அமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.ஆனால் மிகத்தாமதாமாக இதைக் கேள்விப்பட்டேன்.எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிலோ,ஊரிலோ அமாவாசை நாளில் சுபகாரியங்களை செய்யாமல் தவிர்ப்பதை பார்த்திருக்கிறேன்.
அமாவாசை மட்டுமல்ல அதற்கு அடுத்த தினத்தில் எந்த நல்ல செயல்களையும் செய்யமாட்டார்கள்.வெறும்வானம் என்பார்கள்.திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வீட்டுக்கு முன்பணம் கொடுக்கப்போனபோது இன்று அரைமுட்டை அதனால் நாளை கொடுங்கள் என்றார் உரிமையாளர்.
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அழைத்தாலும் அமாவாசைக்கு அடுத்த தினம் மட்டும் ஆகாத தினமே!இது எங்கும் இருக்கும் நம்பிக்கை.பஞ்சாங்களில் அது பிரதமை திதி.அமாவாசையும் ஒரு திதிதான்.மாதந்தோறும் ஏற்படும் நிகழ்வு.இரண்டு தின்ங்களும் பெரும்பான்மையோருக்கு முக்கியமானவை.
வானியல்படி சூரியனுக்கும்,சந்திரனுக்கும் பூமி இடையில் வரும் நாள் தான் அமாவாசை.சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுவதால் கண்ணுக்கு தெரிவதில்லை.சூரியனின் ஒளி பட்டே சந்திரன் பிரகாசிக்கிறது.இது அறிவியல்.அமாவாசை எப்போது ஏற்படும் என்பதை பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோம்.பல்வேறு சுபகாரியங்களை குறிப்பிட்ட திதிகளில் செய்யலாம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது.அதில் அமாவாசை திதி எந்தவொரு நல்ல செயல்களுக்கும் குறிப்பிடப்படவில்லை.ஆனால் சில பகுதிகளில் நல்ல நாளாக தெரிவு செய்தார்கள் என்பது விளங்காத ஒன்று.
சந்திரன் மறைந்திருக்கும் நாள் என்பதால் சந்திரனுக்கு உரிய விஷயங்கள் பாதிப்புக்குள்ளாகத்தான் செய்யும்.மனமும் உடலும் சந்திரனுக்குரியவை.எனவே மனநிலையும் உடல்நிலையிலும் பாதிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.அன்றைய தினம் எப்படி நல்ல காரியங்களை தொடங்குவது சரியாக இருக்கமுடியும்?
தவிர்க்க முடியாத சமயங்களில் இதையும் சொல்ல கேட்டிருக்கிறேன்.அமாவாசையில் செய்தாலும் செய்யலாம் வெறும்வானத்தில்(அடுத்த நாளான பிரதமையில்) செய்யக்கூடாது! வேறு வழியில்லாத நேரத்தில் செய்தாலும் செய்யலாம் என்பது அமாவாசையில் மேற்கொள்ளலாம் என்று உருவாகிவிட்ட்து என்று தோன்றுகிறது.
சந்திரன் நல்ல நிலையில் அமையப்பெற்ற ஜாதகம் உள்ளவர்கள் ,உச்சம் பெறும் ரிஷபம்,ஆட்சி வீடான கடகத்தில் ஜனித்தவர்கள் ,இவற்றோடு குரு போன்ற சுபர் பார்வை பெற்றவர்கள் அமாவாசை தினத்தில் சுப காரியம் செய்தால் அதிக பாதிப்பு இருக்காது என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
முன்னோர்களை வணங்குதல்,கோயிலுக்கு செல்வது ஆகியவையே மரபாக இருந்துவரும் ஒன்று.அமாவாசை நல்ல நாள் என்பது இப்போது ஏற்பட்ட ஒன்று என்றே தோன்றுகிறது.எனக்கு தோன்றும் ஒரு விஷயம் நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே!
9 comments:
என்ன பாஸ் டெம்ளேட் மாத்திட்டீங்க??ஆனா நல்லா இருக்கு பாஸ்
என்னமோ,எனக்கு இந்த நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்ல பாஸ்
@மைந்தன் சிவா said...
என்ன பாஸ் டெம்ளேட் மாத்திட்டீங்க??ஆனா நல்லா இருக்கு பாஸ்
இக்பால் செல்வன் சொன்னாரு,எனக்கும் ரொம்ப நாள் எண்ணம்.இப்போதான் நிறைவேறிச்சு.நன்றி சிவா
@மைந்தன் சிவா said...
என்னமோ,எனக்கு இந்த நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்ல பாஸ்
நல்லது சிவா இது நம்பிக்கை இருக்கறவங்களுக்குதான்.நன்றி
எங்க ஊர் பக்கமும் அமாவாசைக்கு அடுத்த நாள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அந்த நாளை எங்கள் பக்கம் பாட்டி முகம் என்று சொல்வார்கள்
சகோ, இந்த நாளும் கோளும் நமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட வரம்புகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
எல்லா நம்பிக்கைகளும் மனித மனங்களில் தான் தாங்கியுள்ளது. விரும்பினால் கடைப் பிடிக்கலாம். விருப்பமில்லையோ உதறித் தள்ளலாம்.
இதே போலத் தான் அமாவாசை நாள் சுப காரியங்களும்,.
@Karikal@ன் - கரிகாலன் said...
எங்க ஊர் பக்கமும் அமாவாசைக்கு அடுத்த நாள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அந்த நாளை எங்கள் பக்கம் பாட்டி முகம் என்று சொல்வார்கள்
ஆமாம் சார்,ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொருவிதம்.நன்றி
@நிரூபன் said...
சகோ, இந்த நாளும் கோளும் நமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட வரம்புகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
எல்லா நம்பிக்கைகளும் மனித மனங்களில் தான் தாங்கியுள்ளது. விரும்பினால் கடைப் பிடிக்கலாம். விருப்பமில்லையோ உதறித் தள்ளலாம்.
இதே போலத் தான் அமாவாசை நாள் சுப காரியங்களு
உண்மைதான் சகோ நம்பிக்கை உள்ளவர்களே அதிகம்.
கடவுள் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று அண்டப்புழுகு புழுகினாலும், நாள் என் செயும், கோள் என் செயயும் என்றும் நம்மாளுக பாடி இருக்காங்க தானே சார் :)
Post a Comment