Monday, September 26, 2011

ஏலகிரியில் கல்லூரி இளசுகளின் குத்தாட்டம்.

ஏலகிரி வேலூர் மாவட்ட்த்தில் உள்ள சுற்றுலாத்தளம்.ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பிலிருந்து அருகாமையில் இருக்கிறது.வேலூரிலிருந்து பேருந்துகளும் உண்டு.திருப்பத்தூரிலிருந்தும் செல்ல்லாம்.இரைச்சல் இல்லாத அமைதியும்,இயற்கைக் காற்றும் வரப்பிரசாதம்.முன்னாள் முதல்வரும்,பா.ம.க தலைவரும் இந்த வருட்த்தில் ஓய்வெடுக்க வந்து பிரபலப் படுத்தினார்கள்.
                                  கோடைகாலம்தான் சீஸன்.அப்போது தங்குவதற்கு இடம் கிடைப்பதே கஷ்டம்.சனி ஞாயிறுகளில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.பெரிய ஹோட்டல்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.சில ஹோட்டல் முதலாளிகள் பணம் செய்ய ஏதேதோ செய்ய ஆரம்பித்திருப்பது நேற்று வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

                                  இளமையைப் பற்றித்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே? அதுவும் இப்போது போதையுடன் குழுவாக (மாணவர்,மாணவிகள் எல்லாம்தான்) பார்ட்டி நட்த்துவது அதிகரித்திருக்கிறது.கல்லூரி என்று சொன்னேன் இல்லையா? இல்லை,பல்கலைக்கழகம்.சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் வேலூரில் இருந்தும் குழு சேர்ந்திருக்கிறார்கள்.
                                  ஏலகிரியில் உள்ள ஹோட்டலில் போதையில் குத்தாட்டம் போட்டு கலாட்டா செய்தவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வளைத்து விட்டார்கள்.கஞ்சா,அபின் சப்ளை செய்த்தாக ஹோட்டலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சேலத்தில் போதை மருந்து வைத்திருந்தவரை பிடித்தபோது அவர் சொன்னார்கல்லூரி மாணவர்கள்தான் என்னுடைய கஸ்டமர்கள்.

                                     இளமை திக்குத்தெரியாத காட்டில் திணறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.கைதான குழுக்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.எதிர்காலம் பற்றிய பயம் எதுவும் அவர்களுக்கு தேவைப்படவே இல்லை.படிப்பை விட்டு வெளியேறும் முன்பே வேலைக்கான நியமனம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் மோசமான போதை மருந்துகளுக்கு அடிமையாகி வேலையை தக்க வைத்துக்கொண்டு மகிழ்ச்சியானவாழ்க்கையை வாழ முடியுமா?
                                                                                     இம்மாதிரி விஷயங்களே ஏலகிரியில் அதிகம்.பெங்களூரிலிருந்து நிறைய இளைஞர்கள் குழுவாக சேர்ந்து வந்து விடுவார்கள்.நான் முதல்முறை போனபோது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தேன்.பக்கத்து அறையில் நான்கு இளைஞர்கள் நள்ளிரவைத் தாண்டியும் வெட்ட வெளியில் உட்கார்ந்து குடித்துக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

                                  இளைஞர்கள் மட்டும் வருவது போய் இப்போது இருபாலரும் கொண்டாட வருகிறார்கள். வசதி படைத்தோரின் பிள்ளைகள்தான் பெரும்பாலும்! மகிழ்ச்சி என்பதை என்னவென்றே தெரியாமல் மனம் போன போக்கில் திரிய ஆரம்பித்து விட்டார்கள்.போதை வைத்தே பலரை பிடித்து விடுகிறார்கள்.
                                                                                       காவல்துறை கைது செய்யும் அளவுக்கு மானம் கப்பல் ஏறிய பின்பாவது பல்கலைக்கழகங்கள் யோசிப்பார்களா? எத்தனையோ அறிஞர்கள் அங்கே இருக்க முடியும்.புதிது புதிதாக எதையெதையோ கண்டு பிடிக்கிறார்கள்.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்.பழைய கேள்வியை திரும்பக் கேட்போம்.கல்வி என்பது வெறும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்து வெளியே அனுப்பவதா? மாணவ மாணவிகளுக்கு நல்வழியை காட்டும்,மாண்பைக் கற்றுத்தரும் ஒருவழியை கண்டுபிடிக்க முடியாதா? புதிய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
-

26 comments:

Mathuran said...

ம்ம் இளைஞர்கள் கையில்தான் எதிர்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது???????????????????????????????????????

SURYAJEEVA said...

2005 களில் மிகவும் ரகசியமாக நடந்த விஷயம்.. மாணவர்கள் ரத்த தானம் செய்வது காசுக்காக, இதில் மருத்துவமனை ஊழியர்களில் சிலரும் உடந்தை... அப்படி வந்த காசில் சீரழிந்த மாணவர்கள் அதிகம்... இதை எதிர்த்து அப்பொழுது ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்

Anonymous said...

மாணவர்கள் இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது... இவர்கள் பெற்றோர் என்ன செய்கிறார்கள்...

மாய உலகம் said...

புதிய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய விஷயம்.

shanmugavel said...

@மதுரன் said...

ம்ம் இளைஞர்கள் கையில்தான் எதிர்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது???????????????????????????????????????

நன்றி மதுரன்.

Gujaal said...

//பெங்களூரிலிருந்து நிறைய இளைஞர்கள் குழுவாக சேர்ந்து வந்து விடுவார்கள்.நான் முதல்முறை போனபோது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தேன்.பக்கத்து அறையில் நான்கு இளைஞர்கள் நள்ளிரவைத் தாண்டியும் வெட்ட வெளியில் உட்கார்ந்து குடித்துக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.//

அவர்களின் பேச்சு உங்களுக்குத் தொந்தரவாக இல்லாமலிருந்திருக்கும் பட்சத்தில் அவர்களின் கொண்டாட்டத்தில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்?

ஒரு பிரச்சினையும் இல்லை அய்யா!ஏலகிரியின் சூழலை விவரித்தேன்.பலருக்கு அங்கே என்ன இருக்கிறதென்று தெரியாது.பெரும்பாலும் இந்தமாதிரிதான்.நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

2005 களில் மிகவும் ரகசியமாக நடந்த விஷயம்.. மாணவர்கள் ரத்த தானம் செய்வது காசுக்காக, இதில் மருத்துவமனை ஊழியர்களில் சிலரும் உடந்தை... அப்படி வந்த காசில் சீரழிந்த மாணவர்கள் அதிகம்... இதை எதிர்த்து அப்பொழுது ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்

தனியார் ரத்த வங்கியிலா? அரசு இப்போது பணம் கொடுத்து ரத்தம் பெறுவதை தடை செய்துவிட்டதே! நன்றி

shanmugavel said...

@கந்தசாமி. said...

மாணவர்கள் இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது... இவர்கள் பெற்றோர் என்ன செய்கிறார்கள்...

பெற்றோர்கள் எங்கோ அவர்களின் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தங்கிப்படிப்பவர்கள்.நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

புதிய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய விஷயம்.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

RAVICHANDRAN said...

அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க நண்பா!

ஸ்ரீராம். said...

கல்வி என்பது வெறும் தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுத் தந்து வெளியில் அனுப்புவதா என்ற உங்கள் கேள்வி ரொம்பவே நியாயமானது. இதில் பெற்றோர் பங்கும் உண்டு. கண்டிப்பு காட்ட வேண்டிய வயதில், இடத்தில் கண்டிப்பு காட்டியும், அன்பு காட்டவேண்டிய இடத்தில் அன்பு காட்டியும், பிள்ளைகள் யாருடன் சேர்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாமல் கூடக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கூட இல்லாத பெற்றோர்கள் மீது பெரும் தவறு உள்ளது. இப்போது இன்பமாய்த் தெரியும் இந்த போதைப் பழக்கங்கள், நாளை வாழ்க்கையைத் தொலைக்கும் போது, அவர்களை விட அவர்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய துன்பத்தைத் தரும்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று

ஆமாம் சார் நன்றி

shanmugavel said...

@விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றிங்க நண்பா!

நன்றி நண்பா!

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

கல்வி என்பது வெறும் தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுத் தந்து வெளியில் அனுப்புவதா என்ற உங்கள் கேள்வி ரொம்பவே நியாயமானது. இதில் பெற்றோர் பங்கும் உண்டு. கண்டிப்பு காட்ட வேண்டிய வயதில், இடத்தில் கண்டிப்பு காட்டியும், அன்பு காட்டவேண்டிய இடத்தில் அன்பு காட்டியும், பிள்ளைகள் யாருடன் சேர்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாமல் கூடக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கூட இல்லாத பெற்றோர்கள் மீது பெரும் தவறு உள்ளது. இப்போது இன்பமாய்த் தெரியும் இந்த போதைப் பழக்கங்கள், நாளை வாழ்க்கையைத் தொலைக்கும் போது, அவர்களை விட அவர்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய துன்பத்தைத் தரும்.

இம்மாதிரி பிரச்சினைகளுக்கு பெற்றோர்களுடன் நேரம் செலவிடுவதில்லை என்பதும்காரணமாக இருக்கலாம்.நன்றி

ஓசூர் ராஜன் said...

aamaam.ilaya thalaimurai sinthikkattum

ஓசூர் ராஜன் said...

pethavangalum nadunaduve kankaanikka vendum.

சென்னை பித்தன் said...

தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!

சாகம்பரி said...

கல்வி என்பது வெறும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்து வெளியே அனுப்பவதா? மாணவ மாணவிகளுக்கு நல்வழியை காட்டும்,மாண்பைக் கற்றுத்தரும் ஒருவழியை கண்டுபிடிக்க முடியாதா? // இதை சொன்னால் ஒரு மாதிரி பார்வைதான் கிட்டுகிறது. என்னுடைய மாணவி கேம்பஸ் இண்டர்வியூவில் தேறவில்லை. அதே நிறுவனத்தில் நேர்முகத் தேர்வினில் தேறி சேர்ந்துவிட்டாள் - நேர்முகத் தேர்வின்போது அவள் நடந்து கொண்ட விதம்தான் என்று அவளே சொல்கிறாள். . இப்போது மேல் நாட்டு பயணமும் வாய்த்துவிட்டது. கலாச்சாரம் என்று நீங்கள் எங்களை முன்னேற விடவில்லை என்று வேறு கூறுகிறாள். என்ன செய்வது?

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இதுதான் கலாச்சாரம்.

ம.தி.சுதா said...

////கஞ்சா,அபின் சப்ளை செய்த்தாக ஹோட்டலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.///

வருமானத்திற்காக இப்ப என்னவெல்லாம் செய்கிறார்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

shanmugavel said...

ராஜன்,சென்னைப்பித்தன்,சகோதரி சாகம்பரி,மதிசுதா அனைவருக்கும் நன்றி

Sankar Gurusamy said...

//கல்வி என்பது வெறும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்து வெளியே அனுப்பவதா? மாணவ மாணவிகளுக்கு நல்வழியை காட்டும்,மாண்பைக் கற்றுத்தரும் ஒருவழியை கண்டுபிடிக்க முடியாதா?//

நல்ல கேள்விகள்... பதில்தான் யாரிடமும் இல்லை.. தெரிந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் நம்மிடம் இல்லவே இல்லை...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

ராஜா MVS said...

நவீனம் நவீனம் என்று சொல்லியே மனித வாழ்க்கையும் திக்குத் தெரியாத திசையில் சென்று கொண்டிருக்கிறது...
பாதை வேண்டுமானால் புதிதாகவும், கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருக்கலாம்...
ஆனால் வழியெங்கிலும் உன்னுடைய ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு வந்ததை உன் முதுமையில் நீ உணரும் பொழுது தான் வாழ்க்கையின் அருமை என்ன? என்பது உனக்கு புரியும்...
புரிந்து என்ன பயன்...

இளைஞர்களே சிந்தியுங்கள்...

ராஜா MVS said...

பதிவு மிக அருமை நண்பரே....

வாழ்த்துகள்...

இன்ட்லியில் இணைக்காமல் இருந்தவைகளை இணைத்துவிட்டேன்.. நண்பரே...

நிரூபன் said...

வழி காட்டல் இன்றித் தடுமாறும் பள்ளி மாணவ- மாணவியரின் நிலையினை ஏலகிரிச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது.

ஆசிரியர்கள் தான் இம் மாணவர்களிறு அட்வைஸ் பண்ணி, சமூகத்தில் அவலங்கள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.