Wednesday, September 7, 2011

குடும்ப பிரச்சினைகள் சந்தி சிரிப்பது எப்படி?

தம்பதிகள்  வேலை கிடைத்து புதியதாக அந்த ஊரில் குடியேறினார்கள்.குடும்பம் என்றால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விட்ட்து.கணவர் கோபத்தில் வெளியே போனவர் வெகு நேரமாகியும் வரவில்லை.செல்போனையும் விட்டுவிட்டு போய்விட்டார்.

                               கணவர் வேலை செய்யுமிட்த்தில் ஒருவர் நல்ல பழக்கம்.கணவர் செல்லிலிருந்து அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்.வீட்டில் சண்டை நடந்த விஷயத்தை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாக கொட்டி தீர்த்துவிட்டார்.அவரும் தேடிப்பார்ப்பதாக சொல்ல,சிறிது நேரத்தில் கணவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

                               அடுத்த நாள் கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும்போது,நான்கு வாலிபர்கள் கமெண்ட் அடித்து சிரிப்பது காதில் விழுந்த்து.மானம் போன அதிர்ச்சியில் கூனிக்குறுகிப் போனார்.அந்த வார்த்தைகள் அவர்களது சண்டையில் கணவன் அப்பெண்ணுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகள்.பையன்கள் வீட்டு வெளியில் இருந்து கேட்டிருப்பார்கள் என்று நினைத்தார்.ஆனால் அது உண்மையல்ல!

                                கணவருடன் பணி புரிபவரிடம் பேசிய விவரத்தை அவர் அதே வீதியில் உள்ள அவரது உறவினருக்கு சொல்லிவிட்டார்.அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பையன் தான் கமெண்ட் அடித்து சிரித்த்து.வழியில் காதில் கேட்ட்தால் அவரைப் பற்றி தெரிந்து போனது.இல்லாவிட்டால் அவரிடம் தொடர்ந்து எல்லாமும் பகிரப்ப்ட்டு இருக்கும்.

                                நல்ல குடும்பங்களில் வீட்டு விவகாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.அது அவசியமானதும் அல்ல.நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.உரிய ஆலோசனை கிடைக்காத சுற்றம் இருக்கும்போது சிலர் நல்ல யோசனை கிடைக்கும் என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.

                                ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.

                                எந்த ஒரு தனி மனிதனும் தனது பிரச்சினைகளையும்,ரகசியங்களையும் யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.அதிலும் முன்னுரிமை கொடுத்து பட்டியல் இருக்க வேண்டும்.குடும்ப்ப் பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும்,அலுவலக பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும் உரையாடலாம்.

                               நன்றாக பேசுகிறார்கள்,பார்க்க நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நம்புவது ஆபத்தில் முடியும்.பொதுவாக குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.
-

24 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.//

பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

RAVICHANDRAN said...

//நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.//

இதுவே உண்மை.

K said...

ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.:::///

சார், வணக்கம்! கும்புடுறேனுங்க!

100 வீதம் உண்மை சார்! அருமையா சொல்லியிருக்கீங்க!

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.//

பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

தங்கள் பாராட்டுரைக்கு நன்றி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
யாராக இருந்தாலும் நாவடக்கத்துடன் குடும்ப விடயங்களைப் பேணிப் பாதுகாத்தால்,
குடும்பங்களில் சிக்கல்கள் தோன்றாது என்பதனை உங்களின் இப் பதிவு விளக்கமாகச் சொல்லி நிற்கிறது.

துளசி கோபால் said...

ஒருத்தருக்கு மட்டுமே தெரிஞ்சால்தான் அது ரகசியம். மிஞ்சிப்போனால்..... ரெண்டு பேருக்குத் தெரியலாம் அதுவும் அவுங்களே சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பதால்.

மூணாம் மனுசருக்குத் தெரிஞ்சால்....அம்புட்டுதான்:(

நல்ல பதிவு.

நிலாமகள் said...

எந்த ஒரு தனி மனிதனும் தனது பிரச்சினைகளையும்,ரகசியங்களையும் யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.//

உண்மைதான் ஐயா. சொல்லிய‌ழுதால் தீர்ந்து விடும் என்றெண்ணி க‌ண்ணில் ப‌டுப‌வ‌ரிட‌மெல்லாம் புல‌ம்புவ‌தில் இன்னொரு சிக்க‌லும் இருக்கிற‌து. அடுத்த‌வ‌ர் க‌தை என்ற‌ சுவார‌ஸ்ய‌த்தோடு கேட்ப‌வ‌ர்க‌ளும், காதுகொடுத்து கேட்ட‌ ஆளிருக்க்கும் வ‌ச‌தியில் பார்க்கும்போதெல்லாம் ஏதாவ‌து சொல்லும் வ‌ழ‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தி விட்டு, நாள‌டைவில் ச‌லிப்பாக‌ அறுவை, புல‌ம்ப‌ல் கேஸ் என்ற‌ அடைமொழிக‌ளையும் வாரி வ‌ழ‌ங்கி, க‌ண்ட‌தும் தெறித்து ஓட‌ப் பார்ப்பார்க‌ள்.

ஸ்ரீராம். said...

எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பதும் தவறு. கேட்பவர்கள் அதை தனக்குத்தான் தெரியும் என்று வெளியில் சொல்வது அதை விடத் தவறு. நாளை அவர்கள் பேரில் மற்றவர்களுக்கு நம்பிக்கை போய் விடும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும். நல்ல பதிவு.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.//

இதுவே உண்மை.

ஆமாம் சார் நன்றி

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.:::///

சார், வணக்கம்! கும்புடுறேனுங்க!

100 வீதம் உண்மை சார்! அருமையா சொல்லியிருக்கீங்க!

நன்றி சொல்றேனுங்க சார்!

சத்ரியன் said...

உண்மைதான். ”தவளை தன் வாயாலே” தான் கெடுகிறது.

Mathuran said...

//நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.//

உண்மைதான்

Sankar Gurusamy said...

//நன்றாக பேசுகிறார்கள்,பார்க்க நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நம்புவது ஆபத்தில் முடியும்.//

இதில்தான் பலர் சறுக்கிவிடுகிறார்கள்.. பிரச்சினைகளை பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களே தீர்த்துக்கொள்வது உத்தமம்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

தமிழ்வாசி பிரகாஷ் said...

குடும்ப சிக்கல் தீர்வுக்கான பதிவு.

SURYAJEEVA said...

நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை என்பது எவ்வளவு பொய்யாக்குகிரார்கள் என்ற உண்மையும் அதி ஒளிந்துள்ளது.. நம்பிக்கை துரோகம் என்பதை யாரும் ஒரு விஷயமாகவே பார்ப்பது இல்லையோ?

சக்தி கல்வி மையம் said...

இன்றைய கால கட்டத்திற்கு தேவையான பதிவு..

ஓசூர் ராஜன் said...

nalla pathivu.

rajamelaiyur said...

Good post

சாகம்பரி said...

உண்மை, ஆரோக்கியம் என்பதை உடலளவில் மட்டும் கடைபிடித்து மனதை உறுதியாக வைத்துக் கொளவதில்லை. சற்று மென்மையாக யாராவது பேசிவிட்டால் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள். பின்னர் மிகப்பெரிய சிக்கலில் சென்று முடிகிறது.

ஆமினா said...

முன்பு இதழில் படித்த கதையை நினைவுபடுத்தியது

கோழிக்காக இரு பெண்கள் சண்டையிட்டு கொள்ளூம் போது ஒரு பெண் இன்னொரு பெண்ணை நோக்கி"உன் புருஷன் தலையாட்டி பொம்மை தானே?" என சொல்ல அதுக்கு அவள் உன் புருஷன் மட்டும் என்னவாம்? உன் பேச்ச அப்படியே கேட்டு தலையாட்டுற பூம் பூம் மாடாக்கும் என சொல்ல அதனை வேடிக்கை பார்த்த மக்கள் அன்ரு முதல் இரு அப்பாவி கணவன்களுக்கும் தலையாட்டி பொம்மை, பூம்பூம் மாடு என அழைக்க தொடங்கிட்டாங்க

அவசியமான பதிவு!!!!!
உண்மையிலேயே தன் நலனில் அக்கறை காட்டுபவரிடம் தன் பிரச்சனையை சொல்வதில் தவறில்லை.......

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!

M.R said...

வீட்டு விவகாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.அது அவசியமானதும் அல்ல.

உண்மை நண்பரே அது தான் நல்லது .

அது பிரச்னையை பெரிதாகத்தான் ஆக்கும் பெரும்பாலும் .

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

unmai