நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்.ஆதாரமின்றி ஒருவரை பற்றிய செய்தி வெளி வராது என்பது இதன் பொருள்.ஆனால், நடைமுறையில் நெருப்பில்லாமலும் புகைந்து,ஏன் எரிந்து சாம்பலாகிவிடுவதைக் கூட பார்க்கிறோம்.எல்லா குழப்பங்களுக்கும் மனமே முழுமுதற் காரணம்.தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனை
கள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.
கணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள் புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.
கணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர், பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதை இருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.
பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணி எடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்ட ஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.
மனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினை இதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.மனம் புகைந்து எரிய ஆரம்பிக்கிறது.குடும்பங்களும் உறவுகளும் கருகிப்போய் விடுகின்றன.
-
4 comments:
சமூக பொறுப்புமிக்க வலைப்பதிவு.
நன்றி,சத்ரியன்
மிகவும் அருமையான ஒரு பதிவு.. இன்னும் கொஞ்சம் மரமண்டைகளுக்கு உரைக்கிற மாதிரி எழுதியிருக்கலாம். இப்படியான சண்டைச் சச்சரவுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான் என்பதால். பெற்றோரின் பொறுப்பற்றத் தனத்தால் பாதிக்கப்படும் பிள்ளைகள் வளர்ந்த பின் பெற்றோர் மீதான அன்பு முற்றிலும் இல்லாமல் போய்விடும். இதனை பெற்றோர்கள் உணரவேண்டும்............. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் அய்யா...
உங்களுக்கு நன்றி தமிழ்.தொடர்ந்து எழுதுவதாகவே எண்ணம்.
Post a Comment