சோர்ந்த முகத்துடன் வருகிறார் சக
ஊழியர்.எளிதில் யாராலும் அவர் தூங்கவில்லை என்பதை கண்டுபிடித்துவிடலாம்.என்னவென்று
விசாரித்தேன்.இரவு முழுக்க புரண்டு புரண்டு படுக்கிறேன்.தூக்கம் வரவில்லை.அடிக்கடி
சிறுநீர் கழிக்க எழுவதும்,நேரத்தை பார்ப்பதுமாக இருந்தேன்.முடியவில்லை.தூக்கமின்மை
பிரச்சினைகள்-சில குறிப்புகள் என்ற இடுகையை ஏற்கனவே
பகிர்ந்திருக்கிறேன்.படிக்காதவர்கள் படிக்கவும். http://counselforany.blogspot.com/2011/04/blog-post_4681.html
பத்து மணிக்கு விளக்கை அணைத்து
விட்டு வழக்கம்போல படுக்கைக்குப் போய்விட்டார்.மனைவியும்,குழந்தையும் உறவினர்
வீட்டுக்குப் போய்விட்டார்கள்.வீட்டில் இவர் மட்டும் தனியே! அவருக்கு இதற்கு
முன்பு இப்படிப்பட்ட பிரச்சினைகள் நேர்ந்த்தில்லை.சிலர் தனிமையில் வெறுமையை
உணர்வதும்,குழம்புவதும் சகஜம்.
தலைப்புக்கு
வருவோம்.தூக்கம் வராதபோது படுக்கையில் விழித்துக்கொண்டு,புரண்டு படுத்துக்கொண்டு
இருக்க வேண்டுமா? இது தவறானது என்பதே நிபுணர்களின் கருத்து.யோகாசனம்
பழக்கமிருந்தால் சவாசன நிலையில் இருந்து பார்க்கலாம்.தூக்கம் வராவிட்டால்
படுக்கையை விட்டு எழுந்து விடுவதே மேலானது.
தூக்கம் கண்ணை
சுழட்டும் வரை பிடித்தமான எதையாவது செய்து கொண்டிருப்பதே நல்லது.தொலைக்காட்சி
பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் நல்ல பாடல்களையோ,நகைச்சுவை
காட்சிகளையோ பார்ப்பது மனம் ஓரளவு சமநிலை பெற வழிவகுக்கும்.
மனதுக்குப்
பிடித்த அதிக சிந்தனையைக் கோராத புத்தகங்களையும் படிக்கலாம்.குழப்பமான
எண்ணங்களிலிருந்து மனம் திசை திரும்ப இதுவும் நல்ல வழி.அடுத்த்தாக இசை
கேட்பது.நல்ல இசையைப்போல மனதுக்கு இதம் தரும் விஷயம் வேறெதுவுமில்லை.தூக்கம்
வரும்வரை இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள சிலர்
தூக்கம் வராதபோது அடிக்கடி புகைபிடிப்பதில் ஈடுபடுவதுண்டு.இது இன்னும் நிலையை
மோசமாக்கும்.சில தின்ங்கள் தொடர்ந்து தூக்கமில்லாத நிலையில் இருப்பவர்கள் மதுவை
நாடுவது அடிமையாக்கும் வரை கொண்டு போய்விட்டுவிடும்.அதற்கு முன்பு நண்பர்களுடன்
சேர்ந்தால்மட்டும் குடிப்பவர்கள்,தூக்கம் வரவில்லையே குடித்துப்பார்க்கலாம் என்று
இறங்குவார்கள்.ஆல்கஹால் தூக்கத்தைக் கெடுக்கும்.
மேலே தந்துள்ள முந்தைய
பதிவில் குறிப்பிட்ட்தைப்போல தூக்கமின்மை என்பது மனம் பாதிக்கப்பட்டுள்ளதன்
அறிகுறிதான்.ஏதாவது பிரச்சினையால் மனம் சம நிலை இழக்கும்போது இப்படி ஏற்படலாம்.பிரச்சினை
தீர்ந்தவுடன் தானாகவே சரியாகிவிடும்.தொடர்ந்து இருந்தால் தயக்கமின்றி மருத்துவரைப்
பார்க்க வேண்டும்.
படுக்கையில்
புரண்டு கொண்டே இருக்கும்போது,அதுவும் தனிமையில் இருந்தால் தேவையில்லாத எண்ணங்கள்
குழப்பும்.தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப மனதிலும்,உடலிலும் மாற்றங்கள்
உருவாகும்.அடிக்கடி சிறுநீர் கழிக்கப்போவது அதனால்தான்.சில எண்ணங்கள் அவரிடம்
பதட்ட்த்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
படுக்கையை
விட்டு எழுந்து மேலே சொன்னவாறு ஏதேனும் செய்ய ஆரம்பித்தால் தேவையில்லாத
எண்ணங்களைத்தடுத்து விடலாம்.விரைவாக உங்களுக்கு நல்ல தூக்கம் வரவும்
வாய்ப்புண்டு.எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என்பதை உணருங்கள்.
35 comments:
பயனுள்ள பகிர்வு.நன்றி.
எனக்கும் சில சமயம் ஏற்படும்.
தூக்கம் வரலைன்னா எதாவது விட்ட வேலையை அல்லது நாளை செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்துவிடலாம் என நினைப்பேன். அப்படி நினைக்கும் போதே நல்லா தூக்கம் வந்துடும் (நா வேல பாக்குறது தூக்கத்துக்கு கூட பிடிக்கல பாருங்க)
அருமையான பகிர்வு சகோ
படுக்கையில் சாதாரணமாக அமர்ந்து இடது நாசியால் சுவாசத்தை இழுத்து வலது நாசியால் வெளியிட்டுவது.. ஒரு 15முறை, பிறகு வலது-இடது என்று 15முறை.. செய்துவிட்டு படுத்தால் நல்ல ஆழ்ந்து தூங்கலாம்...
சுவாசப்பயிற்ச்சி தூக்கத்துக்கு நல்ல காரணி...
நல்ல பயனுள்ள பகிர்வு...
நன்றி...நண்பரே...
@சென்னை பித்தன் said...
பயனுள்ள பகிர்வு.நன்றி.
நன்றி அய்யா!
நன்.......றி!
ஒன்னுமில்லைங்க !
நான் தூங்.........கிட்டேன்!
@கார்த்தி கேயனி said...
எனக்கும் சில சமயம் ஏற்படும்.
எல்லோருக்கும் சில சமயம் ஏற்பட வாய்ப்புண்டு.
@ஆமினா said...
தூக்கம் வரலைன்னா எதாவது விட்ட வேலையை அல்லது நாளை செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்துவிடலாம் என நினைப்பேன். அப்படி நினைக்கும் போதே நல்லா தூக்கம் வந்துடும் (நா வேல பாக்குறது தூக்கத்துக்கு கூட பிடிக்கல பாருங்க)
அருமையான பகிர்வு சகோ
இப்படி சொல்லியே வேலை செய்யாம ஏமாத்திட்டிருக்கீங்க! நன்றி
பயனுள்ள பகிர்வு.நன்றி.
@ராஜா MVS said...
படுக்கையில் சாதாரணமாக அமர்ந்து இடது நாசியால் சுவாசத்தை இழுத்து வலது நாசியால் வெளியிட்டுவது.. ஒரு 15முறை, பிறகு வலது-இடது என்று 15முறை.. செய்துவிட்டு படுத்தால் நல்ல ஆழ்ந்து தூங்கலாம்...
சுவாசப்பயிற்ச்சி தூக்கத்துக்கு நல்ல காரணி...
உண்மைதான் நண்பா! இது ஓரளவுக்கு உதவும்.நன்றி
@கோகுல் said...
நன்.......றி!
ஒன்னுமில்லைங்க !
நான் தூங்.........கிட்டேன்!
ஆக,உங்களுக்கு இந்தப்பிரச்சினை இல்லை.நன்றி சார்
@இராஜராஜேஸ்வரி said...
பயனுள்ள பகிர்வு.நன்றி.
தங்கள் கருத்துரைக்கு நன்றி
தேவைப்படும் கருத்துக்கள்..... நன்றி!
மிகவும் உபயோகமான ஒரு விடயத்தை பதிவிட்டதற்கு நன்றி.
ஆமா இந்தமாதிரியான நேரங்களில் புத்தகங்கள் படிப்பது நல்ல பயன் தரும்
நல்ல தகவல் அடங்கிய பதிவு!
பிரயோசனமான தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி
அருமையான கருத்து அண்ணே! தூக்கம் வராவிட்டால் படுக்கையைவிட்டு எழுந்திருப்பதுதான் சிறந்தது!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
தேவைப்படும் கருத்துக்கள்..... நன்றி!
நன்றி சார்
@அம்பலத்தார் said...
மிகவும் உபயோகமான ஒரு விடயத்தை பதிவிட்டதற்கு நன்றி.
நன்றி அய்யா!
@தனிமரம் said...
நல்ல தகவல் அடங்கிய பதிவு
நன்றி சிவா!
@கந்தசாமி. said...
பிரயோசனமான தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி
நன்றி அய்யா!
@Powder Star - Dr. ஐடியாமணி said...
அருமையான கருத்து அண்ணே! தூக்கம் வராவிட்டால் படுக்கையைவிட்டு எழுந்திருப்பதுதான் சிறந்தது!
ஆமாம் பிரதர் நன்றி
தகவல்களுக்கு நன்றிங்க நண்பா!
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே
தகவல் சூப்பர்
அருமையான மிகவும் தேவையான பதிவு . நன்றி
தூக்கம் வராத பொழுது நான் மொபைல் போனில் உள்ள சுடோகு விளையாட்டை விளையாட ஆரம்பித்து விடுவேன்... பிறகென்ன நான்காவது கட்டத்திற்குள் போவதற்குள் தூக்கம் தான்
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு..நன்றி நண்பா...
இனிய காலை வணக்கம் பாஸ்,
வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிவிட்டேன்.
உங்களின் வழமையான ஸ்டைலில் முதலில் ஒரு சிறிய விவரணக் குறிப்போடும் பின்னர் விளக்கங்களோடும் கூடிய,
தூக்கத்தைப் பெறுவதற்கான டிப்ஸ்கள் அடங்கிய நல்லதோர் பதிவு!
தூக்கம் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கியதற்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html
கொஞ்ச காலம் தூக்கம் வராமல் நானும் கஷ்டப் பட்டேன். மனம் அதிக சிந்தனைக்கு உட்பட்டது தான் காரணம்
இயர் போன் போட்டு பாடல்கள் அடுத்தவருக்கு தொல்லை இல்லாமல் கேட்பேன்.
இசையை மட்டும் அல்லாமல் பாடலின் உள் நுழைந்து அதன் ஒவ்வொரு வரியையும் ரசிப்பேன்.
கண்ணை சுழட்டியதும் ஆப் செய்து உறங்கி விடுவேன். முயற்சி செய்து பாருங்களேன்.
அப்படி கவனிக்கும் போது பதிவுகளுக்கு கூட விஷயம் கிடைப்பதுண்டு. (அப்போ தானே செய்வாங்க?)
அருமையான பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ...முடிந்தால் இன்றைய ஆக்கத்தினைக் காண வாருங்கள் .
Post a Comment