Thursday, May 5, 2011

ஹிப்னாடிஸம் உங்களுக்கும் உதவலாம்.

நண்பன் ஒருவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.ஹிப்னாடிஸம்,மெஸ்மரிசம் என்று நிறைய புத்தகங்கள் வைத்திருப்பான்.அதில் அவனுக்கு பெரும் ஆர்வம்.யாரை வசியம் செய்வதற்கு என்று தெரியவில்லை.அவன் வசியம் செய்ய கற்றுக்கொண்டானா என்பது தெரியவில்லை.ஒரு பெண் அவனை வசியம் செய்து இழுத்த இழுப்புக்கு ஓடிக்கொண்டிருந்தான்.கடைசியில் அதேபெண்ணை திருமணம் செய்ய வேண்டிய கஷ்டமும் நேர்ந்த்து.

                            புத்தகம் படித்தெல்லாம் கற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதே உண்மை.சரி ஹிப்னாடிஸம் என்றால் என்ன? தூக்கம் போன்ற நிலையில் ஒரு நிபுணருக்கு கட்டுப்பட்டு இருக்கும் நிலை.மன நல சிகிச்சைகளில் அபூர்வமாக பயன்படுத்தப்படுவது.

                             உண்மையில் இது மிகப்பழமையான விஷயம்.மேஜிக்,மாய வித்தை போன்றவை எல்லாம் இதற்கு முன்னோடிகள்.பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் புகழ் பெற்றது.புகழ்பெற்ற உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆழ் மனதை வெளிக்கொணர இம்முறையை பயன்படுத்தினார்.

                              ஹிப்னாடிஸம் சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அறிதுயிலில் ஆழ்த்தவும்,தேவையற்ற,விரும்பாத சில பழக்க வழக்கங்களை மாற்றவும்,ஆழ் மனதில் அமுக்கப்பட்ட நினைவுகளை வெளிக்கொணரவும் இது பெருமளவில் உதவுகிறது.தாழ்வு மனப்பான்மை ,பதட்டம் போன்ற சிக்கல்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கலாம்.

                               பொதுவாக கதைகளில் காணப்படுவது போன்றோ,சினிமாவில் காட்டப்படுவது போன்றோ யாரையும் கட்டாயப்படுத்தி வசியம் செய்வது சாத்தியமில்லை என்பதே உண்மை.சிகிச்சைக்கு உட்படுபவர் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும்.அதே போல கட்டாயப்படுத்தி தவறான எண்ணங்களையும் விதைக்க முடியாது.

                               உதாரணமாக சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்.இப்போது நடைமுறை வாழ்க்கையில் அது பிரச்சினையாக இருக்கும்.அதெல்லாம் வசியத்தில் வெளிக்கொண்டு வரலாம்.அதே சமயம் வெளியே சொல்ல நினைக்கும் விஷயம் மட்டுமே வெளிவரும்.எல்லா ரகசியத்தையும் வெளியே கொட்டிவிட மாட்டார்கள்.

                                சுய வசியத்தின்(self hypnosis) மூலம் அனைவரும் பயன் பெற முடியும்.உங்களுக்கு நீங்களே சில கட்டளைகளை மனதிற்கு கொடுப்பது மூலம் நீங்கள் விரும்புவதை அடையலாம்.சாதனை செய்யலாம்.அமைதியான சூழலில் உடலை தளர்வாக வைத்துக்கொண்டு “நான் தொழிலதிபர் ஆவேன்என்று மனதிற்கு சொல்லிக்கொண்டு வந்தால் ஒரு நாள் ஆகிவிடுவதும் சாத்தியமே! நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி ஆவீர்கள் என்பார்களே அதுதான்.ஆழ்மனதில் கட்டளைகள் ஆழமாக பதிந்து போனால் அது செயல்பட ஆரம்பித்துவிடும்.இதற்கெல்லாம் உரிய நிபுணர் உதவி இருந்தால்தான் நல்லது.

-

19 comments:

Unknown said...

ம்ம் நானும் இதை பற்றி கேள்விப்பட்டிருக்கேன் பாஸ்!!

நிரூபன் said...

அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால், என் வலையினைப் பாலோ பண்ணும், உங்களது டாஷ் போர்ட்டின் Google Reader இல் என் வலைப் பதிவின் Updates இனைக் காண முடியாது, ஆகவே நண்பர்கள் அனைவரும், சிரமத்தினைப் பாராது, மீண்டும் என் வலையினை பாலோ பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையூறுகளுக்கு- மன்னிக்கவும்,
http://www.thamilnattu.com/

நிரூபன் said...

சகோ, குற்றவாளிகளிடமிருந்து, உண்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த ஹிப்னாட்டிச முறையினைப் பயன்படுத்துவாத சொல்கிறார்களே, உண்மையா சகோ. இது பற்றி விளக்க முடியுமா?

நிரூபன் said...

சகோ அலசல் அருமை, இன்னும், பல அறியாத விடயங்களை எமக்காத் தருவீர்கள் என நினைக்கிறேன்.

நன்றிகள் சகோ.

Anonymous said...

மனோவசியம் என்பது பழமையான அறிவியல் முறையே. ஆனால் மை, தலைமுடி, நகம் வைத்து ஒருவரை வசியம் செய்வது என்பதெல்லாம் பக்கா பிராடுத் தனமாகும். மனோவசியம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தவும், மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும் என்பது உண்மை. நல்ல பதிவு சகோ.

shanmugavel said...

@நிரூபன் said...

சகோ, குற்றவாளிகளிடமிருந்து, உண்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த ஹிப்னாட்டிச முறையினைப் பயன்படுத்துவாத சொல்கிறார்களே, உண்மையா சகோ. இது பற்றி விளக்க முடியுமா?

அப்படி எதுவும் இல்லை.சகோதரம்.இதற்கு முழு ஒத்துழைப்பு வேண்டும்.சொல்லக்கூடாது என்று நினைப்பதை வசிய துயில் நிலையிலும் சொல்லமாட்டார்கள்.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

ம்ம் நானும் இதை பற்றி கேள்விப்பட்டிருக்கேன் பாஸ்!!

நன்றி சிவா

shanmugavel said...

@நிரூபன் said...

சகோ அலசல் அருமை, இன்னும், பல அறியாத விடயங்களை எமக்காத் தருவீர்கள் என நினைக்கிறேன்.

தந்து விட்டால் போச்சு! நன்றி சகோ

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

மனோவசியம் என்பது பழமையான அறிவியல் முறையே. ஆனால் மை, தலைமுடி, நகம் வைத்து ஒருவரை வசியம் செய்வது என்பதெல்லாம் பக்கா பிராடுத் தனமாகும். மனோவசியம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தவும், மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும் என்பது உண்மை. நல்ல பதிவு சகோ.

உண்மையே சகோ நன்றி

test said...

மருத்துவ முறைகளில் மனோவசியம் செய்யும்போது பேஷண்டும் ஒத்துழைக்கவேண்டும். விருப்பமில்லாத, ஒத்துழைக்க மறுக்கும ஒருவரை மனோவசியம் செய்வது கஷ்டம் என்று படித்திருக்கிறேன்!

Sankar Gurusamy said...

இது பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு மிகவும் குறைவு. மன நல மருத்துவரிடன் செல்லவே மிகவும் யோசிக்கும் சமூகம் நம்முடையது. பைத்தியக்காரர்களுக்கான மருத்துவமனை என்றுதான் அதை அறிகிறார்கள். நம் மனதின் பிரச்சினைகளுக்கும் அங்கு தீர்வு கிடைக்கும் என்பதை புரிய வைக்கும் ஒரு பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Jana said...

இது பற்றி நிறைய புத்தகங்கள் வாசித்துள்ளேன். அதேநெரம் சில பயிற்சிகளையும் ஆர்வக்கோளாறில் செய்திருக்கின்றேன்.
ஆரம்பக்கடங்களில் சில வெ;றிகள் கிட்டின. ஆரம்ப பயிற்சியில் புள்ளி மறைதல், பெரும் புள்ளி மதைல், நிலா மறைதல்வரை உறுதியுடன் செய்து பார்த்தேன். பின்பு தொடர முடியாது போய்விட்டது.

shanmugavel said...

@ஜீ... said...

மருத்துவ முறைகளில் மனோவசியம் செய்யும்போது பேஷண்டும் ஒத்துழைக்கவேண்டும். விருப்பமில்லாத, ஒத்துழைக்க மறுக்கும ஒருவரை மனோவசியம் செய்வது கஷ்டம் என்று படித்திருக்கிறேன்!

ஆமாம் ஜீ நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

இது பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு மிகவும் குறைவு. மன நல மருத்துவரிடன் செல்லவே மிகவும் யோசிக்கும் சமூகம் நம்முடையது. பைத்தியக்காரர்களுக்கான மருத்துவமனை என்றுதான் அதை அறிகிறார்கள். நம் மனதின் பிரச்சினைகளுக்கும் அங்கு தீர்வு கிடைக்கும் என்பதை புரிய வைக்கும் ஒரு பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

நன்றி சங்கர்

shanmugavel said...

@Jana said...

இது பற்றி நிறைய புத்தகங்கள் வாசித்துள்ளேன். அதேநெரம் சில பயிற்சிகளையும் ஆர்வக்கோளாறில் செய்திருக்கின்றேன்.
ஆரம்பக்கடங்களில் சில வெ;றிகள் கிட்டின. ஆரம்ப பயிற்சியில் புள்ளி மறைதல், பெரும் புள்ளி மதைல், நிலா மறைதல்வரை உறுதியுடன் செய்து பார்த்தேன். பின்பு தொடர முடியாது போய்விட்டது.

ஒரு நிபுணரின் உதவியுடன் செய்வதே சரியானது ஜனா! நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி ஆவீர்கள் என்பார்களே அதுதான்.ஆழ்மனதில் கட்டளைகள் ஆழமாக பதிந்து போனால் அது செயல்பட ஆரம்பித்துவிடும்.//
அருமையான அலசல் பாராட்டுக்கள்.

சாகம்பரி said...

உறங்கிக் கொண்டிருப்பவன் காதில் விடியல் நேரத்தில் சொல்லப்படும் விசயம் மனதில் பதியும் என்று ஒரு ஆன்மீக பெரியவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அது தவறா?

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி ஆவீர்கள் என்பார்களே அதுதான்.ஆழ்மனதில் கட்டளைகள் ஆழமாக பதிந்து போனால் அது செயல்பட ஆரம்பித்துவிடும்.//
அருமையான அலசல் பாராட்டுக்கள்.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

உறங்கிக் கொண்டிருப்பவன் காதில் விடியல் நேரத்தில் சொல்லப்படும் விசயம் மனதில் பதியும் என்று ஒரு ஆன்மீக பெரியவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அது தவறா?

நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் .நன்றி சகோதரி