இந்து மதத்தில் தனிச் சிறப்பு பெற்ற தான்யம் அது.பிள்ளையாருக்கு ராசி
லட்டில்,தர்ப்பணத்தில் பயன்படுத்தப்படுவது .நவ கிரகங்களில் சனிக்கு உரிய
தான்யம் அது.இரவு நேரங்களில் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல
அனுமதிப்பதில்லை.முக்கிய சடங்குகளில் நெய்க்கு பதிலாக இதன் எண்ணெய்
உபயோகபடுத்துவது உண்டு.வாரம் ஓரிரு முறை தலைக்கு தேய்த்து குளிக்கவேண்டும்
என்பது நடைமுறையில் உண்டு.
இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கும் கொள்ளும் என்பது கொழுத்தவனுக்கு
கொள்ளு என்பதாக திரிந்து விட்டது.இதன் பொருள் இளைத்தவன்,கொழுத்தவன் இரண்டு
வகையினருக்கும் ஏற்றது என்பதுதான்.மிக சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு
உண்டு.அவர்கள் தவிர்த்து விடலாம்.அரிசி போலவோ பருப்பு போலவோ அன்றாடம்
சமையலில் சேர்க்கும் வழக்கமில்லை.ஆனால் எண்ணெய்யை உபயோகப்படுத்த முடியும்.
நிலத்தில் மிகக் குறைந்த அளவு பயிரிட்டாலும் பலி கொடுக்காமல் அறுவடை
செய்வது வழக்கமில்லை.வசதி இருப்பவர்கள்,ஆடு,இல்லாதவர்கள் கோழி .முன்பே
சொன்னது போல இரவு நேரத்தில் எள் சேர்த்த உணவை வெளியே எடுத்து
செல்லக்கூடாது என்பார்கள்.(என்னவாகும்?).சமையலில் பாகற்காய் ,சுண்டைக்காய்
போன்ற கசப்பான பொருட்களுடன் எள்ளை தூளாக்கி சேர்ப்பது சில இடங்களில்
வழக்கத்தில் இருக்கிறது.பொரியல்களில் சேர்ப்பதுண்டு.
சில தின்பண்டங்களில்
கொஞ்சமாக சேர்ப்பார்கள்.
எள்ளு
உருண்டை செய்வது குறித்து நிரூபன் சொல்லி விட்டார்.எண்ணெய் நிறைந்தது
என்பதால் அடை செய்து எள்ளுடன் சேர்த்து இடிப்பது உண்டு.எள்ளை லேசாக வறுத்து
வெல்லம் சேர்த்தும் சாப்பிடுவார்கள்.ஏதோ ஒரு வகையில் தினமும் பயனடுத்திப்
பார்த்தால் அதன் விளைவுகள் உங்களுக்கே புரியும்.
உடல் சூடு என்பதை காய்ச்சல் என்றுதான் நவீன மருத்துவம் பார்க்கிறது,ஆனால்
நாம் உணர்வது வேறு.தலை,உடலும் சூடாக இருப்பதாக உணர்வோம்.மலச்சிக்கல் இருக்கும்.இப்படிப்பட்ட
சூட்டைத் தனித்து புத்துணர்வு பெறுவது எப்படி?இம்மாதிரி நேரங்களில் எள்ளை
ஏதோ ஒரு விதத்தில் சாப்பிட்டு பாருங்கள்.அதனுடைய ஆற்றலை உணர்வீர்கள்.
41 comments:
இதயம் நல்லெண்ணெய் ஆயில் புல்லிங் விளம்பரம், தேத்திட்டீங்க போலிருக்கு... சரி அத விடுங்க.. ரொம்ப நாளா மண்டைய குடைஞ்சிகிட்டு இருக்கிற விஷயம்... அப்படி ஆயில் புல்லிங் செஞ்சா என்னென்ன நடக்குதாம்..
ஜீவா,கம்பெனிகளின் ஆயில் புல்லிங்கைநான் இதுவரை பயன்படுத்தி பார்க்கவில்லை.ஆனால் செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டு.வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு கொப்பளிப்பது கிராமத்தில் இருப்பதுதான்.உணவில் சேர்ப்பது பற்றியே அதிகம் சொல்லியிருக்கிறேன்.என்னுடைய அனுபவம்கூட.நன்றி
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பகிர்வு.. நண்பரே..
பகிர்வுக்கு நன்றி நண்பா!
ஒரு தேவையான பதிவு நண்பரே..
பதிவுக்கு நன்றிகள் நண்பரே...
@ராஜா MVS said...
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பகிர்வு.. நண்பரே..
நன்றி நண்பா!
@விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி நண்பா!
நன்றி நண்பா!
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு தேவையான பதிவு நண்பரே..
பதிவுக்கு நன்றிகள் நண்பரே...
நன்றி வாத்யாரே! ம்ம்
இனி பபுத்துணர்ச்சிதான்!
பகிர்வுக்கு நன்றி!
//////நிலத்தில் மிகக் குறைந்த அளவு பயிரிட்டாலும் பலி கொடுக்காமல் அறுவடை செய்வது வழக்கமில்லை.வசதி இருப்பவர்கள்,ஆடு,இல்லாதவர்கள் கோழி /// இப்படியும் ஒன்று இருக்கா ???
@கோகுல் said...
இனி பபுத்துணர்ச்சிதான்!
பகிர்வுக்கு நன்றி!
நன்றி சார் உங்களுக்கும்!
@கந்தசாமி. said...
//////நிலத்தில் மிகக் குறைந்த அளவு பயிரிட்டாலும் பலி கொடுக்காமல் அறுவடை செய்வது வழக்கமில்லை.வசதி இருப்பவர்கள்,ஆடு,இல்லாதவர்கள் கோழி /// இப்படியும் ஒன்று இருக்கா ???
ஆமாம் சார் எங்கள் பகுதியில் அந்த வழக்கம் உண்டு.நன்றி
உண்மைதான்,நானும் பயன்படுத்துவது உண்டு.நல்ல பதிவு.
ஆரோக்யமான, அவசியமான பதிவு! நன்றி அண்ணே!
தேவையான பதிவு ஆரோக்கியத்திற்கு வழி சொல்லியிருக்கிறீங்க!
திரிந்த பழமொழியை தெளிய வைத்து விட்டீர்கள்.
சுவையான பதிவுன்னும் சொல்லலாம்...'சூடான' பதிவுன்னும் சொல்லலாம்! எள்ளுருண்டை எனக்குப் பிடித்த பண்டங்களில் ஒன்று. எள்ளை தோசை மிளகாய்ப் பொடியில் சேர்க்கலாம். கடைகளில் தோசைப் பொடியில் 'எள்ளுப் பொடி' என்றே கூட, தனியாகக் கிடைக்கிறது.
@RAVICHANDRAN said...
உண்மைதான்,நானும் பயன்படுத்துவது உண்டு.நல்ல பதிவு.
நன்றி அய்யா!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஆரோக்யமான, அவசியமான பதிவு! நன்றி அண்ணே!
THANKS BROTHER
@தனிமரம் said...
தேவையான பதிவு ஆரோக்கியத்திற்கு வழி சொல்லியிருக்கிறீங்க!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@சத்ரியன் said...
திரிந்த பழமொழியை தெளிய வைத்து விட்டீர்கள்.
நன்றி சத்ரியன்.
@ஸ்ரீராம். said...
சுவையான பதிவுன்னும் சொல்லலாம்...'சூடான' பதிவுன்னும் சொல்லலாம்! எள்ளுருண்டை எனக்குப் பிடித்த பண்டங்களில் ஒன்று. எள்ளை தோசை மிளகாய்ப் பொடியில் சேர்க்கலாம். கடைகளில் தோசைப் பொடியில் 'எள்ளுப் பொடி' என்றே கூட, தனியாகக் கிடைக்கிறது.
வீட்டிலேயே எள்ளுப்பொடி செய்து வைத்தும் சாப்பிடலாம்,நன்றி
வணக்கம் அண்ணாச்சி,
ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அசத்தலான பதிவு.
நானும் ஆயில் புல்லிங்கெல்லாம் செய்திருக்கேன். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வாங்க இல்லியா? அதில் எள்ளு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடுனு சொல்ராங்க. ( இளைத்தவனுக்கு எள்ளு). அதே எள்ளு ஆட்டி எடுக்கும் நல்லெண்ணை கொலஸ்ட்ரால் சேராதுங்கராங்க. அதாவது வெயிட் போடாதுன்னு சொல்ராங்க இது எப்படி?
நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது... பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஆரோக்கியமானதும் அவசியமானதும் இந்த பதிவு
உண்மையான தகவல்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நல்ல எள்நெய் பற்றி நல்லாச் சொன்னீங்க!
த.ம.8
good post
@Lakshmi said...
நானும் ஆயில் புல்லிங்கெல்லாம் செய்திருக்கேன். இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வாங்க இல்லியா? அதில் எள்ளு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடுனு சொல்ராங்க. ( இளைத்தவனுக்கு எள்ளு). அதே எள்ளு ஆட்டி எடுக்கும் நல்லெண்ணை கொலஸ்ட்ரால் சேராதுங்கராங்க. அதாவது வெயிட் போடாதுன்னு சொல்ராங்க இது எப்படி?
விளக்கமாக இருக்கிறதே!கேடு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.எண்ணெய் நமக்கு ஓரளவு தேவை.அதில் நல்லெண்ணெய் நல்லது.
@நிரூபன் said...
வணக்கம் அண்ணாச்சி,
ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அசத்தலான பதிவு.
எல்லாப் புகழும் நிரூபனுக்கே!
@மாய உலகம் said...
நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது... பகிர்வுக்கு நன்றி நண்பரே
நன்றி நண்பா!
@தமிழரசி said...
ஆரோக்கியமானதும் அவசியமானதும் இந்த பதிவு
தங்கள் கருத்துரைக்கு நன்றி
தேவையான பயனுள்ள பதிவு, நன்றி
@Kannan said...
உண்மையான தகவல்.....
நன்றி சார்
@சென்னை பித்தன் said...
நல்ல எள்நெய் பற்றி நல்லாச் சொன்னீங்க!
த.ம.8
நன்றி,நன்றி
@ராஜன் said...
good post
நன்றி சார்
@தமிழ்வாசி - Prakash said...
தேவையான பயனுள்ள பதிவு, நன்றி
நன்றி
அன்பின் ஷண்முக வேல் - தகவலுக்கு நன்றி - சிறு வயதில் வீட்டில் அதிகம் எள் ப்யன்படுத்தியது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது எள் உபயோகிப்பது குறைந்து விட்டது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எள்ளைப்பற்றிய பதிவு அருமை...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
\\இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கும் கொள்ளும் என்பது கொழுத்தவனுக்கு கொள்ளு என்பதாக திரிந்து விட்டது.இதன் பொருள் இளைத்தவன்,கொழுத்தவன் இரண்டு வகையினருக்கும் ஏற்றது என்பதுதான்.\\ இது நாள் வரையிலும் தவறாக அர்த்தம் கொண்டிருந்தேன், தகவலுக்கு நன்றி.
\\எள் தான் அந்த தான்யம். \\ தான்யம் என்றால் அரிசி, கோதுமை, சோளம், பார்லி போன்றவையாகும், எள் என்பது எண்ணெய் வித்து, தான்யம் ஆகாது.
Post a Comment