Tuesday, June 14, 2011

இன்னுயிர் காக்கும் கல்லூரி மாணவர்களை வணங்குகிறேன்.


                                 நமது உடலில் உள்ள செல்களுக்கு சத்துக்களையும்,உயிர்வளியான ஆக்ஸிஜனையும் எடுத்துச்செல்வது ரத்தம்.இதில் உள்ள வெள்ளையணுக்கள் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.யூரியா உள்ளிட்ட கழிவுப்பொருளை பிரித்து வெளியேற்றுவதும் ரத்தமே! இன்னும் சொல்ல இருக்கிறது.

                                  மிகவும் அரிய தனிம்மான ரத்தம் மருத்துவ சிகிச்சைக்கு மிக முக்கியம்.விபத்து,தீக்காயம்,பிரசவம்,இருதய அறுவை சிகிச்சை,உடல் மாற்று சிகிச்சை,குருதி தொடர்பான நோய்களுக்கு ரத்தம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது.சிக்கலான  தருணங்களில் உயிர் காக்கும் திரவம் இது.

                                  ஒருவருடைய ரத்தம் இன்னொருவருக்கு செலுத்தும்போது ரத்த்த்தில் உள்ள கிருமிகளும் கூடவே போய்விடும்.இதுதான் பிரச்சினை.முன்பெல்லாம் பணத்துக்காக ரத்தம் கொடுக்க ஆட்கள் தயாராக இருந்தார்கள்.இப்போது எய்ட்ஸ் போன்ற நோய்கள்,பரவும் வாய்ப்பு இருப்பதால் பணத்துக்காக கொடுப்பவர்களிடம் வாங்குவது இல்லை.

                                   தானாக முன்வந்து ரத்தம் கொடுப்பவர்களிடமே தானமாக பெறப்படுகிறது.இப்படி பெறும் ரத்தமே பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.எய்ட்ஸ்,பால்வினை நோய்களுக்கு “மறைந்திருக்கும் காலம்என்று இருக்கிறது.பரிசோதனையில் நோய் இருப்பது நோய் தொற்றி சில காலம் வரை தெரியாது.அப்போதைக்கு இல்லை என்று முடிவு வரும்.ஆனால் உடலில் கிருமி இருக்கும்.

                                     ஆண்,பெண் வித்தியாசமின்றி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட் அனைவரும் ரத்த்தானம் செய்யலாம்.இரண்டு மூன்று நாட்களிலேயே தானமாக கொடுத்த ரத்தம் உடலால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.சில தின்ங்களில் நோய் பாதித்து சிகிச்சை பெற்றவர்கள்,நோயாளிகள் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு ஒருவர் தகுதியானவரா என்பதை முடிவு செய்வார்கள்.

                                    பணத்திற்காக என்றால் கொடுக்க நிறைய தயார்.ஆனால் ஏழைகளை விடவும்,குடிப்பத்ற்கு பணம் இல்லாதவர்கள்தான் ஓடோடி வருவார்கள்.இவர்களிடம் நோய்த்தொற்றுக்கள் ஆபத்தும் அதிகம்.அப்படி வாங்க்க்கூடாது என்றான பிறகு சேவை மனப்பான்மையுடன் நாம் முன்வரவேண்டும்.இதிலும் தமிழ்நாடு பெருமைக்குரிய இட்த்தில் இருக்கிறது.தானாக முன்வந்து ரத்த்தானம் செய்பவர்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.

                                    இதை சாத்தியமாக்கியதில் முக்கிய பங்கு அரிமா சங்கம்,செஞ்சிலுவை சங்கம்,ரோட்டரி,ஜேசீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு முக்கிய பங்குண்டு.அரிமா சங்கத்தின் சேவை பெருமைப்பட்த்தக்க வகையில் இருக்கிறது.பல்வேறு ரசிகர் மன்றங்களும்,கட்சிகளும்கூட பங்கு கொண்டு வருகின்றன.

                                    மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கல்லூரி மாணவர்களின் பங்களிப்புதான்.நமக்கு தேவையான அதிக அளவு தானம் கல்லூரி மாணவர்களிடமிருந்தே பெறப்படுகிறது.தொண்டுள்ளம் மிக்க வள்ளல்கள் மாணவ,மாணவிகளே! அரிதான வகை ரத்தம் தேவைப்படும்போது அழைத்தவுடன் ஓடோடி வந்து இன்னுயிரை காப்பாற்றுகிறார்கள்.முகம் தெரியாத யாருக்கோ பிரதிபலன் கருதாது செய்யும் சேவை இது.வாழும் தெய்வங்களை இன்றைய தினம் போற்றி வணங்குகிறேன்.(இன்று ரத்தக்கொடையாளர் தினம்)
-

6 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே! இருங்க படிச்சிட்டு வர்ரேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே அனைத்து குருதி கொடையாளர்களையும் நானும் வாழ்த்துகிறேன்! அவர்களால் இந்த உலகத்தில் பல உயிர்கள் காப்ப்பறறப்பட்டிருக்கு!

அவர்கள் வாழ்க!

A.K.RASAN said...

இரத்ததானத்தில் பங்கு பெரும் அனைவரும் போற்றத்தகுந்தவர்களே! நல்ல பகிர்வு.

Sankar Gurusamy said...

அருமையான பதிவு. சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா??? சற்று விளக்கவும்...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

குருதிக் கொடையின் முக்கியத்துவத்தினையும்,
குருதிக் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களையும் முதல் இரு பந்திகளில் விளக்கியுள்ளதோடு
இறுதி பந்தியில் பிரதிபலன் கருதாது குருதிக் கொடை செய்யும் மாணவர்களின் நல் மனத்திற்கு சல்யூட்டும் போட்டிருக்கிறீர்கள் சகோ.

உங்களோடு சேர்ந்து இந்த நல் மாணவர்களின் செயலுக்கு நாங்களும் தலை வணங்குவோம்!

Anonymous said...

நானும் ஒரு இரத்த கொடையாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்,

பசங்க ஏன் இரத்தம் கொடுக்குறாங்கனு எனக்கு தெரியும் அதை சரியான நேரத்துல ஒரு பதிவா போடுறேன்.