Saturday, February 5, 2011

பூனை குறுக்கே போனால் நன்மையா? தீமையா?


நம்பிக்கைகள் தான் நமக்கு கஷ்ட்த்தை கொண்டுவருகிறது.அது மூட நம்பிக்கையாக இருக்கலாம்.போதுமான அறிவைப் பெறாமல் நாமே உருவாக்கிக் கொள்ளும் தவறான நம்பிக்கையாக இருக்கலாம்.கலக்கம்,பயம்,காம்ம் போன்ற எதிர் உணர்ச்சிகள் மிகும் நேரங்களில் நம்மிடையே உருவாகும் எண்ணங்கள் அவை சார்ந்த நம்பிக்கைகள் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளை விட அதைப் பற்றிய நமது எண்ணங்கள் நமக்கு பெரும் துன்பத்தை தருகிறது.

திருச்சியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக வாடகை காரில் பயணத்தை தொடங்கினோம்.இரவு முழுக்க பயணம்.காரை இஸ்லாம் மத்த்தை சார்ந்த ஒரு டிரைவர் ஓட்டி வந்தார்.பழகுவதற்கு இனிமையாகவும்,கலகலப்பாகவும் இருந்தார்.அரசியல் நையாண்டி,கொஞ்சம் நகைச்சுவை என்று இனிமையான பயணம்.

சேலத்தை தாண்டி அரை மணி நேரம் சென்றிருக்கும்.இரவு பன்னிரெண்டு மணிக்கு மேலாகிவிட்ட்து.திடீரென்று ஒரு பூனை காருக்கு குறுக்கே ஓடியது.டிரைவர் வண்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.பூனை அடிபடும் சத்தம் எங்களுக்கு தெளிவாக கேட்ட்து.உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டார்.அடிபட்ட இட்த்தை நோக்கி ஓடினார்.நாங்களும் உடன் சென்றோம்.

ஆறு பேர் நாங்கள்.எங்களுடைய அனைத்து செல்போன்களின் வெளிச்சத்தில் பூனை கண்ணை மூடிமூடி திறந்த்து.உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதியாக இருந்த்து.வலியும் இருக்க்க் கூடும்.எந்தளவு அடிபட்டிருக்கும் என்பது கணிக்க முடியவில்லை.டிரைவர் காருக்கு ஓடிச்சென்று குடிநீர் இருந்த பாட்டிலை எடுத்து வந்தார்.பூனை வாயில் ஊற்றினார்.தடவிக்கொடுத்தார்.அங்கிருந்து கிளம்பினோம்.டிரைவர் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.

அந்த முஸ்லீம் சகோதர்ரிடம் இருந்த கலகலப்பு,நகைச்சுவை எல்லாம் முற்றிலும் காணாமல் போயிருந்த்து.எங்களில் ஒருவர் பூனை வலமிருந்து இடம் போனால் நல்லதுதான் என்றார்.பூனைக்கு நல்லதாக இருக்கவில்லையே என்றேன்.காரின் வேகம் மிகவும் குறைந்துபோயிருந்த்து.நாமக்கல் தாண்டிப்போனால் சாலையும் மிக மோசம்.

காலையில் எதிர்பார்த்த்தைவிட மிக தாமதமாகவே திருச்சியை அடைந்தோம்.டிரைவர் வீட்டுக்கு போன் செய்து மனைவியையும்,குழந்தைகளையும் விசாரித்தார்.குழந்தைகளை எழுப்ப சொல்லி பேசினார்.அவர் சரியாக சாப்பிடவுமில்லை.சோர்வாகவே காணப்பட்டார்.

எங்களுடைய நிகழ்ச்சிகள் நன்றாகவே முடிந்த்து.ஊருக்கு திரும்பினோம்.என்னுடன் வந்தவர்கள் தூங்க ஆரம்பித்தார்கள்.எப்போது இருப்பிட்த்தை அடைவோம் என்று இருந்த்து.சில மணி நேரங்களில் வந்து சேர்ந்து விட்டோம்.காரிலிருந்து இறங்கியவுடன் டிரைவருக்கு நன்றி கூறினேன்.அவர் முகத்தில் புன்னகை. எனக்கு நிம்மதி.

-

12 comments:

R. Gopi said...

\\பூனைக்கு நல்லதாக இருக்கவில்லையே என்றேன்\\

:-)

ராஜ நடராஜன் said...

பூனை குறுக்கே போனா ஆகாது

இது பூனைக்கே ஆகாதுன்னுதானே சீக்கிரம் சீக்கிரமா பூனை குறுக்கே ஓடுது.

நரி முகத்துல முழிக்கணும்ன்னு கூட இருக்குதுக
கேசுக!நரி பிராண்டினா தெரியும்:)

shanmugavel said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி கோபி ராமமூர்த்தி,ராஜ நடராஜன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல எழுதி இருக்கீங்க! மூட நம்பிக்கைகள் ஒழிக

shanmugavel said...

நன்றி மாத்தி யோசி,ரொம்ப பிசியாயிட்டீங்க போல

வலைஞன் said...

நல்ல கட்டுரை. பூனை பற்றிய என்னோட சிறுகதையையும் படித்து பாருங்கள்
http://ragariz.blogspot.com/2010/12/cat-short-story.html

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல கட்டுரை. பூனை பற்றிய என்னோட சிறுகதையையும் படித்து பாருங்கள்
http://ragariz.blogspot.com/2010/12/cat-short-story.html

shanmugavel said...

வருகிறேன்,நன்றி வலைஞன்,ரஹீம் கஸாலி அவர்களே

Sadiq said...

கதைகளிலும் கட்டுரைகளிலும் அந்தக் கதைக்குச் ( news worthiness) சம்மந்தமில்லாவிட்டாலும் கூட ஒரு நபரை அல்லது கதாபாத்திரத்தை அவர் இஸ்லாமியர் என்று குறிப்பிட்டுக் கூறுவது தமிழ் இலக்கியங்களில் ஒரு வியாதி ஆகி விட்டது. எந்த ஒரு முஸ்லிமும் ராஜாவைப் பார்த்தேன் குமாரைப் பார்த்தேன் என்றுதான் சொல்வாரே தவிர ராஜா என்ற ஹிந்து நண்பனைச் சந்தித்தேன் பீட்டர் என்ற கிறிஸ்துவ டிரைவரை பார்த்தேன் என்று கூறுவதில்லை. நீங்களும் இதில் விதிவிலக்காக இல்லாதது மிகவும் வேதனை.

shanmugavel said...

மிகத் தவறு சாதிக்.இது உண்மையான நிகழ்வு.நான் கொஞ்சமும் பொய்யை சேர்க்கவில்லை.தவிர அவர் பெயர் சரிவர நினைவில்லாததால் அவ்வாறு குறிப்பிட்டேன்.உங்களை சங்கடப் படுத்தியிருந்தால் வருந்துகிறேன்

Sadiq said...

நன்றி சண்முகம். அது ஒரு சிறிய ஆதங்கம் மட்டுமே. ஆனால் தங்கள் கூறியபடி அவர் செய்தது மூட நம்பிக்கைஎன்று எனக்குத் தோன்றவில்லை, அது இஸ்லாமியப் பார்வையில் சரியே. பூனைகள் நம்மி அண்டி வாழ்வதால் அவற்றை துன்புறுத்துவதை நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சரியான காரணமின்றி எந்த ஒரு பிராணியையும், குறிப்பாக மனிதர்களை அண்டி வாழும் எந்த ஒரு மிருகத்தையும் கொள்வதையோ, வதை செய்வதயோ அவர்கள் தடுத்துள்ளார்கள். விபத்தின் மூலம் அந்த ஓட்டுனர் அப்பூனையைக் கொன்றிருந்தாலும், அவரது குற்ற உணர்ச்சி பாராட்டத் தக்கது அல்லவா?

Probaganda என்று தாங்கள் நினைக்காவிட்டால் சில ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறேன் கீழே:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.

The Prophet(s) was asked if acts of charity even to the animals were rewarded by God. He replied: 'yes, there is a reward for acts of charity to every beast alive.' (Narrated by Abu Huraira, Bukhari, 3:322.

We were on a journey with the messenger of God , and he left us for a while. During his absence, we saw a bird called "hummara" with its two young and took the young ones. The mother bird was circling above us in the air, beating its wings in grief, when the Prophet came back and said: 'who has hurt the FEELINGS of this bird by taking its young? Return them to her'. (Narrated by Abdul Rahman bin Abdullah bin Mas'ud. Book: Muslim).

shanmugavel said...

ஆம்.அவரது உணர்ச்சி பாராட்டத்தக்கதாக இருந்ததால்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு நினைவில் வைத்திருந்து எழுதினேன்.மூட நம்பிக்கை என்பது,மற்றவர்கள் உணர்வுகளையும் பார்த்து குறிப்பிட்டதுதான்.நன்றி