Showing posts with label feminism. Show all posts
Showing posts with label feminism. Show all posts

Saturday, February 19, 2011

என் தூக்கத்தைக் கெடுத்த மூன்று பெண்கள்



ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லதுபுகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும்,வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது.ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.

சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம்,தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட உணர்வுகளை தூண்டிவிட்டு அவை மறைந்துவிடுகின்றன.அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறோம்.

துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பஞ்சமில்லை.அதிகம் வாசிக்கப்படாத எனது இடுகை ஒன்றில் இருந்தாலும் அதன் உளவியல் பகுதிகளை அறிவதற்காக மீண்டும் அவற்றைத் தருகிறேன்.

. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது. .சிறு நீர் வெளியேறுவதுதெரியவில்லை.நனைந்தபின்னர்வெகு நேரம் கழித்து தெரியவரும்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை. கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார் மருத்துவர்.

.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் ''.அந்தப்பெண்ணின் பதில்,"என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் ?வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? .

இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும் ,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது

.கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தி கலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை-. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்து,கல்வி கற்றும் அடையாளமற்று !

மூன்றாவது,கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை.அந்தப்பெண்ணுக்கு பதினைந்து வயது.தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது அக்காவின் கணவன் கற்பழித்தான்.

ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".

நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருதாய் அவ்வளவுதான் தண்டனை தர முடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள்

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம் தோழர்களே .....

சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?

அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?

பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?

கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?

-

Wednesday, February 9, 2011

பெண்கள் பச்சை உடை அணிவதே தவறா?


பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.அவற்றில் ஒன்று.ஒரு பெண்திருமணமானவர்-பச்சை புடவை உடுத்தி வழியில் சென்று கொண்டிருக்கிறார்.கல்லூரி மாணவர்கள் மூவர் நின்றிருந்தார்கள். இளைஞர்களில் ஒருவன்-வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம்-,யாருக்குடா மச்சி க்ரீன் சிக்னல்?’’

பச்சை கலரில் உடை உடுத்துவது எப்படி சிக்னலாகும்? என்பது எனக்கு புரியவில்லை.அக் கலரில் உடை இல்லாமல் யாரும் இருப்பது வாய்ப்பில்லை.அந்த வக்கிரத்தை என்னவென்று வர்ணிப்பது? திருமணமானவர் ஒருவர் பச்சை நிறத்தில் உடை உடுத்தினால் அது காதலுக்கான அறிகுறியா?

கருப்பு கலர்,சிவப்பு கலருக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் கற்பித்துக் கொள்வது பெண்ணை அவமதிக்கும் செயல்.ஒரு கிராமத்தில் இரண்டு,மூன்று பேர் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டிருக்கும்போது பச்சை நிற உடையை பார்த்தே மூவரும் கடிதம் கொடுப்பார்களா? இல்லை,அப்பெண் விரும்பும் ஒருவர் கண்ணுக்கு மட்டும் அந்த கலர் தெரியுமா?

கிராமத்தில் நேரில் பேச முடியாத பழங்கால காதலுக்கு நிறங்கள் பயன்பட்டிருக்கலாம்.இப்போது செல்போன் யுகம்,அதுவும் நேரில் சந்திப்பதோ ஏன் டேட்டிங் அது,இதுவென்று போய்விட்ட்து.இன்னமும் இம்மாதிரியான கலாச்சாரங்களை ஏன் கட்டிக்கொண்டு அழ வேண்டும்.எதில்தான் வக்கிரமென்று அளவே இல்லையா?

நடந்தால்,அமர்ந்தால்,சிரித்தால்,இன்ன கலரில் உடை உடுத்தினால் காதல்,காம்ம் என்றுஅடையாளங்கள் வாழ்க்கை முறையாகிவிட்ட்தால்தான் எய்ட்ஸ்,பால்வினை நோய்கள்,கள்ளக்காதல் போன்ற சீரழிவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.தேசத்தின் பெரும் சாபம் இது.

மேற்கண்ட இளைஞர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த்து யார்? கல்லூரியில் வரலாறு,இலக்கியம்,அறிவியல் சமூகம் என்று எத்தனையோ கற்பிக்கிறோம்.பச்சை நிறத்தில் உடைஉடுத்தி வந்தால் சிக்னல்என்று எவர் கற்பித்தார்கள்?

காலம் காலமாக இருந்து வரும் மட்த்தன்ங்களை நம்முடைய இளைஞர்கள் உள்ளத்தில் அழுக்காக சேராமல் விரட்டினால் ஒழிய, அவர்கள் மிக விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டு அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பார்கள்.செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும் மனம் மட்டும் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.

-

Sunday, February 6, 2011

வக்கிர ஆண்களால் பெண்கள் படும்பாடு


இன்றைய சூழலில் பணியிடங்களில் ஆண்,பெண் இருபாலரும் நட்புடனோ,நட்பின்றியோ பழகுவது தவிர்க்க முடியாத ஒன்று.உடன் பணி புரிகிறவர்கள் அத்தனை பேரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்பது சாத்தியமல்ல.வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வின்றி அல்ல்ல்படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்த்து.புதிதாக பணிக்கு சேர்ந்தார்.ஏழெட்டு பேர் மட்டும் பணிபுரியும் இடம்.இரண்டுபேர் மட்டும் பெண்கள்.புதிய ஊர்.பல தகவல்கலுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும் சூழ்நிலை.அலுவலகத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய நிலையில் உதவ முடியும்.

அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியன் ஒருவன் தாராள குணத்துடன் இருந்தான்.அவளுடைய அதிர்ஷ்டம் பலருக்கும் ஓடி ஓடி உதவிகள் செய்தான்.எல்லா தகவல்களும் அவனிடம் இருந்த்து.அவனுடைய உதவியால் புதிய இட்த்து வாழ்க்கை மிக எளிதாக இருந்த்து.அவளது கணவனுடனும் நண்பனாகி விட்டான்.

சிறிது காலம் கழித்து அவனது நோக்கம் வேறாக இருப்பது அந்தப் பெண்ணுக்கு புரியத் துவங்கியது.அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண்ணும் அதை உறுதி செய்தார்.நோக்கத்தை தெரிந்து கொண்டபின் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கவே அவன் எல்லா உதவிகளையும் நிறுத்தி விட்டான்.நிறைய ஆவணங்கள் வேறு அவனிடம் மாட்டிக் கொண்ட்து.

கணவனை விட்டு போன் செய்தால் போனை எடுக்காமல் போக்கு காட்டினான்.சக ஊழியரை விட்டு கேட்டபோது ’’நான் நிறைய செலவு செய்திருக்கிறேன் அந்த பணத்தை கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்.’’என்றான்.ஒரு வழியாக பணத்தை கொடுத்து எல்லா ஆவணங்களையும் திரும்ப வாங்கினார்கள்.

ஏமாற்றம் கோபம், ஆத்திரம் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது.அவனுக்கும் அப்படியே.கோபத்தை வேறு வகையில் திருப்பினான்.அந்த பெண்ணைப் பற்றி அவதூறாக பல இடங்களில் பேச ஆரம்பித்தான்.இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறான்.இனியும் பேசுவான்.

திருமணமாகாத பெண்கள் என்றால் இம்மாதிரியான சூழலில் கூடுதல் பிரச்சனை.மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி அலுவலக ஆட்களிடம் விசாரிக்க வந்தால் வக்கிர ஆண்கள் பேசுவது வேறுமாதிரி இருக்கும்.இது போன்ற காரணங்களுக்காக திருமணம் தடை பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

சில பெண்கள் இத்தகைய ஆண்களின் நோக்கம் தெரிந்தே விளையாட்டாக பழகுவதுண்டு.மிரட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் என்று நினைப்பதுதான் காரணம்.ஆனால் ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும்போது விளைவுகள் பெண்ணுக்கு எதிராகவே முடியும்.அவதூறு பரப்பலாம்,சில கற்பழிப்பு வரை கூட செல்ல்லாம்.ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.

-