Friday, October 14, 2011

நம்பிக்கை நோய்களைக் குணமாக்குமா?

அறிவியல் வளராத காலகட்ட்த்தில் மக்கள் நோய்களைத் தீர்த்துக்கொண்ட விதம் தெரிந்த விஷயம்.உணவு,தானியங்கள்,பழங்கள்,தாவரங்கள் வழி அவர்கள் தீர்வை அடைந்தார்கள்.பேய் ஓட்டுவது என்பதை நடைமுறையில் வைத்திருந்தார்கள்.மனநோய்களை பேய்,பிசாசு என்று நம்பி கடவுளை துணைக்கு அழைத்தார்கள்.
                                                                      அப்படி பேய் ஓட்டுவதன் மூலமாகவும் பிரச்சினைகள் தீர்ந்திருக்கிறதே? ஆமாம்,நம்பிக்கை தான் காரணம்.ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினால் அதற்கேற்ப மனமும் செயல்படுகிறது.பாதிக்கப்பட்டவர் மனதில் நம்பிக்கை ஏற்பட்டால் இத்தகைய விளைவுகள் சாத்தியம்தான்.

                                 கிராமத்தில் காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவால் இயல்பாக இருப்பவர்களும் படுத்துவிடுவார்கள்.நாள் முழுக்க உழைத்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.நோய் ஏற்பட்டால் ஏதும் புரியாது திணறுவார்கள்.பயத்திலும் கலக்கத்திலும் எரிச்சலான மன நிலைக்கு போய்விடுவார்கள்.
                                                                    வீட்டில் இருப்பவர்கள் குறி கேட்க போவார்கள்.எங்கோ பயந்திருக்கிறார்.ஆடு வெட்ட வேண்டும்,கோழி வெட்ட வேண்டும் என்று சாமி சொல்லும்.எனக்கு ஒரு ஆச்சர்யம்.அதிக நாட்கள் உடல் நலமில்லாமல் இருப்பவர்களுக்கு குறி கேட்கப் போனால் பயந்திருப்பதாக சொல்வதையே அதிகம் கேட்டிருக்கிறேன்.

                                 ஒரு குறிப்பிட்ட புளியமரத்தை அடையாளம் கண்டு வைத்திருப்பார்கள்.அங்கே போய் பூசை செய்து ஆடோ,கோழியோ வெட்டுவார்கள்.சிலருக்கு வசதி இருக்காது.நாலுகால் பிராணி பலி கொடுக்கவேண்டும் என்று சாமி சொல்லிவிடும்.ஆடு வாங்குவது கஷ்டம்.
                                                                       இரண்டு கோழிகளை வெட்டி பலி கொடுத்து விடுவார்கள்.நாலுகால் ஆகிவிட்ட்து! அநேகமாக அடுத்த நாளே படுக்கையில் இருப்பவர் சம நிலைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்து விடுவார்.நோய்வாய்ப்பட்டவரின் நம்பிக்கைதான் காரணமே தவிர பேய் அல்ல!

                                மருத்துவமனைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை.யாராவது அட்மிட் ஆகிவிட்டால் உறவினர்கள் படையெடுப்பார்கள்.அரசு மருத்துவமனைகளில் நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.கிராமத்தை சார்ந்தவர்கள் என்றால் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும்.நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
                                                                    இது வேண்டாத வேலை என்றுதான் பலர் கருதுகிறார்கள்.நம்முடைய முக்கிய கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று.பகையாக இருந்த உறவினர்கள்கூட ஒன்று சேர்வதும் உண்டு.ஆனால் நோயாளியை பொருத்தவரை குணமடைவதற்கு இது உதவும் என்பதே நிஜம்.
                                உடல்,மனம் இரண்டிலும் ஏற்படும் பிரச்சினைகள் ஒன்றையொன்று பாதிக்கவே செய்யும்.மோசமான மனநிலையையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அன்பினால் மட்டுமே முடியும்.உறவினர்கள் வருகை நோயாளியிட்த்தில் நம்மை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.மனதிற்கு மிகப்பெரிய தெம்பு இது.விரைவாக குணமடைய உதவும் ஒரு விஷயம்தான்.
-

31 comments:

மகேந்திரன் said...

நம்பிக்கை என்பது மிகப்பெரிய விஷயம்,
அதிலும் சுயநம்பிக்கை நிச்சயம் வேண்டும்.
ஜப்பானியர்கள் நோயாளிகளை பார்க்க வருகையில்
காகிதத்தால் செய்த அன்னப்பறவை செய்து வருவார்களாம்,
அதை கையில் கொடுத்து நலம் விசாரிப்பார்களாம்,
அந்த அன்னப்பறவையை பார்த்தாலே நோய் குணமானது போல ஒரு உணர்வு என்கிறார்கள்.

பதிவு நன்று.

Rathnavel Natarajan said...

பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@மகேந்திரன் said...

நம்பிக்கை என்பது மிகப்பெரிய விஷயம்,
அதிலும் சுயநம்பிக்கை நிச்சயம் வேண்டும்.
ஜப்பானியர்கள் நோயாளிகளை பார்க்க வருகையில்
காகிதத்தால் செய்த அன்னப்பறவை செய்து வருவார்களாம்,
அதை கையில் கொடுத்து நலம் விசாரிப்பார்களாம்,
அந்த அன்னப்பறவையை பார்த்தாலே நோய் குணமானது போல ஒரு உணர்வு என்கிறார்கள்.

ஜப்பானியர்கள் பற்றிய சுவையான தகவல்.நன்றி மகேந்திரன்.

RAVICHANDRAN said...

பல மனநோய்களுக்கு பேய் என்றே நம்பியிருக்கிறார்கள் கண்கூடாகப்பார்த்திருக்கிறேன்.நல்ல பதிவு.

RAVICHANDRAN said...

உடல்நலம் இல்லாமல் இருப்பவரை போய் பார்ப்பது ஏற்கனவே உள்ள பழக்கம்.மனரீதியாக அதை சரி என்று சொலியிருக்கிறீர்கள்.உண்மை.

மாய உலகம் said...

நம்பிக்கை மற்றும் அன்பு ரெண்டும் செலுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்த முடியும் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.. நண்பரே!

shanmugavel said...

@Rathnavel said...

பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பல மனநோய்களுக்கு பேய் என்றே நம்பியிருக்கிறார்கள் கண்கூடாகப்பார்த்திருக்கிறேன்.நல்ல பதிவு.

நன்றி சார்.

shanmugavel said...

@மாய உலகம் said...

நம்பிக்கை மற்றும் அன்பு ரெண்டும் செலுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்த முடியும் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.. நண்பரே!

ஆமாம் நண்பா! நன்றி

ஸ்ரீராம். said...

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் மருத்தவம் பாதி, மனசு மீதி என்றிருக்கும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். சிலபல விஷயங்களில் உறவினர் வருகை என்று கூட்டம் கூடுவது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் காரணமாகவும் அமையக் கூடிய பெரிய விஷயங்கள் கூட இருக்கின்றன!

SURYAJEEVA said...

placebo effect என்று படித்தது இன்னும் நினைவு இருக்கிறது தோழரே...
பல மருந்துகளை சோதனை செய்யும் பொழுது மருந்தை விட இந்த மருந்தில்லாத placebo அருமையான வேலை செய்திருக்கிறது

Unknown said...

நல்லா அழகாகவே சொல்லிருக்கீங்க பாஸ்

Sankar Gurusamy said...

மருத்துவமனைகளுக்கு உறவினர் வருகை பல விதங்களில் நோயாளிக்கு நன்மை ஏற்படுத்தினாலும், வரும் உறவினர்கள் புதிய பிரச்சினைகளை கிளப்பாமல் இருந்தால் அதுவே நலம்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

சத்ரியன் said...

குறி கேட்பதும்,
நம்பிக்கையின்பால் உயிர் பலி கொடுத்தலும், குணமாதலும் ... எல்லாம் உளவியல் காரணங்கள் தான்.

நாலு கால் உயிர்பலிக்கு , ஓணான் -போன்றவைகளை (மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள்)பலி கொடுப்பதும் உண்டு. நானும் அதைக் கண்டிருக்கிறேன்.பொதுவாக பலியிடுதலை நிறைவேற்ற மாமன், மச்சான்முறை உள்ளவர்களைத் தான் அழைப்பார்கள்.

பெரும்பாலும் உங்களின் பதிவுகளில் கிராமத்தின் விழுமியங்கள் நிறைந்திருப்பது சிறப்பு.

பாராட்டுக்கள்.

கோகுல் said...

இதை செய்தால் குணமாகும் என்ற நம்பிக்கை வந்தால் அது மூடப்பலக்கமாக இருந்தாலும் அப்படியே நடக்கும்,அதே போலத்தான் நம்பிக்கையில்லாமல் மருத்துவரிடம் செல்வதும்.குணமடைவது கடினம் தான்!

கூடல் பாலா said...

மனதை வசியப்படுத்திதான் தொடக்க காலத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார்கள் என்றும் படித்திருக்கிறேன் ...நல்ல பதிவு !

சக்தி கல்வி மையம் said...

அன்பிருந்தான் நோய்கள் ஓடிப்போகும்.,
உண்மைதான்,,

ராஜா MVS said...

உண்மைதான் நண்பரே... மனதிற்க்கு உள்ள சக்கி மிக அபாரமானவை...

மனித மனதிற்க்கு உள்ள சக்தியை அறிய ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.., ஆழ்நிலை உரக்கம் என்ற நிலைக்கு ஒரு மனிதனை கொண்டுசென்று அவரிடம் உன் உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டு வைக்கிறோம் என்று சொன்னார்கள் -ஆனால் உண்மையில் அவன் கையில் வைத்தது 5ரூபாய் நாணயம்தான்...
விளைவு நெப்புத்துண்டு வைத்தால் எப்படி காயம் ஏற்ப்படுமோ அதே காயம் ஏற்ப்பட்டது...

நம் மனதில் முழுமையாக என்ன எண்ணுகிறோமோ, நம்புகிறோமோ அது கண்டிப்பாக நடக்கும்...

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் மருத்தவம் பாதி, மனசு மீதி என்றிருக்கும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். சிலபல விஷயங்களில் உறவினர் வருகை என்று கூட்டம் கூடுவது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் காரணமாகவும் அமையக் கூடிய பெரிய விஷயங்கள் கூட இருக்கின்றன!

நோய்த்தொற்று பற்றியும் சொல்லியிருக்கிறேன் சார்,நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

placebo effect என்று படித்தது இன்னும் நினைவு இருக்கிறது தோழரே...
பல மருந்துகளை சோதனை செய்யும் பொழுது மருந்தை விட இந்த மருந்தில்லாத placebo அருமையான வேலை செய்திருக்கிறது

ஆமாம் அய்யா! நன்றி

shanmugavel said...

@வைரை சதிஷ் said...

நல்லா அழகாகவே சொல்லிருக்கீங்க பாஸ்

நன்றி நண்பா!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

மருத்துவமனைகளுக்கு உறவினர் வருகை பல விதங்களில் நோயாளிக்கு நன்மை ஏற்படுத்தினாலும், வரும் உறவினர்கள் புதிய பிரச்சினைகளை கிளப்பாமல் இருந்தால் அதுவே நலம்.

பகிர்வுக்கு நன்றி...

யோசிக்க வேண்டிய விஷயமே! நன்றி சங்கர்.

shanmugavel said...

@சத்ரியன் said...

குறி கேட்பதும்,
நம்பிக்கையின்பால் உயிர் பலி கொடுத்தலும், குணமாதலும் ... எல்லாம் உளவியல் காரணங்கள் தான்.

நாலு கால் உயிர்பலிக்கு , ஓணான் -போன்றவைகளை (மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள்)பலி கொடுப்பதும் உண்டு. நானும் அதைக் கண்டிருக்கிறேன்.பொதுவாக பலியிடுதலை நிறைவேற்ற மாமன், மச்சான்முறை உள்ளவர்களைத் தான் அழைப்பார்கள்.

பெரும்பாலும் உங்களின் பதிவுகளில் கிராமத்தின் விழுமியங்கள் நிறைந்திருப்பது சிறப்பு.

பாராட்டுக்கள்.

நான் கிராமத்து ஆசாமிதானே! நன்றி

shanmugavel said...

@கோகுல் said...

இதை செய்தால் குணமாகும் என்ற நம்பிக்கை வந்தால் அது மூடப்பலக்கமாக இருந்தாலும் அப்படியே நடக்கும்,அதே போலத்தான் நம்பிக்கையில்லாமல் மருத்துவரிடம் செல்வதும்.குணமடைவது கடினம் தான்!

உண்மை சார்,நன்றி

ஓசூர் ராஜன் said...

நம்பிக்கை எல்லாம் செய்யும் .பகிர்வுக்கு நன்றி நண்பரே!

shanmugavel said...

@koodal bala said...

மனதை வசியப்படுத்திதான் தொடக்க காலத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார்கள் என்றும் படித்திருக்கிறேன் ...நல்ல பதிவு !

THANKS SIR

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அன்பிருந்தான் நோய்கள் ஓடிப்போகும்.,
உண்மைதான்,,

நன்றி வாத்யாரே!

shanmugavel said...

@ராஜா MVS said...

உண்மைதான் நண்பரே... மனதிற்க்கு உள்ள சக்கி மிக அபாரமானவை...

தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே!

shanmugavel said...

@ஓசூர் ராஜன் said...

நம்பிக்கை எல்லாம் செய்யும் .பகிர்வுக்கு நன்றி நண்பரே!

நன்றி நண்பரே!

சாகம்பரி said...

உண்மையே, நம்பிக்கை மனதினை உறுதிபடுத்தும் மருந்து. மனம் பாதிக்கப்பட்டாலும் உடல் நலம் பாதிக்கப்படும். பகிர்விற்கு நன்றி.

நிரூபன் said...

நம்பிக்கையால் நோய்களைக் குணப்படுத்தப்படுவது தொடர்பாக நம்பிக்கையில் ஊறியோர் பற்றி நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நானும் இது தொடர்பாக தங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு சில ஐயங்களைக் கேட்டுத் தெளிவடைந்தது தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது அண்ணா.
நல்லதோர் பதிவு.