Friday, September 16, 2011

பி.எஸ்.என்.எல்.க்கு மாறணுமா? அட போங்கப்பா!

                                                                                                                                     அதே நம்பரில் கம்பெனி மாற்றிக்கொள்ளலாம் என்ற புரட்சி திட்டம் வந்தது.மாற்ற விரும்பியவர்கள் மாற்றி விட்டார்கள்.இதில் அதிகம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இழந்ததாக கூறப்பட்டது.இப்போது கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவித்துத் தள்ள,கொஞ்சம் வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதாக கேள்வி.

                   மற்ற கம்பெனிகளுக்கும் பி.எஸ்.என்.எல்.க்கும் வித்தியாசம் இருக்கிறது.இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.டேட்டா கார்டு வாங்க வேண்டும் என்று பார்த்தபோது பி.எஸ்.என்.எல்.பரவாயில்லை என்றார்கள்.வாங்கி விட்டேன்.

ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்துச்சி.இரவில் திடீரென்று நெட் கனெக்ட் ஆகாது.சிம்மை எடுத்து போனில் போட்டி தொகையை பார்த்தால் மைனசில் காட்டும்.அடுத்த நாள் ரீசார்ஜ் செய்தால் தான் மறுபடி கனெக்சன் .இப்போது 53733 க்கு மெசேஜ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.ஒரு நாள் பிளாக்கை ஓபன் செய்தால் ஏதோ மெசேஜ் வந்தது.(The connection was reset while the page was loading). சுத்தமாக எந்த தளமும் ஓபன் ஆகவில்லை.டேட்டா கார்டு வைத்திருப்பவர்கள் யாரும் தெரியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.


நமக்கு தெரிந்த விஷயம் வரும் மெசேஜை கூகுள் சர்ச்சில் கொடுத்து தேடிப் பார்ப்பது.மொசில்லாவில் நிறைய தகவல்கள் வழி காட்டின .அதில் சொள்ளப்படுல்லத்தை செய்து பார்த்தேன்.பிரயோஜனமில்லை.இன்னொரு நல்ல ஐடியா தோன்றியது.


                       கொமோடோ ஆண்டி வைரஸில் உள்ள டெக்நிசியனுடன் சாட் செய்ய முடியும்.சாட்டில் நான் ஒர்க் செய்யட்டுமா ? என்றார். சரி என்று சொல்ல,சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆன்லைனில் ஏதேதோ செய்து பார்த்தார்.வெற்றி கிடைக்கவில்லை.இன்டர்நெட் சர்வீஸ் புரோவைடரிடம் சொல்லுங்கள் என்று முடித்துக் கொண்டார்.


பி.எஸ்.என்.எல்.இல் கேட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லையே என்றார்கள்.பிறகு அடிக்கடி பிரச்சினை செய்வதும்,பின்பு சரியாவதுமாக இருந்தது.பிரச்சினை வரும்போது நெட்வொர்க்கில் மாற்றம் ஏற்படுவதை கவனித்தேன்.GSM/EDGE  வரும்போது  தளம் ஓபன் ஆகாமல் ஏதாவது மெசேஜ் வருவதும் UMTS/HSDPA  நெட் வொர்க்குக்கு மாறும்போது பிரச்சினை இல்லாமல் இருப்பதுமாக இருக்கிறது.இன்னும் அப்படித்தான்.

          கமென்ட் போட்டு பப்ளிஷ் செய்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்தால் அப்போதுதான் பப்ளிஷ் ஆகியிருக்கும்.இந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்கும்போது வெளிநாட்டில் இருப்பவர்களை நினைத்து கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

கீழ்கண்ட தகவல் பெங்களூர் ISKCON லிருந்து அனுப்பியிருக்கிறார்கள்.சர்வதேச அளவில் வல்லுனர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.(social media வில் ஆர்வம் உள்ளவர்கள்)

we are happy to announce Social India Conference in Bangalore which is to be held on 12th & 13th of November 2011 in  Royal Orchid Hotel Bangalore.


This is an invite-only Conference. Over 1000 executive-level professionals from top Social Media related companies will be attending this conference. Executive-level invitees include CEOs, Managing Directors, Presidents, VPs, and Directors. Many of these executives are big leaders running companies today or are going to lead companies in the future.

This is an opportunity for you to meet your peers in the Social Media industry and exchange notes. At this conference, you’ll find people from social media companies, who excel at innovation, are engaged in business transformation, and are building workforces that are efficient, engaged, and effective.

The conference will kick off an active dialogue amongst leaders in the Indian social media industry. At this conference, Top most leaders like you, get a true insider's look at what's new today, and what’s coming over the next 12-18 months. It’s an exclusive preview of how companies, such as yours, will change the way other companies do business. What’s more, we want to hear your professional views on how we can make the next wave of social media even better.



-

32 comments:

RAVICHANDRAN said...

மற்ற கம்பெனிக்கு bsnl எவ்வளவோ பரவாயில்லை என்பது என் கருத்து.ஆரம்பத்தில் ரிலயன்ஸ் வைத்திருந்தேன்.ஆமை வேகம்.

RAVICHANDRAN said...

anti virus technician chat செய்து கேட்கும் விஷயம் புதுசு.எல்லா கம்பெனியிலும் இப்படி செய்ய முடியுமா?

shanmugavel said...

@RAVICHANDRAN said...

மற்ற கம்பெனிக்கு bsnl எவ்வளவோ பரவாயில்லை என்பது என் கருத்து.ஆரம்பத்தில் ரிலயன்ஸ் வைத்திருந்தேன்.ஆமை வேகம்.

உண்மைதான்,சில நேரங்களில் பிரச்சினையாக இருக்கிறது.நன்றி

ஆமினா said...

நானும் பிஎஸ்என் எல் தான். என்னைய பொருத்தவரை இது தான் பெஸ்ட் :-)

shanmugavel said...

@RAVICHANDRAN said...

anti virus technician chat செய்து கேட்கும் விஷயம் புதுசு.எல்லா கம்பெனியிலும் இப்படி செய்ய முடியுமா?

கொமோடோ வில் இருக்கிறது.வேறு தெரியவில்லை.

Unknown said...

என்னுடைய கருத்தும் இதுதான்
மற்ற கம்பெனிக்கு bsnl எவ்வளவோ பரவாயில்லை

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

ஓசூர் ராஜன் said...

bsnl nanraagave irukkirathenru solkiraargakal

ஓசூர் ராஜன் said...

ippo bsnl nalla moving

Anonymous said...

என்ன கொடும சரவணன் )))

shanmugavel said...

@ஆமினா said...

நானும் பிஎஸ்என் எல் தான். என்னைய பொருத்தவரை இது தான் பெஸ்ட் :-)

உண்மைதான்,சில நேரங்களில் பேஜார் பண்ணிடுது! நன்றி

Anonymous said...

GOOD POST KEEP IT UP.

சாகம்பரி said...

நான் பி.எஸ்.என்.எல் தான் வைத்திருக்கிறேன். இணைய வேகம் மற்றவற்றைவிட பரவாயில்லை. ஒரு பிரச்சினை ஏற்படும்போது டெக்னிக்கல் சப்போர்ட் குறைவாகதான் கிடைக்கிறது.

shanmugavel said...

@வைரை சதிஷ் said...

என்னுடைய கருத்தும் இதுதான்
மற்ற கம்பெனிக்கு bsnl எவ்வளவோ பரவாயில்லை

நன்றி சார்.

ஓசூர் ராஜன் said...

social media patri vivaram tharavum.aswinrajan6@gmail.com

SURYAJEEVA said...

நான் பின்னூட்டம் இடும் முன்னரே பல பேர் பின்னூட்டம் போட்டுள்ளனர், அவர்கள் கருத்தே என்னுடையதும்.. நீங்கள் அனைத்து நிறுவனங்களின் சேவையை உபயோகித்து விட்டு குற்றம் குறை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அதை விட்டு விட்டு... நன்றாக செயல் பட நினைக்கும் பொது துறை நிறுவனத்தை குறை கூறுவது தேவை இல்லாதது.. அலைகற்றை ஊழலுக்கு முன் இருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்பாடும், அலைகற்றை ஊழலில் பெருத்த நஷ்டம் சந்தித்த பின் இருக்கும் செயல் பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை.. இங்கு திருவண்ணாமலையில் அவர்களின் அலுவலகத்தில் எந்த கேள்வி கேட்டாலும் பொறுமையாக அன்புடன் பதில் அளிக்கின்றனர்.. அநேகமாக இது தான் அனைத்து ஊர்களிலும் நடைமுறையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்..

SURYAJEEVA said...

technical சப்போர்ட் குறைவாக கிடைக்கிறது என்பது உண்மை, பிற நிறுவனங்களில் technical சப்போர்ட் குழுவை நீங்கள் தேட வேண்டி இருக்கும் என்பதும் உண்மை.. இங்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 3g data கார்டு க்கு தனி மார்க்கெட்டிங் மேனேஜர் உள்ளார்.. அவர் எந்த நேரத்தில் கேள்வி கேட்டாலும் இன்முகத்துடன் பதில் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.. பி.கு. நானும் பி.எஸ்.என்.எல் வாடிக்கயாளர், அந்த நிறுவனத்தில் எந்த பணியிலும் வேலை செய்யவில்லை

Samantha said...

me using bsnl..nalla thaniruku

Venkat said...

Dear Shanmugavel, Your blog is interesting. You have covered different topics interestingly. I become a viewer from today for your site.

Keep it up.

Best wishes

Venkat.

Vist my blog
www.hellovenki.blogspot.com
when u have time.

ELITE TRAADER said...

sir, bsnl 3g now working fine. bsnl have sorted out the issues and 3g speed now is awesome. regarding technical support, now bsnl outsourcing other computer hardware people. if you compare charges with other providers(airtel, vodafone, aircel & others)..BSNL IS CHEAP..ex. for 100 rs. recharge, bsnl giving 250 mb. other only 100 mb...

Sankar Gurusamy said...

இதுபற்றி அதிகம் தெரியவில்லை... இதில் பிரச்சினை வராதவரை நல்லது... வந்தால் அவன் தொலைந்தான்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com

தமிழ்வாசி பிரகாஷ் said...

நான் AIRTEL BROADBAND. என்னைப் பொறுத்தவரை ஓகே.... கஸ்டமர் சப்போர்ட் ஓகே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

என் வலையில்:


சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

ராஜ நடராஜன் said...

BSNL க்கான ஆதரவு பின்னூட்டங்கள் மகிழ்ச்சியுண்டாக்குகிறது.

Be national மந்திரம் வேலை செய்வதால்!வேறொன்றுமில்லை:)

Jayadev Das said...

\\கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவித்துத் தள்ள,கொஞ்சம் வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதாக கேள்வி.\\ ஒழுங்க சேவையைத் தராமல் பிக்கல் பிடுங்கல்களை சமாளிக்க வேண்டிய நிலையில் வாடிக்கையாளரைத் தள்ளிவிட்டு சலுகை கொடுத்து என்ன பிரயோஜனம்?

Jayadev Das said...

\\இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.\\ உங்க போன், இன்டர்நெட் எப்பவும் ஏதாவது தொல்லை தர்ற மாதிரியே பாத்துக்குவாங்க, அப்பத்தானே நீங்க கூப்பிட்டு சரி பார்க்கச் சொல்லி அஞ்சோ, பத்தோ குடுப்பீங்க, அப்படியே அடிக்கடி கொடுத்து சலிச்சுப் போயி வேற தனியார் நிறுவனத்துக்கே போயிடுவீங்க, அப்படியே தனியார் காரன் கொடுக்கும் கிம்பளமும் வரும், அதுக்கு ஏத்த மாதிரி அங்கங்கே கேபிளை பிடுங்குவதும் இவங்க வேலை, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை இதற்க்கு மேலும் செய்ய வேண்டுமா?

Astrologer sathishkumar Erode said...

மற்ற கம்பெனிகள் எல்லாமே பி.எஸ்.என் .எல்லிடம் இருந்துதான் பிராட்பாண்ட் பெறுகின்றன...அதனால் பி.எஸ்.என்.எல் மட்டுமே வேகமான இணைப்பை தர முடியும்.மற்ற எந்த நிறுவனமும் வேகமன இணைப்பை தர இயலாது.bsnl தான் பிராணட்பாண்ட் சேவை தலைவன்..மற்ற நிறுவனங்கள் அதில் பாதி கூட வழங்க இயலாது...அவசரப்பட்டு மாறிவிடாதீர்கள்

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

GANESH said...

I am AIRCEL 3G datacard customer.I am getting around 3 to 6Mbps speed,UNLIMITED at 1245rs per month.Good service...

நாடோடி said...

நீங்கள் உங்கள் மொபைலில் நெட்வொர்க் செட்டிங்க்ச்கு சென்று நெட்வொர்க் மோடு 3G அல்லது UMTS என்று இருக்கும்.அதை தேர்ந்து எடுத்து வைத்துக் கொண்டால் எபோதும் அதிவேக இணைப்பு கிடைக்கும்..GSM/EDGE நெட்வொர்க்கில் வேகம் குறைவாகதான் இருக்கும். DUAL MODE ல இருக்கும்போது SIGNAL அளவு குறைந்தால் ஆடோமடிக் ஆக 2G MODE(GSM EDGE)வந்து விடும்.. முயற்சித்து பாருங்கள்..

tamilmani said...

நானும் அதை ஒப்புகெள்கிறேன் பிஎஸ்என்எல் த◌ான் சிறந்த நெட்ஒற்
ஆன◌ால் பிஎஸ்என்எல் டேடா காரர்டடு ஐ விட மே◌ாடம் தான் சிறந்தது இது என் தனிபட்ட கருத்து.

Bharathi Raja R said...

நான் சொல்வதை உங்களால் நம்பவே முடியாது. எம்.டி.எஸ்.தான் பெஸ்ட். நான் வாங்கியபோது எல்லோருமே அதுதான் இருப்பதிலேயே கேவலமான சேவை என்றார்கள். முதல் இரண்டு மாதங்கள் நானும் அப்படித்தான் உணர்ந்தேன். திடீரென என்ன மந்திரம் போட்டார்களோ தெரியவில்லை. அதன் பின்பு இன்றுவரை அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பின்பு ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்., டாட்டா... என எல்லாமே முயன்று பார்த்து விட்டேன் (அனைத்தும் நண்பர்களுடையவை!). எதுவுமே இதற்கு அருகில் வராது. நான் முழு நேரம் வீட்டில் இருந்து பணி புரியும் ஆள் வேறு. அதற்கும் ஈடு கொடுக்கிறது. பெங்களூர் முதல் சிவகாசி வரை நெடுஞ்சாலை முழுவதும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. கேட்பவர்கள் எல்லோரிடமுமே இதைத்தான் சொல்கிறேன். யாருமே நம்ப மறுக்கிறார்கள். நம்பும் முன் இதே சேவை வைத்திருப்பவர்கள் யாரிடமாவது வாங்கிச் சில நாட்கள் முயன்று பாருங்கள். ஒத்துக் கொள்வீர்கள்.

பி.எஸ்.என்.எல். பற்றி எல்லோருமே சொல்வது சரிதான். பிரச்சினை வரும்வரை அவர்கள்தான் பெஸ்ட். வந்து விட்டால் தொலைந்தோம்.

நன்றி.

நிரூபன் said...

நம்பிக்கையோடு இருங்கள் அண்ணா,

வெகு விரைவில் நல்லதோர் இணைப்பினை, வேகமான இணைப்பினை BSNL வழங்கும் என்று நினைக்கிறேன்.