அய்யோ,அய்யோன்னு ஏன்யா சத்தம் போடறீங்க?
யாரு உங்க பதிவ திருடினது? சுத்த நான்சென்ஸா போச்சு! திருட்டுன்னா என்ன்ன்னு
அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை
இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே
இருந்த்து.சாரி சொல்லி சர்பத் வாங்கிக் கொடுத்துவிட்டு போனார்,நாங்களும்
மனுஷங்கதான்!’’
ஆதங்கத்துடனும்,வருத்த்துடனும் மனம் திறந்து பேசுகிறார் வலைத்தள அதிபர்
வக்கில்லாதவன்(புனை பெயராம்).அவர் மீதான தவறான குற்றச்சாட்டுகள் அம்புகளாய்
பாய்ந்து அவரது மனத்தை புண்படுத்தியிருப்பதை உணர முடிந்த்து.பல பதிவர்கள் தங்களது
பதிவுகளை திருடி தளத்தில் போட்டுக்கொள்கிறார் என்று குற்றம் சாட்டி பதிவு எழுதியது
அவரை வேதனைக்குள்ளாக்கியிருந்த்து.அவருடன் பேசியதிலிருந்து சென்சார் செய்யப்படாமல்
அனைத்து பகுதிகளும்:
நீங்கள் சொந்தமாக எழுதியதுண்டா?
அது பெரும் பிரச்சினையில்
முடிந்து விட்ட்து.மதுப்பழக்கம் தவறு என்று எழுதினேன்.அடுத்த நாள் டாஸ்மாக் கடைகளை
மூட வேண்டிய நிலை.தமிழ்நாட்டில் மொத்தமாக குடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.அரசாங்கத்தை
நினைத்து ஒரு நிமிடம் பதறிப்போய்விட்டேன்.உடனே மது குடிப்பது முடி,நகம் வளர உதவி
செய்யும்,கொஞ்சமாக குடித்தால் தப்பில்லை என்று இன்னொரு கட்டுரை எழுதியதும்
பிரச்சினை தீர்ந்த்து.
அப்போதிருந்து காபி பேஸ்ட் தானா?
ஆமாம்,வலைப்பதிவுகளில்
சில நேரம் நல்ல கட்டுரைகள் கிடைக்கிறது.பத்திரிகைகளிலும் எடுப்பேன்.கல் தோன்றி
முன் தோன்றா சாரி! கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது?
வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy
என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை
பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.
நீங்கள் சந்த்தித்த பிரச்சினைகள் என்ன?
காபி பேஸ்ட் செய்வதே பிரச்சினைதான்.சொந்தமாக எழுதுபவர்கள் கொஞ்ச நேரத்தில்
எழுதிவிடுகிறார்கள்.நாங்கள் வாசகர்களுக்கு பிடித்த்தை தர பலதையும் படிக்க
வேண்டும்.தவிர காபி செய்யும்போது எழுதியவர் பெயரும்,பிளாக் முகவரியும் விடுபட்டுப்
போகிறது.தவறுவது யாருக்கும் சகஜம்.உடனே திருட்டு என்று சொல்லிவிடுகிறார்கள்.
மறக்க முடியாத சம்பவம் ?
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி
செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து
பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில்
பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும்
ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ஒரு வலைப்பதிவில் ரூபாய் நோட்டு படம்
போட்டிருந்தார்கள்.காபி செய்து பேஸ்ட் செய்து பார்த்தேன் ஈஸியாக இருக்கிறது.
51 comments:
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
இது நீங்க எழுதிய பதிவா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே! என்ன கடி? என்ன கடி? ஆமா யாருக்கு இது?
இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே இருந்த்து.///
அஹா... சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!
கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது? வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.///
ஆஹா பண்றதையும் பண்ணிட்டு இப்படி வேறு விளக்கம் குடுக்கிறாரா அவரு?
சண்முகவேல் இப்படியும் எழுதுவாரா என்று ஆச்சரியப் பட்டு போனேன்? சார், இவ்வளவு நகைச்சுவையா ஒருத்தன புரட்டி எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..
எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில் பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ////
ஹா ஹா ஹா செம காமெடி! இன்று முதல் எங்கள் அண்ணன் ஷண்முகவேல் அவர்கள் - சிறந்த காமெடி அண்ட் உள்குத்துப் பதிவராக அவதாரம் எடுத்துள்ளார் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன்!
ஹி ஹி ஹி ஹி !!!!
சார்,எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வருகிறது! சில நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தீர்களே யாரோ ஒருவர் பதிவர்களைக் குறைகூறியதாக, அவருக்குத்தானே இது? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
இது நீங்க எழுதிய பதிவா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே! என்ன கடி? என்ன கடி? ஆமா யாருக்கு இது?
ஹிஹி நம்முடைய பதிவுகளை சில நேரம் வலைப்பதிவுகளில் போட்டுக்கொள்கிறார்கள்.கேட்பதுமில்லை.சிலர் லிங்க் கொடுக்கிறார்கள்,சிலர் அதுவுமில்லை,அதனால் தோன்றியது இது.
இது ஏதோ குத்துமாதிரி தெரியுதே
காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கும் நல்லா உரைக்கட்டும்...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே இருந்த்து.///
அஹா... சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!
எங்கேயும் போகல! நன்றி நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது? வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.///
ஆஹா பண்றதையும் பண்ணிட்டு இப்படி வேறு விளக்கம் குடுக்கிறாரா அவரு?
என்ன பண்ணிட்டாரு அப்படி? பாவம் சார்
@suryajeeva said...
சண்முகவேல் இப்படியும் எழுதுவாரா என்று ஆச்சரியப் பட்டு போனேன்? சார், இவ்வளவு நகைச்சுவையா ஒருத்தன புரட்டி எடுக்க முடியுமா என்பது சந்தேகமே..
நன்றி சார்,சும்மா டிரை பண்ணி பார்க்கறது!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில் பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ////
ஹா ஹா ஹா செம காமெடி! இன்று முதல் எங்கள் அண்ணன் ஷண்முகவேல் அவர்கள் - சிறந்த காமெடி அண்ட் உள்குத்துப் பதிவராக அவதாரம் எடுத்துள்ளார் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன்!
ஹி ஹி ஹி ஹி !!!!
இது உள்குத்தா? அப்புறம் எதுக்கு ஹிஹிஹிஹி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார்,எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வருகிறது! சில நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தீர்களே யாரோ ஒருவர் பதிவர்களைக் குறைகூறியதாக, அவருக்குத்தானே இது? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!
முதல் கமெண்டுக்கே பதில் சொல்லிட்டேன்,எதுக்கு புலம்பல்.
@Heart Rider said...
இது ஏதோ குத்துமாதிரி தெரியுதே
காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கும் நல்லா உரைக்கட்டும்...
ஒரு குத்தும் இல்ல சார்,நன்றி
@Rathnavel said...
அருமை.
நன்றி அய்யா!
ஹாஹாஹா நல்லா இருக்கு சார் கதை!
@RAVICHANDRAN said...
ஹாஹாஹா நல்லா இருக்கு சார் கதை!
நன்றி சார்
நல்ல இருக்கு ஐயா அதுவும் கடைசியில் சொல்லப்பட விடயம் இன்னும் சூப்பர்
ரைட்டு...7th voted TM!
@கந்தசாமி. said...
நல்ல இருக்கு ஐயா அதுவும் கடைசியில் சொல்லப்பட விடயம் இன்னும் சூப்பர்
நன்றி கந்தசாமி.
@விக்கியுலகம் said...
ரைட்டு...7th voted TM!
மிக்க நன்றி நண்பா!
ஒன்னுமே உலகத்தையே புரியலையே!
இது என்ன பதிவுலக ஃபீவரா?. பதிவு சூடாக இல்லாமல், சிரிப்பாக வருகிறது.
நகைச்சுவையான பதிவு... நன்றாக இருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
சரியான காமடி தான்
பாத்து சார்!! இந்த பதிவையும் வழக்கம் போல எவனாவது காப்பி பேஷ்ட் பண்ணிட போறாங்க!! :)))
இது என்ன குத்து?உள்ளா,வெளியா?!
காமெடி கூட செய்ய தெரியுமா சார்,சீரியஸ் ஆளுன்னு நெனச்சேன்..
He......he.....
வணக்கம் அண்ணாச்சி,
என்னால் நம்பவே முடியலை.
உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வாளரா?
வித்தியாசமா இருக்கே...
சூப்பர் அண்ணாச்சி..
கலக்கல் கடிகள்.
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.//
அவ்...ஐயோ....ஐயோ...காளியம்மா காப்பாத்து....
யாரோட டவுசரையோ நம்ம ஆப்பிசர் உருவுறாரே...
நீங்க கூட இப்படியெல்லாம் எழுதுவீங்களா?
நல்லா இருக்கு...
:))
நண்பரே.. என்ன உங்களின் புதிய அவதாரமோ?
வாழ்த்துகள்..
பதிவு மிக அருமை...
''
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.//''
வாழ்த்துக்கள் .பதிவு அருமை
@சத்ரியன் said...
ஒன்னுமே உலகத்தையே புரியலையே!
அவ்ளோ இலக்கியமாவா இருக்கு! நன்றி சார்.
@சாகம்பரி said...
இது என்ன பதிவுலக ஃபீவரா?. பதிவு சூடாக இல்லாமல், சிரிப்பாக வருகிறது.
பதிவுலக பீவர்ணா சிரிப்பு வரும் .இதுகூட நல்லாருக்கே!நன்றி.
@Sankar Gurusamy said...
நகைச்சுவையான பதிவு... நன்றாக இருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி...
பாராட்டுக்கு நன்றி சங்கர்.
Jaleela Kamal said...
சரியான காமடி தான்
thank you
@தக்குடு said...
பாத்து சார்!! இந்த பதிவையும் வழக்கம் போல எவனாவது காப்பி பேஷ்ட் பண்ணிட போறாங்க!! :)))
செஞ்சா செய்யட்டும் விடுங்க சார்.நன்றி
@சென்னை பித்தன் said...
இது என்ன குத்து?உள்ளா,வெளியா?!
வெளியே சார்.நன்றி.
@ராஜன் said...
காமெடி கூட செய்ய தெரியுமா சார்,சீரியஸ் ஆளுன்னு நெனச்சேன்..
yes sir thank you
@NAAI-NAKKS said...
He......he.....
thank you
@நிரூபன் said...
வணக்கம் அண்ணாச்சி,
என்னால் நம்பவே முடியலை.
உங்களுக்குள்ளும் இப்படி ஒரு நகைச்சுவை உணர்வாளரா?
வித்தியாசமா இருக்கே...
சூப்பர் அண்ணாச்சி..
நம்புங்க ! உங்க பதிவ எல்லாம் படிக்கிரோமில்ல! நன்றி சகோ!
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நீங்க கூட இப்படியெல்லாம் எழுதுவீங்களா?
நல்லா இருக்கு...
thanks sir
@ஸ்ரீராம். said...
:))
thank you sir
@ராஜா MVS said...
நண்பரே.. என்ன உங்களின் புதிய அவதாரமோ?
வாழ்த்துகள்..
பதிவு மிக அருமை...
பாராட்டுக்கு நன்றி நண்பரே!
@நிரூபன் said...
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.//
அவ்...ஐயோ....ஐயோ...காளியம்மா காப்பாத்து....
யாரோட டவுசரையோ நம்ம ஆப்பிசர் உருவுறாரே...
நான் போய் யார் டவுசர உருவப்போறேன்.!நன்றி
@kobiraj said...
''
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.//''
வாழ்த்துக்கள் .பதிவு அருமை
நன்றி,நன்றி!
ஆஹா இது கூட நல்லாத்தான் இருக்கு.
all voted... நகைச்சுவையாக தாக்கி கலக்கி இருக்குறீர்கள்.. தொடர்ந்து கலக்குங்க நண்பா
Post a Comment