Friday, August 12, 2011

பசித்தால் உணவா? மணியடித்தால் உணவா?

                                   நன்றாக பசித்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்.உண்ண வேண்டிய தேவையை உணர்வதே பசி.பெரும்பாலும் மூன்று வேளை உணவே நமது வழக்கம்.இப்போது பலரும் பசியை உணர்வதே இல்லை என்கிறது ஓர் ஆய்வு.மன நலத்தில் குறைபாடு உள்ள சில தருணங்களிலும்,சில உடல் நோய்களிலும் பசி இருக்காது.அவ்வப்போது எதையாவது திணித்துக்கொண்டிருந்தாலும் பசி உணர வாய்ப்பில்லை.

     அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
     துய்க்க துவரப் பசித்த

என்கிறார் திருவள்ளுவர்.உண்ட்து செரித்த்தா என்பதை உணர்ந்து,நன்கு பசி எடுத்த பின்னால் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவை உண்ண வேண்டும் என்பதே இதன் பொருள்.சரியாக சாப்பிட்டு நான்கு மணி நேரத்துக்கு முன்பு பசி உணர வாய்ப்பில்லை.சிலருக்கு சில உணவுகள் ஒத்துக்கொள்ளாது.அதை தவிர்ப்பதே நல்லது.

                                பசி எடுத்த பின்னர்தான சாப்பிடவேண்டும்.ஆனால் ஒரு மணி ஆகி விட்ட்து என்பதற்காகவும்,மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து நாமும் ஆரம்பித்து விடுகிறோம்.குழந்தைகள் பசியின்மை காரணமாக சரியாக சாப்பிட மாட்டார்கள்.டென்ஷன்,மன அழுத்தம்,பதட்டம் போன்ற நேரங்களிலும் பசி இருக்காது.

                                பசியின்மையால் சரியாக சாப்பிட முடியாமல் போவதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.குழந்தைகள் போரடிக்கும் உணவுகளாலும் சரியாக சாப்பிடமாட்டார்கள்.உணவு முறைகளில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இதை சமாளிக்கலாம்.

  • ·         உங்களுக்கு,குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை தயார் செய்து உண்ணலாம்.பிடித்த ஒன்றை அதிகம் சாப்பிடுவீர்கள்.
  • ·         பால்,தண்ணீர்,காய்கறி சூப்புகள்,பழரசங்கள் அதிகம் எடுக்கவும்.இவற்றை உணவுக்கு பின்னும்,இடையிலும் சாப்பிடலாம்.உணவுக்கு முன்பு கூடாது.
  • ·         சுவையையும்,மணத்தையும் கூட்டுங்கள்.எலுமிச்சை சேர்க்கலாம்.ஏலக்காய் போன்ற வாசனைப்பொருட்கள் உதவும்.
  • ·         கார்பனேட்ட்ட் குளிர்பான்ங்களை தவிர்க்கவும்.
  • ·         முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்,பீன்ஸ் போன்றவை வாயுவை உற்பத்தி செய்து வயிறு நிரம்பிய உணர்வைத்தரும்,தவிர்க்கவும்.
  • ·         உணவுக்கு முன்பு வாயை கொப்பளித்து சுத்தம் செய்தால் உணவின் சுவை கூடுதலாக இருக்கும்.
  • ·         உண்ணும் அறை காற்றோட்டமாகவும்,வெளிச்சம் நிரம்பியும்,விரும்பத்தகாத வாசனை இல்லாத இடமாகவும் இருந்தால் நலம்.
  • ·         நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும் உண்ணுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.படுக்கையில் வைத்து உண்ண வேண்டாம்.
                               
                                    பசி இல்லாதவர்கள்தான் என்றில்லாமல் அனைவரும் கடைபிடிக்க்க் கூடிய விஷயங்கள்தான் இவை.முயற்சி செய்யுங்கள்.வித்தியாசம் தெரியும்.

-

8 comments:

Mathuran said...

என்ன செய்வது காலம் போகும் வேகத்தில் அவரவர் நேரம் கிடைக்கும் போதே சாப்பிட்டு விடுகின்றனர். பசிக்கும்போது சாப்பிட நேரம் கிடைப்பதில்லை.. ஆரோக்கியமும் எட்டாத்தாஅகிவிடுகிறது.

நீங்கள் சொன்னபடி முயற்சிக்கிறேன்

Anonymous said...

நல்ல பதிவு...உணவுவிடயத்தில் மிக கவனம் செலுத்துவதே உடம்புக்கு நல்லது ..

மாய உலகம் said...

உணவு உண்ணும் முறை, இடம், உணவு வகைகள் பற்றி அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்...பாராட்டுகள் நன்றிகளுடன்

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி சகோ..

ராஜா MVS said...

நல்ல ஆரோக்கியமான தகவலுக்கு..,
மிக்க நன்றி நண்பரே..

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

மாலதி said...

நல்ல பதிவு...

Sankar Gurusamy said...

பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/