சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாக
தெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பது
உணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமான
சமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்
குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்.தினமும் வீட்டுக்கு
செல்லும் முன்பு மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவார்.வீட்டுக்குப்போய் கொஞ்சம் போதும்
தொப்பை பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பார்.கிட்ட்த்தட்ட தினமும் இதுவேதான்.ஒரு
நாள் கேட்டுவிட்டேன்.’’அம்மா போனப்புறம்
இப்படித்தான் சார்,அவங்க(மனைவி) சமைக்கறது எனக்கு பிடிக்கிறதில்ல!”
சமையல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வித்தியாசமான ஒன்று.சில குடும்பங்களில் காரம்
குறைவாக சாப்பிடுவார்கள்,சில இட்த்தில் நமக்கு நாக்கு சுட்டுவிடும்.உப்பும்
அப்படித்தான்.சில வீடுகளில் சப்பென்று இருக்கும்.உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில்
சாப்பிட நேரும்போது உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்வதும்,அதிகமாக
இருந்தால் தண்ணீர் விட்டுக்கொள்வதும் எனக்கு வழக்கம்.
அடிக்கடி நோய்வாய்ப்படும் குடும்பங்களில் சமையலும் ஒரு பிரச்சனையாக இருக்க
வாய்ப்புண்டு.ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகள் சேர்ப்பது குறைவாக இருக்கும்.சில
குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு பழகிப் போய்விடுவதும் காரணம்.சிலருக்கு கொழுப்பு
நிறைந்தவை,சிலருக்கு காரம் நிறைந்தவை.
ஒவ்வொரு பகுதிக்கும்
உணவு வகைகளில் மாற்றம் இருப்பது தெரிந்த்தே! வட நாட்டிலிருந்து வரும்
லாரிக்கார்ர்கள் எங்காவது சாலையோரங்களில் நிறுத்திவிட்டு அவர்களே
சமைத்துக்கொள்வார்கள்.ஆந்திராவில் பச்சை மிளகாய் கடிப்பதை பார்த்தால் நமக்கு
கண்ணில் நீர் வரும்.
என் தாத்தாவுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அரை ஆழாக்கு நெய் வேண்டும்
என்று பாட்டி சொன்னதுண்டு.இப்போது அப்படி சாப்பிட்டால் கதை வேறு.அவர்கள் நாள்
முழுக்க உடல் உழைப்பில் வாழ்ந்தவர்கள்.சமையலில் இருக்கும் பெரும்பாலான சேர்க்கைகளும்
நிலத்தில் விளைந்த்தாக இருக்கும்.
சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும்
அந்த கலை கைவந்து விடுகிறது.நிலத்தில் விளைந்து,அம்மா சமைத்த அந்த எளிய உணவு தந்த
திருப்தியை இனி எப்போதும் அடைந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.எல்லாவற்றிலும்
சுட்டியாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்பது பொருள்.
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும்
குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும்
தருவது இதமான உணவுதான்.
25 comments:
வீட்டு சமையலில் பெண்கள் தான் பெஸ்ட் . ஆனால் பொது நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களிலே ஆண்கள் சமைப்பார்களே அருமையாய் இருக்கும்)))
சமையல்னா சாதாரண விஷயம் இல்லதான்.
//இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.//
அவசரத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓட வேண்டியிருக்கு சார்.
உண்மை. நல்ல உணவுப்பழக்கம் உடல் மற்றும் மன நலத்திற்கு அடிப்படையானது.
உண்மை தான் நண்பா... சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்... உடல் ஆரோக்கியமாக இருக்க் நல்ல உணவு வேண்டும்... நன்றி நண்பரே
தமிழ் மணம் 4 & all voted
//சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும் அந்த கலை கைவந்து விடுகிறது.// ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்னும் ச.தமிழ்செல்வன் எழுதிய புத்தகத்தில் ஓட்டல்களில் பெண் சமைத்து பார்த்ததுண்டா என்றும், நல மகாராஜா பற்றி கேள்வி பட்டது இல்லையா என்றும் சமையல் செய்வதில் நிபுணர்கள் ஆண்கள் தான் என்று அழகாக வாதாடியிருப்பார்..
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாக தெரியவில்லை.////
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சார், ரொம்ப பசியா இருக்கறீங்க போல! ஆனலும் நீங்க சொல்றது 100 வீதம் உண்மை சார்!
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும் குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும் தருவது இதமான உணவுதான்.////
உண்மை! உண்மை!!
saappitteengalaa sir
உண்மைதான்.என்னுடைய நண்பர்கள் சிலர் சுவையாக சமைக்கத் தெரிந்தவர்கள்.நன்றி
@RAVICHANDRAN said...
//இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.//
அவசரத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஓட வேண்டியிருக்கு சார்.
பொறுமையாக சாப்பிட நேரமில்லைதான் .நன்றி.
@M.Mani said...
உண்மை. நல்ல உணவுப்பழக்கம் உடல் மற்றும் மன நலத்திற்கு அடிப்படையானது.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@மாய உலகம் said...
உண்மை தான் நண்பா... சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்... உடல் ஆரோக்கியமாக இருக்க் நல்ல உணவு வேண்டும்... நன்றி நண்பரே
உனக்கும் நன்றி நண்பா!
@suryajeeva said...
//சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும் அந்த கலை கைவந்து விடுகிறது.// ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்னும் ச.தமிழ்செல்வன் எழுதிய புத்தகத்தில் ஓட்டல்களில் பெண் சமைத்து பார்த்ததுண்டா என்றும், நல மகாராஜா பற்றி கேள்வி பட்டது இல்லையா என்றும் சமையல் செய்வதில் நிபுணர்கள் ஆண்கள் தான் என்று அழகாக வாதாடியிருப்பார்..
ஆமாம்.நம்மால் முடியாதா என்ன?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாக தெரியவில்லை.////
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சார், ரொம்ப பசியா இருக்கறீங்க போல! ஆனலும் நீங்க சொல்றது 100 வீதம் உண்மை சார்!
வாங்க மணி சார் நன்றி.
சரியாகச் சொன்னீர்கள் .உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தும்
சாப்பாடு .நல்ல மூளைவளர்ச்சிக்கும் உறுதுணையா நிற்கும் .
குடும்பத்தில் சிக்கலையும் குறைக்கும் .மிக்க நன்றி வாழ்த்துக்கள்...
அருமையான தகவலை தந்திருக்கீங்க நண்பரே
பகிர்வுக்கு நன்றி
@ராஜன் said...
saappitteengalaa sir
ஆச்சி சார் நன்றி
@அம்பாளடியாள் said...
சரியாகச் சொன்னீர்கள் .உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தும்
சாப்பாடு .நல்ல மூளைவளர்ச்சிக்கும் உறுதுணையா நிற்கும் .
குடும்பத்தில் சிக்கலையும் குறைக்கும் .மிக்க நன்றி வாழ்த்துக்கள்...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி
@M.R said...
அருமையான தகவலை தந்திருக்கீங்க நண்பரே
பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே!
வணக்கம் அண்ணா,
சமையற் கலையின் முக்கியத்துவத்தினையும்,
சமையைல் தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தினையும் தீர்மானிக்கிறது என்பதனை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி அண்ணா.
சமையற்கலைபற்றி ஒரு சிறந்த பதிவு..
பகிர்வுக்கு நன்றி,,
http://anubhudhi.blogspot.com/
அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
its real sir. my kids like their father's cooking only.they eagerly waiting for his cooking day.
Post a Comment