நான் ஆபாசமாக நடிக்கவில்லை.கவர்ச்சியாக நடிக்கிறேன்.நடிகைகளின் பிரபலமான வார்த்தைகள் இவை. இது யார் கண்டுபிடித்த்து என்று தெரியவில்லை.கவர்ச்சியென்றால் என்னவென்பது கொஞ்சம் புரியாத விசயம்தான்.
ஆபாசம் என்பது எளிதில் இனம் காண முடியும்.ஒரு காட்சியோ,உரைநடையோ,படைப்போ உங்களிடம் பாலுணர்வை தூண்டினால் அது ஆபாசம்.பாலுணர்வு தூண்டப்படும்போது மனிதனில் ஏற்படும் இன்ப நிலை அதை விரும்பவைக்கின்றன.
உலகெங்கும் ஆபாச புத்தகங்கள் குறிப்பிட்ட் வயதினிர் இடையே பிரபலமாக இருக்கிறது..வேறு வழியில்லை.அவர்களுக்கு யாரும் அதற்கென்று பாட்த்திட்டம் வைத்து சொல்லித்தர முடியாது.சில நாடுகளில் பாலியல் கல்வியும் இருக்கிறது.அதன் சாதக,பாதகங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.
வளரிளம் பருவத்தில் ஒரு இளைஞனுக்கு வரும் சந்தேகங்களை எப்படித்தான் தீர்த்துக் கொள்வது? அவன் அரைகுறையுமான சம வயது நண்பர்கள்,அல்லது கல்லூரியில் மூத்தவர்களிடம்கூட கேட்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு.அவன் ஆபாச புத்தகங்களை நாடி இருக்கிறான்.
அந்த வயது இளைஞர்களை பொருத்தவரை நம் சமூகத்தைப்போலவே பாலுணர்வு குற்றமானது.வெளியில் யாரிடமும் கேட்கும் விஷயம் அல்ல! அதனால் ரகசியமாக புத்த்கம் மூலம் எதையாவது தெரிந்து கொள்ளவிரும்புகிறான்.
மனிதனில் பசி போன்ற இயற்கையான ஒரு உணர்வு எப்படி குற்றமானது?அவனுடைய உணர்வுகளையும் அது தொடர்பான சந்தேகங்களையும் என்னதான் செய்வது? தெரியாது என்பதுதான் பதில்.ஆபாச இலக்கியமும்,படங்களும் சக்கைப்போடு போடுவது இதனால்தான்.
உண்மையில் வளரிளம் பருவத்து இளைஞன் ரகசியமாகவே என்னென்னவோ செயல்களில் ஈடுபட்டு மன் அழுத்த சூழ்நிலைகளால் படிப்பிலும்,செயல்களிலும் கவனம் சிதறி வாழ்க்கையை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
பாலியல் கல்வி, பருவ வயது ஆலோசகர்களை கல்லூரி,பள்ளிகளில் நியமனம் செய்வது போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போதும் இன்னும் அதில் ஒரு அடி கூட தாண்டவில்லை.நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
10 comments:
உண்மை பாஸ்
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு..
thanks karun sir
@மைந்தன் சிவா said...
உண்மை பாஸ்
நன்றி பாஸ்
@ஷர்புதீன் said...
:)
நன்றி சார்
எதையும் அறிந்து கொள்ளும் வரைக்கும் தான் அதன் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போலத் தான் இப் புத்தகங்களும் என நீங்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் சகோ.
எங்கள் நாட்டில், ஒன்பதாம் கிளாஸ் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடப் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் யௌவனப் பருவம் பற்றியும், பாலியல் பற்றி, உடலுறவு பற்றிய விளக்கங்கள், பூப்படைதல். கருக்கலைப்பு, பாதுகாப்பான உறவுகள் பற்றி பல விடயங்கள் இருக்கின்றன,
கல்வியுடன் இணைத்துக் கற்பிக்கும் போது இந்த விடயங்கள் தொடர்பான ஈர்ப்பு இல்லாமற் போய் எல்லாவற்றையும் சகஜமாக நோக்கும் நிலமை வரும் என்பது எனது கருத்து.
உண்மையான கவலை. பாலியல் கல்வி மறுக்கப்படும்பொழுது இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
@நிரூபன் said...
எதையும் அறிந்து கொள்ளும் வரைக்கும் தான் அதன் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். அது போலத் தான் இப் புத்தகங்களும் என நீங்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் சகோ.
நன்றி நிரூபன்
நிரூபன் said...
எங்கள் நாட்டில், ஒன்பதாம் கிளாஸ் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடப் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் யௌவனப் பருவம் பற்றியும், பாலியல் பற்றி, உடலுறவு பற்றிய விளக்கங்கள், பூப்படைதல். கருக்கலைப்பு, பாதுகாப்பான உறவுகள் பற்றி பல விடயங்கள் இருக்கின்றன,
கல்வியுடன் இணைத்துக் கற்பிக்கும் போது இந்த விடயங்கள் தொடர்பான ஈர்ப்பு இல்லாமற் போய் எல்லாவற்றையும் சகஜமாக நோக்கும் நிலமை வரும் என்பது எனது கருத்து.
ஆம்.சகோ ஆனால் அது இப்போதைக்கு ஆகக் கூடிய காரியமாக இல்லை.நன்றி
@Sankar Gurusamy said...
உண்மையான கவலை. பாலியல் கல்வி மறுக்கப்படும்பொழுது இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
பகிர்வுக்கு நன்றி.
ஆம்.சங்கர் நன்றி
Post a Comment