இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை
செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது
தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு
நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார்.
அடுத்த நாள்
பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக்
கொண்டார்.” அவனே,இவனே!
யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு
வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.?
அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல! திட்டிய ஆசாமி.
பையன் ரொம்பவும்
குழம்பிப் போய்விட்டான்.சில நாட்களில் வேலைக்கு திரும்பி வந்தார் பெண்.ஆர்வமாக
போய் விசாரிக்கவே “ நீங்கள் அனுப்பிய மெசேஜை வீட்டில் பார்த்து விட்டார்கள் என்று
பதில் வந்த்து.அப்புறம் பையன் படபடக்க ஆரம்பித்து தன்னை உறுதிப்படுத்தி சில
நாட்களிலேயே பதிவுத் திருமணம் ஆகி விட்ட்து.
அந்த பெண்ணிற்காக
பையனை மிரட்டியவர் எனக்கு தெரிந்தவர்.என்னிடம் கேட்டார்,” எனக்கு
பிடிக்கவேயில்லை,கொஞ்சம் மிரட்டுங்க சார்” என்று அப்பெண்
கூறியதால் மிரட்டி வைத்தேன் சார்!.சில நாட்களில் அவனுடனே திருமணம் ஆகி விட்ட்து!”’’’’’”
எதற்காக என்னிடம் அப்படி பேச சொல்லவேண்டும்? அது அப்படித்தான் என்றேன்.
அவன் பெண்ணின் நம்பிக்கையை
போதுமான அளவுக்கு பெறவில்லை.ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள்
இருக்கும்.பெரும்பாலான காதலிகளுக்கும் அன்ன ஆகாரம் இல்லாமல் தனக்காக காதலன்
தெருமுனையில் காத்திருக்க வேண்டும்.சிலருக்கு பரிசுப் பொருள்.சிலருக்கு தினமும்
இருபது முறை போன்.
தனது வீட்டு
ஆட்கள் மீது பயம் வர வேண்டும்.அதன் மூலம் உடனே திருமணத்திற்கான ஏற்பாடுகளை காதலன்
செய்ய வேண்டும் என்பதுதான் அப்பெண்ணின் நோக்கம்.பெற்றோர்,வீட்டு உறுப்பினர்கள்
உள்ளிட்டவர்களை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது,கொஞ்சம் பயம் இருக்க வேண்டும்
என்று நினைத்திருக்கிறார்.
காதலன்,காதலி
என்றில்லாமல் பல உறவுகளுக்கும் நம்முடைய அன்பை சரியாக வெளிப்படுத்துவதில்லை.ஒரே
மகனை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டு ஒரு போன் கூட செய்வதில்லை என்று
சங்கடப்படும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள்.மகன் அன்பில்லாமல் இல்லை! சூழ்நிலையால்
அதிகம் பேச முடியாமல் போயிருக்கும்.என்னால் இந்த நேரத்தில்தான் பேச முடியும்,தவறாக
நினைக்க வேண்டாம் அம்மா,அப்பா என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு நிம்மதி
கிடைக்கும்.புலம்ப மாட்டார்கள்.
மனதில்
இருக்கும் அன்பை வெளிப்படுத்த முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள் உறவுகளில் நிறைய
சங்கடங்களை கொண்டு வருகின்றன.கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால் இதை தவிர்க்க அதிக
சிரம்ம் தேவைப்படாது.உறவுகள் எப்போதும் நெருக்கமாகவும்,உதவியாகவும் இருக்கும்.
16 comments:
இது பையனுக்கு எதிர்காலத்தில் தெரியவந்தால் பிரச்சனை அதிகமாயிருமே ..)
//அன்பை வெளிப்படுத்த முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள் உறவுகளில் நிறைய சங்கடங்களை கொண்டு வருகின்றன//
பல முதியவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துள்ளேன்.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
அந்தப் பொண்ணு செஞ்சது சரியா தவறா என்பதை என்னால் தீர்மானிக்க இயலவில்லை!
ஆனால், அன்பை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டு பூட்டிவைப்பது மகா தவறு!
எனக்கு உங்க மேல எப்பவுமே அன்பு சார்! ஓகே வா?
@கந்தசாமி. said...
இது பையனுக்கு எதிர்காலத்தில் தெரியவந்தால் பிரச்சனை அதிகமாயிருமே ..)
தெரிய வந்தால்தானே! நன்றி சார்
@RAVICHANDRAN said...
//அன்பை வெளிப்படுத்த முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள் உறவுகளில் நிறைய சங்கடங்களை கொண்டு வருகின்றன//
பல முதியவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துள்ளேன்.
ஆமாம் சார் நன்றி
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
அந்தப் பொண்ணு செஞ்சது சரியா தவறா என்பதை என்னால் தீர்மானிக்க இயலவில்லை!
ஆனால், அன்பை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டு பூட்டிவைப்பது மகா தவறு!
எனக்கு உங்க மேல எப்பவுமே அன்பு சார்! ஓகே வா
வணக்கம் மணீ சார் ஓ.கே சார்,அன்புக்கு நன்றி அய்யா!
@ராஜன் said...
good post
நன்றி சார்
அந்த பையன் இந்த பதிவ படிக்க மாட்டான் இல்ல.. படிக்காதவரை சந்தோஷமே..
மறுபடியும் ஒரு விழிப்புணர்வு பதிவு...
//மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்த முடியாமல் ஏற்படும் பிரச்சினைகள் உறவுகளில் நிறைய சங்கடங்களை கொண்டு வருகின்றன.//
முற்றிலும் உண்மை.. யார் யாருக்கு எப்படி எப்படி வெளிப்படுத்தவேண்டும் என நம் சுற்றி இருப்பவர்கள் பற்றி ஒரு அகராதி தயாரித்து வைத்துக்கொள்வது நலம்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
இவ்வளவு தெளிவாக திருமணத்தை நட்த்திக் கொள்ளும் சாமர்த்தியம் பின்னாளில் எல்லாவற்றையும் தனக்கேற்ப நடத்திக் கொள்ள தூண்டும். இல்லறத்திற்கான தேவை இதுவல்லவே.
அன்பு என்பது ஒருவருக்குள் வளுக்கட்டாயமாக தினிப்பது அல்ல...
எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி வெளிப்படுவது தான் உண்மையான அன்பு...
பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..
எவ்வளவு தெளிவா இருக்காங்க!!!!!
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
வணக்கம் அண்ணாச்சி,
விவகாரமான விடயத்தின் மூலம் இறுதிப் பந்தியில் நல்லதோர் கருத்தினையும் வைத்திருக்கிறீங்க.
உண்மை தான்..
எப்போதும் தம்பதிகள் அல்லது ஜோடிகளுக்குள் புரிந்துணர்விருந்தால் இவ்வாறான சிக்கல்கள் நிகழாது என்பது சரியே.
Post a Comment