Sunday, May 1, 2011

பத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.

                                                       மனிதரில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் அந்த நோய்க்கிருமி இந்தியாவில் நாற்பது சதவீதம் பேர் உடலில் இருக்கிறது.பேருந்தில்,ரயிலில் ,அல்லது கூட்டமான இடங்களில் நோயுள்ள ஒருவர் இருமும்போதோ ,தும்மும்போதோ நீங்கள் அதை வாங்கிக்கொள்கிறீர்கள்.உங்கள் உடலிலும் இருக்கலாம்.ஆனால் தெரியாது.உங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறையும்போது இருமல் துவங்கும்

                                                         .நாற்பது சதவீதம் பேருக்கு இருந்தாலும் பத்து சதவீதம் நபர்களுக்கு மட்டும் நோய உண்டாகிறது.மற்றவர்களுக்கு கிருமி உடலில் இருந்தாலும் அது பாட்டுக்கு சமயம் வராதா(நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறையாதா) என்று சுற்றிக்கொண்டிருக்கும்.ஆம் காசநோய் தான்.இந்நோயுள்ள ஒருவர் பதினைந்து பேருக்காவது பரப்பிவிடுகிறார்.பெரும்பாலானவர்களுக்கு  தெரிந்த தகவல் இருமிக்கொண்டிருப்பார்கள்.உடல் குறைந்துபோய் இருக்கும்.மேலும் இருக்கிறது.


                                                           முடி,நகம் தவிர இந்நோய் உடலின் எந்த உறுப்பையும் தாக்கும்.பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் இருமல்,உடல் எடை குறைதல்,மாலையில் காய்ச்சல் ,சளியில் ரத்தம்,பசியின்மை,போன்றவை இதன் அறிகுறிகள்.வெளிப்படையாக தெரிந்த இருமல், நுரையீரலில் ஏற்படும் காசநோய்.இதில் இரண்டு வகை இருக்கிறது.

                                                               வழக்கமாக சளி பரிசோதனை மூலம் கண்டறியப்படுவது.சிலருக்கு மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்போது சளியில் கிருமிகள் தெரியாது.ஆனால் அறிகுறிகள் இருக்கும்.இவர்களுக்கு எக்ஸ்ரே மூலம் உறுதி செய்வார்கள்.நுரையீரல் தவிர உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் காச நோய் இன்னொரு வகை. கழுத்துப்பகுதியில் கட்டி இருக்கும் ,பரிசோதனையில் காசநோய் என்று தெரியும்.


                                                                 
சிலருக்கு மூளையில்(meningitis),சிலருக்கு வயிற்றில் ,சிறுநீரகத்தில்,குடல்களில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.இவர்களுக்கு இருமல் இருக்காது.உடல் எடை குறைவதும்,மாலை நேர காய்ச்சலும்,பசியின்மையும் இருக்கும்.இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.ஆறு முதல் ஒன்பது மாதங்கள் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

                                                             இதில்தான் பெரிய சிக்கல் .குடிப்பது,பக்க விளைவுகள் ,விழிப்புனர்வில்லாமல் ஒழுங்காக மருந்து சாப்பிடாமல் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இரண்டு மாதம் சாப்பிட்டால் ஓரளவு அறிகுறிகள் குறைந்துவிடும்.இருமல் இருக்காது.உடனே நிறுத்திவிடுவார்கள்.நோய் முழுமையாக குணமாகாமல் மீண்டும் மருத்துவமனை வருவார்கள்


                                                             .இவர்களில் சிலருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மருந்துக்கு பாக்டீரியாக்கள் பழகி விட்டிருக்கும்.ட்(resistance).கூட்டு மருந்து வேலை செய்யாது.இதை MDR TB (Multi drug resistant) என்கிறார்கள்.இந்தநிலை வந்தால் இரண்டு வருடம் மருந்துகள் சாப்பிடவேண்டும்.அதற்குள் அவர் எத்தனை பேருக்கு பரப்புவார் என்று தெரியாது.

                                                               இந்தியா போன்ற சத்துக்குறைவால் வாடும் நாடுகளில் இந்நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.எச் .ஐ .வி. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் அவர்களிடையே காசநோய் அதிகரித்து வருகிறது.இது மேலும் மேலும் சுமை.காச நோய் அறிகுறி உள்ள யாரையாவது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால் நீங்களும் நாட்டுக்கு நன்மை செய்தவர்தான் .கூடத்தில் யாராவது இருமும்போது ஜாக்கிரதையாக இருக்கலாம்.அவரை துணி வைத்து இரும சொல்லலாம்.
-

4 comments:

Sankar Gurusamy said...

உண்மையில் எல்லா வியாதிக்குமே தொடர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் குறையத்தொடங்கியதும் மருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள்.

சிறந்த விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Jana said...

உண்மைதான். நாம் நலமாகத்தானே இருக்கோம் என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது மெடிக்கல் செக்கப் பண்ணுவது நல்லதுதான் போல இருக்கு!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

உண்மையில் எல்லா வியாதிக்குமே தொடர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் குறையத்தொடங்கியதும் மருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள்.

சிறந்த விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி..

ஆம்.சங்கர் குருசாமி.காய்ச்சலுக்கு போனால் கூட மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்வதில்லை.சுமாரானவுடன் மாத்திரையை விட்டுவிடுவார்கள்.நன்றி

shanmugavel said...

@Jana said...

உண்மைதான். நாம் நலமாகத்தானே இருக்கோம் என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது மெடிக்கல் செக்கப் பண்ணுவது நல்லதுதான் போல இருக்கு!

ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்யலாம் ஜனா.நன்றி