Showing posts with label உப்பு. Show all posts
Showing posts with label உப்பு. Show all posts

Friday, December 13, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்


அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான்.


சமையல் உப்பு  சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது.

உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.


சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது வேறுபடும்.அன்றாட சமையலில் சேர்க்கும் உப்பு மூலம் நாம் சாப்பிடுவது குறைவு.பொட்டலமிடப்பட்ட பொருட்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் வழியாக அதிக உப்பைப்பெறுகிறோம்.பதப்படுத்துவதில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைக் குறைத்து சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.ஆனால் இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களும்,பேக்கிங் செய்யப்பட்டவையும் இருக்கின்றன.துரித உணவுகள்,நூடூல்ஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.


அதிக உப்பு கால்சியத்தை வெளியேற்றிவிடுவதால் உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் இல்லை.இன்றைய பெற்றோர்கள் அதிக உப்புச்சுவையை பழக்கப்படுத்துகிறார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல உப்புச்சுவைக்கு ஒரு குடும்பத்தின் பழக்கமே காரணம்.எதிர்காலத்தில் உப்பைக்குறைத்து சாப்பிடவேண்டிய நிலையில் சுத்தமாக சுவை இல்லாத சிரமத்தை உணர்வார்கள்.


சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொட்டாசியம் குறைக்கிறது.சோடியம்,பொட்டாசியம் விகிதத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அதிக சோடியம் ஏற்படுத்தும் விளைவுகளை பொட்டாசியம்கட்டுப்படுத்தும்.பழங்கள்,கீரை,காய்கள்,இளநீர்,போன்றவை பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.வாழைப்பழம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன பழம்.முக்கனிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது.மூன்று வேளையும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
-

Sunday, July 10, 2011

உணவில் உப்பு உடலுக்கு நன்மையா? தீமையா?

                               உப்பில்லாத ஒரு உணவை என்னவென்று சாப்பிடுவது? ஆனால் உப்பு உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்பட்டு வருகிறது.ரத்த அழுத்த நோயாளிகளால் சொல்லப்படுவதுதான்.இப்போது இந்நோய் அதிகரித்தும் வருகிறது.பாரம்பரியமாக உப்பு எப்போதிருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.



                                ’’உப்பில்லாத பண்டம் குப்பையிலேஎன்று சொன்னார்கள்.சுவை இல்லாத்தை எவன் சாப்பிடுவான் என்ற பொருளில் மட்டும் கூறப்பட்ட்தாக தெரியவில்லை.உப்பு உடலுக்கு நன்மை விளைவிக்க்க் கூடியது என்ற அர்த்த்திலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.நம் முன்னோர்களால் உணவில் சேர்க்கப்பட்ட எதுவும் பயனுள்ளவை என்பது என்னுடைய முடிவு. உப்பு இல்லாவிட்டால் சாப்பாட்டுக்கு மணம் இல்லை

                            அயோடின் உப்பு பிரச்சாரத்தில்நுகர்வோர் இயக்கத்தில் இருந்து பங்கு கொண்ட அனுபவம் எனக்கு உண்டு. அதிகம் சுத்திகரிக்கப்படாத இயற்கையாக கிடைக்கும் உப்பு நிறைய தாதுக்களை கொண்டுள்ளது என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.நாம் ரொம்ப வெள்ளையாக இருந்தால் நல்ல உப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.அது உணமையல்ல.ஓரளவு கருமை நிறம் உடைய உப்பில்தான்மக்னீசியம் உள்ளீட்ட அவசியமான தாதுக்கள் உள்ளன.மேலும் உடலின் பல இயக்கங்களிலும் உப்புக்கு அவசியம் இருக்கிறது.

                                  உப்பில் உள்ள தாதுக்களில் அயோடின் இல்லை.உடலுக்கு தேவையான அயோடின் காலம்காலமாக மண்ணில் இருந்து உணவுப்பொருட்கள் வழியாக நமக்கு கிடைத்துக்கொண்டிருந்த்து.இப்போது மண்ணின் வளமும்,அதில் இருந்த தாதுக்களும் போதுமான அளவு கிடைப்பதில்லை.அதில் ஒன்று அயோடின்.பூச்சிக்கொல்லி உள்ளிட்ட விஷங்கள்தான் இப்போது கிடைக்கின்றன.

                                  அயோடினை எதன் வழியாக கலந்து தருவது என்று யோசித்து உப்பை தேர்ந்தெடுத்தார்கள்.இது அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படுவதால் அனைவருக்கும் தேவையான அயோடினை உடலுக்குள் சேர்த்துவிடலாம் என்பது எண்ணம்.மக்களிடமும் இப்போது ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது.பெரும்பான்மையாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு,குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி,தைராய்டு குறைவால் ஏற்படும் முன்கழுத்துக்கழலை போன்றவை அயோடின் பற்றாக்குறைவால் ஏற்படும் நோய்களில் குறிப்பிட்த்தகுந்தவை.

                                 திருவண்ணாமலை மாவட்ட்த்தில்  கம்யூனிஸ்ட் தோழர்களின் கலைஇரவுஒரு அற்புதமான அனுபவம்.எழுந்துவர மனசே வராது.அப்படி ஒரு கலை இரவில் தோழர் ஒருவர் அயோடின் உப்பு முதலாளித்துவ நாடுகளின் சதி என்பது போல பேசினார்.நாம் காலம் காலமாக உப்பை பயன்படுத்தி வருகிறோம்.இப்போது திடீரென்று எதற்கு அயோடின் சேர்க்கவேண்டும் என்றார்.எனக்கு கஷ்டமாக இருந்த்து.

                                  கடன் வாங்கிவிட்டு கடன் வாங்கி விட்டு திருப்பித்தராதவர்களை உப்பு போட்டுத்தான் சாப்பிடறயா? என்று கேட்பார்கள்.சுரணை இல்லாதவன் என்று அர்த்தம்.ஆக உப்பு போட்டு சாப்பிடுபவனுக்கே மானம் மரியாதை,சூடு சுரணை எல்லாம் இருக்கும் என்பது உலகோர்நோக்கு.உப்பு போல இருக்கலாம் என்பார்கள்.அளவாக இருக்கலாம் என்பதே இதன் பொருள்.உப்புக்கும் இது பொருந்தும்.அளவான உப்பு நன்மையைத்தரும் என்று வல்லுநர்கள் உறுதியளிக்கிறார்கள்.

                                 ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை கேட்டே இதில் முடிவெடுக்கவேண்டும்.மற்றவர்கள் தேவையின்றி தள்ளிவைக்க வேண்டாம் -