Saturday, May 7, 2011

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.ஒரு குறிப்பிட்ட சதவீதம் தோல்வியடைந்து விடுகிறார்கள்.அக்கம் பக்கத்து பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று கௌரவம் அடையும்போது தோல்வியுற்றவர்கள் வெளியே வராமல் தலை குனிந்து நடப்பதுண்டு.

                              நாமெல்லாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.ஒரு கிராமப்புற பள்ளியில் எண்பத்து நான்கு பேரில் பதிமூன்று பேர்தான் பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றோம்.இப்போது அத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தொழிதிபர்களாகவும்,அரசு அதிகாரிகளாகவும்,தனியார் நிறுவன பணியாளர்களாகவும் இருக்கிறார்கள்.



                              யாரும் மருத்துவர் ஆகவில்லை என்பது உண்மைதான்.ஆனால் அத்துறை மட்டுமே சமூக அந்தஸ்தை வழங்குமா? துரதிருஷ்டவசமான உண்மை தோல்வியடைந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆட்களே இல்லை என்பதுதான்.கூட்டுக்குடும்பம் சிதறிப்போன இன்றைய சூழலில் பாவம் இவர்கள்.தாத்தா,பாட்டி இருந்தால் கொஞ்சம் ஆறுதல் சொல்வார்கள்.

                              பெற்றோர்களைப் பொருத்தவரை தனது மகனோ,மகளோ தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் குடும்ப கௌரவம் போய்விட்ட்தாகவே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே ஆள் தேவைப்படுகிறது.டீனேஜ் வேறு என்பதால் மனதளவில் பாதிக்கப்ப்டும் குழந்தைகள் தனித்து விடப்படுகிறார்கள்.

                               தேர்வு முடிவுகள் பாதிப்பால் நிகழும் தற்கொலைகள் இன்னொரு பிரச்சினை.குடும்பத்தில் தற்கொலை வரலாறு உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ரொம்ப இயல்பாக,சந்தோஷமாக இருந்து திடீரென்று யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை.ஏற்கனவே மன அழுத்த்தில் பாதிக்கப்பட்டவர்களே தற்கொலை செய்து கொள்வார்கள்.



                               எதிலும் விருப்பமின்றி இருத்தல்,தூக்கமினமை அல்லது அதிக தூக்கம்,சரியாக் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவது,தன் சுகாதாரத்தில் அக்கறையில்லாமல் இருப்பது,மற்றவர்களுடன் அதிகம் கலந்து பழகாமல் இருப்பது போன்றவை மன அழுத்தம் இருப்பதன் அறிகுறிகளில் சில.

                               மாணவ,மாணவிகளிடம் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தோல்வி முடிவால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.இது அனைவருக்கும் பொருந்தும்.மேலும்,குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள்.தற்கொலைக்கு அது பொருந்தாது.



                          தோல்வியடைந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.திட்டமிடல் இருந்தால் நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.திட்டமிடல் என்றால் எந்த வகையில் என்று முடிவு செய்திருப்பார்கள்(மாத்திரையா? தீக்குளிப்பா? தூக்கா? என்று).யாரேனும் அறிவித்தால் அவர்களுக்கு மனநல மருத்துவ உதவி அவசியம்.கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

                            ஒருவரை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமிருக்கிறதா என்று கேட்பது தற்கொலை பற்றிய எண்ணத்தை தூண்டாது.மன அழுத்த்த்தில் உள்ள ஒருவரை அப்படி கேட்பதே சரியானது என்பது உளவியலாளர்கள் கூற்று.உதாரணமாக, சிலர் எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்,உனக்கு அந்த மாதிரி எண்ணம் வருவதுண்டா? என்று கேட்கலாம்.அவர்களை அதிகம் பேச வைத்தால்,நீங்கள் பொறுமையாக கேட்டால் ஆபத்தை பெரும்பாலும் தவிர்க்கமுடியும்.

                             வழக்கம்போல நடுத்தர வர்க்கமே அதிகம் பாதிக்கப்ப்டுகிறார்கள்.கனவு,கௌரவம்,முன்னேற்றத்துக்கு குழந்தைகளை நம்பியிருத்தல் போன்றவை அதிகம்.உங்களுக்கு சுற்றுப்புறத்தில் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவுங்கள்.

-

14 comments:

மதுரை சரவணன் said...

நல்ல ஆலோசனைகளுடன் சிறப்பான பதிவு.வாழ்த்த்க்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தாங்கள்தான் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாவலர்கள் என்பதை பெற்றோர்கள் முதலில் உணரவேண்டும். குழந்தைகளை குதிரைகளாக நினைக்கும் வீடுகளில்தான் இத்தகைய துயரங்கள் நடக்கின்றன என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் மன நிலையை நாம் உணர்ந்து கொண்டால் அவர்களை காப்பாற்றிவிடலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பெற்றோர்களைப் பொருத்தவரை தனது மகனோ,மகளோ தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் குடும்ப கௌரவம் போய்விட்ட்தாகவே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே ஆள் தேவைப்படுகிறது.//

இதுவும் மிக முக்கியமான பிரச்சனை அண்ணே! புள்ளைங்கள சமாதானப் படுத்திலானும் பெத்தவங்கள சமாதானப் படுத்துறது ரொம்ப கஷ்டம்! அருமையான, முன் எச்சரிக்கையான பதிவு அண்ணே!

shanmugavel said...

@மதுரை சரவணன் said...

நல்ல ஆலோசனைகளுடன் சிறப்பான பதிவு.வாழ்த்த்க்கள்

Thanks saravanan.

MANO நாஞ்சில் மனோ said...

சிறந்த ஆலோசனை, நன்றி.....

Jaleela Kamal said...

மிக அருமையான பதிவு
அனைத்து பெற்றோர்களையும் சென்றடையனும்.

shanmugavel said...

@-தோழன் மபா, தமிழன் வீதி said...

தாங்கள்தான் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாவலர்கள் என்பதை பெற்றோர்கள் முதலில் உணரவேண்டும். குழந்தைகளை குதிரைகளாக நினைக்கும் வீடுகளில்தான் இத்தகைய துயரங்கள் நடக்கின்றன என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் மன நிலையை நாம் உணர்ந்து கொண்டால் அவர்களை காப்பாற்றிவிடலாம்.

சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தோழரே !நன்றி

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பெற்றோர்களைப் பொருத்தவரை தனது மகனோ,மகளோ தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் குடும்ப கௌரவம் போய்விட்ட்தாகவே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே ஆள் தேவைப்படுகிறது.//

இதுவும் மிக முக்கியமான பிரச்சனை அண்ணே! புள்ளைங்கள சமாதானப் படுத்திலானும் பெத்தவங்கள சமாதானப் படுத்துறது ரொம்ப கஷ்டம்! அருமையான, முன் எச்சரிக்கையான பதிவு அண்ணே!

Thanks bro

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

சிறந்த ஆலோசனை, நன்றி.....


thanks sir

shanmugavel said...

@Jaleela Kamal said...

மிக அருமையான பதிவு
அனைத்து பெற்றோர்களையும் சென்றடையனும்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

அமைதி அப்பா said...

நல்ல ஆலோசனை.பாராட்டுக்கள்.

நானும் இது குறித்து பேசி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

shanmugavel said...

@அமைதி அப்பா said...

நல்ல ஆலோசனை.பாராட்டுக்கள்.

நானும் இது குறித்து பேசி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

நன்றி அய்யா,தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Sankar Gurusamy said...

நிச்சயம் யோசிக்கவேண்டிய விசயம்தான். இங்கு கவுன்செல்லிங் நம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்தான் அதிகம் தேவை. இவர்கள் தரும் அழுத்தத்தினால்தான் மாணவர்கள் விரக்தி அடைகிறார்கள். இயல்பாக இருக்க விட்டாலே மாணவர்கள் சிறந்த வெற்றிகளை குவிப்பார்கள்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

prabhadamu said...

நல்ல ஆலோசனைகளுடன் சிறப்பான பதிவு.வாழ்த்த்க்கள் :)

உங்கள் தளத்தில் இருந்து ஒரு சில தகவல்கள் என் தளத்தில் இட உங்கள் அனுமதி கேட்கிரேன் நணபா.

விருப்பம் இருந்தா என் தளத்தில் வந்து சொல்ல முடியுமா நண்பா.