Thursday, August 4, 2011

ஆண்களைக் காறித் துப்பிய பெண்

அதிக ஆள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்து கொண்டிருந்தேன்.இந்த ஆம்பளைங்களுக்கு மட்டும் எங்க இருந்துதான் வருமோ? –ஒரு பெண்குரல்.அப்புறம் காறித்துப்பினார்.திரும்பிப் பார்த்தால் ஒரு குடிமகன் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறார்.கொஞ்சம் போதை அதிகமாக இருக்கவேண்டும்.அவருக்கு அப்பெண்ணின் வார்த்தைகள் காதில் கேட்ட்தாக தெரியவில்லை.

                                   ஆண்கள் தெருக்களில் எங்கே பார்த்தாலும் நின்று கொள்வது சாதாரணமாக நாம் பார்க்கும் ஒன்றுதான்.நகராட்சிகளில் கட்டணக்கழிப்பிடங்கள் பேருந்து நிலையத்தில் மட்டும்தான் இருக்கின்றன.அறிவிப்பு பலகையில் இருப்பதற்கும் வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.பேருந்து நிலையம் போகிறவர்களுக்குத்தான் இயற்கை உபாதைகள் இருக்குமா?

                                   நீரிழிவு,அலர்ஜி உள்ளிட்ட நோய்கள்,புகை பிடித்தல்,மது அருந்துதல் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய  நிலை ஏற்பட்டு விடுகிறது.அவசரத்திற்கு பேருந்து நிலையத்திற்குத்தான் போக வேண்டுமா? வேறு என்னதான் செய்வார்கள்? அவர்களுக்கும் வேறு வழியில்லை.பெண்களுக்கு சுமார் பத்து மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியும் என்று படித்திருக்கிறேன்.இயற்கை தந்த கொடை.

                                  திறந்தவெளியில் மல,ஜலம் கழிப்பது சிறுவயதிலிருந்தே பழக்கமாகிவிடுகிறது என்று சொல்ல்லாம்.கிராமத்தில் எத்தனை வீடுகளில் கழிப்பிடம் இருக்கிறது.இப்போது புதியதாக வீடு கட்டுபவர்கள் கட்டி வைக்கிறார்கள்.அதிகம் பயன்படுத்த விரும்புவதில்லை என்று சொல்கிறார்கள்.அரசாங்கம் மான்யம் தந்தாலும் பழக்கத்தை விட்டுவிட மனம் இல்லை.

                               கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு போயிருந்தேன்.அது இடைவேளை நேரம்.பள்ளியைச்சுற்றி விளைநிலங்கள்.அப்போது பயிர் எதுவும் இல்லை.மாணவர்கள் ஒரு பக்கமும்,மாணவிகள் ஒரு பக்கமுமாக நிலங்களில் காக்கைகள் போல ஆங்காங்கேஅமர்ந்து சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்கள்.மாணவ,மாணவிகளுக்காக கழிப்பிடம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.அது சுத்தமாக பயன்படுத்தாமல் அப்படியே இருக்கிறது.

                                பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் சொன்னார்நான்கு அறைகள்தான் இருக்கின்றன.நூறு பேருக்கு எப்படி போதுமானதாக இருக்கும் என்றார்.என்னுடன் வந்திருந்தவர் ஆசிரியர்.அவர் பணியாற்றும் பள்ளீயில் ஒவ்வொரு வகுப்பாக மாணவ,மாணவிகளை கழிப்பிடம் அனுப்புவதாக குறிப்பிட்டார்.தேவையானது, மாணவர்களிடம் நல்ல பழக்கத்தை விதைக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.

                                                                                    பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பது அநேக நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.மழை,காற்று அடித்துச்சென்று குடிநீரில் கலக்கிறது.பொதுக்கழிப்பிடங்களை அதிகரிப்பதும்,அவற்றை சுத்தமாக பராமரிப்பதும் அவசியமான விஷயம் என்று தோன்றுகிறது.

-

12 comments:

மாய உலகம் said...

உண்மை தான் இலவச கட்டண கழிப்பிடம் என்று பரவசமாக வசூல் செய்யும் புண்ணியவன்காள் நிறைய...சுகாதாரமற்ற நிலையில் நிறைய கழிப்பிடங்கள்... பள்ளிகளில் அரசு முக்கியமாக முக்கியதுவம் தரவேண்டியவை.... முக்கிய பதிவு நன்றி

ஓசூர் ராஜன் said...

முக்கியமான இடங்களில்,அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் கழிப்பறை கட்டலாம்.

shanmugavel said...

@மாய உலகம் said...

உண்மை தான் இலவச கட்டண கழிப்பிடம் என்று பரவசமாக வசூல் செய்யும் புண்ணியவன்காள் நிறைய...சுகாதாரமற்ற நிலையில் நிறைய கழிப்பிடங்கள்... பள்ளிகளில் அரசு முக்கியமாக முக்கியதுவம் தரவேண்டியவை.... முக்கிய பதிவு நன்றி

உங்களுக்கும் நன்றி சார்.

shanmugavel said...

@ராஜன் said...

முக்கியமான இடங்களில்,அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில் கழிப்பறை கட்டலாம்.

நல்ல யோசனைதான்,நன்றி

Mathuran said...

எவ்வளவுதான் கழிப்பிடங்களை கட்டினாலும் மக்களின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்

shanmugavel said...

thanks mathuran

Sankar Gurusamy said...

உண்மைதான். பொதுக் கழிப்பிடங்கள் அதிகமானால் இந்த தொல்லை கொஞ்சமாக குறையலாம். முற்றிலும் ஒழிக்க குறைந்தது ஒரு சில தலை முறைகளாவது ஆகும்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

உண்மை தான் இலவச கட்டண கழிப்பிடம் என்று பரவசமாக வசூல் செய்யும் புண்ணியவன்காள் நிறைய...சுகாதாரமற்ற நிலையில் நிறைய கழிப்பிடங்கள்....
thanks for sharing..

காதர் அலி said...

பல அரசு பள்ளியில் பெண்கள் கழிப்பறையை பார்த்தாலே வாந்தி வந்து விடும்.இது யார் சொன்னது தெரியுமா? எனது மகள்தான்.அரசு எந்த அரசு பள்ளியிலும் கழிப்பறை மற்றும் கல்வி முதலியவற்றை சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று நினைப்பதேல்லை.இந்த அரசு தனியார் பள்ளிகள் வளர்வதேயயே விரும்புகிறது.பள்ளிகளே ஆய்வு செய்தால் நிறைய நிதி ஒதுக்க வேண்டும்.மேலும் தமிழக குடிமக்கள் சிந்திக்ககூடிய கல்வியை கூடாது . . என்பதேயே விரும்பிகிறது.இந்த லட்சணத்தில் தமிழகத்தை நம்பர்-1 மாநிலமாக மாற்ற போகிறார்களாம்.என்னத்த சொல்ல.

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

Anonymous said...

பகிர்ந்துகொள்ளவேண்டய பதிவு

Anonymous said...

அந்த காறித்துப்பிய பெண்ணும் ஒருவகையில் இன்னிலைக்குக் காரணமெனலாம்.

பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும்பொழுது, குழந்தைகள் தங்களுக்கு சிறுனீர் கழிக்கவேண்டுமெனச் சொன்னால், இவர்கள் எங்கே கழிப்பிடம் இருக்கிறது?; இல்லாப்பட்சத்தில், எங்கு கழித்தால் சுற்றுப்புறம் சுகாதாரக்கேடாகாது? என்று நினக்காமல், எங்கும் குழந்தையின் உடையையவிழ்த்து நிறக வைப்பதைக்காணலாம். அக்குழந்தை பெரிய குழந்தையானாலும் 'அதோ அங்கே போயிட்டு வா...அம்மா இங்கே நிற்கிறேன்!" என்பார்கள். தங்கள் கணவர்மாருகளுக்கும் அதே..அவர் பக்கத்தில் எங்கோ நின்றுவிட்டு வரும்வரை இவர்கள் காத்திருப்பார்கள்.

சுத்தம் சுகாதாரம் என்பது தாயிடம்தான் குழந்தை பெற்றுக்கொள்கிறது. சிறுவயதில் தாயிடம்தான் நெருங்கி பயப்படாமல் வாழ்கிறது. தாயிடம் என்ன கற்றுக்கொள்கிறதே அதுவே பின்னாளில் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.

ஊருக்கு உபதேசம் சொல்ல எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை.