Monday, May 23, 2011

இந்தியா-பாலியலும் பரிதவிப்பும்


                               இன்னும் பாடபுத்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.இந்தியக் கலாச்சாரம் பெருமை வாய்ந்த்து.அது ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்.உலகில் வேறெங்கும் இல்லாத பெருமைதான்.ஆனால்,உலகம் நம்மை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்ட்து! ஏன்?

                               ஓரினச்சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்கள்.தொண்டு நிறுவன்ங்கள்,சமூக சேவையாளர்கள் அவர்களும் மனிதர்கள் தான் என்றார்கள்.அதில் தவறில்லை என்றார்கள்.அரசாங்கமும் அப்படியே சொல்கிறது.மனித நேயம் வளர்ந்துவிட்ட்து.கடந்த பத்தாண்டுகளாகத்தான் இதெல்லாம்! போகட்டும் ஏன் இப்படி?


                                பெண் பாலியல் தொழிலாளர்களை கைது செய்ய வேண்டாம் என்று காவல் துறை அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.அவர்களுக்காக வாதாடுவதற்கு சமூக சேவை அமைப்புகள் போட்டியிடுகின்றன.அரசாங்கம் அவர்களுக்கு ஆணுறையும்,பெண்ணுறையும் வழங்குகிறது.முன்னுரிமை அளித்து மருத்துவ வசதிகள் செய்து தருகின்றன.

                                 அப்படியென்ன அவர்கள் நாட்டுக்கு செய்தார்கள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? அவ்ர்கள் வேறு வேலை செய்யலாம்! சீச்சீ தானே? ஆனால் அவர்களுக்கு ஆணுறை வழங்குவதன் மூலம் அரசாங்கம் பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறதா? அல்லது மனித நேயமா? என்ன பண்பாடு இதெல்லாம்? போகட்டும் ஏன் இப்படி?

                                ஆம்.இனிமே அப்படித்தான்! நீங்கள் அபச்சாரம் என்றாலும்,சீச்சீ என்றாலும்,வெட்க்க்கேடு என்றாலும் இனிமே அப்படித்தான்! நீங்கள் ஆள்வோரை மாற்றினாலும் அவர்களும் செய்துதான் ஆக வேண்டும்.வேறு வழியில்லை.மனிதநேயம் எல்லோருக்கும்தானே இருக்கிறது.

                                 அரசுகளுக்கு இருக்கும்போது சாதரண குடிமகன் நான் எனக்கு மட்டும் இருக்க்க்கூடாதா என்ன? நானும் பரிவைத்தூண்டும் வகையில் பெண் பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம்,ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி வசீகரமான தலைப்பு வைத்து(நன்றி,சி.பி) ஒரு பதிவு என்று எழுதினேன்.இதுவும் போகட்டும்!

                                  அநேகமாக 2004 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.முன்னாள் அமெரிக்க அதிபர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள நான்கு விஷயங்களை குறிப்பிட்டார்.மற்ற மூன்றை விட்டுவிடுவோம்! அதில் ஒன்றுதான் மேற்கண்ட மன மாற்றங்களுக்கெல்லாம் காரணம்.அது எய்ட்ஸ்.

                                  ஆம்,உலகம் இந்தியாவைப் பார்த்து கேலி செய்து சிரித்த்து,ஒருவன் ஒருத்தி கலாச்சாரத்துடன் வாழும் நாடு அதிக எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டுள்ள உலகில் இரண்டாவது பெரிய நாடு! என்னே நம் பெருமை! இத்தனைக்கும் பாலுறவு மூலம் எய்ட்ஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு 0.1 சதவீதம்தான்.ஆனால் இந்தியாவில் 85 சதவீதம் செக்ஸ் மூலமேபரவுகிறது.கொஞ்சம் யோசித்தால் நம்மவர்களின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியும்.

                                                                           சரி,கிளிண்டன் சொன்ன வார்த்தைகள் சரியா? ஆமாம்.இந்தியா மூழ்கிப்போகும் என்றுஅஞ்சிய காலம் அது.வேகமாக பரவிக்கொண்டிருந்த்து எய்ட்ஸ்.எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செய்யும் செலவு குறைந்த பட்சம் ஒருமாத்த்திற்கு ஆயிரம் ரூபாய்.இது மருந்துகளுக்கான செலவு மட்டும்.இவை தவிர மறைமுக செலவுகள் ஏராளம்.

                               இந்தியாவில் உள்ள எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் தரப்படவேண்டும்.பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து நிற்கிறார்கள்.லட்சங்களில் விதவைகள்.கட்டுப்படுத்தபடாமல் விட்டிருந்தால் மோசமான நிலையை சந்தித்திருக்கும் இந்தியா!அதன் வல்லரசுக்கனவு சிதறியிருக்கும்.பரவிக்கொண்டிருக்கும் இக்கிருமியை கட்டுப்படுத்த அதன் மூலத்தை தேடினார்கள்.

                               பாலியல் தொழிலாளர்களையும்,ஓரினச்சேர்க்கையாளர்களையும் தேடிப்போனார்கள்.அவர்களுடன் நல்லுறவு கொண்டார்கள்.அவர்களை புரிந்து கொண்டார்கள்.அவர்கள் மீது பரிவு வளர்ந்த்து.அவர்களும் மனிதர்களே என்ற நேயம் துளிர்த்த்து.அது வரை அவர்கள் உலகம் இருட்டில் இருந்த்து.அவர்களை புரிந்துகொண்டு அன்பு செலுத்தப்பட்ட பின்பு அவர்களூம் ஒத்துழைக்க ஆரம்பித்தார்கள்.

                               ரொம்ப தாமதமாகவே இந்தியா விழித்துக்கொண்ட்து.எண்பதுகளில் எய்ட்ஸ் பற்றிய பேச்சுக்கள் வந்தபோது நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்.நாம் அதைப்பற்றி கவலைப்பட்த்தேவையில்லை என்ற கருத்து நம்முடைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட்து.ஓரளவு உண்மைதான்.ஆனால் முழுதும் உண்மையல்ல!

                               சரியான புரிந்துணர்வு இல்லாத்தால் நம்மால் உரிய நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.இன்று எச்.அய்.விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடிகளை வேறு திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.இன்னும் நமக்கு புரிதல் தேவைப்படுகிறது.

-

7 comments:

Unknown said...

நச்சென்ற பதிவு...திருந்துங்கள் பாதகர்களே...

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

நச்சென்ற பதிவு...திருந்துங்கள் பாதகர்களே...

நன்றி சிவா

சக்தி கல்வி மையம் said...

வந்தேன் , படித்தேன், வாக்களித்தேன், கிளம்புகிறேன்..

Jana said...

இன்னும் நமக்கு புரிதல் தேவைப்படுகிறது.
அதுவே உண்மை

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வந்தேன் , படித்தேன், வாக்களித்தேன், கிளம்புகிறேன்..

Thank you sir

shanmugavel said...

@Jana said...

இன்னும் நமக்கு புரிதல் தேவைப்படுகிறது.
அதுவே உண்மை

நன்றி ஜனா!

நிரூபன் said...

பாலியல் பற்றிச் சரியான புரிந்துணர்வில்லாத மனித மனங்களைப் பற்றிய அலசல் அருமை சகோ.