Monday, May 9, 2011

அதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.

சிலர் கண்ட்தையும் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.சிலர் என்ன சாப்பிடக்கொடுத்தாலும் வேண்டாம் என்பார்கள்.இது ஒரு நோயாக அறியப்படுகிறது.(Eating disorder).நாம் நினைத்தவுடன் உடனே சரி செய்யும் பிரச்சினை அல்ல இது.பொதுவாக இதை ஒரு பிரச்சினையாகவும் யாரும் கருதுவதில்லை.

                              அதிகமாக உண்பதால் ஏற்படும் விளைவுகள் நமக்கு தெரிந்த்துதான்.உடலின் கொழுப்பின் அளவு அதிகரித்து பருமனாகிவிடும்.அதற்குப்பிறகு வருவதெல்லாம் நோயதான்.அளவுக்கு மீறிப்போய் அறுவை சிகிச்சை தேவைப்படுவோரும் உண்டு.

                              மன அழுத்தம் உள்ளவர்கள் வழக்கத்துக்கு மாறாக  அதிகமாகவோ அல்லது மிக்க் குறைவாகவோ உணவு உண்பார்கள்.அவர்களுக்கு மன அழுத்தம் தீர ஆலோசனையோ,சிகிச்சையோ அளித்தால் இந்த பழக்கம் சரியாகிவிடும்.மனப்பதட்டம் உள்ளவர்கள் மிக்க் குறைவாக உணவு உண்பார்கள்.சரியாக பசியெடுக்காது.பதட்டம் நீங்கினால்,அல்லது சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும்.

                              சில குடும்பங்களில் அதிக உணவு எடுப்பதை பழக்கமாகவே வைத்திருப்பார்கள்.எப்போதும் சுவையான கொழுப்பு நிறைந்த உணவுகளை தயாரிப்பதும்,உண்பதுமே அவர்களுடைய முக்கிய பணியாக இருக்கும்.இம்மாதிரி குடும்பத்துக் குழந்தைகள் எடை கூடி பருமனாவது சாதாரணம்.இதற்கு குடும்ப ஆலோசனை தேவை.

                                இன்றைய இளம் பெண்கள் பலரும் உடல் எடை அதிகரிக்காமல் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமென்பதற்காக உணவை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.இது ஆபத்தான பழக்கம்.இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை பார்க்கலாம்.

                                உடல் பிரச்சினையின்றி இயங்க போதுமான கலோரிகளும்,உயிர்ச்சத்துக்களும்,தாதுக்களும் தேவை.உடல் எடை அதிகரிப்பு பயத்தால் சரியான அளவு உண்ணாமல் இச்சத்துக்கள் கிடைக்காமல் போனால் உடல் இயக்கத்தில் கோளாறுகளும்,நோய்களும் தவிர்க்கமுடியாது.

                                உணவுதான் உங்களையும்,என்னையும் உருவாக்கியிருக்கிறது.ஆற்றலைத் தந்து கொண்டிருக்கிறது.இயல்பாக அல்லாமல் அதிகமாகவோ,குறைவாகவோ உண்ணும் பழக்கம் இருந்தால் அதற்கான் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
-

7 comments:

Anonymous said...

கனடா வந்தப் புதிதில் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானேன். இரவு நேர வேளை, கடும் குளிர், நண்பர்கள் இல்லாத சுற்றம், வீட்டில் பிரச்சனை, பணத் தேவை, எல்லாவற்றுக்கும் மேலாக திடமில்லா எதிர்காலம் குறித்த பயம் - ஆகியவற்றால் எனது உணவுப் பழக்கம் மாறியது. இன்று வரை சரியான நேரத்துக்கு உண்ண முடியாமல் இருக்கின்றேன்...

அல்சர், உடல் மெலிதல் குண்டாதல் ஆகிய பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் கொஞ்ச நாளாக சரியான நேரத்துக்கு உண்ணவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும் ஆரம்பித்துள்ளேன்..

எமது வீட்டில் எமது தாயார் அதிக உணவைப் பறிமாறுவதே வழக்கம், இப்போது அதனை நிறுத்தும் படி கூறிவிட்டேன். எண்ணெய் சார்ந்த உணவுகள் பொறியல் என்பதை நிறுத்திவிட்டு, காய்கனி, அவியல் போன்றவற்றை உண்ண ஆரம்பித்துளேன். கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ எடைக் குறந்துள்ளேன் ..........

கலோரிகளைக் கணக்கிட்டே சாப்பிடுகின்றேன் ......... உப்பு, காரம், புளிப்பை இப்போதே குறைத்துக் கொண்டேன்..

அதனால் இப்போது எல்லாம் சோர்வு குறைந்து, மன அழுத்தம் குறைந்து, மூளை சுறுசுறுப்பாக மாறியுள்ளது .............

shanmugavel said...

உண்மைதான் இக்பால் செல்வன் சரியான உணவே உடல் ஆரோக்கியத்தையும் நல்ல மனநிலையையும் தரும்.நன்றி

Sankar Gurusamy said...

நமக்கு தேவையான உணவு நிச்சயம் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் நம் வயதுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். சற்று தெளிவு படுத்தினால் நல்லது.

நன்றி.

http://anubhudhi.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

உணவுதான் உங்களையும்,என்னையும் உருவாக்கியிருக்கிறது.ஆற்றலைத் தந்து கொண்டிருக்கிறது.இயல்பாக அல்லாமல் அதிகமாகவோ,குறைவாகவோ உண்ணும் பழக்கம் இருந்தால் அதற்கான் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.//
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

shanmugavel said...

@Sankar Gurusamy said...
நமக்கு தேவையான உணவு நிச்சயம் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் நம் வயதுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். சற்று தெளிவு படுத்தினால் நல்லது.

நன்றி.

உண்மைதான் சங்கர்.உணவை கலோரிகளில் கணக்கிட்டு உண்பது எப்படி என்ற பதிவில் உங்களுக்கான விடை இருக்கிறதே!thanks

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...
உணவுதான் உங்களையும்,என்னையும் உருவாக்கியிருக்கிறது.ஆற்றலைத் தந்து கொண்டிருக்கிறது.இயல்பாக அல்லாமல் அதிகமாகவோ,குறைவாகவோ உண்ணும் பழக்கம் இருந்தால் அதற்கான் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.//
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...
உணவுதான் உங்களையும்,என்னையும் உருவாக்கியிருக்கிறது.ஆற்றலைத் தந்து கொண்டிருக்கிறது.இயல்பாக அல்லாமல் அதிகமாகவோ,குறைவாகவோ உண்ணும் பழக்கம் இருந்தால் அதற்கான் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.//
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

தங்கள் கருத்துரைக்கு நன்றி ராஜராஜேஸ்வரி

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com