி மாப்ள!
கருத்துரைக்கு நன்றி மாம்ஸ்
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் ஷண்முகவேல் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?
இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!
வணக்கம் சார்,நலமே! பொறுமையா படிங்க அவசரமில்ல!
சார், எமது வலையுலகை நீங்க நன்கு அவதானித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்!
தொடக்க காலத்தில் பல பெண்கள், ப்ளாக்குல எழுதிக்கிட்டு வந்தாங்க! இப்போ பலபேரைக் காணல! சில பேர விரட்டி அடிச்சுட்டாங்க!
ஒரு பெண் வெறுமனே, சமையல் குறிப்பையும், அழகுக் குறிப்பையும், பிள்ளை வளர்ப்பையும் பற்றி மட்டும் எழுதினால் போதும் அப்டீன்னு நெனைச்சுட்டாங்க போலும்!
சார், நீங்க படிச்சதில்லையா, சில பெண் பதிவர்கள் , - ஆண்பதிவர்கள் மாதிரி நம்மளால வெளிப்படையா எழுத முடியலையேன்னு வருத்தப்பட்டு பதிவு போட்டிருக்கங்க!
அப்டீன்னா, அவங்க ஏதோ சொல்ல வர்ராங்கன்னுதானே அர்த்தம்! எதுக்காக அவங்களோட குரலை நசுக்கணும்?
ஒரு அரசியல் ஆய்வையோ, சினிமா விமர்சனத்தையோ ஆண்பதிவர்கள் மட்டும்தான் எழுதணுமா? பெண்பதிவர்கள் எழுதக் கூடாதா? அவர்களின் ஆளுமை எங்கே போச்சு?
பெண்கள் தங்களுக்கு ஒரு எல்லையை வகுத்துக்கணும்னு சில பெண்பதிவர்களே சொல்றாங்களே! இது ஒரு குறைபாடுன்னு உங்களுக்குத் தோணலையா?
இது ஒருவகை மன வியாதியின்னு உங்களுக்குத் தோணலையா?
இன்னிக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஐ நா மனித உரிமைக் கவுன்சில் வரை பெரிய பதவிகளில் இருக்கும் பெண்கள் - உலகுக்கே தலைமை தாங்குவதை நீங்க அவதானிக்கவில்லையா?
ஒவ்வொரு மேற்கத்தைய நாடும், தனது நாட்டு பெண்களின் ஆளுமையை, தேசத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி, அவ்வளவுதூரம் முன்னேறும் போது,
எமது நாட்டில் மட்டும் பிள்ளை பெறும் மெஷினாக பெண்களை பயன்படுத்துவது எந்த வகையில் சார் நியாயம்?
இந்த வலையுலகில் எமது சகோதரிகளுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை வைத்துப் பார்க்கும் போதே புரிகிறது - எமது சமூகத்தில் பெண்களை எவ்வளவு அடக்கி வைத்திருக்கிறோம் என்று!
இதுமாதிரி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் சார்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
யாரோ புதிய பதிவராம்.ஐடியா மணி என்று பெயர்.///
அது நான் தானுங்கோ!
நீங்கதானா? வாங்க! வாங்க!
///வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை ஏற்படுத்தினால் அது ஆபாசம்.//// உண்மையிலே ஆபாசம் என்பதை குறிப்பிட்டு வரையறுக்க முடியாது, அது ஒவ்வொருவரது பார்வைக்கும் வேறுபாடும்...ஏன் மேற்க்கத்தேய நாடுகளில் சூரியக்குளியல் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் மக்கள் நிர்வாணமாக கடற்க்கரைகளிலே நிற்ப்பார்கள் .அது அவர்களுக்கிடயிலே ஆபாசமாக தெரிவதில்லை...
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பது உண்மையா? ///
மொதல்ல இந்த ஹீரோ என்ற விம்பமே உடைபடணும் சார்! எமது நாட்டில் ஹீரோ என்ற சொல்லுக்கு இருக்கும் வரைவிலக்கணமே சுத்த வேஸ்டு சார்!
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில் ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றிய மனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள் ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.///
சார், ஒரு டவுட்டு, என்னையும் அப்ப்டி கருதுகிறீர்களா?
ஐயா உண்மையை சொன்னால் உலகின் மூத்த குடி மகன் என்று பீத்திக்கிற தமிழன் இன்று ஐரோப்பியர் ஆபிரிக்கர் யூதர்களை விட அரை நூற்றாண்டு பின் தங்கி இருப்பதற்கு காரணம் இந்த கலாச்சாரம்,ஆபாசம் என்று சொல்லி தன் ஆசைகளை எல்லாம் அடக்கி வச்சு, அதுவே அவன் அதை பற்றி மட்டுமே சிந்திப்பதற்கும், மாறாக தப்பான வழிகளில் போவதற்கும் எதுவாக இருக்கு.
என்று கலாச்சாரத்தை கட்டிப்பிடிப்பதில் இருந்து வெளி வருகிறானோஅன்று தான் முன்னேறுவான்...
பெண்கள் சிக்ஸ்பேக்கை விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? ///
பெண்களை நாம எங்கே சொல்ல விட்டோம்? ஒரு பெண் தனது கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதற்கோ, விரும்புவதற்கோ நாம் அனுமதி குடுத்திருக்கிறோமா?
“ புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே” போன்ற வக்கிரமான பாடல்களும், “ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் “ போன்ற அடக்குமுறை பழமொழிகளும் எங்க சார், பெண்களை ஆசைப்பட வைச்சிச்சு?
எமது நாடுகளில் தொப்பையைத் தள்ளிக் கொண்டு திரியும் ஆண்களை கூட்டிக்கொண்டு போய் ஒரு வெள்ளைக்க்காரிக்கு முன்னால் நிறுத்தினால், அவள் கிட்டவும் வர மாட்டாள்!
பெண்கள் ஒவ்வொருவரும் ஆசைப்பட அனுமதிக்கப்பட்டால், பாதி ஆம்பளைங்க கூனிக் குறுகணும் சார்!
என்ன நடக்குதென்றே தெரியல்ல
ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.///
பொதுவா பெண்களா? அல்லது தமிழ் பெண்களா? சார்!

என்று கலாச்சாரத்தை கட்டிப்பிடிப்பதில் இருந்து வெளி வருகிறானோஅன்று தான் முன்னேறுவான்...///
வெல்டன் கந்தசாமி சார்! ஐ லைக் இட்!
எப்படிப்பட்ட கணவன் வாய்த்தாலும், அதை தலை விதி என்று எண்ணிக்கொண்டு, சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கப்படுவதால்தான், ஆண்கள் பலர் சோம்பேறிகளக திரிகிறார்கள்!
தன்னை கட்டிலில் ஒழுங்காக திருப்திப்படுத்தவில்லை என்று வெளிநாட்டில், கணவன் மீது, மனைவி வழக்குப் போடலாம்!
ஆனால் எமது நாட்டில்?
மனதுக்குள் அழ மட்டுமே முடியும் சார்!
என்னய்யா நடக்குது இங்க!
தனது கணவன் சிக்ஸ் பேக் வைச்சு சூரியா, விஷால் மாதிரி இருக்கணும்னு ஒவ்வொரு மனைவியும் கண்டிப்பா கண்டிஷன் போடணும் சார்!
அப்படி போட்டா, சோம்பேறி ஆம்பளைங்க எல்லாம் உடல் இளைக்க வேலை செய்வாங்க! தொப்பையும் குறையும்!
எவன் ஒருவன் தனது உடலை நேசிக்கிறானோ, அவன் ராவா குடிக்க மாட்டான் சார்! பீருல மூஞ்சி கழுவ மாட்டான் சார்!
தன்னோட பொண்டாட்டி மதிக்க மாட்டாளே அப்டீங்கற பயம் ஒவ்வொரு கணவனுக்கும் இருந்தா, அவன் நல்லா உடல் பயிற்சி செஞ்சு, உடம்ப ட்ரிம்மா வச்சிருப்பான் சார்!
அவனோட ஆரோக்யம் அதிகரிக்கும் சார்!
அத விட்டுட்டு, கல்லானாலும் கணவன் அப்டீன்னு விஷக் கருத்தை பெண்களோட மூளைல செலுத்தி, எல்லா ஆம்பளைங்களும் சுத்த சோம்பேறி ஆகிட்டாங்க சார்!
திரு மணி அவர்களே..ஒட்டு மொத்த ஆண்களை திட்டுவது எந்தவகையில் பொருந்தும்னு யோசிச்சி பின்னூட்டம் இடவும்!
தொப்பைய தள்ளிக்கிட்டு நிக்குற ஒவ்வொரு தமிழ் நாட்டுப் பொலீஸ்காரரையும், டெயிலி காலைல 5 கிலோமீட்டர் ஓட விடணும் சார்!
ஒரு பிரிடிஷ் போலிஸ்காரனுக்குப் பக்கத்துல , நம்ம பொலீஸ்காரன நிக்க வச்சு ஒப்பிட்டுப் பாருங்க சார்!
தொப்பை பொலீஸ்காரன் நாட்டுக்கே அவமானம்!
பெண்களை சீர் தூக்குறேன்னு சொல்லிபுட்டு..பிட்டு படத்த பாத்துப்புட்டு பேனவிலே தான் யோக்கியம்னு பதிவெழுதுவதை விட கேவலம் ஏதாவது உண்டா!
திரு மணி அவர்களே..ஒட்டு மொத்த ஆண்களை திட்டுவது எந்தவகையில் பொருந்தும்னு யோசிச்சி பின்னூட்டம் இடவும்!///
ஒட்டுமொத்த ஆண்களையும் திட்டல சார்!, யாரு இதுல குத்தவாளிகளோ அவங்கள பத்தி மட்டுமே எழுதுறேன் சார்!
மேலும், வீரம் செறிந்த எமது ஆண்களின் பாசிடிவ் பக்கத்தை என்னால் பக்கம் பக்கமாக விபரிக்க முடியும்!
இங்க நான் சொல்றது நெகடிவ் பாயிண்ட்ஸ் மட்டுமே!
பெண்களை சீர் தூக்குறேன்னு சொல்லிபுட்டு..பிட்டு படத்த பாத்துப்புட்டு பேனவிலே தான் யோக்கியம்னு பதிவெழுதுவதை விட கேவலம் ஏதாவது உண்டா!///
யூ மீன்?
நிஜ உலகில் உதவி புரிவதாக காட்டிக்கொள்ளும் பலர் தம் வக்கிரங்களை தீர்துக்கொள்வதிலே தான் முழுக்கவனத்துடன் உள்ளனர்...இதே எமது கருத்து!
ஷண்முகவேல் சார், இந்த மாதிரி பெண்களின் அடக்குமுறையில் இருந்து, பல நூறு இதர பிற்போக்கு வாதங்களில் இருந்து, இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகள் வெளியே வரணும் சார்!
அப்போத்தான் சர்வதேச அளவில எமக்கெல்லாம் மரியாதை இருக்கும் சார்!
சார், தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழனும் தீக்குளிக்கும் போதும், எமது சமூகத்தில் மோசமான கருத்தூட்டல்கள் நிரம்பியிருக்கு அப்டீன்னு உங்களுக்குத் தோணலையா சார்?
எங்காவது தலைவன், மந்திரியோட புள்ளை இவங்க தீக்குளிக்கறாங்களா? !
எமது சமூகம் எப்போ சார் மாறும்?
சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு சார்! ராத்திரி 2 மணிக்கு மேல திரும்பவும் வருவேன் சார்!
உங்க பதிலை எதிர்பார்க்கிறேன் சார்!
விக்கிஉலகம் சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி சார்!
Good post sir,
விவாதங்களில் பங்கெடுப்பது தவறல்ல என்று நினைக்கிறேன்...எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு எது ஆபாசம்....அப்படிங்கறதுல...இப்போ உங்க பதிவுல வந்திருக்க விஷயங்கள் சில பகுதிகளை உணர்த்தி இருக்கின்றன...கொஞ்சம் விளக்கப்படுத்த முடியுமா வேல் சார்!
"ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

விக்கிஉலகம் சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி சார்!"
>>>>>>>>>>>>
மணி உங்கள் பதிலுரைகளுக்கு நன்றிகள்!
@Jeyamaran $Nila Rasigan$ said...
நல்ல பதிவு தோழரே வாழ்த்துகள்
நன்றி நண்பா!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் என்னை ‘’நீங்க நல்லா இருக்கணும் சண்முகவேல் சார்” என்று சொல்வாரா?///
கரெக்ட் சார், இப்பவும் சொல்றேன் சார், நீங்க நல்லா இருக்கணும்!
பை த பை என்னைய நல்லவருன்னு சொன்னது ரொம்ப நன்றி சார்!
( இதுவரைக்கும் யாருமே சொன்னதில்ல!)
இப்போ புரூஃப் பண்ணிட்டீங்க பாருங்க!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஷண்முகவேல் சார், முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்! எனது கருத்துக்கள், உங்கள் கருத்துக்களுடன் முட்டி மோதலாம்! இருவரும் எதிர் எதிர் கருத்துக்களைச் சொல்லி, வாதிடலாம்!
அதிலொன்றும் பிரச்சனை இல்லை!
ஆனால், நீங்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது! என்னை வெறுக்கவும் கூடாது! நானும் உங்க மேல அன்பும் மரியாதையும் வைச்சிருக்கேன்!
அதில் பழுதேதும் வரக்கூடாது! ஓகே வா
சேச்சே! உங்களுக்கு கமெண்டும்,ஓட்டும் போட்டுட்டு வந்துதான் பதிவு போட்டேன்.நான் யாரையும் வெறுப்பதில்லை.உங்கள் மீது கோபமில்லை.உங்களைக்கேட்டுத்தானே பதிவு போட்டேன்
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை ஏற்படுத்தினால் அது ஆபாசம்.///
சரியான வரைவிலக்கணம்! ஒத்துக்கொள்கிறேன்!
என்னுடைய சொந்த வரைவிலக்கணம் அல்ல!ஏற்கனவே உலகத்தில் இருப்பதுதான்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஆண்டாளின் பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியை தூண்டாது,///
இப்படி ஒரு தெளிவான பதிலை, நான் அப்பதிவின் பின்னூட்டத்தில் எதிர்பார்த்தேன்! அது இங்கு கிடைத்து விட்டது!நன்றி!
பின்னூட்டத்தில் போட்டுவிட்டால் பதிவு தேத்தறது எப்படி?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம் வேறு.முன்பே குறிப்பிட்ட்து போல இலக்கியம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.///
மிக மிகச் சரி!
இதுவும் நான் யோசித்த விஷயம் அல்ல.ஏற்கனவே அறிஞர்கள்சொன்னது.
@suryajeeva said...
என்ன நடக்குதுன்னு புரியல ஆனா எதோ நடக்குதுன்னு புரியுது.. புரியரவங்களுக்கு புரிஞ்சா போதும்ன்ர பதிவு போலிருக்கு, அதில எனக்கு புரிஞ்சாத மட்டும் எடுத்துக்கிற அளவுக்கு பதிவுல எவ்வளவோ இருக்கு.. சார், கிழிஞ்ச துணியோட வர நடிகைக்கு பின்னாடி இசை சேர்ப்பதில் இருக்குது ஆபாசம்.. சோகமாகவும் காட்டலாம் மோசமாகவும் காட்டலாம்..
மிகச்சரி.உணர்வுகளை தீர்மானிப்பது இசைதான்.நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
மணி எதற்காக ஆண்டாளைப் பற்றி விமர்சிக்கிறார்? ஏன் கில்மா பதிவுகளை பெண்களிடம் எதிர்பார்க்கிறார்? ///
நல்லதொரு கேள்வி கேட்டீர்கள் ஷண்முகவேல் சார்! இப்போது எனது பதிலுக்கு நான் வருகிறேன்!
எனது நோக்கம் என்ன என்பதை நான் தெளிவாக சொல்லிவிடுகிறேன்!
சொல்லுங்க சார்,கேட்கிறோம்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், நான் யாரென்றால், இந்த நாட்டையும், எமது மக்களையும், மிகவும் அன்பாக நேசிக்கிற ஒருவன்!
பல உலக நாடுகளுடன், எமது ஆசிய நாடுகளை நான் அடிக்கடி ஒப்பிட்டிப் பார்ப்பேன்! பொருளாதாரத்திலும், அரசியலிலும், கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல துறைகளிலும் எமது நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்று, நான் அடிக்கடி சிந்திக்கிறேன்!
மேலும், எமது வாழ்வியல் முறை, எமது சமூகத்தில் பெண்களின் நிலை என எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறேன்! நான் ஒரு அரசியல் வாதி அல்ல!
எமது நாடுகள் எத்தனையோ, விஷயங்களில் பின் தங்கியிருப்பதை அவதானிக்கிறேன்! அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், ஃபிரான்சுக்கும் நிகராக எமது நாடு சரி நிகர் சமானமாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!
சும்மா ஆசைப்பட்டால் போதுமா? அதற்கு என்ன வழி என்று ஆராய வேண்டாமா?
ஆராய்ந்தேன் சார்! அதன் முடிவுகளையும் கண்டுகொண்டேன்!
என்னிடம், இந்தியாவை மேம்படுத்துவதற்கான, லட்சம் ஐடியாக்கள் உள்ளன! அவற்றை ஒவ்வொன்றாக பொது மேடையில் வைக்கப் போகிறேன்!
அதனால்தான் எனது பேரை ஐடியா மணி என்று வைத்தேன்!
எமது நாட்டு அரசுகள் மக்களை நன்றாகவே ஏமாற்றி, முட்டாளாக்கி, சுயசிந்தனை அற்றவர்களாக்கி, கேள்வி கேட்க முடியாதவர்களாக மாற்றி வைச்சிருக்காங்க சார்!
என்னைப் பொறுத்தவரை எமது நாடுகளும், அமெரிக்கா போன்று முன்னேறும் வரை, எனது கூர்மையான கருத்துக்கள், வெளியாகிக்கொண்டே இருக்கும் சார்!
எமது தேசத்தில் வீணடிக்கப்படும் ஆயிரக்கணக்கான வளங்களில், பெண்களின் ஆளுமையும் ஒன்று சார்!
எப்படி எமது நாட்டில் பெண்களின் ஆளுமை வீணடிக்கப்படுது? அவர்கள் தங்கள் ஆளுமைகளை எப்படி ஆக்க சக்திக்குப் பயன்படுத்தலாம்? எமது தேசத்தின் வளர்ச்சிக்கு பெண்கள் எப்படி உதவலாம் என்பதில் நான் மிகப் பெரிய ஆய்வுகள் எல்லாம் செய்திருக்கேன்!
என்னால் மற்றவர்களைப் போல, “ ஆமா, பெண்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கக் கூடாது, அவர்கள் சாதிக்கணும், போராடணும், புறப்படுணும்” என்று ஒப்புக்குர் சப்பாணி கொட்ட முடியாது!
ஏன்னா, இதுமாதிரி லட்சம் பேர், இதுக்கு முன்னாடி சொல்லியிருக்காங்க! எதுவுமே நடக்கலை!
என்னால, மேடைப் பேச்சுக்கு மட்டுமே பயன்படும் வெற்றுக் கோஷங்களைச் சொல்ல முடியாது!
எனது கருத்துக்கள் அதையும் தாண்டி வித்தியாசமானவை!
சரிங்க சார், நான் எங்கேயோ போயிட்டேன்!
இப்போ மீண்டும் விஷயத்துக்கு வர்ரேன்!
புரிந்து கொண்டேன்,நன்றியும்,வாழ்த்துக்களும்.
@thalir said...
அழகிய அலசல் கட்டுரை! நன்றி!
நன்றி சார்
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், எமது வலையுலகை நீங்க நன்கு அவதானித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்!
தொடக்க காலத்தில் பல பெண்கள், ப்ளாக்குல எழுதிக்கிட்டு வந்தாங்க! இப்போ பலபேரைக் காணல! சில பேர விரட்டி அடிச்சுட்டாங்க!
ஒரு பெண் வெறுமனே, சமையல் குறிப்பையும், அழகுக் குறிப்பையும், பிள்ளை வளர்ப்பையும் பற்றி மட்டும் எழுதினால் போதும் அப்டீன்னு நெனைச்சுட்டாங்க போலும்!
சார், நீங்க படிச்சதில்லையா, சில பெண் பதிவர்கள் , - ஆண்பதிவர்கள் மாதிரி நம்மளால வெளிப்படையா எழுத முடியலையேன்னு வருத்தப்பட்டு பதிவு போட்டிருக்கங்க!
அப்டீன்னா, அவங்க ஏதோ சொல்ல வர்ராங்கன்னுதானே அர்த்தம்! எதுக்காக அவங்களோட குரலை நசுக்கணும்?
என்னுடைய பெண் எழுத்து இதற்கு பதில் சொல்லும்.
@கந்தசாமி. said...
///வார்த்தைகளோ,படைப்போ,புகைப்படமோ அல்லது படக்காட்சியோ மனதில் பாலுணர்வை ஏற்படுத்தினால் அது ஆபாசம்.//// உண்மையிலே ஆபாசம் என்பதை குறிப்பிட்டு வரையறுக்க முடியாது, அது ஒவ்வொருவரது பார்வைக்கும் வேறுபாடும்...ஏன் மேற்க்கத்தேய நாடுகளில் சூரியக்குளியல் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் மக்கள் நிர்வாணமாக கடற்க்கரைகளிலே நிற்ப்பார்கள் .அது அவர்களுக்கிடயிலே ஆபாசமாக தெரிவதில்லை...
அதைத்தான் பாலுணர்வை தூண்டுவதை ஆபாசம் என்று வரையறை தருகிறார்கள்.நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
பெண்களுக்கு சப்போர்ட் செய்து எழுதி விட்டால் ஹீரோ ஆகிவிடலாம் என்பது உண்மையா? ///
மொதல்ல இந்த ஹீரோ என்ற விம்பமே உடைபடணும் சார்! எமது நாட்டில் ஹீரோ என்ற சொல்லுக்கு இருக்கும் வரைவிலக்கணமே சுத்த வேஸ்டு சார்!
உண்மைதான் சார்
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஆபாச சொற்களை எழுதுவதில்,வரைவதில் ஆர்வம் உள்ளவர்களை கோப்ரோலாலியா(Corprolalia) என்று சொல்வார்கள்.சில முற்றிய மனநோய்களிலும்,முதிர்ச்சி அடையாதவர்களிடமும் இந்நிலை இருக்கும்.இவர்கள் ஆலோசனையும்,சிகிச்சையும் பெறவேண்டியவர்கள்.///
சார், ஒரு டவுட்டு, என்னையும் அப்ப்டி கருதுகிறீர்களா?
உங்களைச்சொல்லவில்லை.பொதுவாக சொன்னது டவுட்டு வேண்டாம்.கவலை விடுங்கள்.
@கந்தசாமி. said...
ஐயா உண்மையை சொன்னால் உலகின் மூத்த குடி மகன் என்று பீத்திக்கிற தமிழன் இன்று ஐரோப்பியர் ஆபிரிக்கர் யூதர்களை விட அரை நூற்றாண்டு பின் தங்கி இருப்பதற்கு காரணம் இந்த கலாச்சாரம்,ஆபாசம் என்று சொல்லி தன் ஆசைகளை எல்லாம் அடக்கி வச்சு, அதுவே அவன் அதை பற்றி மட்டுமே சிந்திப்பதற்கும், மாறாக தப்பான வழிகளில் போவதற்கும் எதுவாக இருக்கு.
என்று கலாச்சாரத்தை கட்டிப்பிடிப்பதில் இருந்து வெளி வருகிறானோஅன்று தான் முன்னேறுவான்...
உண்மை.இதைப்பற்றி நானும் ஒரு பதிவு தந்திருக்கிறேன்.தலைப்பு நினைவில்லை.நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
பெண்கள் சிக்ஸ்பேக்கை விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? ///
பெண்களை நாம எங்கே சொல்ல விட்டோம்? ஒரு பெண் தனது கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதற்கோ, விரும்புவதற்கோ நாம் அனுமதி குடுத்திருக்கிறோமா?
“ புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே” போன்ற வக்கிரமான பாடல்களும், “ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் “ போன்ற அடக்குமுறை பழமொழிகளும் எங்க சார், பெண்களை ஆசைப்பட வைச்சிச்சு?
எமது நாடுகளில் தொப்பையைத் தள்ளிக் கொண்டு திரியும் ஆண்களை கூட்டிக்கொண்டு போய் ஒரு வெள்ளைக்க்காரிக்கு முன்னால் நிறுத்தினால், அவள் கிட்டவும் வர மாட்டாள்!
பெண்கள் ஒவ்வொருவரும் ஆசைப்பட அனுமதிக்கப்பட்டால், பாதி ஆம்பளைங்க கூனிக் குறுகணும் சார்!
உண்மைதான்.
@மதுரன் said...
என்ன நடக்குதென்றே தெரியல்ல
பொறுமை,பொறுமை மணிசார் சொல்வதை கவனிக்கவும் நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஆண்களைப்போல பெண்கள் உடலைப்பார்ப்பதில்லை என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.///
பொதுவா பெண்களா? அல்லது தமிழ் பெண்களா? சார்!
பொதுவாகத்தான்,அவர்களுக்கு வேறு அளவுகோல்கள் இருக்கின்றன.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
எப்படிப்பட்ட கணவன் வாய்த்தாலும், அதை தலை விதி என்று எண்ணிக்கொண்டு, சகித்துக்கொண்டு வாழ வேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கப்படுவதால்தான், ஆண்கள் பலர் சோம்பேறிகளக திரிகிறார்கள்!
தன்னை கட்டிலில் ஒழுங்காக திருப்திப்படுத்தவில்லை என்று வெளிநாட்டில், கணவன் மீது, மனைவி வழக்குப் போடலாம்!
ஆனால் எமது நாட்டில்?
மனதுக்குள் அழ மட்டுமே முடியும் சார்!
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
@விக்கியுலகம் said...
என்னய்யா நடக்குது இங்க!
அதானே! சார் இது நிரூபன் பிளாக்கா?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
தனது கணவன் சிக்ஸ் பேக் வைச்சு சூரியா, விஷால் மாதிரி இருக்கணும்னு ஒவ்வொரு மனைவியும் கண்டிப்பா கண்டிஷன் போடணும் சார்!
அப்படி போட்டா, சோம்பேறி ஆம்பளைங்க எல்லாம் உடல் இளைக்க வேலை செய்வாங்க! தொப்பையும் குறையும்!
எவன் ஒருவன் தனது உடலை நேசிக்கிறானோ, அவன் ராவா குடிக்க மாட்டான் சார்! பீருல மூஞ்சி கழுவ மாட்டான் சார்!
தன்னோட பொண்டாட்டி மதிக்க மாட்டாளே அப்டீங்கற பயம் ஒவ்வொரு கணவனுக்கும் இருந்தா, அவன் நல்லா உடல் பயிற்சி செஞ்சு, உடம்ப ட்ரிம்மா வச்சிருப்பான் சார்!
அவனோட ஆரோக்யம் அதிகரிக்கும் சார்!
அத விட்டுட்டு, கல்லானாலும் கணவன் அப்டீன்னு விஷக் கருத்தை பெண்களோட மூளைல செலுத்தி, எல்லா ஆம்பளைங்களும் சுத்த சோம்பேறி ஆகிட்டாங்க சார்!
இதெல்லாம் மேல்தட்டு மக்கள் சார்.ஏழைகள் நாள் முழுக்க உழைத்து யோசிக்கவே நேரமிருப்பதில்லை.மேல்தட்டு மக்கள் பணம் இருப்பதால் எதையும் பெரிது படுத்துவதில்லை.
@விக்கியுலகம் said...
திரு மணி அவர்களே..ஒட்டு மொத்த ஆண்களை திட்டுவது எந்தவகையில் பொருந்தும்னு யோசிச்சி பின்னூட்டம் இடவும்!
ஆமா,நான்கூட ஆண் தான்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
தொப்பைய தள்ளிக்கிட்டு நிக்குற ஒவ்வொரு தமிழ் நாட்டுப் பொலீஸ்காரரையும், டெயிலி காலைல 5 கிலோமீட்டர் ஓட விடணும் சார்!
ஒரு பிரிடிஷ் போலிஸ்காரனுக்குப் பக்கத்துல , நம்ம பொலீஸ்காரன நிக்க வச்சு ஒப்பிட்டுப் பாருங்க சார்!
தொப்பை பொலீஸ்காரன் நாட்டுக்கே அவமானம்!
உண்மை சார்.
@விக்கியுலகம் said...
பெண்களை சீர் தூக்குறேன்னு சொல்லிபுட்டு..பிட்டு படத்த பாத்துப்புட்டு பேனவிலே தான் யோக்கியம்னு பதிவெழுதுவதை விட கேவலம் ஏதாவது உண்டா!
நிச்சயமா இல்ல சார் நன்றி
@விக்கியுலகம் said...
நிஜ உலகில் உதவி புரிவதாக காட்டிக்கொள்ளும் பலர் தம் வக்கிரங்களை தீர்துக்கொள்வதிலே தான் முழுக்கவனத்துடன் உள்ளனர்...இதே எமது கருத்து!
இப்படி இருப்பதும் சாத்தியம்தான்.கள்ளக்காதல் தந்திரங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஷண்முகவேல் சார், இந்த மாதிரி பெண்களின் அடக்குமுறையில் இருந்து, பல நூறு இதர பிற்போக்கு வாதங்களில் இருந்து, இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகள் வெளியே வரணும் சார்!
அப்போத்தான் சர்வதேச அளவில எமக்கெல்லாம் மரியாதை இருக்கும் சார்!
நிச்சயமாக!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழனும் தீக்குளிக்கும் போதும், எமது சமூகத்தில் மோசமான கருத்தூட்டல்கள் நிரம்பியிருக்கு அப்டீன்னு உங்களுக்குத் தோணலையா சார்?
எங்காவது தலைவன், மந்திரியோட புள்ளை இவங்க தீக்குளிக்கறாங்களா? !
எமது சமூகம் எப்போ சார் மாறும்?
விரைவில் மாறும் என்று நம்புவோம்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு சார்! ராத்திரி 2 மணிக்கு மேல திரும்பவும் வருவேன் சார்!
உங்க பதிலை எதிர்பார்க்கிறேன் சார்!
விக்கிஉலகம் சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி சார்!
வந்து படிங்க சார்,நன்றி சார்.
@Raazi said...
Good post sir,
தங்கள் கருத்துரைக்கு நன்றி
@விக்கியுலகம் said...
விவாதங்களில் பங்கெடுப்பது தவறல்ல என்று நினைக்கிறேன்...எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு எது ஆபாசம்....அப்படிங்கறதுல...இப்போ உங்க பதிவுல வந்திருக்க விஷயங்கள் சில பகுதிகளை உணர்த்தி இருக்கின்றன...கொஞ்சம் விளக்கப்படுத்த முடியுமா வேல் சார்!
வரையறைதான் கொடுக்கப்பட்டுள்ளதே! விளக்கம் என்றால் கேள்வி சரியாக புரியவில்லை.நன்றி
ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கிறது.. புரியாத மாதிரியும் இருக்கிறது...ஏதோ நல்லது நடந்தால் சரி...வாழ்த்துக்கள் நண்பா
@விக்கியுலகம் said...
"ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு சார்! ராத்திரி 2 மணிக்கு மேல திரும்பவும் வருவேன் சார்!
உங்க பதிலை எதிர்பார்க்கிறேன் சார்!
விக்கிஉலகம் சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி சார்!"
>>>>>>>>>>>>
மணி உங்கள் பதிலுரைகளுக்கு நன்றிகள்!
விக்கி,மணி இருவருக்கும் நன்றி.
@மாய உலகம் said...
ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கிறது.. புரியாத மாதிரியும் இருக்கிறது...ஏதோ நல்லது நடந்தால் சரி...வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பா!
பாசுரங்களும் அப்படித்தான்.படிப்பவர்களுக்கு கிளர்ச்சியை தூண்டாது,ஆண்டாள் பாசுரம் பக்தி இலக்கியம்.இலக்கியங்களில் வார்த்தைகளின் நோக்கம் வேறு.//இதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன் ஐயா ஆபாசத்துக்காக ஆண்டாளை சீண்டுவது கூடாது !
பதிவும் பின்னூட்டங்களும் படித்தேன்.
தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது,வாழ்த்துக்கள்.
அது ஏன் பெண்களுக்கு சப்போர்ட் செய்து பதிவுபோட்டால் அடுத்து ஹிட்ஸ் குறைகிறது?
இந்த பதிவுலகத்தில தொடர்ந்து இல்லாததால என்ன நடக்குதுண்ணே புரியலப்பா..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்
பதிவுலகமும் வரவர அரசியல் மாதிரி ஆகிட்டு வருது :-(
கார சாரமான கமெண்ட்ஸ் !
விவாதம்.,
vaalththukkal.
பதிவும், அதற்கான பின்னூட்டங்களும் கொஞ்சம் காட்டமா இருக்கு.
பெண்களுக்காக இவர்கள் கார சாரமாக விவாதம் செய்து கொண்டிருக்காங்க. ஆனா ஒரு பெண்பதிவர்கூட வந்து கமெண்டே போடலியே ஏன் ஏன்
நானும் எல்லாத்தையும் படிச்சுட்டுதான் இருக்கேன் என்கருத்துன்னு இங்க எதையும் சொல்ல முடியல்லே.
ஹலோ ஐடியா சார்,
எனக்கு சில சந்தேகங்கள்..
பென்களுக்கு எந்த விஷயத்தில் நம்ம நாட்டில் உரிமை இல்லை, எந்த விஷயத்தில் அவர்களுக்கு முட்டு கட்டை போடப்பட்டுள்ளது என்பதை விளக்கினால் அதைப்பற்றி விவாதித்து தெளிவு பெறலாம்.
திருமண விஷயத்தில் ஆன்களை தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கே பறிக்கப்பட்டுள்ளது,எத்தனையோ காதல் திருமணங்கள் கூட நடக்கத்தானே செய்கிறது. பென்கள் எல்லாத்துறையிலும் வருவதை எல்லா சமுதாயமுமே வரவேற்கத்தானே செய்கிறது. பென்களின் தகுதிக்கேற்ப மற்றும் குடும்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவரகள் முன்னேறுகிறார்களே தவிர இதில் எந்த முட்டுக்கட்டையும் இல்லை என்பதே எனது கருத்து. எதற்கெடுத்தாலும்.மேலை நாடுகளேயே உதாரணம் சொல்கிறார்களே, அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கு பென்களின் ஆளுமை மட்டும்தான் காரணம் என்கிறீர்களா? வேற எந்த காரணமு இல்லையா?
நமக்கு கலாச்சாரம் இருக்கலாம் சார், அதுவும் முக்கியம்தான். கலாச்சாரத்தால் நாம் எவ்விதத்திலும் கெட்டு போகவில்லை. மேலை நாட்டு கலாச்சாரத்தைப் பற்றி பேசுவதற்கு வேண்டுமானால் நல்லா இருக்கும், அதை நம் வீட்டில் செய்து பார்க்கமுடியுமா? குடும்பத்தோட உக்காந்து மது அருந்துவது கூட மேலை நாட்டு கலாச்சாரம்தான். அது ஓகேனு சொல்றீங்களா? ஒரு பென் தன் காதலனை திருமணம் செய்து கொள்ளப்போவதைப்பற்றி தன் தந்தையிடம் சொல்லும்போது அவனுடன் சிறிது காலம் வாழ்ந்து பார்த்துவிட்டு அதுக்கு அப்பறம் முடிவு எடு என்று தந்தையே தன் மகளிடம் கூறுகிறார், இந்த கலாச்சாரம் தேவையா நமக்கு, இது நாம் பின்பற்றக்கூடிய கலாச்சாராமா?
நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது, ஜாதிமத வேற்றுமைகளும்,அரசியல்வாதிகளின்ன் சுயநலமும்தானே தவிர வேறொன்றூம் இல்லை. ஏற்கனவே சொன்னதுதான்....ஒரு பென்னிடம் ஒரு ஆன் தவறாக நடந்து கொண்டால் அது ஒரு தனிமனித பிரச்சனையே அன்றி அதை ஒரு சமூதாய பிரச்சனையாக அர்த்தப்படுத்தக்கூடாது,
மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்த முந்தைய காலங்களில் நடந்ததை வச்சே இப்பவும் பேசிகிட்டே இருக்ககூடாது சார், எதோ புதுசா பேசுறேன் புரட்சியா பேசுறேன் பேர்வழினு தெரியாமல் பேசக்கூடாது.
பென்களை எங்குமெ யாரும் கட்டிப்போடவில்லை. அவர்களின் தகுதிகளுக்கேற்ப, திறமைகளுக்கேற்ப சில தற்காப்பு நடவடிக்கைகளை அவசியமென ஏற்படு இடத்தில் மேற்கொள்ளப்படுகிறது அவ்வளவுதான். நான் எந்த ஆனுக்கும் சளைத்தவள் அல்ல என்று வீம்பாக ஒரு பென்னை எந்த சோதனையிலும் உட்படுத்தமுடியுமா?
நடுராத்திரி தனிமையா ஒரு ஆனை ஒரு இடத்துக்கு அனுப்பும் அளவுக்கு, ஒரு பென்னை அனுப்பிபார்க்கும் தைரியம் யாருக்கேனும் இங்கே இருக்கா? முடியாது. ஏன் என்றால் போகும் இடத்தில் பிரச்சனை என்றால் அவளால் அதை சமாளிக்கமுடியாது. இந்த இடத்தில் ஒதுங்கிகொள்வதுதான் புத்திசாலித்தனம், இதான் யதார்த்தமும் கூட. இந்த வரைமுறைதான் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
மேலை நாடுகளில் ஒரு பென் வரைமுறை இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் சர்வ சாதாராணமாக சென்றுவிடலாம், ஏன் என்றால் அவளுக்கு அதில் எதுவும் பிரச்சனை இல்லை, அவளுடைய மானம் என்பது அங்கே பெரிதாக அலட்டிக்கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. மேலும் கனவன் நீங்கலாக அவளுடைய தனிப்பட்ட தவறான பாலியல் உணர்வுகளை அவள் அங்கே தீர்த்துக்கொள்ளலாம் இது அங்கே பெரிதாக அலட்டிக்கொள்ளாத விஷயம். இந்த விஷயத்தில்தான் நாம் கலாச்சாரம் பார்க்கிறோம். இது தேவை இல்லை என்கிறீர்களா? மூடப்பழக்க வழக்கங்கள் குறைந்து விட்ட இன்றைய காலத்தில் உள்ள கலாச்சாரங்கள் எதுவும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதே இல்லை. பென்கள் எந்த துறைக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டு வரலாம், அதில் எங்கும் தடை இல்லை.
-ஆஷிக்
வணக்கம் அண்ணாச்சி.
ஐ மிஸ்ட் திஸ் டாபிக்.
கூட்டத்தில நானும் உள்ளே ஐயா..
எனக்கும் இப்படியான விவாதத்தில் பங்கு பற்ற வேண்டும் என்று ஆவல்,
ஆனால் முடியலையே..
டைம் இல்லை..மன்னிக்கவும்,
Post a Comment