வயாகரா என்றொரு மாத்திரை இருப்பதும் அதன் பயன்பாடும் நான் சொல்லவேண்டிய தேவையில்லை.ஆனால் ஆர்வக்கோளாறால் அதை தேவாமிர்தம் போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெங்களுருவில் பணியாற்றும் மருந்தாளுனர் ஒருவர் கூறினார்.
மற்ற இடங்களில் விசாரித்தபோதும் இதை உறுதி செய்யும் விதமாகவே சொன்னார்கள்.மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை இன்றி நேரடியாக கடைகளில் கேட்டு வாங்குவதும் பயன்படுத்துவதும் தவறானது.ஆபத்தில் முடியலாம்.இருந்தும் யாரும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
வயாகரா என்ற பெயரில் போலி வணிகமும் அதிகம் என்கிறார்கள்.மாத்திரை கேட்டு வருபவனின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு மருந்து கடைகள் பணம் பிடுங்குவது அதிகம்.இது தெரியாமல் அது வயாகராவா என்பதே தெரியாமல் ரகசியமாக வாங்கிக் கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.
இந்தியாவில் 1998 ஆம் ஆண்டில்தான் வயாகரா அறிமுகமானது.பல்வேறு பெயர்களில் மார்க்கெட்டில் இருக்கிறது. Androz,Caverta,Edegra,Penegra,Silagra போன்ற பெயர்களில் இந்தியாவில் கிடைக்கிறது.இந்த மருந்தை பாலியல்துறை மருத்துவர்கள்,சிறுநீரகவியல் நிபுணர்கள்,நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் பரிந்துரையின் பேரிலேயே விற்கப்படவேண்டும்.
உண்மையான குறைபாடு உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.ஆனால் முறையற்ற ஆர்வக் கோளாறு காரணமாகவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.மருந்து கடைகார்ர்களுக்கும் பணம் வந்தால்போது என்று விற்பனை செய்து விடுகிறார்கள்.
வயாகரா என்பது பாலியல் ஆர்வத்தை தூண்டும் மருந்தல்ல!ஆண்களின் சில குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து மட்டுமே.சுமார் எண்பது சதவீதம் பேருக்கு முழுமையான பலன் அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன்.
இதயம் தொடர்பான எந்த வகை கோளாறுகள் இருந்தாலும் இம்மருந்து மோசமான விளைவுகளை உருவாக்கலாம்.ரத்த அழுத்தம் விரும்பத்தகாத வகையில் இருக்கும்.இவை தவிர ரத்த நாளங்களை நீர்த்துப்போக செய்யும்.
இவை தவிர்த்த பக்கவிளைவுகளும் இருக்கிறது.பார்வைக்குறைபாடு.தலைவலி,வயிற்றுக்கோளாறுகள் ஆகியவையும் நேரலாம்.எப்படியிருப்பினும் சுயமாக வாங்கி பயன்படுத்துவது ஆபத்தானதே! பொதுவான பலவீன்ங்களை புரிந்துகொண்டு கண்ட்தையும் வயாகரா என்று சொல்லி பணம் பரிப்பதும் சுரண்டுவதும் நடக்கிறது.
வயாகரா பாலியல் ஆர்வத்தை தூண்டும் மருந்து என்று தவறாக புரிந்துகொண்ட்தால் ஏற்படும் விளைவுகளே தேவையில்லாத பழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.பின் விளைவுகள் பற்றி தெரியாமல் செய்யும் தவறுகள் இவை.
8 comments:
ஒரு விழிப்புணர்வு பதிவு..
வயாகரா மட்டுமல்ல.. பெரும்பாலும் சுய மருத்துவமே செய்து கொள்ளும் அன்பர்களும் இருக்கிறார்கள். இதில் அரசும் கண்டுகொள்வதில்லை..
இது எந்த விதமான பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்று இன்னும் சற்று விளக்கமான விவரங்கள் கிடத்தால் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
dfjhopwer roufq rp asofuqwn ]r q.lw
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு விழிப்புணர்வு பதிவு..
THANKS SIR
@Sankar Gurusamy said...
வயாகரா மட்டுமல்ல.. பெரும்பாலும் சுய மருத்துவமே செய்து கொள்ளும் அன்பர்களும் இருக்கிறார்கள். இதில் அரசும் கண்டுகொள்வதில்லை..
இது எந்த விதமான பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்று இன்னும் சற்று விளக்கமான விவரங்கள் கிடத்தால் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி...
ஆம்.சங்கர் நன்றி
@siva blog said...
dfjhopwer roufq rp asofuqwn ]r q.lw
????????????? thanks sir
அதுதான்..உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயகரா என்று வடகப்பட்டி கவிஞர் எப்போதோ சொல்லி விட்டாரே :)
@Jana said...
அதுதான்..உயிர் காதலை தூண்டவே வேண்டாம் வயகரா என்று வடகப்பட்டி கவிஞர் எப்போதோ சொல்லி விட்டாரே :)
ஆம்,ஜனா நன்றி
Post a Comment