Wednesday, September 28, 2011

ஃபிகர் என்றவரை செருப்பால் அடித்த இளம்பெண்.


அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது.ஒரு பெண் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருக்கலாம்.ஒருவரை ஆக்ரோஷமாக செருப்பால் விளாசியதை கண்டு கூட்டம்கூடி விட்ட்து.பெண்ணின் உறவினர்கள் கூடி விட்டார்கள்.பேருந்தில் இடிப்பதிலிருந்து ஆண்களால் ஏற்பட்ட அத்தனை சங்கடங்களையும் சொல்லிக்காட்டி அழுது கொண்டிருந்தார்.
                                பக்கத்தில் இருந்த போலீஸ் வந்து விசாரித்த போது “ ஃபிகர் நல்லா இருக்குன்னு சொன்னேன் சார்அவ்வளவுதான் என்றான் அவன்.அவனுடைய நண்பனும் ஆமாம் சார் அது மட்டும்தான் சொன்னான் என்றான்.’’போய்  உன்னுடைய அம்மா,தங்கை என்று மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் அப்பெண்.இருவரையும் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு தெரியாது.
                                 வழக்கமாக இம்மாதிரி வார்த்தைகளை பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.மிகச்சிலர் தனக்கான அங்கீகாரமாக கூட கருதுவதுண்டு.இதற்குபோயா இப்படி என்று பலர் ஆச்சர்யப் பட்டார்கள்.மீண்டும் மீண்டும் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.காவல்துறையை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.அவருடைய உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
                                 இன்னொரு சம்பவம்.இரண்டு நண்பர்கள்.ஒருவர் கிட்ட்த்தட்ட அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவர்.அவரை குடிகாரா! என்று அழைப்பதில் இன்னொருவருக்கு சந்தோஷம்.குடிப்பவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சேர்ந்து கொண்டு சிரிப்பார்.பதிலுக்கு அவரை ஏதாவது விஷயத்தில் வாரி விடுவார்.ஒரு நாள் வழக்கமான பெட்டிக்கடையில் சந்திக்கும்போது குடிகாரன் வந்துட்டான் என்றார்.குடிக்கும் பழக்கம் உடையவர் அடிக்கப் பாய்ந்தார்.வார்த்தை தடித்து சண்டையாகி இருவரும் பேசிக்கொள்ளாத நிலை உருவாகிவிட்ட்து.
                                இளம்பெண் விஷயத்துக்கு வருவோம்.எத்தனையோ இடங்களில் ஆண்களின் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்ற பெண் திடீரென்று செருப்பைக்கழட்டியது ஏன்? பல நாட்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டாத குடிகாரன் என்ற வார்த்தை அன்று மட்டும் பிரச்சினை ஆனது எப்படி?
                                  செருப்பால் அடித்த பெண்ணின் அக்கா கணவர் விபத்தில் இறந்து பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருந்த்து.வீடும் உறவும் துக்கத்தில் கிடந்தபோது அக்காளின் குழந்தைக்கு ஒரு ஓரமாக உணவு கொடுத்துக்கொண்டிருந்தார்.ஏற்கனவே இருந்த மோசமான மனநிலை ஆத்திரத்தை தூண்டி விட்ட்து.எப்போதும் ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கத்துகிறார்.
                                  கணவன்,மனைவியோ உறவினர்களோ திடீரென்று சண்டை பிடிக்கும்போது கவனித்துப்பாருங்கள்.ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் நடந்து கொண்ட்தையும் சொல்லிக் கத்துவார்கள்.உறவுகளில் ஏற்படும் சிறு சிறு நெருடலும் உள்ளே தங்கியிருக்கிறது.மறைந்தோ,மறந்தோ போய்விடாது எத்தனை வருடங்களானாலும்!சமயம் வரும்போது வெளியே வந்து விடும்.
                                  சரி குடிகாரனுக்கு என்னதான் ஆனது? அதற்கு முந்தின நாள் இரவு முழுக்க மனைவியுடன் சண்டை.இவர் குடித்துவிட்டு வாந்தியெடுத்து வீட்டில் பிரச்சினை.அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் இவருடைய பழக்கம் தெரிந்து போனது.வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்தால் பரவாயில்லை என்று சொல்லி விட்டார்.பல நாட்கள் கிண்டலடித்திருந்தாலும் இப்போது அந்த வார்த்தை இரண்டு நண்பர்களை பிரித்து விட்ட்து.

சம்பவங்கள் சொல்லும் படிப்பினை என்ன? நான் சொல்வதைவிட மற்றவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்.
-

31 comments:

சென்னை பித்தன் said...

நமது செயல்கள் நம் அப்போதைய மன நிலையைப் பொறுத்தவையே என்பதைத் தெளிவாகச் சொன்னீர்கள்!

சென்னை பித்தன் said...

தமிழ் மணத்தில் இணைய மறுக்கிறது!

Anonymous said...

நம் சூழல் உணர்வை புரியாமல் நடந்துக் கொள்ளும் போது நாமும் உணர்ச்சி வசப்பட்டு தான் போகின்றோம்...

ராஜா MVS said...

மனிதனின் மனம் இயல்பாகவே கடந்த காலத்திலும், எதிர் காலத்திலுமே பயணித்துக்கொண்டிருக்ககூடியது.
நாம் சந்தோசமான நினைவுகளில் இருந்தால் பிரச்சனை இல்லை..
அதுவே வேதனையிலோ, நமக்கு நேர்ந்த அவமானங்களிலோ இருக்கும் போது ஒருவர் கூறும் வார்த்தை இன்னும் அந்த மனதை குத்தி கிலறி விடுகிறது, அவர் வேறொருவரை சொல்லியிருந்தாலும் தன்னைத் தான் குத்தி காட்டுகிறான் என்று அவன்மேல் கோபத்தில் எறிந்து விழுகிறோம்...
எல்லாம் முடிந்து அமைதியாக அமரும்போது நமக்கே தோன்றும் நாம் ஏன் இப்படி நடந்துகொண்டோம் என்று...
கண்டிப்பாக அந்த பெண்ணுக்கே தோன்றி இருக்ககூடும்...

ராஜா MVS said...

அருமையான பதிவு நண்பரே...

வாழ்த்துகள்...

தனிமரம் said...

உண்மையில் சில வார்த்தைகளை சமயம் அறிந்து தான் சொல்ல வேனும் அப்போதுதான் நாகரிகமாக இருக்கும்!

ரைட்டர் நட்சத்திரா said...

நிதர்சனமான விஷயம்

SURYAJEEVA said...

நம் செய்கை மட்டும் அல்ல நம் வாழ்க்கையையும் தீர்மானிப்பது சமூகமே... பேருந்தில் சென்ற ஒருவன் விபத்தில் அடிபட நேர்ந்து அவனிடம்; பார்த்து போயிருக்க கூடாதா என்று கேட்டால் நல்லாவா இருக்குது...

viswanathan said...

Very Good posting
Viswanathan

ஓசூர் ராஜன் said...

manithan soolnilaikkaithi enpathai arumaiyaaga sonneergal

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

நமது செயல்கள் நம் அப்போதைய மன நிலையைப் பொறுத்தவையே என்பதைத் தெளிவாகச் சொன்னீர்கள்!

ஆமாம் அய்யா! நன்றி

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

தமிழ் மணத்தில் இணைய மறுக்கிறது!
ஆமாம்,இதை எப்போது சரி செய்வார்கள் என்று தெரியவில்லை.

shanmugavel said...

@தமிழரசி said...

நம் சூழல் உணர்வை புரியாமல் நடந்துக் கொள்ளும் போது நாமும் உணர்ச்சி வசப்பட்டு தான் போகின்றோம்...

ஆமாம்,தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

தங்கள் கருத்துரை சரியான விஷயத்தை சுட்டி நிற்கிறது.நன்றி நண்பரே!

bandhu said...

ஆரண்ய காண்டம் படத்தின் ஆணி வேர் இதே தான்! சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தை சில சூழ்நிலைகளில் விபரீதமான விளைவுகளை தரலாம்!

RAVICHANDRAN said...

நானும் சில நேரங்களில் யோசிப்பேன்.நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்னு ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.ஏதோ பிரச்சினை இருக்கிறதென்று நினைத்துக்கொள்வேன்.நல்ல பகிர்வு.

shanmugavel said...

@ராஜா MVS said...

அருமையான பதிவு நண்பரே...

வாழ்த்துகள்...

நன்றி நண்பரே!

shanmugavel said...

@தனிமரம் said...

உண்மையில் சில வார்த்தைகளை சமயம் அறிந்து தான் சொல்ல வேனும் அப்போதுதான் நாகரிகமாக இருக்கும்!

மிகச் சரி அய்யா! நன்றி

shanmugavel said...

@கார்த்தி கேயனி said...

நிதர்சனமான விஷயம்

நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

நம் செய்கை மட்டும் அல்ல நம் வாழ்க்கையையும் தீர்மானிப்பது சமூகமே... பேருந்தில் சென்ற ஒருவன் விபத்தில் அடிபட நேர்ந்து அவனிடம்; பார்த்து போயிருக்க கூடாதா என்று கேட்டால் நல்லாவா இருக்குது...

உண்மையே ஜீவா நன்றி

shanmugavel said...

@viswanathan said...

Very Good posting
Viswanathan
THANKS SIR

shanmugavel said...

@ராஜன் said...

manithan soolnilaikkaithi enpathai arumaiyaaga sonneergal

நன்றி நண்பரே!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

நானும் சில நேரங்களில் யோசிப்பேன்.நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்னு ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.ஏதோ பிரச்சினை இருக்கிறதென்று நினைத்துக்கொள்வேன்.நல்ல பகிர்வு.

பிரச்சினை இருப்பதாக நினைத்துக்கொண்டால் உறவுகளில் சிக்கல் இருக்காது.பெரும்பாலும் அவர்களுக்கு நம் மீது அன்பு இல்லை என்று நினைத்துவிடுகிறோம்.நன்றி

கேரளாக்காரன் said...

Idam porul yeval

Robin said...

//பக்கத்தில் இருந்த போலீஸ் வந்து விசாரித்த போது “ ஃபிகர் நல்லா இருக்குன்னு சொன்னேன் சார்” அவ்வளவுதான் என்றான் அவன்.// பதிவுலகிலும் இப்படித்தான் சிலர் சொல்கிறார்கள், செருப்பை எடுத்து அடிக்கத்தான் ஆளில்லை!

Sankar Gurusamy said...

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு பட்டிமன்றத்துல கேட்டதுதான் ஞாபகம் வருது..

“ ஒரு மாதிரி எல்லாம் ஒரு மாதிரிதானே தவிர ஒரே மாதிரி இல்லை “

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

தலைப்பு சூப்பர்..

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

மகேந்திரன் said...

நமது கேள்விகள் கூட இடம் பொருள் காலம் தெரிந்து தான்
கேட்கவேண்டும். செய்யும் செய்கைகள் இன்னும் பன்மடங்கு யோசித்து
செய்ய வேண்டும்.
அருமையான பதிவு நண்பரே.

நிரூபன் said...

அண்ணே, மேற்படி சம்பவங்கள் சொல்லும் படிப்பினை,

நாம் உணர்ச்சி வசப்படும் போது, எம் அருகே நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி..
பொது இடங்களில் மற்றவர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படாதவாறு பொறுமையினைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையே சொல்லி நிற்கின்றன.

மாய உலகம் said...

பொருத்திருந்து பொருத்திருந்து ஒரு சமயம் வெடிப்பது தான்... இதற்கெல்லாம் காரணம்... ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை இருக்கிறது... சமயம் சாதகமானால்... எனவே இடம் அறிந்து சூழ்நிலை அறிந்து பேசி நடந்து கொள்வது சிறந்தது நண்பரே