Monday, June 20, 2011

படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

                                  அவன் போதையில் இருந்தான்.சுற்றி ஒரு கூட்டம்.பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பாக்கெட்டை பிரித்து நாக்குக்குக்கீழே வைத்துக்கொண்டான்.இவருக்குக் கீழே முப்பதுபேர் வேலை செய்கிறார்கள்என்றார் அறிமுகப்படுத்தியவர்.கை குலுக்க நீட்டியபோது எனக்கு தயக்கமாக இருந்த்து.வேறு வழியில்லாமல் கை குலுக்கிய பின் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.மூன்று பட்டங்களும்,மூன்று பட்டயங்களும்(diplamo) அவனது பெயரின் பின்னால் இருந்தன.

                                                                                          செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.மிஸ்டுகால் கொடுத்தா கூப்பிட மாட்டாளா அவ!? அவ எப்படி வேல செய்றான்னு பார்க்கறன்” “ விடாதீங்க பாஸ்’’ என்றார்கள் உடன் இருந்தவர்கள்.சரி நீங்க கிளம்புங்கஎன்று சற்று தூரம் நகர்ந்து போனார்கள்.அறிமுகப்படுத்திய நண்பர் அவனைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

                                                                                 நிறைய படித்திருக்கிறான் என்று சொல்லி வேலை கொடுத்தார்கள்.எப்போதும் குடித்துவிட்டு பெண்களை கலாட்டா செய்துகொண்டு.....கொடுமை.ஒரு வேலையும் செய்யமாட்டான்.இரவு முழுக்க குடித்துக் கொண்டிருந்துவிட்டு படுத்தால் பகல் பன்னிரண்டு மணிக்கு தூங்கி எழுவான்.இது ஒரு தற்காலிக பணி.அதனால் மேலிட்த்திலும் அதிகம் கண்டு கொள்வதில்லை.வேறு மாவட்ட்த்தில் உள்ள வீட்டுக்கும் போவதில்லை.

                                நான் மீண்டும் அந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை பார்த்தேன்.சமூக சேவைக்காக படித்திருந்தான்.மற்ற படிப்புகளும்.எதை சமூக சேவை என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்பது புரியவில்லை.பட்டங்கள் பெற்ற அவன் கற்ற கல்வி ஏன் அவனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மாற்றவில்லை?சேவை செய்வது கிடக்கட்டும்,தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?

                                                                              உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.

                                மனிதனிடம் நல்ல குணங்களை உருவாக்குவதில் கல்விக்கு எந்த பங்கும் இல்லை.மனப்பாடம் செய்து பக்கங்களை நிரப்புவதும்,விடைத்தாள்களின் கனத்தை பார்த்து மதிப்பெண் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கற்பனை ஆற்றலுக்கும்,சிந்திக்கும் திறனுக்கும் இங்கே இடமில்லாமல் இருக்கிறது.

                                கல்வியாளர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது அவர் கூறியது, “ இந்தியாவில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொள்வதே இன்னும் நூறு சதவீதம் ஆக்கமுடியவில்லை.நீங்கள் சொல்வது அடுத்த கட்டம்.அடுத்தடுத்து அவையும் வரும் என்று நம்புகிறேன்.மற்ற நாடுகளை விடவும் இந்தியாவுக்கு த்த்துவம் சார்ந்த பாரம்பர்யம் அதிகம் இருக்கிறது.ஆனால் அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டிய நேரம் இது

                                தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.
-

15 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மிக அருமையான விஷயம் ஒன்றை எடுத்துச் சொல்லி இருக்கீங்க அண்ணே!

உண்மையில், இக்காலத்தில் படிப்புக்கும் பண்புக்கும் ஒருவித சம்மந்தமும் இல்லைத்தான்!

நான் பார்த்திருக்கிறேன், பாடசாலையில் கற்பித்தலில் சிறந்து விளங்கும் சில ஆசிரியர்கள், போதைக்கு அடிமையாகி இருப்பதும், அவர்களால் சிறந்த முறையில் கற்பித்தலை முன்கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுவதையும்!

Amudhavan said...

நாட்டில் நடக்கும் மிகப்பெரிய தவறுகள் எல்லாமே ரொம்பவும் படித்தவர்கள் நிகழ்த்துபவைதானே. படிப்பு எதைக்கற்றுத்தருகிறது என்பது இன்னமும் விளங்கிக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது நிறையப்பேருக்கு. படிப்பு சம்பாதிப்பதற்கான சர்டிபிகேட்டை வாங்குகிற ஒன்று என்பதுதானே முக்கால்வாசிப்பேர்களின் நினைப்பு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எமது கல்வி முறை - நற்பண்புகளை மட்டும் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டது என்றில்லை! மனிதனுக்கு அடிப்படையில் அவசியமான மனோதிடத்தையும் அது கொடுக்கத் தவறியுள்ளது!

நன்கு படித்த பலர், அல்ப பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்!

ஆக நீங்கள் சொல்வது போல உண்மையில் கல்விக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை!

துளசி கோபால் said...

உருப்போட்டு அதை காகிதத்தில் வாந்தி எடுத்தாப் போதும் இங்கே. புரிந்து படிக்கத் தேவை இல்லை. யாருக்கு அதிகமா நினைவாற்றல் இருக்கோ அவன் ஜெயிப்பான்.

என்ன கல்விமுறையோ போங்க :(

இராஜராஜேஸ்வரி said...

தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.//

இன்றில்லாவிட்டால் என்று?
இபோதில்லாவிட்டால் எப்போது??

Unknown said...

// உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.
///
பலே பலே அருமையான கருத்துக்கள்...
இவற்றை கண்டு பிடிப்புகளால் மாற்ற முடியாது சகோ!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Sankar Gurusamy said...

இதில் படிப்பைவிட வளர்ப்பே பிரதானமாக இருக்கும். பெற்றொரின் சரியான கவனத்தில் வளர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் கெட்டுப்போவதில்லை.

நம் நாட்டில் குருகுல கல்வி இன்று மிக அரிதே. எனவே இதற்கு பாடத்திட்டத்தின் பாதிப்பு குறைவே. ஆசிரியர்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருந்தால் இதை சற்று குறைக்க முடியும்.

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Unknown said...

arumai nanba......

சக்தி கல்வி மையம் said...

உண்மையில், இக்காலத்தில் படிப்புக்கும் பண்புக்கும் ஒருவித சம்மந்தமும் இல்லைத்தான்!

நிலாமகள் said...

தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?
மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.


ந‌ல்ல‌ கேள்வி. ந‌ல்ல‌ க‌ருத்து. சென்று சேருமிட‌ம் சேர்ந்தால் ந‌ல‌ம். ஆட்சியில‌ம‌ர்வோர் த‌த்த‌ம் சுய‌லாப‌ங்க‌ளை, சொந்த‌ ப‌கைக‌ளை ம‌ட்டுமே க‌ருத்தில் கொண்டிருக்கும் வ‌ரை எதுதான் ச‌ரியாகும்?

Jana said...

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் முன்னோர்கள்.
படிப்பறிவைவிட பட்டறிவே ஒருவனை பண்பாளனாக மாற்றும், அனுபவங்கள், பகிர்வுகள், என்பனவும், விளையாட்டக்கள்கூட மனிதனை பண்பாளன் ஆக்கவிடும். இன்றைய நிலையில் புத்தகம் சப்பும் விலங்ககளாக்கப்பட்ட மாணவர்கள் எப்படி பண்பாளர்கள் ஆவார்கள்?

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

நிரூபன் said...

இக் காலத்தில் நீங்கள் பதிவில் சுட்டியுள்ளது போலப் படிப்பிற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புகள் இல்லைத் தான் சகோ,

புத்தகப் பூச்சிகளாக இருக்கும் பலர் தான் இன்று சமூகவிரோதச் செயற்பாடுகளினைச் செய்வதில் முதலிடம் வகிக்கிறார்கள்.

கணினி நன்கு தெரிந்தவர்களின் செயற்பாடுகள் இருக்கிறதே...
வெட்கித் தலை குனியும் அளவிற்கு பெண்களின் முகங்களின் புகைப்படங்களை மாற்றுதல்.
ஆபாசப் படம் தயாரித்தல், கிறடிற் கார்ட் மோசடி செய்தல் எனப் பல வகையான குற்றச் செயல்களிலும் ஈடுப்பட்டுத் துலைக்கிறார்கள்.

படிப்பறிவை விட, அனுப அறிவு தான் எப்போதும் ஒரு மனிதனை முழுமையடைய வைக்கும் என்பது என்னுடைய கருத்து,
அதுவே யதார்த்தமும் கூட.