நாம் ஒன்று நினைத்தால் அது (ஒரு புளோவில் வந்து விட்டது.யாரும் புகார்
அனுப்பாதீங்கப்பா!) ஒன்று நடந்து விடுகிறது. கூகுள் பிளாக்கர்களுக்கு
பிரபலமாவதற்கு சில வழிகளை சொல்லித் தந்திருக்கிறது.நிறைய பேருக்கு கமென்ட்
போடுங்கள் என்பதும் அதில் ஒன்று.இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா
வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா
பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது!
ஒருவர் மெயில் மூலம் என்னுடைய போன் நம்பர் கேட்டார்.அனுப்பி வைத்தேன்."வணக்கம் சார் என் பெயர் ராஜன்.நான் பிளாக் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன்." ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமாக இருந்தது.எதற்கு இந்த வேண்டாத வேலை உங்களுக்கு என்று கேட்கலாம்.ஆனால் அப்போ நீ மட்டும் எதற்காக ? என்று நினைத்து விடுவாரோ என்று பயம்.பிரௌசிங் செண்டர் பணியாளிடம் போனிலேயே சொல்ல அவரும் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டார்.

சில புத்தகங்களை எழுதியிருப்பதாக சொன்னார்.பழனிபாபா,குந்தவை பற்றிய இரண்டு புத்தகம் கொடுத்திருக்கிறார்.இன்னும் படிக்கவில்லை.அவருக்கு முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியது.அதேதான்.மற்ற பதிவுகளை படித்து ஓட்டும் கமெண்டும் போடுவது! சிலர் அருமையாக கமென்ட் மட்டும் போடுவார்கள்.ஓட்டு போடமாட்டர்கள் .ஓட்டு போடாமல் வருவதை பதிவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்று தோன்றுகிறது.
ஒரு நண்பருக்கு இதை சொல்லலாம் என்று நினைத்தேன்.இவனுக்கு ஓட்டு போட சொல்லி கேட்கிறான் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டேன்.ஆனால் ராஜனுக்கு மிக பொறுப்பாக நான் இதை சொல்லிவிட்டேன்.அவரும் அப்படித்தான் நினைத்து விட்டார் போலிருக்கிறது.எனக்கு மட்டும் சரியாக ஓட்டு,கமென்ட் போட்டு விடுகிறார்.அடக் கடவுளே!
என்னைப் பொறுத்தவரை அது நண்பர்களின் விருப்பம்தான்.கமென்ட் மட்டும்
போட்டாலும் சரி.ஓட்டு சேர்த்து போட்டாலும் சரி.நான்கு நாட்களுக்கு முன்பு
ராஜன் போன் செய்து உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டேன் ,நான் கொஞ்சம் பிஸி
என்றார்.பரவாயில்லை விடுங்க சார் என்றேன்.சகோதரர் ஒருவர்
அலுத்துக்கொண்டார்.பெரிய பேஜார் சார்.இன்னும் ஓட்டு கமென்ட் போட்டு
முடியவில்லை. வேறு வழி இல்லை.நம்முடைய பதிவுக்கு வந்து நாம் எழுதியதை
எல்லாம் படித்து கமென்ட் போட்டிருக்கிறார்களே! அவர்களுக்கும் நாம் மரியாதை
செய்வதுதானே சரி!
அதிலும் நிறைய பிரச்சினை இருக்கிறது.எனக்கு ஏ.ஆர் ,ரஹ்மான் பற்றி ஒரு கமென்ட் .நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? என்று யோசிக்கவில்லை.பதிவுலகில் இதெல்லாம் சகஜம்.எனக்கும் அந்த மாதிரி அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் திறந்து கொண்டு எனக்கு போட வேண்டிய கமெண்டை வேறு ஒருவருக்கு போட வேண்டியது. மெயில் மூலமும்,டேஷ்போர்டு மூலமும் இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் ஓட்டு கமென்ட் போட வேண்டியது.

ஒரு நண்பருக்கு ஓட்டும் கமெண்டும் போட்டுவிட்டு அரைமணி கழித்துப்பார்த்தால்
நான் போட்ட கமெண்டை காணோம்!ஒரு வேளை நீக்கி விட்டாரோ! இன்னொரு பதிவையும்
பார்த்தபோது விஷயம் தெரிந்தது.ஆமாம் வேறு ஒருவருக்கு போட்டு
விட்டேன்.அப்புறம் சுருக்கமாக கமென்ட் போட்டால் பதிவை படிக்கவில்லை என்று
நினைத்துக் கொள்கிறார்கள்.நான் அவசரமாகவாவது படிக்காமல் கமென்ட் போடுவது
வழக்கமில்லை.ஓட்டு போடுவதிலும் கூட ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.நான்
எந்த தளத்திற்கு போனாலும் இன்டலி,தமிழ்மணம்,தமிழ் 10 அனைத்திலும்
வாக்களிப்பது வழக்கம்.
ஓட்டு கூட எங்கோ போகட்டும்.கமெண்ட்டை கண்டுபிடித்தவர்கள் புண்ணியவான்கள்.பல நேரங்களில் நாம் ஏதாவது விட்டுவிட்டாலும்,தவறான தகவல் தந்திருந்தாலும் உடனே சொல்லி விடுகிறார்கள்.பல காலமாக கமென்ட் மாடரேஷன் வைத்திருந்தேன்.பல கமெண்டுகளை நான் வெளியிடவில்லை.சில தனி மனித தாக்குதல்,நீதிமன்ற அவமதிப்பு போன்றவை.ஆனால் இரவுகளில் மட்டுமே பதிவை பார்க்க முடிவதால் மாடரேஷன் சரியாக வரவில்லை.மற்றபடி மாடரேஷன் வைப்பது சரி என்றே படுகிறது.

39 comments:
என்னத்த சொல்லுறது.
இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,
எனக்கும் சில வேளைகளில் கமெண்ட் மாறிப் போட்ட அனுபவம் உண்டு
இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
யாருக்கோ ஒரு குத்தல் போடுறீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு நண்பருக்கு ஓட்டும் கமெண்டும் போட்டுவிட்டு அரைமணி கழித்துப்பார்த்தால் நான் போட்ட கமெண்டை காணோம்!ஒரு வேளை நீக்கி விட்டாரோ! இன்னொரு பதிவையும் பார்த்தபோது விஷயம் தெரிந்தது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹே..ஹே...
நல்ல தூக்கத்தில கமெண்ட் போட்டிருப்பீங்களோ...
பதிவுலக நிதர்சனங்களை பட்டவர்த்தனமாகாச் சொல்லியிருக்கிறீங்க.
யதார்த்தம் .. என்ன செய்ய?
உள்ளது உள்ளபடி!
கலக்கல்...அதுவும் கமன்ட் விஷயத்துல நானும் சோம்பேரிங்கோ!
அப்படிங்களா?
கருத்துரை பற்றி ஒரு கருத்து...
சூப்பர்...
எங்கள் ஏரியாவில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பவர் கட். பவர் இருக்கும் நேரத்தில் 'இன்னிக்கு நான் ஸ்டெடியா இல்லையென்று' இணையம் சொல்கிறது. இதில் ஓட்டும் கமெண்டும் போட்டுவதற்கும், அதிலும் வழக்கமாக பார்வையிடும் வலைப்பூக்களை படிப்பதற்கும் கடவுள் கண்டிப்பாக தேவை.
எவ்வளவு பெரிய பயனுள்ள ஆராய்ச்சி ! பாராட்டுக்கள்.
///இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் திறந்து கொண்டு எனக்கு போட வேண்டிய கமெண்டை வேறு ஒருவருக்கு போட வேண்டியது. /// ஹஹஹா ))) எனக்கு இந்த அனுபவம் இல்லை பாஸ் )))))
மாடரேஷன் வைப்பது நாம் போடும் பதிவைப் பொறுத்தது என்றும் சொல்லலாம்! புதிர் மாதிரிப் பதிவுகள் போட்டால் விடைகளை நிறுத்தி வைக்கலாமல்லவா...!!
@மதுரன் said...
என்னத்த சொல்லுறது.
நன்றி அய்யா!
@நிரூபன் said...
இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,
வண்க்கம் சகோ!
@மதுரன் said...
எனக்கும் சில வேளைகளில் கமெண்ட் மாறிப் போட்ட அனுபவம் உண்டு
நீங்க நம்ம ஆளு!
@நிரூபன் said...
இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
யாருக்கோ ஒரு குத்தல் போடுறீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹிஹி எனக்கென்ன தெரியும்?
@நிரூபன் said...
ஒரு நண்பருக்கு ஓட்டும் கமெண்டும் போட்டுவிட்டு அரைமணி கழித்துப்பார்த்தால் நான் போட்ட கமெண்டை காணோம்!ஒரு வேளை நீக்கி விட்டாரோ! இன்னொரு பதிவையும் பார்த்தபோது விஷயம் தெரிந்தது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹே..ஹே...
நல்ல தூக்கத்தில கமெண்ட் போட்டிருப்பீங்களோ...
ஹே..ஹே.. தூக்கத்துல பதிவுதான் போடெவேன்.கமெண்ட் போடமாட்டேன்.
@நிரூபன் said...
பதிவுலக நிதர்சனங்களை பட்டவர்த்தனமாகாச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி நிரூபன்.
@சென்னை பித்தன் said...
உள்ளது உள்ளபடி!
நன்றி அய்யா!
மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடுவதே நல்ல வழிமுறை என்றே கருதுகிறேன் நண்பரே..
@விக்கியுலகம் said...
கலக்கல்...அதுவும் கமன்ட் விஷயத்துல நானும் சோம்பேரிங்கோ!
நம்மல மாதிரி ஹாஹா நன்றி
@suryajeeva said...
அப்படிங்களா?
ஆமா சார் நன்றி
@ராஜா MVS said...
கருத்துரை பற்றி ஒரு கருத்து...
சூப்பர்...
நன்றி சார்.
@சாகம்பரி said...
எங்கள் ஏரியாவில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பவர் கட். பவர் இருக்கும் நேரத்தில் 'இன்னிக்கு நான் ஸ்டெடியா இல்லையென்று' இணையம் சொல்கிறது. இதில் ஓட்டும் கமெண்டும் போட்டுவதற்கும், அதிலும் வழக்கமாக பார்வையிடும் வலைப்பூக்களை படிப்பதற்கும் கடவுள் கண்டிப்பாக தேவை.
உங்கள் கமெண்டை படிக்கும்போது இங்கேயும் பவர் கட் .இது எப்படி? நன்றி
@இராஜராஜேஸ்வரி said...
எவ்வளவு பெரிய பயனுள்ள ஆராய்ச்சி ! பாராட்டுக்கள்.
நன்றி நன்றி
@கந்தசாமி. said...
///இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் திறந்து கொண்டு எனக்கு போட வேண்டிய கமெண்டை வேறு ஒருவருக்கு போட வேண்டியது. /// ஹஹஹா ))) எனக்கு இந்த அனுபவம் இல்லை பாஸ் )))))
உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.நன்றி
@ஸ்ரீராம். said...
மாடரேஷன் வைப்பது நாம் போடும் பதிவைப் பொறுத்தது என்றும் சொல்லலாம்! புதிர் மாதிரிப் பதிவுகள் போட்டால் விடைகளை நிறுத்தி வைக்கலாமல்லவா...!!
உண்மைதான் சார்,நன்றி
@முனைவர்.இரா.குணசீலன் said...
மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடுவதே நல்ல வழிமுறை என்றே கருதுகிறேன் நண்பரே..
உண்மைதான் அய்யா! என்னால் பகல் முழுக்க பார்க்க முடிவதில்லை என்பதால் எடுத்துவிட்டேன் நன்றி
நடப்புகளை பத்தி சொல்லி இருக்கீங்க... ஓட்டு, கமெண்ட்டு எல்லாம் கிட்டத்தட்ட மொய் மாதிரி ஆகிடுச்சு.....!
எனக்கும் ஒருவாட்டி நீங்க தவறுதலா கமெண்டு போட்டீங்க அண்ணா! நானும் எத்தனை பேருக்கு மாறி போட்டேனோ?
.நான் எந்த தளத்திற்கு போனாலும் இன்டலி,தமிழ்மணம்,தமிழ் 10 அனைத்திலும் வாக்களிப்பது வழக்கம்.//
நான் கூட நண்பா.. கூட பதிவை படித்து கருத்தும்... என்ன சொன்னாலும் வோட்டு அளித்து கமேண்ட் போடுபவர்களுக்கு பதிலுக்கு நாமும் அது போல் செய்வது..மொய் வைப்பது போல் என்று கூறிவிடமுடியாது... அது ஒரு வகை மதிக்கும் தன்மையும் நன்றியை பிரதிபலிப்பது என்று கூட சொல்லலாம் .. பகிர்வுக்கு நன்றி நண்பா...
உங்க வேதன புரியுது, ஓட்டும் கமெண்டும் போட்டாச்சு.. (என்னடா இது உங்ககூட ரோதனையா போச்சு... இந்த கன்றாவிதானே வேணாம்னு புலம்பினேன்: உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்).
ஆஹா!
இன்னைக்கு சத்ரியனும் சின்னாபின்னமாகி இருக்கானே!
சிறப்பான ஆராய்ச்சி... வோட்டு கமெண்டு இது எல்லாம் இருந்தால் இன்னும் உற்சாகமா எழுதலாம்.. இருந்தாலும் வர்ரவங்கல்லாம் அத செய்யணும்னு எதிர் பார்க்க முடியாது..
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நானும் சிலருக்கு இப்படி மாறி கமெண்ட் போட்டிருக்கின்றேன் ஓட்டுப் போடுவது சில நேரங்களில் ஓட்டுப்பட்டை தகராறு செய்யும் போது என்ன செய்வது கமெண்ட் மட்டும்தான்!
நான் கொஞ்சம் பிசியான ஆளுதான் (வீண் வம்புகளை தேடி கொள்பவன்) அதனாலதான் இதில் அதிகம் ஈடுபட முடிவதில்லை .நீங்கள் ஒருவர்தான் எனக்கு நேரடியாக தெரிந்தவர் என்பதால் உங்களுக்காவது ஒட்டு போட்டுவதை செய்து விடுகிறேன்.
Post a Comment