வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.
நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .
பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த நியுஸ் பேப்பர்.அதில் உள்ள ஆபத்து தந்தைக்கு தெரியவில்லை.கையில் உள்ள காரீயம் மூளை வளர்ச்சியிலிருந்து ,நரம்பு மண்டலம்,உடலியக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.
பெரும்பாலான உணவகங்களிலும் பழைய நியூஸ் பேப்பர்களை கையைத்துடைக்க கிழித்து வைத்திருக்கிறார்கள்.அதில் துடப்பவர்களே அதிகம்.சாப்பிட்டுவிட்டு கையை கழுவியவுடன் ஈரக்கையில் துடைப்பதால் வேதிப்பொருட்கள் உடலுக்கு செல்வதை தவிர்க்க முடியாது.
உணவகங்களில் கையத்துடைக்கத்தான் என்றில்லை.சாலையோரங்களில் ,பலகார கடைகளில் வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட உணவுப்போருட்களுக்கும் பழைய செய்தித்தாள்களையும்,சஞ்சிகைகளையுமே பயன்படுத்துகிறார்கள்.எண்ணையுடன் சூடாக இருப்பதால் அதிக காரீயத்தை உறிஞ்சி நம் உடலுக்குள் சேர்க்கிறது.
போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.கையைக்கழுவி விட்டு துடைக்காமல் உலர்த்துவதே சரியான முறை.பொதுமக்கள் நலன் கருதி அச்சிட்ட தாள்களை உணவு வைத்து வழங்கவும்,கையைத்துடைக்க உணவகங்களில் வைக்கவும் சுகாதாரத்துறை தடை செய்ய வேண்டும்.பல்வேறு உடல் நல பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.
தற்போது மாம்பழ சீசன் .மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்து டன் டன்னாக ஆங்காங்கே கொட்டி அழிக்கப்படுகிறது.விரைவாக பழுக்க வைத்து விற்று பணம் பார்ப்பதற்காக வியாபாரிகள் மக்கள் நலனை மறந்து விடுகிறார்கள்.
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்கள் வயிற்றுப் பிரச்சினையை உடனடியாக கொண்டு வரும்.குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.பழங்கள் வாங்குபவர்கள் பழக்கப்பட்ட கடையிலேயே வாங்குவது நல்லது.இயற்கையாக பழுத்த பழங்களில் சீராக மஞ்சள் நிறம் இருக்காது.பலத்தின் சில பகுதிகள் பச்சை நிறத்தில் இருக்கும்.கல் வைத்து பழுக்க வைத்தால் இயல்பான ருசி இருக்காது.தெரியாத இடத்தில் வாங்கினால் முடிந்தவரை தோலை தவிர்த்து விடவும்.
கணவன் மனைவி ஜோக் ஒன்று.மனைவி கேட்டார் ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் "
கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.
16 comments:
ஆமாம், உடலுக்கு நேடு விளைவிக்கும் ஆபத்துகள் மலிவான விலையில் கிட்டுகின்றன. ஆனால் உயர்ரக உணவகங்களில்கூட அஜினோ மோட்டோ சேர்க்கிறார்கள். கல்லீரலை பாதிக்கும் இது வட இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பதிவிற்கு நன்றி திரு.சண்முகவேல்.
போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.//
பதிவிற்கு நன்றி.பாராட்டுகள்.
அண்ணே இங்கு வெளிநாட்டில், உணவகங்கள் வைத்திருப்பவர்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு்! கேட்டால் மலைத்துவிடுவீர்கள்!
அதனால் நம்பி சென்று சாப்பிட முடியும்! சுத்தமும் நூறுவீதம் உத்தரவாதம்!
உங்கள் கட்டுரை பல விழிப்புணர்வு செய்திகளை சொல்லி சென்றது!
கடைசி ஜோக்! ஹி ஹி ஹி ஹி ....!!
அடப்பாவிகளா நானும் இந்த மாதிரி பேப்பரால் வாய் எல்லாம் துடைத்திருக்கனே..
பயனுள்ள தகவல் பாஸ்...
ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தரக்கடைகளில் சாப்பிட்டுவிட்டு துடைக்க தினப்பேப்பர்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஒரு செய்தியில் தொன் கணக்கில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை அழிப்பதை பார்த்தேன். நல்ல வழிப்புணர்வு.
@சாகம்பரி said...
ஆமாம், உடலுக்கு நேடு விளைவிக்கும் ஆபத்துகள் மலிவான விலையில் கிட்டுகின்றன. ஆனால் உயர்ரக உணவகங்களில்கூட அஜினோ மோட்டோ சேர்க்கிறார்கள். கல்லீரலை பாதிக்கும் இது வட இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பதிவிற்கு நன்றி திரு.சண்முகவேல்.
உண்மைதான் சகோதரி நன்றி
அன்பின் வேல் - சிந்தனை அருமை - அரிய தகவல்கள் - நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் வேல் - நட்புடன் சீனா
@இராஜராஜேஸ்வரி said...
தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வெளிநாட்டில் உள்ள தரம் இந்தியாவுக்கு வரவேண்டுமானால் விழிப்புணர்வே முக்கியம் தம்பி நன்றி
@மைந்தன் சிவா said...
அடப்பாவிகளா நானும் இந்த மாதிரி பேப்பரால் வாய் எல்லாம் துடைத்திருக்கனே..
பயனுள்ள தகவல் பாஸ்...
இனி ஜாக்கிரதை சிவா.நன்றி
@Jana said...
ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தரக்கடைகளில் சாப்பிட்டுவிட்டு துடைக்க தினப்பேப்பர்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஒரு செய்தியில் தொன் கணக்கில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை அழிப்பதை பார்த்தேன். நல்ல வழிப்புணர்வு.
ஆம் ஜனா,அதனால்தான் இந்தப்பதிவு.நன்றி
@cheena (சீனா) said...
அன்பின் வேல் - சிந்தனை அருமை - அரிய தகவல்கள் - நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் வேல் - நட்புடன் சீனா
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா
சகோ, புது டெம்பிளேட் கலக்கலாக இருக்கு சகோ.
உண்மையில் வெளியில் சாப்பிடப் போகும் போது எம்மில் பலர் உணவின் தரத்தினையோ, சுகாதாரத்தினையோ கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் உணவின் விலையினைத் தான் கருத்திற் கொள்கிறார்கள்.
எங்கே விலை மலிவாக இருக்கிறதோ அங்கே உள்ள சுகாதாரம், சுத்தத்தினைப் பற்றி அசட்டை செய்யாதவர்களாகத் தான் உணவினை உண்ணத் தொடங்குகிறார்கள்.
இதற்குரிய தீர்வு, இத்தகைய மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களது கடைகளுக்க்கு சுகாதார அமைச்சர்கள், கவுன்சிலர்கள் சீல் வைக்க வேண்டும், அத்தோடு மாதத்தில் ஒரு தடவை எல்லாக் கடைகளிலும் ஹையீன், சுகாதாரம் முதலியவற்றைக் கருத்திக் கொண்டு செக்கிங் பண்ண வேண்டும், அப்போது தான் மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், உணவுடன் கலக்கும் நஞ்சுப் பதார்த்தங்கல் முதலியவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.
தண்ணியிலதான் கண்டம் கேள்விபட்டிருக்கேன் .நியூஸ் பேப்பர்லயுமா .....நல்ல விழிப்புணர்வு நண்பரே தொடர்க .......
palaya newspaperil kaareeyama,namba mudiyavillayae
Post a Comment