Sunday, November 24, 2013

தங்கநகை வாங்கப்போகிறீர்களா?



ஹால்மார்க் என்பது ஆபரணத்தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை.நகைகளின் தரத்தை உறுதிசெய்யும்பொருட்டு இந்திய தரநிர்ணய அமைவனம்(BIS) 2000 ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் வாங்குவதன் மூலம் மாற்றுக்குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாம்.




  • ஹால்மார்க் தரமுத்திரைத்திட்டம் கட்டாயம் இல்லை.விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.(BIS Act 1986)

  • சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள்தான்.நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் சிறியதாக இருந்தாலும் அதில் ஐந்து முத்திரைகள் இருக்கும்.1.பி.ஐ.எஸ் முத்திரை,2.நேர்த்தித்தன்மை முத்திரை,3.அஸேயிங்& ஹால்மார்க் மையத்தின் முத்திரை,4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு.5.நகை விற்பனையாளர் முத்திரை.

  • ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் நகை வாங்கும்போது பூதக்கண்ணாடி கேட்டுவாங்கி 5 முத்திரைகளையும் சரிபார்த்து வாங்கவேண்டும்.

  • நகைகளில் 916 அல்லது 916&KDM அல்லது 916&BIS முத்திரை மட்டுமே இருந்தால் அது உண்மையான ஹால்மார்க் முத்திரை அல்ல!5 முத்திரைகள் இருக்கவேண்டும்.

  • கேரட் மீட்டர்கள் மேற்புற சுத்தத்தனமையை மட்டுமே சோதித்துக்காட்டும்.(20 மைக்ரான் அளவு மட்டுமே).இதை முழுமையாக நம்பவேண்டாம்.

  • 916(22காரட்) மட்டுமே ஹால்மார்க் என்பதில்லை.958-23காரட்,916-22காரட்,875-21காரட்,750-18காரட்,708-17காரட்,585-14காரட்,375-9காரட் இவ்வாறு அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

  • கேடியம்(KDM) என்பது கேட்மியம் மோனாக்ஸைடு உலோகத்தைக்குறிக்கிறது.சுத்தமானது என்றோ நேர்த்தியானது என்றோ பொருள் அல்ல.

  • நகை செய்யும்போது எளிதாக தங்கத்தை பற்றவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொடிதான் கேட்மியம்.

  • கேட்மியம் பயன்படுத்துவது புற்றுநோய்வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் சேர்க்க அனுமதி இல்லை.கேடியம் சுத்தமானது என்று எண்ணி ஏமாறவேண்டாம்.


  • ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் விலை அதிகம் என்பது உண்மையல்ல!எவ்வளவு எடை கொண்ட நகையானாலும் ஹால்மார்க் முத்திரை பெற 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது.

  • தங்கநகை வாங்கும்போது வியாபாரி தரும் எஸ்டிமேட் மட்டுமே வாங்காமல் முறையான பில்வாங்கவேண்டும்.
ஹால்மார்க் நகைகளில் குறை இருந்தால் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம்.
 -தர்மபுரி நுகர்வோர் உரிமை பாதுகாப்புசங்கத்தின் உதவியுடன்
-

2 comments:

அருணா செல்வம் said...

நல்ல தகவல்.
நன்றி.

மதுரை அழகு said...

உபயோகமுள்ள பதிவு! நன்றி