இது யாருக்கும் தெரியாதா என்ன? ஆம்.சோப்புடன் சரியாக கை கழுவப்பட்டால் 3.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.இவ்வாறு உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை சுவாசம் தொடர்பான நோய்களாலும், வயிற்ருப்போக்காலும் பலியாகின்றன.
குழந்தைகளை சுகாதாரமாக பாதுகாப்பது பெரும் சவாலாகவே இன்னமும் இருப்பது நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.நுரையீரல்,குடல்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் முறையாக கை கழுவாததனால்உடலுக்குள் செல்கின்றன.குழந்தைகளிடையே நெருக்கத்தில் தொடர்ந்து மற்றவர்களிடம் பரவுகின்றன.ஆனால்,இது அவ்வளவு எளிதானதல்ல.
பள்ளிகளில்,விளையாடுமிடங்களில்,பொது இடங்களில் கை கழுவுவதை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுமானால் -முயற்சி இருந்தால் முடியாதது என்ன இருக்கிறது.நம்முடைய மிகப்பெரிய பலவீனம் இது போன்ற நோக்கங்களுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளாதது.
சிறு வயதில் திரும்பத்திரும்ப சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பழக்கம் நல்ல விளைவுகளை தரும் என்பது நமக்கு தெரிந்ததே.குழந்தைகளை சுகாதாரமற்ற நிலையில் பணிபுரிபவர்களை தொடவிடாமல் இருப்பது நல்லது.தங்களது பனி காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்செல்ல நேரும்போது காப்பகத்தில் இத்தைகைய சுகாதார முறைகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவது போன்றவை நோய்களையும் தொடர்ந்து இறப்புகளையும் தடுக்கும்.
குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதும்,சோப்பு வைக்கப்பட்டிருப்பதும் போன்ற சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பள்ளிகளை தேர்ந்தெடுக்கவேண்டும்
.
சில வழிமுறைகள் :
கையை குழாயில் நனையுங்கள்.பின்னர் சோப்பு பயன்படுத்தி விரல் இடுக்குகள் உள்பட அனைத்து இடங்களிலும் மணிக்கட்டை தாண்டி நன்றாக தேயுங்கள்.சுமார் இருபது நொடிகள் வரை தேய்த்து பின் குழாயை திறந்து சுத்தமாக கழுவுங்கள்.டவல்,சுத்தமான துணி, பேப்பர் டவல் கொண்டு துடைக்கலாம்.கையை உலர வைப்பதும் நல்லதுதான்.எப்போதெல்லாம்?
(இது மீள்பதிவு)
-

- சாப்பிடுவதற்கு முன்பும்,பின்பும்.
- வெளியில்,பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய உடன்
- கழிப்பறை சென்று வந்தவுடன்
- விளையாடிவிட்டு வந்தவுடன்
5 comments:
முயற்சி செய்தால் முடியாது ஒன்றுமில்லை... முடிந்த வரை விளையாடிவிட்டு வரும் குழந்தைகளை கால்களை அலம்பிவிட செய்வது நலம்.. நல்ல பகிர்வுக்கு நன்றி
கைச் சுகாதாரம் பற்றிய பதிவும், கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வும் பயனுள்ளதாக இருக்கிறது சகோ.
சிறுவர்களைப் பொறுத்தவரை நக இடுக்குகளில் தான் மண், மற்றும் இதர பொருட்கள் போய் ஒட்டிக் கொள்கின்றன, ஆகவே பெரியவர்கள் சிறுவர்களது கைகளைக் கழுவுவதோடு, நக இடுக்களையும் பராமரித்து அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும்,
தேவையான பதிவு ...
சிறந்த விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
Post a Comment