
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்பட்ட்து.எங்கே முடிகிறதென்று யாரும் சொல்லவில்லை.பல இன்று நீதிமன்றத்தில் முடிகிறது.கல்யாண சடங்குகள் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது.எளிமை தேவை.சில சடங்குகள் மதம் சார்ந்தவை.அவரவர் விரும்பியவாறு இருந்து விட்டுபோகட்டும்.
                                            
                              தவிர்க்க வேண்டிய சடங்கு ஒன்று இருக்கிறது.அவ்வளவாக கவனித்திருக்க மாட்டீர்கள்.பெரும்பாலான திருமணங்களில் நான் பார்த்து வருந்தியிருக்கிறேன்.இனி உடனிருந்து கவனித்து பாருங்கள்.அந்த சடங்கு-பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வது.சம்பந்திகள் முறுக்கிக்கொள்வது.
                                                                      
                               நண்பர் ஒருவருக்கு திருமணம்.முந்தைய இரவு நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து.விருந்தில் தயிர் தீர்ந்து விட்ட்தென்று சத்தமிட ஆரம்பித்து விட்டார்.பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.அது இயல்பான ஒன்றுதான்.இதற்குத்தான் இந்த இடமே வேண்டாமென்றேன் என்றார்.எனக்கு ஆச்சரியமாக இருந்த்து.ஏனெனில்,அவரது விருப்பத்தின் படி முடிவு செய்யப்பட்ட திருமணம் அது.
                              மணப்பெண்ணின் தந்தை தர்ம சங்கடமாக உணர்ந்தாலும் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.பெண்ணைப் பெற்றவன் வேறு என்ன செய்வது? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானாக வேண்டும்.ஆனால்,அவரது உறவினர்கள் பார்ப்பவர்களிடமெல்லாம் மணமகன் வீட்டாரைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
                             நண்பனின் தந்தை அங்கே சாப்பிடவில்லை.அவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.ஹோட்டலுக்கு சென்று விட்டார்.அப்போதிலிருந்து நான் செல்லும் அனைத்து திருமணங்களிலும் கவனித்து வருகிறேன்.ஒருவரை ஒருவர் இரு வீட்டாரும் குறை சொல்லிக்கொள்வது சடங்காகவே இருக்கிறது.
                             உளவியல் படியும் கூட இயல்பானதென்று எனக்கு தோன்றுகிறது.தான் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது அடிப்படையாக இருப்பதுதான்.கூட்ட்த்தில் தன்னை கவனிக்கவேண்டும் என்று கருதி அதி முக்கியமில்லாத விஷயத்திற்கு சத்தமிடுகிறார்கள் அவ்வளவே.இன்னொன்று புது பொண்டாட்டி மயக்கத்தில் தன்னை மகன் கவனிக்கமாட்டானோ என்பது.
                             கல்யாணத்தில் என்றில்லை புதிய உறவுகள் உருவாகும் எல்லா இடங்களிலும் இதைக் காண முடியும்.மற்றவர்களை குறை சொல்வதெல்லாம் தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவே!அத்தகைய மனிதர்களை, சூழலை புரிந்துகொண்டால் எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியும்.வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணத்தில் இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
3 comments:
click to read
1. பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.
2.பகுதி 42. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்
3.பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.
4. பகுதி 40. “விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணங்களில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி. .
5. பகுதி 39. விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.
..
தங்கள் கருத்துரை வேறு பக்கத்தை காட்டுகிறது.நன்றி தமிழன்
//shanmugavel said...
தங்கள் கருத்துரை வேறு பக்கத்தை காட்டுகிறது.நன்றி தமிழன்//
ஆம். இப்பொழுது சரியாகி சரியான பக்கத்திற்கு செல்கிறது.
தகவலுக்கு நன்றி ஆம். இப்பொழுது சரியாகி சரியான பக்கத்திற்கு செல்கிறது.
தகவலுக்கு நன்றி ஷண்முகவேல் அவர்களே.
Post a Comment