பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.அவற்றில் ஒன்று.ஒரு பெண் –திருமணமானவர்-பச்சை புடவை உடுத்தி வழியில் சென்று கொண்டிருக்கிறார்.கல்லூரி மாணவர்கள் மூவர் நின்றிருந்தார்கள். இளைஞர்களில் ஒருவன்-வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம்-,”யாருக்குடா மச்சி க்ரீன் சிக்னல்?’’
பச்சை கலரில் உடை உடுத்துவது எப்படி சிக்னலாகும்? என்பது எனக்கு புரியவில்லை.அக் கலரில் உடை இல்லாமல் யாரும் இருப்பது வாய்ப்பில்லை.அந்த வக்கிரத்தை என்னவென்று வர்ணிப்பது? திருமணமானவர் ஒருவர் பச்சை நிறத்தில் உடை உடுத்தினால் அது காதலுக்கான அறிகுறியா?
கருப்பு கலர்,சிவப்பு கலருக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் கற்பித்துக் கொள்வது பெண்ணை அவமதிக்கும் செயல்.ஒரு கிராமத்தில் இரண்டு,மூன்று பேர் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டிருக்கும்போது பச்சை நிற உடையை பார்த்தே மூவரும் கடிதம் கொடுப்பார்களா? இல்லை,அப்பெண் விரும்பும் ஒருவர் கண்ணுக்கு மட்டும் அந்த கலர் தெரியுமா?
கிராமத்தில் நேரில் பேச முடியாத பழங்கால காதலுக்கு நிறங்கள் பயன்பட்டிருக்கலாம்.இப்போது செல்போன் யுகம்,அதுவும் நேரில் சந்திப்பதோ ஏன் டேட்டிங் அது,இதுவென்று போய்விட்ட்து.இன்னமும் இம்மாதிரியான கலாச்சாரங்களை ஏன் கட்டிக்கொண்டு அழ வேண்டும்.எதில்தான் வக்கிரமென்று அளவே இல்லையா?
நடந்தால்,அமர்ந்தால்,சிரித்தால்,இன்ன கலரில் உடை உடுத்தினால் காதல்,காம்ம் என்றுஅடையாளங்கள் வாழ்க்கை முறையாகிவிட்ட்தால்தான் எய்ட்ஸ்,பால்வினை நோய்கள்,கள்ளக்காதல் போன்ற சீரழிவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.தேசத்தின் பெரும் சாபம் இது.
மேற்கண்ட இளைஞர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த்து யார்? கல்லூரியில் வரலாறு,இலக்கியம்,அறிவியல் சமூகம் என்று எத்தனையோ கற்பிக்கிறோம்.பச்சை நிறத்தில் உடைஉடுத்தி வந்தால் ’சிக்னல்’என்று எவர் கற்பித்தார்கள்?
காலம் காலமாக இருந்து வரும் மட்த்தன்ங்களை நம்முடைய இளைஞர்கள் உள்ளத்தில் அழுக்காக சேராமல் விரட்டினால் ஒழிய, அவர்கள் மிக விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டு அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பார்கள்.செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும் மனம் மட்டும் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.
-
8 comments:
அருமையான விஷயம் நண்பரே! இனியாவது திருந்துவார்களா?
தொழில் நுட்பத்தில் எவ்வளவு முன்னேறினாலும், மனம் செம்மையாக மாறாததை அருமையாக இப்பதிவில் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்...
அட ராமா!!!!! நானே ஒரு பச்சைப்பிரேமி. என்னிடம் ஏராளமா பச்சை இருக்கே.:(
இளைஞர் சமுதாயம்...................எல்லாம் கெட்டுக்கிடக்குங்க. முதலில் மனசை சுத்தப்படுத்திக்கனும்.
இதற்கெல்லாம் தூண்டுகோல் சினிமாதான். ஆனால் சிநிமாக்காரர்களைத்தான் நாம் தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம்.
நன்றி மாத்தியோசி,திருந்தட்டும்
தங்கள் கருத்துரைக்கு நன்றி மேடம்
நன்றி,பத்மநாபன்,நன்றி ராபின்
தொழில் நுட்பத்தில் எவ்வளவு முன்னேறினாலும், மனம் செம்மையாக மாறாததை அருமையாக இப்பதிவில் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்..
www.tamilthottam.in
தமிழ்த்தோட்டம்
Post a Comment